1946. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهم ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا، وَرَجُلاً قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ "" مَا هَذَا "". فَقَالُوا صَائِمٌ. فَقَالَ "" لَيْسَ مِنَ الْبِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ "".
பாடம் : 36 வெப்பம் கடுமையாகி, நிழலில் தங்கவைக்கப்பட்ட ஒருவரிடம், ‘‘பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
1946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒரு மனிதர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்த தைக் கண்டார்கள். ‘‘இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று நபியவர்கள் கேட்டார் கள். ‘‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்” என்று மக்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று கூறினார்கள்.28

அத்தியாயம் : 30
1947. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ، وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ.
பாடம் : 37 (பயணத்தில்) நோன்பு நோற்பதையும் நோன்பை விடுவதையும் நபித்தோழர்கள் குறைசொன்ன தில்லை.
1947. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். அப்போது நோன்பு நோற்காதவரை நோன்பு நோற்ற வரோ, நோன்பு நோற்றவரை நோன்பு நோற்காதவரோ குறைசொன்னதில்லை.

அத்தியாயம் : 30
1948. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدَيْهِ لِيُرِيَهُ النَّاسَ فَأَفْطَرَ، حَتَّى قَدِمَ مَكَّةَ، وَذَلِكَ فِي رَمَضَانَ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَفْطَرَ، فَمَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ.
பாடம் : 38 மக்கள் காணும் வகையில் பயணத் தில் நோன்பைக் கைவிடல்
1948. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி ஆண்டில்) மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். ‘உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கையின் நீளத்திற்கு அதை உயர்த்திக்காட்டி நோன்பை முறித் தார்கள். மக்காவை அடையும்வரை நோன்பு நோற்கவில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கி றார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள்; (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டுவிடவும் செய்யலாம்.

அத்தியாயம் : 30
1949. حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَرَأَ فِدْيَةٌ طَعَامُ مَسَاكِينَ. قَالَ هِيَ مَنْسُوخَةٌ.
பாடம் : 39 ‘‘நோன்பு நோற்பதற்குச் சக்தி பெற்றவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால்) ஒரு நோன்புக்காக ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” (2:184) என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்னு உமர் (ரலி), சலமா பின் அல் அக்வஉ (ரலி) ஆகியோர் கூறுகிறார்கள்: மேற்கண்ட வசனத்தை அதற்கடுத்த வசனம் (2:185) மாற்றிவிட்டது. (அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:) ரமளான் மாதம், குர்ஆன் அருளப் பெற்ற மாதமாகும். அந்தக் குர்ஆன், மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மேலும், நல்வழி காட்டக்கூடியதும், (நன்மை லி தீமைக்கிடையே) பிரித்தறிவிக் கக்கூடியதுமான தெளிவான சான்றுகளைக் கொண்டதாகும். ஆகவே, உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும். ஒருவர் நோயாளி யாக இருந்தாலோ, பயணத்தில் இருந்தாலோ (அப்போது விடுபடும் நோன்புகளை) மற்ற நாட்களில் அவர் கணக்கிட்டு (நோற்று)க்கொள்ள வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான்; சிரமத்தை அவன் உங்களுக்கு விரும்பவில்லை. இதற்குக் காரணம், நீங்கள் (ரமளானின்) எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டுமென்பதும், உங்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்த வேண்டும் என்பதும் தான். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாகத் திகழலாம். (2:185) அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ரமளான் நோன்பு பற்றிய வசனம் (2:183) அருளப்பெற்றதும் அது நபித்தோழர் களுக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளிப்பவர், நோன்பிருக்க சக்தியிருந்தும் நோன்பை விட்டுவிடுபவராக இருந்தார். (தொடக்கத்தில்) இவ்வாறு அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது. பிறகு ‘‘நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்” (2:184) எனும் வசனத்தொடர் இச்சலுகையை மாற்றிவிட்டது. இதையடுத்து நோன்பு நோற்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டனர்” என்று முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் எமக்கு அறிவித்தனர்.
1949. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஒரு நோன்புக்காக ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” (2:184) எனும் வசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதிவிட்டு, ‘‘இந்த வசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.29

அத்தியாயம் : 30
1950. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ يَكُونُ عَلَىَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلاَّ فِي شَعْبَانَ. قَالَ يَحْيَى الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 40 ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டும்? ‘‘(அப்போது விடுபடும் நோன்புகளை) மற்ற நாட்களில் அவர் கணக்கிட்டு (நோற்று)க்கொள்ள வேண்டும்” (2:185) என்று அல்லாஹ் குறிப்பிடுவதால், விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து நோற்பதில் தவறில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘விடுபட்ட ரமளான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது பொருந்தாது” என்று சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘ஒருவர் அடுத்த ரமளான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால், இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார்; அவர் உணவளிக்கத் தேவை யில்லை” என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.30 ‘‘நோன்பை விட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்று அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் நோற்க வேண்டும் (2:185)என்றுதான் அல்லாஹ் கூறுகின்றான்; உணவளிக்குமாறு கூறவில்லை.
1950. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடிந்ததில்லை.

