1681. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلْنَا الْمُزْدَلِفَةَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم سَوْدَةُ أَنْ تَدْفَعَ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَكَانَتِ امْرَأَةً بَطِيئَةً، فَأَذِنَ لَهَا، فَدَفَعَتْ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَأَقَمْنَا حَتَّى أَصْبَحْنَا نَحْنُ، ثُمَّ دَفَعْنَا بِدَفْعِهِ، فَلأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا اسْتَأْذَنَتْ سَوْدَةُ أَحَبُّ إِلَىَّ مِنْ مَفْرُوحٍ بِهِ.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1681. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ்ஜின்போது) முஸ்தலி ஃபாவில் தங்கினோம். அப்போது சவ்தா (ரலி) அவர்கள், கூட்ட நெரிசல் ஏற்படுவ தற்கு முன்பே, தாம் அங்கிருந்து (மினாவுக் குப்) புறப்பட நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர் மெதுவாக நடக்கக்கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, கூட்ட நெரிசலுக்கு முன்பே அவர் (மினா) புறப்பட்டுவிட்டார்.

நாங்கள் மட்டும் சுப்ஹுவரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். சவ்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றதைப் போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்கும்.

அத்தியாயம் : 25
1682. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةً بِغَيْرِ مِيقَاتِهَا إِلاَّ صَلاَتَيْنِ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيقَاتِهَا.
பாடம் : 99 முஸ்தலிஃபாவில் எப்போது ஃபஜ்ர் தொழ வேண்டும்?
1682. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று; (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது; மற்றொன்று; ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன்பே (இருட்டில் முஸ்தலிஃபாவில்) தொழுதது.


அத்தியாயம் : 25
1683. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ إِلَى مَكَّةَ، ثُمَّ قَدِمْنَا جَمْعًا، فَصَلَّى الصَّلاَتَيْنِ، كُلَّ صَلاَةٍ وَحْدَهَا بِأَذَانٍ وَإِقَامَةٍ، وَالْعَشَاءُ بَيْنَهُمَا، ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ، قَائِلٌ يَقُولُ طَلَعَ الْفَجْرُ. وَقَائِلٌ يَقُولُ لَمْ يَطْلُعِ الْفَجْرُ. ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ حُوِّلَتَا عَنْ وَقْتِهِمَا فِي هَذَا الْمَكَانِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ، فَلاَ يَقْدَمُ النَّاسُ جَمْعًا حَتَّى يُعْتِمُوا، وَصَلاَةَ الْفَجْرِ هَذِهِ السَّاعَةَ "". ثُمَّ وَقَفَ حَتَّى أَسْفَرَ، ثُمَّ قَالَ لَوْ أَنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَفَاضَ الآنَ أَصَابَ السُّنَّةَ. فَمَا أَدْرِي أَقَوْلُهُ كَانَ أَسْرَعَ أَمْ دَفْعُ عُثْمَانَ ـ رضى الله عنه ـ فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ.
பாடம் : 99 முஸ்தலிஃபாவில் எப்போது ஃபஜ்ர் தொழ வேண்டும்?
1683. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ்ஜுக்காக) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர்கள் தனித்தனியாக (மஃக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளை, தனித் தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமானபோது தொழுதார்கள். அப்போது சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகிவிட்டது’ என்றும் சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகவில்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.

பிறகு அவர்கள், “இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று: மக்ரிப் மற்றும் இஷாவாகும்; ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில்தான்) முஸ்தலிஃபாவை அடை வார்கள். மற்றொன்று: இந்த நேரத்தின் ஃபஜ்ர் தொழுகை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள்.

பிறகு அவர்கள் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உஸ்மான் (ரலி) அவர்கள்) இப்போது இங்கிருந்து (மினா) திரும்பினால் நபிவழியைச் செயல்படுத்தியவர் ஆவார்” எனக் கூறினார்கள்.

“இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா, அல்லது உஸ்மான் (ரலி) அவர்கள் புறப்பட்டது விரைவானதா?” என்பது எனக்குத் தெரியவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் ‘ஜம்ரத்துல் அகபா’வுக்கு வந்து கல்லெறியும்வரை ‘தல்பியா’ சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1684. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، يَقُولُ شَهِدْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ صَلَّى بِجَمْعٍ الصُّبْحَ، ثُمَّ وَقَفَ فَقَالَ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَيَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ. وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَالَفَهُمْ، ثُمَّ أَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ.
பாடம் : 100 முஸ்தலிஃபாவிலிருந்து எப்போது திரும்ப வேண்டும்?
1684. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா வில் ஃபஜ்ர் தொழுததை நான் கண்டேன். பிறகு அங்கு அவர்கள் தங்கினார்கள்.

“இணைவைப்பாளர்கள், சூரியன் உதயமாகாத வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை; அவர்கள் ‘ஸபீர் மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!’ என்றும் கூறுவார்கள்; ஆனால், நபி (ஸல்) அவர் களோ இணைவைப்பாளர்களுக்கு மாற்ற மாக நடந்தார்கள்” என்று கூறினார்கள். பிறகு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1685. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ، فَأَخْبَرَ الْفَضْلُ أَنَّهُ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ.
பாடம் : 101 துல்ஹஜ் பத்தாம் நாள் காலை யில் ‘ஜம்ரா’வில் கல்லெறியும் வரை தல்பியாவும் தக்பீரும் கூறுவதும், (மினா போகும்) வழியில் வாகனத்தில் பின்னால் யாரையேனும் ஏற்றிக்கொள்வ தும்
1685. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அரஃபாவி லிருந்து திரும்புகையில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் ஜம்ரா (அகபா)வில் கல்லெறிகின்ற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்” என ஃபள்ல் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.


