1927. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُقَبِّلُ وَيُبَاشِرُ، وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لإِرْبِهِ. وَقَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ {مَآرِبُ} حَاجَةٌ. قَالَ طَاوُسٌ {أُولِي الإِرْبَةِ} الأَحْمَقُ لاَ حَاجَةَ لَهُ فِي النِّسَاءِ.
பாடம் : 23 நோன்பாளி மனைவியை அணைத் துக்கொள்ளல் ‘‘(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்)” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறி யுள்ளார்கள்.
1927. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு (தம் துணைவியரைக்) கட்டி யணைப்பார்கள்; முத்தமிடுவார்கள். (ஆனால்,) உங்களையெல்லாம்விட அவர்கள் தம் உணர்ச்சிகளை அதிகமாகக் கட்டுப்படுத்திக்கொள்பவர்களாக இருந் தார்கள்.21

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இங்கு ‘உணர்ச்சி' என்பதைக் குறிப்பிட ஹதீஸின் மூலத்தில் ‘இர்ப்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதிலிருந்து பிறந்த) ‘மஆரிப்' (20:18) எனும் சொல்லுக்கு ‘தேவைகள்' என்பது பொருளாகும்.

தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

‘ஃகைரு உலில் இர்பத்' (24:31) என்பதற்கு ‘பெண்ணாசை இல்லாத பேடி' என்பது பொருள்.

‘‘ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்” என்று ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அத்தியாயம் : 30
1928. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ وَهُوَ صَائِمٌ. ثُمَّ ضَحِكَتْ.
பாடம் : 24 நோன்பாளி முத்தமிடல்
1928. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டு தம் துணைவி யரில் ஒருவரை முத்தமிடுவார்கள்” என்று சொல்லிவிட்டு (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1929. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّهَا ـ رضى الله عنهما ـ قَالَتْ بَيْنَمَا أَنَا مَعَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ "" مَا لَكِ أَنُفِسْتِ "". قُلْتُ نَعَمْ. فَدَخَلْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ، وَكَانَتْ هِيَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَكَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ.
பாடம் : 24 நோன்பாளி முத்தமிடல்
1929. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்வைக்குள் இருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது; நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள்; நான் ‘ஆம்' என்று கூறிவிட்டு, அவர் களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன்.

நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள்.

