1906. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ رَمَضَانَ فَقَالَ "" لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلاَلَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1906. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (நோன்பு) பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘ரமளான் பிறையை நீங்கள் காணாத வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாத வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 30
1907. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاَثِينَ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1907. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாக(வும் இகும். எனவே, பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பது நாட்களாக எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1908. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا "". وَخَنَسَ الإِبْهَامَ فِي الثَّالِثَةِ.
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1908. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில், இரு கை விரல்களையும் மூன்று முறை விரித்து) ‘‘மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்” என்று கூறினார்கள். மூன்றாம் தடவை பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.10


அத்தியாயம் : 30
1909. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1909. அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறையைப் பார்த்து நோன்பு நோறுங் கள்; பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
1910. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم آلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَلَمَّا مَضَى تِسْعَةٌ وَعِشْرُونَ يَوْمًا غَدَا أَوْ رَاحَ فَقِيلَ لَهُ إِنَّكَ حَلَفْتَ أَنْ لاَ تَدْخُلَ شَهْرًا. فَقَالَ "" إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعَةً وَعِشْرِينَ يَوْمًا "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1910. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு மாதம் தம் துணைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள்; இருபத் தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று ‘காலையில்' அல்லது ‘மாலையில்' (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் ‘‘நீங்கள் ஒரு மாதம் (வீட்டிற்கு) வரமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தீர்களே!” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘ ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்றார்கள்.


அத்தியாயம் : 30
1911. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ آلَيْتَ شَهْرًا. فَقَالَ "" إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ "".
பாடம் : 11 ‘‘நீங்கள் பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; (மறு) பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ‘‘யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.9
1911. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் (ஒரு மாதம்) சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந் தார்கள்; அப்போது அவர்களின் கால் (நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு மாடி அறையில் இருபத்தொன்பது நாட்கள் தங்கினார்கள்; பின்னர் இறங்கி வந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்திருந்தீர்களே” என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்றார்கள்.

அத்தியாயம் : 30
1912. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" شَهْرَانِ لاَ يَنْقُصَانِ شَهْرَا عِيدٍ رَمَضَانُ وَذُو الْحَجَّةِ "".
பாடம் : 12 இரண்டு பெருநாட்களின் மாதங்கள் (சேர்ந்தாற்போல்) குறையாது. ‘‘(எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாகக்) குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்” என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ‘‘(ஒரே ஆண்டில்) இரு பெருநாட்களின் மாதங்களும் சேர்ந்தாற்போல் இருபத் தொன்பது நாட்களாகக் குறையாது” என்று முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
1912. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹிஜ்ஜாவும் சேர்ந்தாற்போல் குறையாது.11

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
1913. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا "". يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ.
பாடம் : 13 ‘‘நாம் எழுதத் தெரியாதவர்களாகவும் (நட்சத்திரக்) கணிதத்தை அறியாத வர்களாகவும் உள்ளோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
1913. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமு தாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் அறியமாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.12

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1914. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ "".
பாடம் : 14 ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு நோற்கக் கூடாது.
1914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!13

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1915. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم إِذَا كَانَ الرَّجُلُ صَائِمًا، فَحَضَرَ الإِفْطَارُ، فَنَامَ قَبْلَ أَنْ يُفْطِرَ لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلاَ يَوْمَهُ، حَتَّى يُمْسِيَ، وَإِنَّ قَيْسَ بْنَ صِرْمَةَ الأَنْصَارِيَّ كَانَ صَائِمًا، فَلَمَّا حَضَرَ الإِفْطَارُ أَتَى امْرَأَتَهُ، فَقَالَ لَهَا أَعِنْدَكِ طَعَامٌ قَالَتْ لاَ وَلَكِنْ أَنْطَلِقُ، فَأَطْلُبُ لَكَ. وَكَانَ يَوْمَهُ يَعْمَلُ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ، فَجَاءَتْهُ امْرَأَتُهُ، فَلَمَّا رَأَتْهُ قَالَتْ خَيْبَةً لَكَ. فَلَمَّا انْتَصَفَ النَّهَارُ غُشِيَ عَلَيْهِ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ} فَفَرِحُوا بِهَا فَرَحًا شَدِيدًا، وَنَزَلَتْ {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ}.
பாடம் : 15 புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரோடு (நீங்கள்) தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக் கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்களே துரோகம் இழைத்துக்கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்தே இருக்கிறான். ஆகவே(தான்). அவன் உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்று உங்களை மன்னித்தான். இனிமேல் நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) பாலுறவில் ஈடுபட்டுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கென விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)
1915. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் (ஆரம்ப நாட்களில்) நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, நோன்பு துறப்பதற்கு முன்பே உறங்கிவிட்டிருந்தால், அன்றைய இரவிலும் (தொடர்ந்து அடுத்த நாள்) பகலிலும் மாலைவரை எதையும் உண்ணமாட்டார்கள்.

(ஒரு முறை) கைஸ் பின் ஸிர்மா அல்அன்சாரி (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?” என்று கேட்டார்கள்; அவருடைய மனைவி, ‘‘இல்லை; எனினும் நான் சென்று உங்களுக்காக (உணவைத்) தேடி வருகிறேன்” என்றார்.

கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் (கூலி) வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக் கம் மேலிட்டுவிட்டது. அவருடைய மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘‘உங்களுக்கு நஷ்டம்தான்” என்றார்.

(மறுநாள்) நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது தான், ‘‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரோடு (நீங்கள்) தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது” (2:187) என்ற வசனத்தொடர் அருளப்பெற்றது. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

அத்துடன், ‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) எனும் தொடரும் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 30
1916. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنِي حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} عَمَدْتُ إِلَى عِقَالٍ أَسْوَدَ وَإِلَى عِقَالٍ أَبْيَضَ، فَجَعَلْتُهُمَا تَحْتَ وِسَادَتِي، فَجَعَلْتُ أَنْظُرُ فِي اللَّيْلِ، فَلاَ يَسْتَبِينُ لِي، فَغَدَوْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ "" إِنَّمَا ذَلِكَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ "".
பாடம் : 16 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்)வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். (2:187) இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து பராஉ (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.14
1916. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளி வாகத் தெரியும்வரை” (2:187) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கறுப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையின் கீழ் வைத்துக்கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை.

விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இதைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(கறுப்புக் கயிறு என்பதன் கருத்து:) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து:) விடியலின் வெண்மையும்தான்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 30
1917. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، ح. حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ أُنْزِلَتْ {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} وَلَمْ يَنْزِلْ مِنَ الْفَجْرِ، فَكَانَ رِجَالٌ إِذَا أَرَادُوا الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلِهِ الْخَيْطَ الأَبْيَضَ وَالْخَيْطَ الأَسْوَدَ، وَلَمْ يَزَلْ يَأْكُلُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رُؤْيَتُهُمَا، فَأَنْزَلَ اللَّهُ بَعْدُ {مِنَ الْفَجْرِ} فَعَلِمُوا أَنَّهُ إِنَّمَا يَعْنِي اللَّيْلَ وَالنَّهَارَ.
பாடம் : 16 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்)வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். (2:187) இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து பராஉ (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.14
1917. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” (2:187) என்ற இறைவசனம் அருளப்பட்டது. அதில் ‘விடியலின்' (மினல் ஃபஜ்ர்) எனும் சொற்றொடர் அருளப்பெறவில்லை.

அப்போதெல்லாம் மக்கள் சிலர் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் மறு காலில் கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள்; அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டுகொண்டே இருப்பார்கள். பிறகுதான் ‘விடியலின்' (மினல் ஃபஜ்ர்) எனும் சொற்றொடர் (அவ்வசனத்துடன்) அருளப்பெற்றது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்' என்பதை அப்போதுதான் மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.15

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
1918. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ.وَالْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ بِلاَلاً، كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ ". قَالَ الْقَاسِمُ وَلَمْ يَكُنْ بَيْنَ أَذَانِهِمَا إِلاَّ أَنْ يَرْقَى ذَا وَيَنْزِلَ ذَا.
பாடம் : 17 ‘‘பிலால் பாங்கு சொல்வது நீங்கள் சஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுத்துவிட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
1918. 1919 இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்குமுன்) இரவிலேயே தொழுகை அறிவிப்புச் செய்வார்கள்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்னு உம்மி மக்(த்)தூம் தொழுகை அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தான் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் தொழுகை அறிவிப்புச் செய்கிறார்” என்று குறிப்பிட்டார்கள்.

‘‘அவர் தொழுகை அறிவிப்புச் செய்து விட்டு இறங்குவார்; இவர் தொழுகை அறிவிப்புச் செய்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இருவரின் அறிவிப்பு களுக்கிடையே (பெரிய) இடைவெளி இருக்காது” என்று காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.16

அத்தியாயம் : 30
1920. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي، ثُمَّ تَكُونُ سُرْعَتِي أَنْ أُدْرِكَ السُّجُودَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 18 சஹரை விரைவுபடுத்துதல்
1920. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் குடும்பத்தாருடன் சஹர் செய்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (சுப்ஹு) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்.17

அத்தியாயம் : 30
1921. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ. قُلْتُ كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ قَالَ قَدْرُ خَمْسِينَ آيَةً.
பாடம் : 19 சஹருக்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?
1921. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர் தொழுகைக்கு அவர்கள் எழுந்துவிட்டார்கள்” என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நான் ‘‘(ஃபஜ்ரின்) பாங்குக்கும் சஹருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) அளவுக்கு (நேரம் இருந்தது)” என்று பதிலளித்தார்கள்.18

அத்தியாயம் : 30
1922. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ، فَنَهَاهُمْ. قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ "" لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى "".
பாடம் : 20 சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது; ஆனால், அது கட்டாயமில்லை. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தொடர்நோன்பு வைத்திருக்கிறார்கள்; (அப்படித் தொடர்நோன்பு நோற்ற காலங்களில்) ‘சஹர் செய்தார்கள்’ என்று கூறப்படவில்லை.
1922. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோன்பு துறக் காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்; மக்களும் அவ்வாறு தொடர்நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தொடர்நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

