194. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا، يَقُولُ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُنِي، وَأَنَا مَرِيضٌ لاَ أَعْقِلُ، فَتَوَضَّأَ وَصَبَّ عَلَىَّ مِنْ وَضُوئِهِ، فَعَقَلْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لِمَنِ الْمِيرَاثُ إِنَّمَا يَرِثُنِي كَلاَلَةٌ. فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ.
பாடம் : 44 நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரை மயக்கமுற்றவர்மீது ஊற்றியது
194. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் பனூசலிமா குலத்தாரிடையே) நோயுற்று சுய நினைவில்லாமல் இருந்தபோது, என்னை நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்கள் (தண்ணீர் கொண்டுவரச் சொல்லி) அங்கத் தூய்மை செய்து விட்டு, தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரில் சிறிதளவை என்மீது ஊற்றினார்கள்.

நான் உணர்வு பெற்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சொத்துக்கு யார் வாரிசு? என் சொத்துக்கு என் (மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாமல்) சகோதரர்கள் மட்டுமே வாரிசாக ஆகும் (‘கலாலா’) நிலையில் நான் உள்ளேனே?” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான (4:176ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 4
195. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ حَضَرَتِ الصَّلاَةُ، فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ إِلَى أَهْلِهِ، وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، فَصَغُرَ الْمِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَتَوَضَّأَ الْقَوْمُ كُلُّهُمْ. قُلْنَا كَمْ كُنْتُمْ قَالَ ثَمَانِينَ وَزِيَادَةً.
பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப் பாத்திரம், மரம் மற்றும் கற்களாலான பாத்திரங் களில் அங்கத் தூய்மை செய்தல், குளித்தல்
195. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்தபோது, தமது வீடு சமீபத்தில் இருந்தவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்வதற்காக) தம் வீடுகளுக்குச் சென்ற னர். மற்றவர்கள் அங்கேயே (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) இருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள ஒரு (சிறிய) கல்பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அந்தப் பாத்திரத்திற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை விரித்துக் கழுவ முடியாதபடி (அதன் வாய்) சிறியதாக இருந்தது. ஆனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அதில் அங்கத் தூய்மை செய்தனர்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் எத்தனை பேர் (அப்போது) இருந்தீர் கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 4
196. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ.
பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப் பாத்திரம், மரம் மற்றும் கற்களாலான பாத்திரங் களில் அங்கத் தூய்மை செய்தல், குளித்தல்
196. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதில் தம்முடைய இரு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு, அதில் (நீர் பெருக) உமிழ்ந்தார்கள்.


அத்தியாயம் : 4
197. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِهِ وَأَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ.
பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப் பாத்திரம், மரம் மற்றும் கற்களாலான பாத்திரங் களில் அங்கத் தூய்மை செய்தல், குளித்தல்
197. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது, அவர்களுக்காக ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் கொணர்ந்தோம். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். தமது முகத்தை மூன்று முறையும் கைகளை இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுசென்று தடவினார்கள். மேலும் தம்முடைய இரு கால்களையும் கழுவி னார்கள்.


அத்தியாயம் : 4
198. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَخْبَرْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ فَقَالَ أَتَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيٌّ. وَكَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ تُحَدِّثُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ بَعْدَ مَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ "" هَرِيقُوا عَلَىَّ مِنْ سَبْعِ قِرَبٍ، لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ "". وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ تِلْكَ حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا أَنْ قَدْ فَعَلْتُنَّ، ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ.
பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப் பாத்திரம், மரம் மற்றும் கற்களாலான பாத்திரங் களில் அங்கத் தூய்மை செய்தல், குளித்தல்
198. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்குத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கி விட்டனர். அப்போது தம் கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “(ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத) அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். “அவர்தான் அலீ (பின் அபீதாலிப் - ரலி)” என்று அவர்கள் கூறினார்கள்.-

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சிகிச்சைக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்ட பின்னர் அவர்கள், “வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என்மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்ய முடியும்” என்றார்கள். எனவே, அவர் களின் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது நபியவர்கள் அமர்த்தப்பட்டார்கள்.

பிறகு அவர்கள்மீது தோல் பைகளிலி ருந்த நீரை ஊற்றத் தொடங்கினோம். அவர்கள் “(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)” என்று (கையால்) சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அத்தியாயம் : 4
199. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ عَمِّي يُكْثِرُ مِنَ الْوُضُوءِ، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَخْبِرْنِي كَيْفَ رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ مَرَّاتٍ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاغْتَرَفَ بِهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً، فَمَسَحَ رَأْسَهُ، فَأَدْبَرَ بِيَدَيْهِ وَأَقْبَلَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ، فَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ.
பாடம் : 46 குவளையில் அங்கத் தூய்மை செய்தல்
199. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரரர் (அம்ர் பின் அபீஹசன்) அடிக்கடி அங்கத் தூய்மை செய்பவராக இருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அங்கத் தூய்மை செய்யக் கண்டீர்கள் என்று கூறுங்கள்” என்று கேட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, தம்முடைய இரு கைகள்மீது சரித்து இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு அந்தக் குவளைக்குள் தமது கையை நுழைத்து ஒரே ஒரு கை தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கைத் தண்ணீரால் வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி) மூக்கைச் சிந்தினார்கள்.