அத்தியாயம் : 30
1930. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَأَبِي، بَكْرٍ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُدْرِكُهُ الْفَجْرُ {جُنُبًا} فِي رَمَضَانَ، مِنْ غَيْرِ حُلُمٍ فَيَغْتَسِلُ وَيَصُومُ.
பாடம் : 25 நோன்பாளி குளிப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது ஒரு துணியை நனைத் துத் தம்மேல் போட்டுக்கொண்டார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது குளிய லறைக்குச் சென்றிருக்கிறார்கள். ‘‘(நோன்பாளி) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ வேறு பொருளையோ ருசி பார்ப்பதில் தவறில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.22 ‘‘நோன்பாளி வாய் கொப்புளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக்கொள்வதற்காக) உடலைக் குளிர்விப்பதும் (தலையில் தண்ணீர் ஊற்றிக்கொள்வதும்) தவறில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலை வாரிக் கொள்ளட்டும்!” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும்போது அதனுள் அமிழ்வேன்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது பல் துலக்கினார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘‘பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் தமது எச்சிலை விழுங்கினால் அவரது நோன்பு முறியும் என்று நான் கூறமாட்டேன்” என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘ஈரமான குச்சியால் பல் துலக்குவதில் தவறில்லை” என்று கூறினார்கள். அப்போது ‘‘அதற்கு சுவை இருக்கிறதே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘தண்ணீருக்கும்தான் சுவை இருக்கிறது; அதன் மூலம் நீர் வாய்க்கொப்புளிக் கிறீரே?” என்று கேட்டார்கள். ‘‘நோன்பாளி கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இடுவது தவறில்லை” என்று அனஸ் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
1930. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தில் குளியல் கடமையானவர்களாக லிஉறக்க ஸ்கலிதத்தினால் அல்லலி வைகறைப் பொழுதை அடைவார்கள்; குளித்துவிட்டு நோன்பைத் தொடர் வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1931. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامِ بْنِ الْمُغِيرَةِ أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، كُنْتُ أَنَا وَأَبِي،، فَذَهَبْتُ مَعَهُ، حَتَّى دَخَلْنَا عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنْ كَانَ لَيُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ غَيْرِ احْتِلاَمٍ، ثُمَّ يَصُومُهُ. ثُمَّ دَخَلْنَا عَلَى أُمِّ سَلَمَةَ، فَقَالَتْ مِثْلَ ذَلِكَ.
பாடம் : 25 நோன்பாளி குளிப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது ஒரு துணியை நனைத் துத் தம்மேல் போட்டுக்கொண்டார்கள். ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது குளிய லறைக்குச் சென்றிருக்கிறார்கள். ‘‘(நோன்பாளி) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ வேறு பொருளையோ ருசி பார்ப்பதில் தவறில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள்.22 ‘‘நோன்பாளி வாய் கொப்புளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக்கொள்வதற்காக) உடலைக் குளிர்விப்பதும் (தலையில் தண்ணீர் ஊற்றிக்கொள்வதும்) தவறில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலை வாரிக் கொள்ளட்டும்!” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும்போது அதனுள் அமிழ்வேன்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது பல் துலக்கினார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘‘பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் தமது எச்சிலை விழுங்கினால் அவரது நோன்பு முறியும் என்று நான் கூறமாட்டேன்” என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘ஈரமான குச்சியால் பல் துலக்குவதில் தவறில்லை” என்று கூறினார்கள். அப்போது ‘‘அதற்கு சுவை இருக்கிறதே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘தண்ணீருக்கும்தான் சுவை இருக்கிறது; அதன் மூலம் நீர் வாய்க்கொப்புளிக் கிறீரே?” என்று கேட்டார்கள். ‘‘நோன்பாளி கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இடுவது தவறில்லை” என்று அனஸ் (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
1931. 1932 அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்; ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறக்க ஸ்கலிதம் ஏற்படாமல், தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு, உம்மு சலமா (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1933. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ "".
பாடம் : 26 நோன்பாளி மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால்..? ‘‘ஒருவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத் தும்போது அவரையும் மீறி தொண்டைக் குள் தண்ணீர் சென்றுவிட்டால் தவறாகாது” என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ‘‘நோன்பாளியின் தொண்டைக்குள் ஈ நுழைந்துவிட்டால், அதனால் எந்தத் தவறுமில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘நோன்பாளி மறதியாக மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டால் அதில் எந்தத் தவறுமில்லை” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
1933. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1934. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، رَأَيْتُ عُثْمَانَ ـ رضى الله عنه ـ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى إِلَى الْمَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلاَثًا، ثُمَّ الْيُسْرَى ثَلاَثًا، ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ "" مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ نَفْسَهُ فِيهِمَا بِشَىْءٍ، إِلاَّ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 27 நோன்பாளி ஈரமான மற்றும் காய்ந்த பொருட்களால் பல் துலக்குதல் ‘‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன்” என்று ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘‘என் சமுதாயத்தாருக்கு நான் சிரமம் தந்தவனாக ஆகிவிடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால், ஒவ்வொரு முறை அங்கத் தூய்மை செய்யும்போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் வழியாகவும் இதைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை. ‘‘பல் துலக்குதல் வாயைத் தூய்மைப் படுத்துவதும் இறைவனின் அன்பைப் பெற்றுத்தருவதும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘பல் துலக்கும்போது நோன்பாளி எச்சிலை விழுங்கலாம்” என்று கத்தாதா (ரஹ்), அதாஉ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
1934. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். (முதலில்) அவர்கள் தம் கைகளில் தண்ணீர் ஊற்றி (மணிக்கட்டுவரை கழுவி)னார்கள். பின்னர் வாய்க் கொப்புளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தித் தமது முகத்தை மூன்று முறை கழுவி னார்கள். பிறகு தம் வலது கையை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இடக் கையை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு வலக் காலை மூன்று முறையும் இடக் காலை மூன்று முறையும் கழுவினார்கள்.