நபி (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என்று (அறிவிப்பாளர் களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 30
1951. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي زَيْدٌ، عَنْ عِيَاضٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ، وَلَمْ تَصُمْ فَذَلِكَ نُقْصَانُ دِينِهَا "".
பாடம் : 41 மாதவிடாய் ஏற்பட்டவள் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிட வேண்டும். நபிவழிகளும் சரியான முடிவுகளும் பெரும்பாலும் மனித யூகங்களுக்கு மாற்ற மாகவே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் நபிவழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மாதவிடாய் ஏற்பட்டவள் விடுபட்ட நோன்பை பின்னர் நிறைவேற்ற வேண்டும்; விடுபட்ட தொழுகையை பின்னர் நிறைவேற்ற வேண்டியதில்லை என்பதும் அவற்றுள் ஒன்றாகும் என்று அபுஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.31
1951. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1952. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ "". تَابَعَهُ ابْنُ وَهْبٍ عَنْ عَمْرٍو. وَرَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِي جَعْفَرٍ.
பாடம் : 42 நிறைவேற்ற வேண்டிய நோன்பு இருக்க ஒருவர் இறந்து விட்டால்...? ‘‘நோன்பு ‘களா' உள்ள நிலையில் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறிவிடும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.
1952. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1953. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ، وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا قَالَ "" نَعَمْ ـ قَالَ ـ فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى "". قَالَ سُلَيْمَانُ فَقَالَ الْحَكَمُ وَسَلَمَةُ، وَنَحْنُ جَمِيعًا جُلُوسٌ حِينَ حَدَّثَ مُسْلِمٌ بِهَذَا الْحَدِيثِ ـ قَالاَ ـ سَمِعْنَا مُجَاهِدًا يَذْكُرُ هَذَا عَنِ ابْنِ عَبَّاسٍ. وَيُذْكَرُ عَنْ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْحَكَمِ، وَمُسْلِمٍ الْبَطِينِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعَطَاءٍ، وَمُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُخْتِي مَاتَتْ. وَقَالَ يَحْيَى وَأَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ مُسْلِمٍ عَنْ سَعِيدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي مَاتَتْ. وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنِ الْحَكَمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ نَذْرٍ. وَقَالَ أَبُو حَرِيزٍ حَدَّثَنَا عِكْرِمَةُ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَتِ امْرَأَةٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا صَوْمُ خَمْسَةَ عَشَرَ يَوْمًا.
பாடம் : 42 நிறைவேற்ற வேண்டிய நோன்பு இருக்க ஒருவர் இறந்து விட்டால்...? ‘‘நோன்பு ‘களா' உள்ள நிலையில் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறிவிடும்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்.
1953. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத நோன்பு கடமையிருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மொத்தம் பதினாறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சில அறிவிப்புகளில், ‘‘ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் என் சகோதரி இறந்துவிட்டார்...” என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

வேறுசில அறிவிப்புகளில், ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ‘என் தாய் இறந்துவிட்டார்...’ என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

வேறு சிலவற்றில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது.

வேறுசில அறிவிப்புகளில், ‘என் தாய்மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார்...’ என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது.

அத்தியாயம் : 30
1954. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، سَمِعْتُ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَا هُنَا، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَا هُنَا، وَغَرَبَتِ الشَّمْسُ، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 43 நோன்பாளி எப்போது நோன்பு துறப்பது செல்லும்? சூரியனின் வட்டம் மறைந்தபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பு துறந்தார்கள்.
1954. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு (இருள்) முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் (வெளிச்சம்) பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1955. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَهُوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ لِبَعْضِ الْقَوْمِ "" يَا فُلاَنُ قُمْ، فَاجْدَحْ لَنَا "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَلَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ إِنَّ عَلَيْكَ نَهَارًا. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". فَنَزَلَ فَجَدَحَ لَهُمْ، فَشَرِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 43 நோன்பாளி எப்போது நோன்பு துறப்பது செல்லும்? சூரியனின் வட்டம் மறைந்தபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பு துறந்தார்கள்.
1955. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் மக்களில் ஒருவரிடம், ‘‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட் டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள்.

அப்போதும் அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அப்போது அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘‘இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்” என்றார் கள்.32

அத்தியாயம் : 30
1956. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمْسَيْتَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَلَيْكَ نَهَارًا. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لَنَا "". فَنَزَلَ، فَجَدَحَ، ثُمَّ قَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "". وَأَشَارَ بِإِصْبَعِهِ قِبَلَ الْمَشْرِقِ.
பாடம் : 44 ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் போன்ற பொருட்களால் நோன்பு துறப்பது
1956. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் (ஒருவரிடம்), ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடியட்டுமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார்.