பிறகு தமது கையை(க் குவளைக்குள்) நுழைத்துத் தண்ணீர் அள்ளி மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் இரு கைகளையும் முழங்கைவரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு தமது கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலம் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது (ஈரக்)கையை முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டு சென்றார்கள். பிறகு தமது இரு கால்களை யும் கழுவிவிட்டு, “இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 4
200. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ، فَأُتِيَ بِقَدَحٍ رَحْرَاحٍ فِيهِ شَىْءٌ مِنْ مَاءٍ، فَوَضَعَ أَصَابِعَهُ فِيهِ. قَالَ أَنَسٌ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَاءِ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، قَالَ أَنَسٌ فَحَزَرْتُ مَنْ تَوَضَّأَ مَا بَيْنَ السَّبْعِينَ إِلَى الثَّمَانِينَ.
பாடம் : 46 குவளையில் அங்கத் தூய்மை செய்தல்
200. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது சிறிது தண்ணீ ருடன் வாய் அகன்ற பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனுள் நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை வைத்தார்கள். அப்போது அவர்களின் விரல்களினூடே நீர் சுரப்பதை நான் பார்த்தேன்.

அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தவர்களை நான் கணக்கிட்டுப் பார்த்தபோது (கிட்டத்தட்ட) எழுபது பேரிலிருந்து எண்பது பேர்கள்வரை இருந்தனர்.

அத்தியாயம் : 4
201. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنِي ابْنُ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَغْسِلُ ـ أَوْ كَانَ يَغْتَسِلُ ـ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ.
பாடம் : 47 ஒரு ‘முத்’து தண்ணீரில் அங்கத் தூய்மை செய்வது
201. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ முதல் ஐந்து ‘முத்’து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு ‘முத்’து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை செய் வார்கள்.25

அத்தியாயம் : 4
202. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ الْمِصْرِيُّ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عَمْرٌو، حَدَّثَنِي أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ سَأَلَ عُمَرَ عَنْ ذَلِكَ فَقَالَ نَعَمْ إِذَا حَدَّثَكَ شَيْئًا سَعْدٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلاَ تَسْأَلْ عَنْهُ غَيْرَهُ. وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ أَخْبَرَنِي أَبُو النَّضْرِ أَنَّ أَبَا سَلَمَةَ أَخْبَرَهُ أَنَّ سَعْدًا حَدَّثَهُ فَقَالَ عُمَرُ لِعَبْدِ اللَّهِ. نَحْوَهُ.
பாடம் : 48 (அங்கத் தூய்மை செய்கையில்) காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்)26
202. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யும்போது) காலுறை கள்மீது (ஈரக் கையால்) தடவினார்கள்” என்று கூறினார்கள். நான் இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, “ஆம், நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஒரு செய்தியை சஅத் உன்னிடம் சொன்னால் அது பற்றி வேறு யாரிடமும் நீ கேட்க வேண்டியதில்லை” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 4
203. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ الْحَرَّانِيُّ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ.
பாடம் : 48 (அங்கத் தூய்மை செய்கையில்) காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்)26
203. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில் இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார் கள். அப்போது தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பையுடன் அவர்களைத் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது தம் காலுறைகள்மீது (ஈரக்கை யால்) தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள்.


அத்தியாயம் : 4
204. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. وَتَابَعَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ وَأَبَانُ عَنْ يَحْيَى.
பாடம் : 48 (அங்கத் தூய்மை செய்கையில்) காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்)26
204. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உளூ செய்யும் போது) தம் காலுறைகள்மீது (ஈரக் கையால்) தடவிக்கொண்டதை நான் பார்த்தேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 4
205. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ. وَتَابَعَهُ مَعْمَرٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَمْرٍو قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 48 (அங்கத் தூய்மை செய்கையில்) காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவுதல் (மஸ்ஹு செய்தல்)26
205. அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யும்போது) தம்முடைய தலைப்பாகை யின் மீதும் தமது இரு காலுறைகள்மீதும் (ஈரக் கையால்) தடவிக்கொண்டதை நான் பார்த்தேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
206. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَهْوَيْتُ لأَنْزِعَ خُفَّيْهِ فَقَالَ "" دَعْهُمَا، فَإِنِّي أَدْخَلْتُهُمَا طَاهِرَتَيْنِ "". فَمَسَحَ عَلَيْهِمَا.
பாடம் : 49 இரு கால்களும் சுத்தமாக இருக் கும் நிலையில் காலுறை அணிந் தால்...
206. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (அங்கத் தூய்மை செய்ய முற்பட்டபோது) அவர்களின் இரு காலுறைகளையும் கழற்றுவதற்காக நான் என் கையை நீட்டினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவற்றை விட்டுவிடுங்கள். கால்கள் சுத்தமாக இருக்கும்போதுதான் காலுறைகளை அணிந்தேன்” என்று கூறிவிட்டு, (ஈரக் கையால்) அவ்விரு காலுறைகளைத் தடவி (மஸ்ஹு செய்ய லா)னார்கள்.

