1793. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. قَالَ وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1793. 1794 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே தவாஃப் செய்யாமலேயே தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) வரலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழு முறை தவாஃப் செய்து விட்டு, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா-மர்வா வுக்கிடையே ஏழு முறை ‘சயீ’ செய்தார்கள்; எனவே, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!” எனக் கூறினார்கள்.

நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1795. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ وَهُوَ مُنِيخٌ فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَحْسَنْتَ. طُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَحِلَّ "". فَطُفْتُ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ. فَكُنْتُ أُفْتِي بِهِ، حَتَّى كَانَ فِي خِلاَفَةِ عُمَرَ فَقَالَ إِنْ أَخَذْنَا بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ أَخَذْنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِنَّهُ لَمْ يَحِلَّ حَتَّى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهُ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1795. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடியுள்ளீரா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றதும், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என்று கேட்டார்கள். நான் “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நன்றே செய்தீர். இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிடுவீராக!” எனக் கூறினார்கள்.

நான் அவ்வாறே கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்துவிட்டு, பனூ கைஸ் கோத்திரத் தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவின ரான) ஒரு பெண்ணிடம் வந்தேன். அவர் எனது தலையில் பேன் பார்த்தார்.

பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே நான் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை மக்களுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்தால் அது நம்மை (ஹஜ்ஜையும் உம்ராவையும்) முழுமைப்படுத்துமாறு கட்டளையிடுகிறது; நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்தாலும், குர்பானி பிராணி அதற்குரிய இடத்தை அடையும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை எனத் தெரிகிறது!” என்று கூறினார்கள்.16


அத்தியாயம் : 26
1796. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ أَبِي الأَسْوَدِ، أَنَّ عَبْدَ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ حَدَّثَهُ أَنَّهُ، كَانَ يَسْمَعُ أَسْمَاءَ تَقُولُ كُلَّمَا مَرَّتْ بِالْحَجُونِ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَا هُنَا، وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافٌ، قَلِيلٌ ظَهْرُنَا، قَلِيلَةٌ أَزْوَادُنَا، فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي عَائِشَةُ وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ، فَلَمَّا مَسَحْنَا الْبَيْتَ أَحْلَلْنَا، ثُمَّ أَهْلَلْنَا مِنَ الْعَشِيِّ بِالْحَجِّ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1796. (அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமை) அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள், (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், “முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்து இறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; (பயண) வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன; அப்போது நானும், என் சகோதரி ஆயிஷா (ரலி), (என் கணவர்) ஸுபைர் (ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியிருந்தோம்; கஅபாவை தவாஃப் செய்ததும் இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்” என அஸ்மா (ரலி) அவர்கள் கூறுவார்கள்.17

அத்தியாயம் : 26
1797. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ مِنَ الأَرْضِ ثَلاَثَ تَكْبِيرَاتٍ، ثُمَّ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "".
பாடம் : 12 ஹஜ், உம்ரா, அறப்போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும்போது கூற வேண்டியவை
1797. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ அறப்போரிலிருந்தோ திரும்பும்போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள்.

மேலும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்; ஆயிபூன தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன, லி ரப்பினா ஹாமிதூன்; ஸத(க்)கல்லாஹு வஅதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்” என்று கூறுவார்கள். (பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சி யதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின்மீதும் பேராற்றலுடையோன்; நாங்கள் பாவ மன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (எங்கள் இறையை வழிபட்டவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; எங்கள் இறையைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்பு கிறோம்; அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான்; தன் அடியாருக்கு (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான். (எதிரிகளின்) கூட்டுப் படைகளைத் தன்னந்தனியாக அவனே தோற்கடித்துவிட்டான்)

அத்தியாயம் : 26
1798. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ اسْتَقْبَلَتْهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ وَآخَرَ خَلْفَهُ.
பாடம் : 13 ஹஜ்ஜுக்காக (மக்காவுக்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் அமர்வதும்
1798. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, அவர்களை அப்துல் முத்தலிப் குடும்பத்துச் சிறார்கள் வரவேற்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அச்சிறார்களில்) ஒருவரை தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 26
1799. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَجَّاجِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي وَبَاتَ حَتَّى يُصْبِحَ.
பாடம் : 14 (வெளியூரிலிருந்து) காலை நேரத்தில் ஊர் திரும்புதல்
1799. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்குப் புறப்பட்டால் (துல்ஹுலை ஃபாவில் உள்ள) ‘அஷ்ஷஜரா’ பள்ளி வாசலில் தொழுவார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும்போது பத்னுல் வாதியில் உள்ள துல்ஹுலைஃபாவில் தொழுவார்கள்; மேலும் அங்கேயே காலைவரை தங்குவார் கள். (பிறகுதான் மதீனா திரும்புவார்கள்.)