பிறகு ‘‘நான் அங்கத் தூய்மை செய்ததைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

‘‘யார் எனது இந்த உளூவைப் போன்று உளூ செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணத்திற்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 30
1935. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ يَزِيدَ بْنَ هَارُونَ، حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، أَخْبَرَهُ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ بْنِ خُوَيْلِدٍ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ إِنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ احْتَرَقَ. قَالَ "" مَالَكَ "". قَالَ أَصَبْتُ أَهْلِي فِي رَمَضَانَ. فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِكْتَلٍ، يُدْعَى الْعَرَقَ فَقَالَ "" أَيْنَ الْمُحْتَرِقُ "". قَالَ أَنَا. قَالَ "" تَصَدَّقْ بِهَذَا "".
பாடம் : 28 ‘‘ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இங்கு நோன்பாளி, நோன்பு நோற்காதவர் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் கூறவில்லை. ‘‘நோன்பாளி, தொண்டைக்குள் செல்லாத வகையில் மூக்கிற்குள் சொட்டு மருந்து விட்டுக்கொள்வதில் தவறில்லை; அவர் அஞ்சனமும் (சுர்மா) இட்டுக் கொள்ளலாம்” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் வாய் கொப்புளித்து, வாயிலுள்ள தண்ணீரைத் துப்பிவிட்டால் அவரு(டைய நோன்பு)க்கு எந்தப் பாதிப்பும் இல்லை; அவர் எச்சிலை விழுங்காமல் இருக்க வேண்டும்; (அவர் தண்ணீரைத் துப்பிய பிறகு) அவரது வாயில் என்ன எஞ்சியிருக்கப்போகிறது? பிசின் (போன்ற பண்டங்)களை அவர் மெல்லக் கூடாது! ஆனால், (பிசினை மென்று) அதன் எச்சிலை விழுங்கிவிட்டால் நோன்பு முறியும் என்று நான் கூறமாட் டேன்; எனினும், அ(வ்வாறு விழுங்குவ)து தடுக்கப்பட வேண்டும்! மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தும்போது, தம்மையும் மீறி தண்ணீர் தொண்டைக்குள் நுழைந்துவிட்டால் அதில் தவறில்லை. பாடம் : 29 நோன்பாளி ரமளானில் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டு விட்டால்..?23 ‘‘ஒருவர் ரமளானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ இன்றி விட்டுவிட்டால், அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள். ‘‘அதற்குப் பகரமாக, அவர் வேறு ஒரு நாளில் நோன்பு நோற்க வேண்டும்” என்று சயீத் பின் அல்முசய்யப், ஷஅபீ, சயீத் பின் ஜுபைர், இப்ராஹீம் அந்நகஈ, கத்தாதா, ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.
1935. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் கரிந்து போய்விட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்றார்கள். அவர், ‘‘ரமளானில் (நோன்பு நோற்றுக் கொண்டு பகலில்) நான் என் மனைவி யுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்” என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அரக்' எனப்படும் பெரிய கூடை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டுவரப்பட்டது. ‘‘கரிந்துபோனவர் எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘நான்தான்” என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து,) ‘‘இதைத் தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1936. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ "" مَا لَكَ "". قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا "". قَالَ لاَ. قَالَ "" فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ. فَقَالَ "" فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ. قَالَ فَمَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهَا تَمْرٌ ـ وَالْعَرَقُ الْمِكْتَلُ ـ قَالَ "" أَيْنَ السَّائِلُ "". فَقَالَ أَنَا. قَالَ "" خُذْهَا فَتَصَدَّقْ بِهِ "". فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا ـ يُرِيدُ الْحَرَّتَيْنِ ـ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ "" أَطْعِمْهُ أَهْلَكَ "".
பாடம் : 30 ரமளானில் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு, அதற்குப் பரிகாரம் செய்வதற்கு ஏதுமில்லாத நிலையில் ஒருவருக்குத் தர்மம் கொடுக்கப்பட்டால் அதையே அவர் பரிகாரமாக வழங்கலாம்.
