1721. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ. فَقَالَ "" لاَ حَرَجَ، لاَ حَرَجَ "".
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1721. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது), குர்பானி கொடுப்பதற்குமுன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை! குற்றமில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1722. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" لاَ حَرَجَ "". قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" لاَ حَرَجَ "". وَقَالَ عَبْدُ الرَّحِيمِ الرَّازِيُّ عَنِ ابْنِ خُثَيْمٍ أَخْبَرَنِي عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ الْقَاسِمُ بْنُ يَحْيَى حَدَّثَنِي ابْنُ خُثَيْمٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ عَفَّانُ أُرَاهُ عَنْ وُهَيْبٍ، حَدَّثَنَا ابْنُ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ حَمَّادٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ وَعَبَّادِ بْنِ مَنْصُورٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1722. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே ‘தவாஃபுல் இஃபாளா’ (தவாஃபுஸ் ஸியாரத்) செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்” என்றதும், அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.

மேலும் அவர், “நான் கல்லெறிவதற்கு முன்பாகவே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அப்போதும் அவர்கள் “குற்ற மில்லை” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இதே ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1723. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ "" لاَ حَرَجَ "". قَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ. قَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1723. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்தபின் கல்லெறிந்தேன்” என்று கேட்டார். அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகவே தலையை மழித்துவிட்டேன்” என்றபோதும் அவர்கள், “குற்றமில்லை” என்றே கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1724. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْبَطْحَاءِ. فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ "" أَحْسَنْتَ، انْطَلِقْ فَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ "". ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ، فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ، حَتَّى خِلاَفَةِ عُمَرَ ـ رضى الله عنه ـ فَذَكَرْتُهُ لَهُ. فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ.
பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்குமுன் குர்பானி கொடுத்தல்59
1724. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கில் இருந்தபோது (ஹஜ்ஜுக்காக) நான் (யமன் நாட்டிலிருந்து) வந்தேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடிவிட்டீரா?” எனக் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என அவர்கள் கேட்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக” என்றேன். அவர்கள், “நன்றே செய்தீர். போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா- மர்வாவையும் தவாஃப் செய்யும்!” என்றார் கள்.

பிறகு நான் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவுப்) பெண்களில் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன்.

இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன். உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி நான் கூறியதும் அவர்கள், “நாம் இறைவேதத்தை எடுத்துக்கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக்கொண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை” என்று கூறினார்கள்.60

அத்தியாயம் : 25
1725. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ "".
பாடம் : 126 இஹ்ராமின்போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் (பின்னர்) தலையை மழித்துக்கொள்வதும்
1725. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்து விட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்தபிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்?” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே, குர்பானி கொடுக்காத வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1726. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، قَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ حَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّتِهِ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1726. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித் தார்கள்.


அத்தியாயம் : 25
1727.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1727. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறினார்கள். அப்போது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (பிரார்த்தி யுங்கள்)” என்றார்கள்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர் களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று ஒரு தடவையோ இரண்டு தடவைகளோ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நான்காவது தடவையில், “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்...” எனக் கூறியதாகக் காணப்படுகிறது.


அத்தியாயம் :
1728. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ "". قَالُوا وَلِلْمُقَصِّرِينَ. قَالَ "" اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ "". قَالُوا وَلِلْمُقَصِّرِينَ. قَالَهَا ثَلاَثًا. قَالَ "" وَلِلْمُقَصِّرِينَ "".
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1728. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)” என்றனர்.

(மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (ஹஜ்ஜில்) தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப் பாயாக!” என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...” என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும் அதைக் கூறியபோது “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக!)” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1729. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ حَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَقَصَّرَ بَعْضُهُمْ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1729. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களு டைய தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் (ஹஜ்ஜில்) தலையை மழித்துக்கொண்டனர். வேறுசிலர் முடியைக் குறைத்துக்கொண்டனர்.


