1847. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ فِيهِ أَثَرُ صُفْرَةٍ أَوْ نَحْوُهُ، وَكَانَ عُمَرُ يَقُولُ لِي تُحِبُّ إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ أَنْ تَرَاهُ فَنَزَلَ عَلَيْهِ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ "".
பாடம் : 19 ஒருவர் (இஹ்ராமுடைய சட்டங் களை) அறியாமல், முழு நீளச் சட்டை அணிந்திருக்கும் நிலை யில் இஹ்ராம் கட்டுதல் “(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அறியா மலோ மறதியாகவோ நறுமணம் பூசிக் கொண்டால், அல்லது (தைக்கப்பட்ட) ஆடையை அணிந்துகொண்டால் அதற் காக எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டிய தில்லை!” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1847. 1848 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற அடையாளம் உள்ள மேலங்கியை அவர் அணிந்திருந்தார்.

“நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்று பின்னர் அது அவர்களைவிட்டு விலகியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது ஹஜ்ஜில் செய்யக்கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இழுத்தபோது) கடித்தவரது முன்பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அத்தியாயம் : 28
1849. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ـ أَوْ قَالَ ثَوْبَيْهِ ـ وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي "".
பாடம் : 20 இஹ்ராம் கட்டிய நிலையில் அரஃபாவில் இறந்தவரின் நிலை ஹஜ்ஜின் எஞ்சிய கிரியைகளை அவர் சார்பாக மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1849. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத் திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் ‘தல்பியா’ சொல்லும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 28
1850. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 20 இஹ்ராம் கட்டிய நிலையில் அரஃபாவில் இறந்தவரின் நிலை ஹஜ்ஜின் எஞ்சிய கிரியைகளை அவர் சார்பாக மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1850. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்தி லிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு நறுமணம் பூசாதீர்கள். இவரது தலையை மூடாதீர்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை ‘தல்பியா’ கூறிக்கொண்டிருப்பவராக எழுப்புவான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 28
1851. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَقَصَتْهُ نَاقَتُهُ، وَهُوَ مُحْرِمٌ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلاَ تَمَسُّوهُ بِطِيبٍ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 21 இஹ்ராம் கட்டியிருப்பவர் இறந்துவிட்டால் நபிவழியின் படி அவருக்காகச் செய்ய வேண்டியவை
1851. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டிய நிலையில் தங்கியிருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட, அவர் இறந்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்கு ‘கஃபன் இடுங்கள்; இவருக்கு நறுமணம் பூசாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் இவர் ‘தல்பியா’ கூறிக்கொண்டி ருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 28
1852. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً، مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ "" نَعَمْ. حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ، فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ "".
பாடம் : 22 இறந்தவருக்காக ஹஜ் செய்வ தும், அவருடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும், பெண்ணுக்காக ஆண் ஹஜ் செய்வதும்
1852. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஜுஹைனா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1853. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ أَنَّ امْرَأَةً، ح.
பாடம் : 23 வாகனத்தில் அமர முடியாத வருக்காக மற்றவர் ஹஜ் செய்தல்
1853. 1854 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) விடைபெறும் ஹஜ்ஜின்போது வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள்மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறை வேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1855. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ إِنَّ فَرِيضَةَ اللَّهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ قَالَ "" نَعَمْ "". وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 24 ஆணுக்காகப் பெண் ஹஜ் செய்தல்
1855. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்ல் (ரலி) அவர்கள் அமர்ந்திருத்தார்கள். அப்போது ‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்தார். ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள்.

அப்போது அப்பெண்மணி, “அல்லாஹ் விதித்த (ஹஜ்) கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதியவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார் கள். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.11

அத்தியாயம் : 28
1856. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَنِي ـ أَوْ قَدَّمَنِي ـ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الثَّقَلِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1856. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவுக்கு) பயணச் சுமைகளுடன் என்னை இரவி லேயே அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28
1857. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الْحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي بِمِنًى، حَتَّى سِرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1857. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். -அப்போது நான் பருவ வயதை நெருங் கிக்கொண்டிருந்தேன்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

இது விடைபெறும் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 28
1858. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حُجَّ بِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1858. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.