1936. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டு விட்டேன்!” என்று அவர் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை” என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘‘இல்லை” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அங்கு இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்' எனும் பெரிய கூடை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ‘‘நான்தான்” என்று அவர் கூறினார். ‘‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் இரண்டு மலைகளுக்கு லிகருங்கற்கள் நிறைந்த இரு பகுதிகளுக்குலி இடையே என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் வேறு வீட்டார் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு ‘‘இதை உம் குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1937. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ الأَخِرَ وَقَعَ عَلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ. فَقَالَ "" أَتَجِدُ مَا تُحَرِّرُ رَقَبَةً "". قَالَ لاَ. قَالَ "" فَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ. قَالَ "" أَفَتَجِدُ مَا تُطْعِمُ بِهِ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ. قَالَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ ـ وَهُوَ الزَّبِيلُ ـ قَالَ "" أَطْعِمْ هَذَا عَنْكَ "". قَالَ عَلَى أَحْوَجَ مِنَّا مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا. قَالَ "" فَأَطْعِمْهُ أَهْلَكَ "".
பாடம் : 31 ரமளானில் தாம்பத்திய உறவு கொண்டவர் அதற்குரிய பரிகாரத்தை ஏழைகளாக உள்ள தம் குடும்பத் தாருக்கே வழங்கிவிடலாமா?
1937. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘(என்னைப் போன்ற) அடித்தட்டு மனிதர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டார் (அதற்குரிய பரிகாரம் என்ன?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை (இயலாது)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக உம்மால் நோன்பு நோற்க இயலுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை (இயலாது)” என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் பெரிய கூடை கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘‘இதை உமது சார்பாக வழங்குவீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘எங்களைவிட ஏழைக்கா? மதீனாவின் இரு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடைய குடும்பத்தார் வேறு யாரும் இல்லை” என்று கூறினார். ‘‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்துவிடுவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 30
1938. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ، وَهْوَ مُحْرِمٌ وَاحْتَجَمَ وَهْوَ صَائِمٌ.
பாடம் : 32 நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது மற்றும் வாந்தி எடுப்பது ‘‘ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில், அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள். ஆனால், ‘‘அவரது நோன்பு முறிந்து விடும்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. முதல் தகவலே சரியானதாகும். ‘‘(உணவுப் பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால் தான் நோன்பு முறியும்; வெளியேறுவதால் முறியாது” என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதி உறிஞ்சி எடுக்கலானார்கள். அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), உம்மு சலமா (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றி ருக்கும்போது குருதி உறிஞ்சி எடுத்திருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதி உறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்மு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘குருதி உறிஞ்சி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்துவிட்டனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பலரிடமிருந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அல்பஸ்ரீ அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘ஆம்' என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று பின்னர் கூறி னார்கள்.24
1938. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்; நோன்பு நோற்றிருந்தபோதும் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்.