அத்தியாயம் : 26
1800. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَطْرُقُ أَهْلَهُ، كَانَ لاَ يَدْخُلُ إِلاَّ غُدْوَةً أَوْ عَشِيَّةً.
பாடம் : 15 (பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல்
1800. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பயணத்தை முடித்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்லமாட்டார்கள்; காலை யிலோ அல்லது மாலையிலோதான் செல்வார்கள்.

அத்தியாயம் : 26
1801. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَطْرُقَ أَهْلَهُ لَيْلاً.
பாடம் : 16 நகரை அடைந்துவிட்டாலும் திடீரென இரவு நேரத்தில் வீட் டாரிடம் செல்லக் கூடாது.
1801. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அத்தியாயம் : 26
1802. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَأَبْصَرَ دَرَجَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ، وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ زَادَ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ عَنْ حُمَيْدٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ جُدُرَاتٍ. تَابَعَهُ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ.
பாடம் : 17 மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்
1802. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தமது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள்; வாகனம் கால்நடையாக இருப் பின் அதைத் தட்டிவிடுவார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹாரிஸ் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மதீனாமீது கொண்ட அன்பால் ஒட்டகத்தை முடுக்கி விடுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இஸ்மாயீல் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘மதீனாவின் (சுற்றுச்) சுவர்களைப் பார்க்கும்போது’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 26
1803. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا، كَانَتِ الأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ، وَلَكِنْ مِنْ ظُهُورِهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ، فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ، فَنَزَلَتْ {وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا}.
பாடம் : 18 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள். (2:189)
1803. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.

இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இதனால் அவரைப் பற்றி குறைசொல்லப்பட்டது.

அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று. மாறாக, (இறைவனுக்கு) அஞ்சி நடப்பவரே புண்ணியவான் ஆவார். ஆகவே, வீடுகளுக்குள் அவற் றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்” (2:189) எனும் வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 26
1804. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ "".
பாடம் : 19 பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.
1804. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையில் ஒரு பகுதி யாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தை யும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 26
1805. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ فَأَسْرَعَ السَّيْرَ، حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا.
பாடம் : 20 அவசர நிலை ஏற்பட்டால், பயணி தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்ல வேண்டும்.
1805. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நானும் அவர்களுடன் (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். (அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் அவர்களின் உடல்நிலை மோசமான செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே பயணத்தை விரைவுபடுத்தினார்கள்.

செம்மேகம் மறையும்வரை (மஃக்ரிப் தொழுகையைத்) தாமதப்படுத்தி ஓரிடத்தில் இறங்கினார்கள். அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (இவ்வாறுதான்) மஃக்ரிபைத் தாமதப்படுத்தி இரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 26

1806. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ قَالَ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1806. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (மக்காவில் அரசியல்) குழப்பம் இருந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கா விற்குப் புறப்பட்டார்கள். “நான் கஅபா விற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டால், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தடுக்கப்பட்டபோது) செய்ததைப் போன்று செய்வேன்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியிருந்த(போது தடுக்கப்பட்ட)தே இதற்குக் காரணமாகும்.