அத்தியாயம் : 28
1859. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَقُولُ لِلسَّائِبِ بْنِ يَزِيدَ، وَكَانَ قَدْ حُجَّ بِهِ فِي ثَقَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1859. ஜுஅய்த் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் குறித்து, அன்னார் நபி (ஸல்) அவர் களுடைய (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்” என்று உமர் பின் அப்தில் அஸீல் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அத்தியாயம் : 28
1860. وَقَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَذِنَ عُمَرُ ـ رضى الله عنه ـ لأَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1860. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், தாம் செய்த இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28
1861. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ حَدَّثَتْنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَغْزُوا وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ "" لَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ الْحَجُّ، حَجٌّ مَبْرُورٌ "". فَقَالَتْ عَائِشَةُ فَلاَ أَدَعُ الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1861. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! (பெண் களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப் போரிலும் உங்களுடன் சேர்ந்துகொள்ளக் கூடாதா?” என்று கேட்டேன்; அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பெண்களுக்கு) சிறந்த, அழகிய அறப் போர் (ஜிஹாத்), (பாவச்செயல் எதுவும் கலவாத) ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ் ஆகும்” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.


அத்தியாயம் : 28
1862. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الْحَجَّ. فَقَالَ "" اخْرُجْ مَعَهَا "".
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1862. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மணமுடிக்கத் தகாத ஆண் (மஹ்ரம்) துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போதுதான் (மற்ற) ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ் வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட எண்ணி யிருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள்.


அத்தியாயம் : 28
1863. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حَجَّتِهِ قَالَ لأُمِّ سِنَانٍ الأَنْصَارِيَّةِ "" مَا مَنَعَكِ مِنَ الْحَجِّ "". قَالَتْ أَبُو فُلاَنٍ ـ تَعْنِي زَوْجَهَا ـ كَانَ لَهُ نَاضِحَانِ، حَجَّ عَلَى أَحَدِهِمَا، وَالآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا. قَالَ "" فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً مَعِي "". رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1863. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்மு சினான் அல்அன்சாரியா என்ற பெண்மணியிடம், “நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “என் கணவரே காரணம்; அவருக்குத் தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் உள்ளன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக் குச் சென்றுவிட்டார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னுடன் ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஜாபிர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள் ளார்கள்.


அத்தியாயம் : 28
1864. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ ـ غَزْوَةً ـ قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي "" أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى "".
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1864. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் பிடித்தவை; விருப்பமானவை. (அவை:) “கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ (மஹ்ரம்) இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது. அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும்வரை, சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் தொழக் கூடாது. மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி) (புனித)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”

அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப் பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 28
1865. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، قَالَ حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ قَالَ "" مَا بَالُ هَذَا "". قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ. قَالَ "" إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ "". وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ.
பாடம் : 27 கஅபாவரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்
1865. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக் கிடையே தொங்கியபடி (கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்” என்று மக்கள் கூறி னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 28
1866. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ، وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَفْتَيْتُهُ، فَقَالَ عَلَيْهِ السَّلاَمُ "" لِتَمْشِ وَلْتَرْكَبْ "". قَالَ وَكَانَ أَبُو الْخَيْرِ لاَ يُفَارِقُ عُقْبَةَ. قَالَ أَبُو عَبْد اللَّهِ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ يَزِيدَ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ فَذَكَرَ الْحَدِيثَ
பாடம் : 27 கஅபாவரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்
1866. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சகோதரி கஅபாவரை (காலணி அணியாமல்) நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபுல்கைர் (ரஹ்) அவர்கள், அன்னாரைவிட்டு இணைபிரியாதவராக (நேரடியாக நபிமொழிகளைக் கேட்பவராக) இருந்தார்.

அத்தியாயம் : 28