பின்னர், ‘‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கி லிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்!” என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக்காட்டிக் கூறினார்கள்.33

அத்தியாயம் : 30
1957. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ "".
பாடம் : 45 விரைவாக நோன்பு துறத்தல்34
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப் பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1958. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَصَامَ حَتَّى أَمْسَى، قَالَ لِرَجُلٍ "" انْزِلْ، فَاجْدَحْ لِي "". قَالَ لَوِ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ. قَالَ "" انْزِلْ، فَاجْدَحْ لِي، إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம் : 45 விரைவாக நோன்பு துறத்தல்34
1958. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும்வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு (இருள்) இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1959. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ أَفْطَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ غَيْمٍ، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ. قِيلَ لِهِشَامٍ فَأُمِرُوا بِالْقَضَاءِ قَالَ بُدٌّ مِنْ قَضَاءٍ. وَقَالَ مَعْمَرٌ سَمِعْتُ هِشَامًا لاَ أَدْرِي أَقْضَوْا أَمْ لاَ.
பாடம் : 46 (சூரியன் மறைந்துவிட்டது என்று எண்ணி) நோன்பு துறந்தபின் சூரியன் தென்பட்டால்...?35
1959. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர்கள் (அந்நோன்பைத்) திரும்ப நிறைவேற்றுமாறு கட்டளையிடப்பட் டார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘திரும்ப நிறைவேற்றுவது அவசியமில்லாமல் போகுமா?” என்று கேட்டார்கள். (அதாவது ‘களா' செய்ய வேண்டும்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அவர்கள் ‘களா’ செய்தார்களா; இல்லையா என்பது எனக்குத் தெரியாது” என்று ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாக மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1960. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ "" مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ "". قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ، حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ.
பாடம் : 47 சிறுவர்கள் நோன்பு நோற்றல்36 ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், ‘‘உனக்குக் கேடு உண்டாகட் டும்! நம் சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதுடன், (மது அருந்திய தற்குத் தண்டனையாக எண்பது சாட்டை) அடிகளை அவருக்கு வழங்கினார்கள்.
1960. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட் டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன் பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அத்தியாயம் : 30
1961. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُوَاصِلُوا "". قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى، أَوْ إِنِّي أَبِيتُ أُطْعَمُ وَأُسْقَى "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1961. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்” என்று (மக்களி டம்) கூறினார்கள். அப்போது ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் (இறைவனிடமிருந்து) வழங்கப்படுகின்றன” என்றோ, ‘‘உணவும் பானமும் எனக்கு வழங்கப்படும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றோ கூறினார்கள்.38


அத்தியாயம் : 30
1962. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ. قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1962. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக எனக்கு உணவும் பானமும் வழங்கப்படுகின்றன” என்றார்கள்.


அத்தியாயம் : 30
1963. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تُوَاصِلُوا، فَأَيُّكُمْ إِذَا أَرَادَ أَنْ يُوَاصِلَ فَلْيُوَاصِلْ حَتَّى السَّحَرِ "". قَالُوا فَإِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي أَبِيتُ لِي مُطْعِمٌ يُطْعِمُنِي وَسَاقٍ يَسْقِينِ "".
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1963. அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹர்வரை அவ்வாறு (செய்து விட்டு, சஹர்) செய்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிக்கவும் (தண்ணீர்) புகட்டவும் ஒருவன் இருக்கின்றான். இந்நிலையில்தான் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 30
1964. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ، رَحْمَةً لَهُمْ فَقَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَمْ يَذْكُرْ عُثْمَانُ رَحْمَةً لَهُمْ.
பாடம் : 48 தொடர்நோன்பு நோற்பதும், இரவில் நோன்பு இல்லை என்ற கருத்தும்37 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இரவுவரை நோன்பை முழுமைப் படுத்துங்கள். (2:187) நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்கள்மீது இரக்கம் கொண்டும் அவர்க(ளின் உயிர்க)ளைக் காப்பதற்காகவும் மக்கள் தொடர்நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள். (கடமை இல்லாததைக் கடமையாக்கிக் கொண்டு வழிபாடுகளிலேயே) மூழ்கிப் போவது வெறுக்கத் தக்கதாகும்.
1964. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள்மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், ‘‘நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உணவளிக்கிறான்; (நீர்) புகட்டுகிறான்” என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘மக்கள்மீது இரக்கப்பட்டு' என்ற வாசகம் இடம் பெறவில்லை.

அத்தியாயம் : 30
1965. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ فِي الصَّوْمِ فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ إِنَّكَ تُوَاصِلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" وَأَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ "". فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا، ثُمَّ رَأَوُا الْهِلاَلَ، فَقَالَ "" لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ "". كَالتَّنْكِيلِ لَهُمْ، حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا.
பாடம் : 49 அதிகமாகத் தொடர்நோன்பு நோற்பவருக்குக் கண்டனம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர்நோன்பு நோற்பதைக்) கண்டித் திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1965. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்றார்கள்.

தொடர்நோன்பிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள மறுத்தபோது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இம்மாதம் (தலைப்பிறை) இன்னும் தள்ளிப்போயிருந்தால், (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்” என்று மக்கள் தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள்.


அத்தியாயம் : 30