அத்தியாயம் : 4
207. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ،. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 50 ஆட்டிறைச்சி, மாவு ஆகிய வற்றை உண்டுவிட்டு (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை. அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் (இறைச்சி) உண்டபின் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை.
207. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் சப்பையைச் சாப்பிட்டபின் தொழுதார்கள்; ஆனால், (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை.


அத்தியாயம் : 4
208. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَأَلْقَى السِّكِّينَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 50 ஆட்டிறைச்சி, மாவு ஆகிய வற்றை உண்டுவிட்டு (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டிய தில்லை. அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் (இறைச்சி) உண்டபின் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை.
208. அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை ஒன்றிலிருந்து (இறைச்சியை) வெட்டி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அப்போது தொழுகைக்காக அவர்கள் அழைக்கப்பட்டார்கள். உடனே கத்தியைக் கீழே போட்டுவிட்டுத் தொழுதார்கள்; (புதிதாக) அங்கத் தூய்மை செய்யவில்லை.

அத்தியாயம் : 4
209. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، مَوْلَى بَنِي حَارِثَةَ أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ، أَخْبَرَهُ. أَنَّهُ، خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ ـ وَهِيَ أَدْنَى خَيْبَرَ ـ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ، فَلَمْ يُؤْتَ إِلاَّ بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 51 மாவு சாப்பிட்டுவிட்டு (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமல் வாய் (மட்டும்) கொப்புளிப்பது
209. சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் (கைபருக்குச்) சென்றேன். கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழு(வித்)தார்கள்.

பிறகு பயண உணவைக் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது மாவைத் தவிர வேறெதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைத் தண்ணீரில் நனைக்கும்படி பணித்தார்கள். (அது நனைக்கப்பட்டதும் அதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நாங்களும் உண்டோம்.

பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அவர்கள் வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள்; நாங்களும் வாய் மட்டும் கொப்புளித்தோம். பிறகு (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (மஃக்ரிப்) தொழு(வித்)தார்கள்.


அத்தியாயம் : 4
210. وَحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 51 மாவு சாப்பிட்டுவிட்டு (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமல் வாய் (மட்டும்) கொப்புளிப்பது
210. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பையைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காகப் புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.27

அத்தியாயம் : 4
211. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم شَرِبَ لَبَنًا، فَمَضْمَضَ وَقَالَ "" إِنَّ لَهُ دَسَمًا "". تَابَعَهُ يُونُسُ وَصَالِحُ بْنُ كَيْسَانَ عَنِ الزُّهْرِيِّ.
பாடம் : 52 பால் அருந்தினால் வாய் கொப்பு ளிக்க வேண்டுமா?
211. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்புளித் தார்கள். பிறகு “இதில் கொழுப்பு இருக்கி றது (ஆகவேதான், வாய்கொப்புளித்தேன்)” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
212. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ لاَ يَدْرِي لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ "".
பாடம் : 53 ஆழ்ந்து உறங்கினால் அங்கத் தூய்மை செய்வதும், ஓரிரு முறை கண்ணயர்ந்து விடுவதாலோ தூங்கி விழுவதாலோ அங்கத் தூய்மை செய்யாமலிருப்பதும்28
212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுதுகொண்டி ருக்கும்போது கண் அயர்ந்துவிட்டால், அவரைவிட்டு உறக்(கக் கலக்)கம் விலகும் வரை (தொழுகையிலிருந்து விலகி) அவர் உறங்கட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால், அவர் பாவமன்னிப்புக் கோரப் போய், தம்மையும் அறியாமல் தம்மைத் தாமே ஏசிக் கொள்ளக்கூடும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 4
213. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَنَمْ حَتَّى يَعْلَمَ مَا يَقْرَأُ "".
பாடம் : 53 ஆழ்ந்து உறங்கினால் அங்கத் தூய்மை செய்வதும், ஓரிரு முறை கண்ணயர்ந்து விடுவதாலோ தூங்கி விழுவதாலோ அங்கத் தூய்மை செய்யாமலிருப்பதும்28
213. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகையில் கண்ணயர்ந்து விடுவாரானால், தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறியும்வரை அவர் (தொழுகையிலிருந்து விலகி) தூங்கிக்கொள்ளட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4