அத்தியாயம் : 30
1939. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ.
பாடம் : 32 நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது மற்றும் வாந்தி எடுப்பது ‘‘ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில், அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள். ஆனால், ‘‘அவரது நோன்பு முறிந்து விடும்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. முதல் தகவலே சரியானதாகும். ‘‘(உணவுப் பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால் தான் நோன்பு முறியும்; வெளியேறுவதால் முறியாது” என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதி உறிஞ்சி எடுக்கலானார்கள். அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), உம்மு சலமா (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றி ருக்கும்போது குருதி உறிஞ்சி எடுத்திருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதி உறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்மு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘குருதி உறிஞ்சி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்துவிட்டனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பலரிடமிருந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அல்பஸ்ரீ அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘ஆம்' என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று பின்னர் கூறி னார்கள்.24
1939. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ருந்தபோது குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.25


அத்தியாயம் : 30
1940. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، يَسْأَلُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَكُنْتُمْ تَكْرَهُونَ الْحِجَامَةَ لِلصَّائِمِ قَالَ لاَ. إِلاَّ مِنْ أَجْلِ الضَّعْفِ. وَزَادَ شَبَابَةُ حَدَّثَنَا شُعْبَةُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 32 நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது மற்றும் வாந்தி எடுப்பது ‘‘ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில், அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள் ளார்கள். ஆனால், ‘‘அவரது நோன்பு முறிந்து விடும்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. முதல் தகவலே சரியானதாகும். ‘‘(உணவுப் பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால் தான் நோன்பு முறியும்; வெளியேறுவதால் முறியாது” என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதி உறிஞ்சி எடுக்கலானார்கள். அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), உம்மு சலமா (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றி ருக்கும்போது குருதி உறிஞ்சி எடுத்திருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதி உறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்மு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘குருதி உறிஞ்சி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்துவிட்டனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பலரிடமிருந்து ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அல்பஸ்ரீ அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘ஆம்' என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று பின்னர் கூறி னார்கள்.24
1940. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நோன்பாளி குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா?” என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இல்லை; பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே தவிர!” என்று அவர்கள் பதிலளித் தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘நபி (ஸல்) அவர்கள் காலத்தில்' எனும் வாக்கியம் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 30
1941. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، سَمِعَ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ لِرَجُلٍ "" انْزِلْ فَاجْدَحْ لِي "". قَالَ يَا رَسُولَ اللَّهِ الشَّمْسُ. قَالَ "" انْزِلْ فَاجْدَحْ لِي "". قَالَ يَا رَسُولَ اللَّهِ الشَّمْسُ. قَالَ "" انْزِلْ فَاجْدَحْ لِي "". فَنَزَلَ، فَجَدَحَ لَهُ، فَشَرِبَ، ثُمَّ رَمَى بِيَدِهِ هَا هُنَا، ثُمَّ قَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "". تَابَعَهُ جَرِيرٌ وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الشَّيْبَانِيِّ عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ.
பாடம் : 33 பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்
1941. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ரமளானில்) ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறி னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! சூரியன் (இன்னும் முழுமையாக மறையவில்லையே)!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள்.

அவர் இறங்கி நபியவர்களுக்காக மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தமது கையால் (கிழக்கே) சுட்டிக்காட்டினார்கள் பிறகு, ‘‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு (இருள்) முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்” என்றார்கள்.26

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1942. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْرُدُ الصَّوْمَ.
பாடம் : 33 பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்
1942. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கிறேன்” என்று கூறி னார்.


அத்தியாயம் : 30
1943. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَأَصُومُ فِي السَّفَرِ وَكَانَ كَثِيرَ الصِّيَامِ. فَقَالَ "" إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ "".
பாடம் : 33 பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்
1943. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1944. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ أَفْطَرَ، فَأَفْطَرَ النَّاسُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالْكَدِيدُ مَاءٌ بَيْنَ عُسْفَانَ وَقُدَيْدٍ.
பாடம் : 34 ரமளானில் சில நாட்கள் நோன்பு நோற்றுவிட்டுப் பின்னர் பயணம் செய்தால்...?
1944. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; ‘கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பை விட்டனர்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

‘கதீத்' என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள ஒரு நீர்நிலை ஆகும்.27

அத்தியாயம் : 30
1945. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، أَنَّ إِسْمَاعِيلَ بْنَ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَهُ عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ فِي يَوْمٍ حَارٍّ حَتَّى يَضَعَ الرَّجُلُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ، وَمَا فِينَا صَائِمٌ إِلاَّ مَا كَانَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَابْنِ رَوَاحَةَ.
பாடம் : 35
1945. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், அவர்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் வெப்பம் மிகுந்த ஒரு நாளில் புறப்பட் டோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தலையில் வைத்துக் கொண்டனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.

அத்தியாயம் : 30
1946. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهم ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا، وَرَجُلاً قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ "" مَا هَذَا "". فَقَالُوا صَائِمٌ. فَقَالَ "" لَيْسَ مِنَ الْبِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ "".
பாடம் : 36 வெப்பம் கடுமையாகி, நிழலில் தங்கவைக்கப்பட்ட ஒருவரிடம், ‘‘பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
1946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒரு மனிதர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்த தைக் கண்டார்கள். ‘‘இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று நபியவர்கள் கேட்டார் கள். ‘‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்” என்று மக்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது” என்று கூறினார்கள்.28

அத்தியாயம் : 30