1841. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ بِعَرَفَاتٍ "" مَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَمَنْ لَمْ يَجِدْ إِزَارًا فَلْيَلْبَسْ سَرَاوِيلَ "". لِلْمُحْرِمِ.
பாடம் : 15 இஹ்ராம் கட்டியவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் காலுறைகளை அணியலாம்.
1841. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தியபோது, “யாருக்குக் காலணிகள் கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்குக் கீழங்கி கிடைக்கவில்லையோ அவர் முழுக்கால் சட்டைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றேன்.


அத்தியாயம் : 28
1842. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ فَقَالَ "" لاَ يَلْبَسِ الْقَمِيصَ، وَلاَ الْعَمَائِمَ، وَلاَ السَّرَاوِيلاَتِ، وَلاَ الْبُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ زَعْفَرَانٌ وَلاَ وَرْسٌ، وَإِنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ "".
பாடம் : 15 இஹ்ராம் கட்டியவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் காலுறைகளை அணியலாம்.
1842. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “(முழு நீளச்) சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை கள், (முக்காடுள்ள) மேலங்கிகள், குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணிந்துகொள்ளட்டும்! ஆயினும், கணுக் காலுக்குக் கீழே இருக்கும்படி அவற்றைக் கத்தரித்துக்கொள்ளட்டும்!” என்று விடையளித்தார்கள்.

அத்தியாயம் : 28
1843. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَفَاتٍ فَقَالَ "" مَنْ لَمْ يَجِدِ الإِزَارَ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ "".
பாடம் : 16 கீழங்கி கிடைக்காவிட்டால் முழுக்கால் சட்டைகளை அணியலாம்.
1843. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள், “யாருக்குக் கீழங்கி கிடைக்க வில்லையோ அவர் முழுக்கால் சட்டை களை அணியட்டும்! யாருக்குக் காலணி கள் கிடைக்கவில்லையோ அவர் காலுறை களை அணியட்டும்!” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1844. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ، حَتَّى قَاضَاهُمْ لاَ يُدْخِلُ مَكَّةَ سِلاَحًا إِلاَّ فِي الْقِرَابِ.
பாடம் : 17 இஹ்ராம் கட்டியவர் ஆயுதம் தரிப்பது “(இஹ்ராம் கட்டியவர்) எதிரிகளைப் பற்றி அஞ்சினால் ஆயுதம் தரித்துக் கொள்ளலாம்; ஆனால், குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்” என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்” என்று இக்ரிமா (ரஹ்) அவர்களைத் தவிர வேறுயாரும் கூறவில்லை.
1844. பராஉ (ரலி) அவர்கள் கூறிதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்களை மக்காவிற்குள் நுழையவிட மக்காவாசிகள் மறுத்தார்கள். (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக்கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள்.

அத்தியாயம் : 28
1845. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ، وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، هُنَّ لَهُنَّ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِمْ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، فَمَنْ كَانَ دُونَ ذَلِكَ فَمِنْ حَيْثُ أَنْشَأَ، حَتَّى أَهْلُ مَكَّةَ مِنْ مَكَّةَ.
பாடம் : 18 இஹ்ராம் இல்லாமல் மக்காவிலும் புனித (ஹரம்) எல்லையிலும் நுழைதல் இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு நுழைந்திருக்கிறார்கள். ஹஜ், உம்ரா செய்ய நாடுபவருக்குத்தான் இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; விறகு விற்பவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1845. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தை யும் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்னுல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுவதற்குரிய எல்லைகளாக நிர்ணயித் தார்கள்; இந்த எல்லைகள் அந்தப் பகுதி யினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும் உரியவையாகும்.

இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்தி லிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்; மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்.9


அத்தியாயம் : 28
1846. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ، فَقَالَ إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ "" اقْتُلُوهُ "".
பாடம் : 18 இஹ்ராம் இல்லாமல் மக்காவிலும் புனித (ஹரம்) எல்லையிலும் நுழைதல் இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு நுழைந்திருக்கிறார்கள். ஹஜ், உம்ரா செய்ய நாடுபவருக்குத்தான் இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; விறகு விற்பவர்கள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1846. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (இஹ்ராம் கட்டாத நிலையில் மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்” எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.10

அத்தியாயம் : 28
1847. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ فِيهِ أَثَرُ صُفْرَةٍ أَوْ نَحْوُهُ، وَكَانَ عُمَرُ يَقُولُ لِي تُحِبُّ إِذَا نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ أَنْ تَرَاهُ فَنَزَلَ عَلَيْهِ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ "".
பாடம் : 19 ஒருவர் (இஹ்ராமுடைய சட்டங் களை) அறியாமல், முழு நீளச் சட்டை அணிந்திருக்கும் நிலை யில் இஹ்ராம் கட்டுதல் “(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அறியா மலோ மறதியாகவோ நறுமணம் பூசிக் கொண்டால், அல்லது (தைக்கப்பட்ட) ஆடையை அணிந்துகொண்டால் அதற் காக எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டிய தில்லை!” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1847. 1848 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற அடையாளம் உள்ள மேலங்கியை அவர் அணிந்திருந்தார்.

“நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்பெற்று பின்னர் அது அவர்களைவிட்டு விலகியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது ஹஜ்ஜில் செய்யக்கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இழுத்தபோது) கடித்தவரது முன்பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அத்தியாயம் : 28
1849. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَقْعَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ ـ أَوْ قَالَ ثَوْبَيْهِ ـ وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي "".
பாடம் : 20 இஹ்ராம் கட்டிய நிலையில் அரஃபாவில் இறந்தவரின் நிலை ஹஜ்ஜின் எஞ்சிய கிரியைகளை அவர் சார்பாக மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1849. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத் திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் ‘தல்பியா’ சொல்லும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 28
1850. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَرَفَةَ إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ فَوَقَصَتْهُ ـ أَوْ قَالَ فَأَوْقَصَتْهُ ـ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 20 இஹ்ராம் கட்டிய நிலையில் அரஃபாவில் இறந்தவரின் நிலை ஹஜ்ஜின் எஞ்சிய கிரியைகளை அவர் சார்பாக மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
1850. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபா பெருவெளியில் தங்கியிருந்தார். அப்போது அவர் தமது ஊர்தி ஒட்டகத்தி லிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். இவருக்கு நறுமணம் பூசாதீர்கள். இவரது தலையை மூடாதீர்கள். இவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை ‘தல்பியா’ கூறிக்கொண்டிருப்பவராக எழுப்புவான்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 28
1851. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَقَصَتْهُ نَاقَتُهُ، وَهُوَ مُحْرِمٌ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلاَ تَمَسُّوهُ بِطِيبٍ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا "".
பாடம் : 21 இஹ்ராம் கட்டியிருப்பவர் இறந்துவிட்டால் நபிவழியின் படி அவருக்காகச் செய்ய வேண்டியவை
1851. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டிய நிலையில் தங்கியிருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட, அவர் இறந்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்கு ‘கஃபன் இடுங்கள்; இவருக்கு நறுமணம் பூசாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் இவர் ‘தல்பியா’ கூறிக்கொண்டி ருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 28
1852. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً، مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ "" نَعَمْ. حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ، فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ "".
பாடம் : 22 இறந்தவருக்காக ஹஜ் செய்வ தும், அவருடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும், பெண்ணுக்காக ஆண் ஹஜ் செய்வதும்
1852. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஜுஹைனா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1853. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ أَنَّ امْرَأَةً، ح.
பாடம் : 23 வாகனத்தில் அமர முடியாத வருக்காக மற்றவர் ஹஜ் செய்தல்
1853. 1854 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்) விடைபெறும் ஹஜ்ஜின்போது வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள்மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவர் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறை வேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

அத்தியாயம் : 28
1855. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ، فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ إِنَّ فَرِيضَةَ اللَّهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ قَالَ "" نَعَمْ "". وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 24 ஆணுக்காகப் பெண் ஹஜ் செய்தல்
1855. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்ல் (ரலி) அவர்கள் அமர்ந்திருத்தார்கள். அப்போது ‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்தார். ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள்.

அப்போது அப்பெண்மணி, “அல்லாஹ் விதித்த (ஹஜ்) கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதியவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார் கள். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.11

அத்தியாயம் : 28
1856. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَنِي ـ أَوْ قَدَّمَنِي ـ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الثَّقَلِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1856. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவுக்கு) பயணச் சுமைகளுடன் என்னை இரவி லேயே அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28
1857. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الْحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي بِمِنًى، حَتَّى سِرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ بِمِنًى فِي حَجَّةِ الْوَدَاعِ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1857. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். -அப்போது நான் பருவ வயதை நெருங் கிக்கொண்டிருந்தேன்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

இது விடைபெறும் ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 28
1858. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يُونُسَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حُجَّ بِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1858. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.


அத்தியாயம் : 28
1859. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَقُولُ لِلسَّائِبِ بْنِ يَزِيدَ، وَكَانَ قَدْ حُجَّ بِهِ فِي ثَقَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல்
1859. ஜுஅய்த் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் குறித்து, அன்னார் நபி (ஸல்) அவர் களுடைய (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்” என்று உமர் பின் அப்தில் அஸீல் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அத்தியாயம் : 28
1860. وَقَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَذِنَ عُمَرُ ـ رضى الله عنه ـ لأَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ.
பாடம் : 26 பெண்கள் ஹஜ் செய்தல்
1860. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், தாம் செய்த இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 28