அத்தியாயம் : 25
1730. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مُعَاوِيَةَ ـ رضى الله عنهم ـ قَالَ قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ.
பாடம் : 127 (இஹ்ராமிலிருந்து விடுபடும்போது) முடியை மழித்துக் கொள்வதும் குறைத்துக்கொள்வதும்61
1730. முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடியை (மர்வாவில் வைத்து) கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்தேன்.62

அத்தியாயம் : 25
1731. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ يَحِلُّوا، وَيَحْلِقُوا أَوْ يُقَصِّرُوا.
பாடம் : 128 ‘தமத்துஉ’ ஹஜ் செய்பவர் உம்ராவுக்குப்பின் தலை முடி யைக் குறைத்துக்கொள்ளல்
1731. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்தபின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென் றும் பிறகு தலையை மழித்துக்கொள் ளவோ முடியைக் குறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்றும் (‘தமத்துஉ’ செய்த) தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1732. وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا، ثُمَّ يَقِيلُ ثُمَّ يَأْتِي مِنًى ـ يَعْنِي يَوْمَ النَّحْرِ ـ. وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ.
பாடம் : 129 துல்ஹஜ் பத்தாம் நாள் ‘தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்63 நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவுவரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரா செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1732. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரேயொரு தவாஃப் செய்துவிட்டு மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம் நாள் மினாவுக்கு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்த தாக (இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாக) மற்றோர் அறிவிப்பில் காணப்படு கிறது.


அத்தியாயம் : 25
1733. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَجَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَفَضْنَا يَوْمَ النَّحْرِ، فَحَاضَتْ صَفِيَّةُ، فَأَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْهَا مَا يُرِيدُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا حَائِضٌ. قَالَ "" حَابِسَتُنَا هِيَ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ. قَالَ "" اخْرُجُوا "". وَيُذْكَرُ عَنِ الْقَاسِمِ وَعُرْوَةَ وَالأَسْوَدِ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَفَاضَتْ صَفِيَّةُ يَوْمَ النَّحْرِ.
பாடம் : 129 துல்ஹஜ் பத்தாம் நாள் ‘தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்63 நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவுவரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரா செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1733. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள், (தவாஃபுஸ் ஸியாரா) செய்தபோது, ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் ஓர் ஆண் தன் மனைவியிடம் எதிர்பார்ப்பதை (தாம்பத்திய உறவு கொள்ள) நாடினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன்.

அதற்கு அவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே ‘தவாஃபுல் இஃபாளா’ செய்துவிட்டார்” என்றனர். “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ஸஃபிய்யா (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுல் இஃபாளா செய்தார் என ஆயிஷா (ரலி) அவர்களே கூறியதாகக் காணப்படுகிறது.

அத்தியாயம் : 25
1734. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قِيلَ لَهُ فِي الذَّبْحِ وَالْحَلْقِ وَالرَّمْىِ وَالتَّقْدِيمِ وَالتَّأْخِيرِ فَقَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 130 மறதியினாலோ அறியாமை யினாலோ மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுக்கப்படுவதற்கு முன்பு தலையை மழிப்பதும்
1734. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாம் நாள் செய்ய வேண்டிய) குர்பானி கொடுப்பது, தலையை மழிப்பது, கல்லெறி வது ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வது குறித்து வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1735. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى، فَيَقُولُ "" لاَ حَرَجَ "". فَسَأَلَهُ رَجُلٌ، فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" اذْبَحْ، وَلاَ حَرَجَ "". وَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ. فَقَالَ "" لاَ حَرَجَ "".
பாடம் : 130 மறதியினாலோ அறியாமை யினாலோ மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுக்கப்படுவதற்கு முன்பு தலையை மழிப்பதும்
1735. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் பத்தாம் நாள் (பல கேள்விகள்) கேட்கப்பட்டதற்கு, “குற்றமில்லை” என்றே பதில் கூறினார்கள்.