நபித்தோழர்கள், ‘‘நீங்கள் (மட்டும்) தொடர்நோன்பு நோற்கிறீர்களே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்ற வன் அல்லன்; (இறைவனிடமிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப் படும் நிலையில் நான் உள்ளேன்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 30
1923. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً "".
பாடம் : 20 சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது; ஆனால், அது கட்டாயமில்லை. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தொடர்நோன்பு வைத்திருக்கிறார்கள்; (அப்படித் தொடர்நோன்பு நோற்ற காலங்களில்) ‘சஹர் செய்தார்கள்’ என்று கூறப்படவில்லை.
1923. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (பரக்கத்) இருக்கிறது.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 30
1924. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً يُنَادِي فِي النَّاسِ، يَوْمَ عَاشُورَاءَ "" أَنْ مَنْ أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ "".
பாடம் : 21 நோன்பு நோற்பதாகப் பகலில் தீர்மானிப்பது ‘‘அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘உங்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா?› என்று (பகலில்) கேட்பார்கள்; ‘இல்லை’ என்று நாங்கள் சொன்னால், ‘நான் இன்றைய தினம் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்’ என்று கூறுவார்கள்” என (அவர்களின் துணைவியார்) உம்முத்தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூதல்ஹா (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.
1924. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று ஒருவரை அனுப்பி, ‘‘(இன்று) சாப்பிட்டுவிட்டவர் (இரவுவரை தமது நோன்பை) ‘முழுமை யாக்கட்டும்!› அல்லது ‘நோற்கட்டும்!› சாப்பிடாமல் இருப்பவர் (நோன்பைத் தொடரட்டும்) சாப்பிட வேண்டாம்!” என்று மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.19

அத்தியாயம் : 30
1925. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامِ بْنِ الْمُغِيرَةِ أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ كُنْتُ أَنَا وَأَبِي، حِينَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ ح. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ أَبَاهُ عَبْدَ الرَّحْمَنِ، أَخْبَرَ مَرْوَانَ، أَنَّ عَائِشَةَ، وَأُمَّ سَلَمَةَ أَخْبَرَتَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ. وَقَالَ مَرْوَانُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ أُقْسِمُ بِاللَّهِ لَتُقَرِّعَنَّ بِهَا أَبَا هُرَيْرَةَ. وَمَرْوَانُ يَوْمَئِذٍ عَلَى الْمَدِينَةِ. فَقَالَ أَبُو بَكْرٍ فَكَرِهَ ذَلِكَ عَبْدُ الرَّحْمَنِ، ثُمَّ قُدِّرَ لَنَا أَنْ نَجْتَمِعَ بِذِي الْحُلَيْفَةِ، وَكَانَتْ لأَبِي هُرَيْرَةَ هُنَالِكَ أَرْضٌ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ لأَبِي هُرَيْرَةَ إِنِّي ذَاكِرٌ لَكَ أَمْرًا، وَلَوْلاَ مَرْوَانُ أَقْسَمَ عَلَىَّ فِيهِ لَمْ أَذْكُرْهُ لَكَ. فَذَكَرَ قَوْلَ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ. فَقَالَ كَذَلِكَ حَدَّثَنِي الْفَضْلُ بْنُ عَبَّاسٍ، وَهُنَّ أَعْلَمُ، وَقَالَ هَمَّامٌ وَابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْمُرُ بِالْفِطْرِ. وَالأَوَّلُ أَسْنَدُ.
பாடம் : 22 நோன்பு நோற்பவர் பெருந்துடக்கு உள்ளவராகக் காலை நேரத்தை அடைதல்20
1925. 1926 அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் (வைகறை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்” என்று ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பின் அல்ஹகமிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது மர்வான் என் தந்தையிடம், ‘‘(பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைபவருக்கு நோன்பு கிடையாது என்று சொல்லிவரும்) அபூஹுரைராவுக்கு உறைக்கும் வண்ணம் இதை அவரிடம் நிச்சயமாக நீர் கூற வேண்டும் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறினார். இதை அப்துர் ரஹ்மான் அவர்கள் விரும்ப வில்லை.

பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா' எனும் இடத்தில் (தற்செயலாக) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கே இருந்தார்கள்;) அப்துர் ரஹ்மான் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘‘நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவிருக் கிறேன்; மர்வான் இது தொடர்பாக சத்தியம் செய்து வற்புறுத்தியிருக்காவிட்டால், இதை நான் உங்களிடம் கூறப் போவதில்லை” என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறு (பெருந்துடக்கு உள்ளவருக்கு நோன்பு இல்லை என்று) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்தான் எனக்கு அறிவித்தார்; அவர்தான் (இதன் உண்மையை) நன்கறிந்தவர்” என்று பதிலளித்தார்கள்.

‘‘(ஃபஜ்ர் நேரத்தில் குளியல் கடமையாக இருப்பவர்) நோன்பை விட்டுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முந்திய (இந்த நபிமொழியின் தொடக் கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடருடன் உள்ளதாகும்.

அத்தியாயம் : 30