அத்தியாயம் : 27
1807. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ لَيَالِيَ نَزَلَ الْجَيْشُ بِابْنِ الزُّبَيْرِ فَقَالاَ لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَحُجَّ الْعَامَ، وَإِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَكَ وَبَيْنَ الْبَيْتِ. فَقَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَدْيَهُ، وَحَلَقَ رَأْسَهُ، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الْعُمْرَةَ، إِنْ شَاءَ اللَّهُ أَنْطَلِقُ، فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ. فَأَهَلَّ بِالْعُمْرَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ "" إِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي "". فَلَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ يَوْمَ النَّحْرِ، وَأَهْدَى، وَكَانَ يَقُولُ لاَ يَحِلُّ حَتَّى يَطُوفَ طَوَافًا وَاحِدًا يَوْمَ يَدْخُلُ مَكَّةَ.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1807. 1808 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்காவின் ஆட்சியராக இருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது (போர் தொடுப்பதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின்) படைகள் வந்திறங்கியிருந்த நாட்களில் (ஹஜ் செய்ய விரும்பிய) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அன்னாரின் புதல்வர்களான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் பேசினார்கள்.

“இந்த ஆண்டு ஹஜ்ஜு செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நீங்கள் கஅபாவிலிருந்து தடுக்கப்படலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று அவ்விரு வரும் கூறினர்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; கஅபாவுக் குச் செல்ல விடாமல் (நபியவர்களை) குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணியை அறுத்து (பலியிட்டு விட்டு)த் தமது தலைமுடியை மழித்தார்கள். (அவ்வாறே) நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன்; கஅபாவிற் குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டுவிட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்” என்றார்கள்.

பிறகு துல்ஹுலைஃபா எனும் இடத் தில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார் கள். பிறகு சிறிது தூரம் பயணம் செய்து விட்டு, “ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றுதான். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்றார்கள்.

துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை அவ்விரண்டின் இஹ்ராமிலிருந்தும் அவர்கள் விடுபடவில்லை. “மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு தவாஃப் செய்யும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது” என்றும் அவர்கள் கூறிவந்தார்கள்.

“ ‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின்போது) கூறினார்” என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.


அத்தியாயம் : 27
1809. حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَلَقَ رَأْسَهُ وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اعْتَمَرَ عَامًا قَابِلاً.
பாடம் : 1 உம்ராவுக்குச் செல்பவர் தடுக் கப்பட்டால்..?2
1809. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல முடியாமல்) தடுக்கப் பட்டபோது, தமது தலையை மழித்துக் கொண்டு, தம் துணைவியருடன் தாம்பத் திய உறவு கொண்டு, தமது பலிப் பிராணி யையும் அறுத்துப் பலியிட்டார்கள்; அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள்.

அத்தியாயம் : 27
1810. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِنْ حُبِسَ أَحَدُكُمْ عَنِ الْحَجِّ طَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَىْءٍ، حَتَّى يَحُجَّ عَامًا قَابِلاً، فَيُهْدِي أَوْ يَصُومُ، إِنْ لَمْ يَجِدْ هَدْيًا. وَعَنْ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ، نَحْوَهُ.
பாடம் : 2 ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல்
1810. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப் பட்டால். (முடிந்தால்) அவர் கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! அடுத்த ஆண்டு ஹஜ் செய்து பலியிடட்டும்! பலி பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 27
1811. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنِ الْمِسْوَرِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ.
பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வ திலிருந்து) தடுக்கப்படும்போது, தலையை மழித்துக்கொள்வ தற்குமுன் குர்பானி கொடுத்தல்
1811. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக்கொள்வதற்குமுன் (பலிப்பிராணியை) அறுத்துப் பலியிட்டார் கள்; அவ்வாறே செய்யும்படி தம் தோழர் களுக்கும் கட்டளையிட்டார்கள்.


அத்தியாயம் : 27
1812. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ، قَالَ وَحَدَّثَ نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، وَسَالِمًا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مُعْتَمِرِينَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بُدْنَهُ، وَحَلَقَ رَأْسَهُ.
பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வ திலிருந்து) தடுக்கப்படும்போது, தலையை மழித்துக்கொள்வ தற்குமுன் குர்பானி கொடுத்தல்
1812. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்கள்) சாலிம், அப்துல்லாஹ் (ரஹ்) ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்துப்) பேசினார்கள்.

அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நாங்கள் நபி (ஸல்) அவர்களு டன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; கஅபாவிற்குச் செல்ல விடாமல் குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்துவிட்டார்கள்; ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள் தம் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தமது தலையை மழித்துக்கொண்டார்கள். (இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டார்கள்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 27