ஒருவர் “நான் குர்பானி கொடுப்பதற்குமுன் தலையை மழித்துவிட்டேன்!” என்றார், நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை; (இப்போது) குர்பானி கொடுப்பீராக!” என்று கூறினார்கள். பிறகு அவர் “நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்” என்றதும் நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1736. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَجَعَلُوا يَسْأَلُونَهُ، فَقَالَ رَجُلٌ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ. قَالَ "" اذْبَحْ وَلاَ حَرَجَ "". فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ "" ارْمِ وَلاَ حَرَجَ "". فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 131 (ஹஜ்ஜில் கல்லெறியும் இடமான) ஜம்ராவில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு (மக்களுக்குத்) தீர்ப் பளித்தல்
1736. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (மினாவில் தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந் தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களைக்) கேட்கத் தொடங் கினர். ஒருவர், “நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை. (இப்போது குர்பானி பிராணியை) அறுப்பீராக!” என்று கூறினார்கள்.

பிறகு மற்றொருவர் வந்து, “கல்லெறி வதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபியவர்கள், “குற்றமில்லை இப்போது கல்லெறிவீராக!” என்று கூறினார்கள். அன்று முந்திச் செய்யப்பட்டது என்றோ, பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப் பட்ட எந்தக் கேள்விக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “குற்றமில்லை (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக!” என்றே விடையளித்தார்கள்.


அத்தியாயம் : 25
1737. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّهُ، شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ النَّحْرِ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ، فَقَالَ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا. ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ. وَأَشْبَاهَ ذَلِكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" افْعَلْ وَلاَ حَرَجَ "". لَهُنَّ كُلِّهِنَّ، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
பாடம் : 131 (ஹஜ்ஜில் கல்லெறியும் இடமான) ஜம்ராவில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு (மக்களுக்குத்) தீர்ப் பளித்தல்
1737. 1738 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது நான் அங்கிருந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, “நான் இன்ன கிரியைக்குமுன் இன்ன கிரியை என எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். மற்றொருவர் எழுந்து, “நான் இன்னதற்குமுன் இன்னது என எண்ணியிருந்தேன். குர்பானி கொடுப்பதற்குமுன் தலையை மழித்துவிட்டேன்; கல்லெறிவதற்குமுன் குர்பானி கொடுத்துவிட்டேன்” என்பன போன்றவற்றைக் கூறலானார்.

அவை அனைத்திற்குமே நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை விடுபட்டதைச் செய்யுங்கள்” என்றே கூறினார்கள். அன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் “குற்றமில்லை (விடுபட்டதைச்) செய்யுங் கள்” என்றே நபியவர்கள் விடையளித் தார்கள்.64

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், “(அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம் : 25
1739. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ. أَىُّ يَوْمٍ هَذَا "". قَالُوا يَوْمٌ حَرَامٌ. قَالَ "" فَأَىُّ بَلَدٍ هَذَا "". قَالُوا بَلَدٌ حَرَامٌ. قَالَ "" فَأَىُّ شَهْرٍ هَذَا "". قَالُوا شَهْرٌ حَرَامٌ. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا "". فَأَعَادَهَا مِرَارًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ "" اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ "". قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ ـ "" فَلْيُبْلِغِ الشَّاهِدُ الْغَائِبَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம் : 132 மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்65
1739. 1740 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்தி னார்கள். அப்போது “மக்களே! இது எந்த நாள்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நாள்’ என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனித நகரம்’ என்றனர். பிறகு அவர்கள், “இது எந்த மாதம்?” எனக் கேட்டதும் மக்கள் “புனித மாதம்!” என்றனர்.66

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, “இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா? இறைவா! நான் (உன் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்குச் செய்த இறுதி உபதேசமாகும்.

பின்னர் “இங்கு வந்தவர்கள் வராதவர் களுக்கு இதை அறிவித்துவிடுங்கள். என(து இறப்பு)க்குப்பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் நிராகரிப்பவர்களாய் மாறி விடாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த நான் கேட்டேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 25