அத்தியாயம் : 25
1686. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى ـ قَالَ ـ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
பாடம் : 101 துல்ஹஜ் பத்தாம் நாள் காலை யில் ‘ஜம்ரா’வில் கல்லெறியும் வரை தல்பியாவும் தக்பீரும் கூறுவதும், (மினா போகும்) வழியில் வாகனத்தில் பின்னால் யாரையேனும் ஏற்றிக்கொள்வ தும்
1686. 1687 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவரை நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை ஃபள்ல் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருந் தார்கள்” என அவ்விருவரும் கூறினர்.

அத்தியாயம் : 25
1688. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ الْمُتْعَةِ، فَأَمَرَنِي بِهَا، وَسَأَلْتُهُ عَنِ الْهَدْىِ، فَقَالَ فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ قَالَ وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا، فَنِمْتُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي حَجٌّ مَبْرُورٌ، وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ. فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَحَدَّثْتُهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم قَالَ وَقَالَ آدَمُ وَوَهْبُ بْنُ جَرِيرٍ وَغُنْدَرٌ عَنْ شُعْبَةَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، وَحَجٌّ مَبْرُورٌ.
பாடம் : 102 அல்லாஹ் கூறுகின்றான்: யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இது முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும். இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்). (2:196)
1688. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் அதையே நிறைவேற்றுமாறு என்னிடம் கூறினார்கள். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆட்டை குர்பானி கொடுக்கலாம்; அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) குர்பானியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்” என்று கூறினார்கள்.

மக்களோ, ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜை வெறுத்தது போன்றிருந்தது. இந்நிலையில் (கஅபா அருகில்) நான் உறங்கியபோது கனவில் ஒருவர், “ஏற்கப்பட்ட ஹஜ்ஜும் ஒப்புக்கொள்ளப்பட்ட ‘தமத்துஉ’வும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று உரக்கக் கூவியதைப் போன்று தெரிந்தது.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையே இது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் ஏற்கப்பட்ட ஹஜ்ஜும்’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 25
1689. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ "" ارْكَبْهَا "". فَقَالَ إِنَّهَا بَدَنَةٌ. فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا، وَيْلَكَ "". فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ.
பாடம் : 103 (குர்பானி) ஒட்டகங்களில் பயணம் செய்தல் அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானி) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் நன்மை உள்ளது. எனவே, (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுத்துவிடு)வீர்களாக! பிறகு அவை பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்(து உயிர் பிரிந்)ததும் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும் (வறுமையிலும்) கையேந்தாமல் இருப்பவருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குர்பானிப் பிராணிகளின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு இவ்வாறு அவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஆகவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (22:36, 37) (மேற்கண்ட வசனங்களில் இடம்பெற் றுள்ள சொற்களின் பொருள் விளக்கம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்புத்ன்’ என குர்பானி ஒட்டகங் களுக்குப் பெயர் வரக் காரணம், அவை கொழுத்தவையாக இருக்கும் என்பதே. (‘பத்ன்’ என்பதற்கு ‘கொழுத்த உடல்’ என்பதே சொற்பொருளாகும்.) ‘கானிஉ’: யாசிப்பவர்; ‘அல்முஅதா’: அந்த ஒட்டகங் களை (ஏக்கத்தோடு) பார்க்கும் பணக்காரர் அல்லது ஏழை (ஆனால், யாசிக்காதவர்); ‘ஷஆயிர்’ (அடையாளச் சின்னங்கள்): குர்பானி ஒட்டகங்களை மதிப்பதும் அவற்றிடம் வாஞ்சையோடு நடந்து கொள்வதும்; ‘வஜபத்’ பூமியில் சரிந்து விழுதல்; சூரியன் மறையப்போவதற்கும் ‘வஜபத்’ என்பர். (“தொன்மை வாய்ந்த அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவரட்டும்’! (22:29) எனும் வசனத்தில் உள்ள) ‘அ(த்)தீக்’ என்பதற்கு, ‘கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது’ என்பது பொருள்.
1689. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள்.

அவர் “இது குர்பானி ஒட்டகம்” என்றார். (மீண்டும்) “அதில் ஏறிக்கொள்வீராக!” எள்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது தடவையிலோ, மூன்றாவது தடவையிலோ நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 25
1690. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". ثَلاَثًا.
பாடம் : 103 (குர்பானி) ஒட்டகங்களில் பயணம் செய்தல் அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானி) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் நன்மை உள்ளது. எனவே, (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுத்துவிடு)வீர்களாக! பிறகு அவை பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்(து உயிர் பிரிந்)ததும் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும் (வறுமையிலும்) கையேந்தாமல் இருப்பவருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குர்பானிப் பிராணிகளின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு இவ்வாறு அவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஆகவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (22:36, 37) (மேற்கண்ட வசனங்களில் இடம்பெற் றுள்ள சொற்களின் பொருள் விளக்கம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்புத்ன்’ என குர்பானி ஒட்டகங் களுக்குப் பெயர் வரக் காரணம், அவை கொழுத்தவையாக இருக்கும் என்பதே. (‘பத்ன்’ என்பதற்கு ‘கொழுத்த உடல்’ என்பதே சொற்பொருளாகும்.) ‘கானிஉ’: யாசிப்பவர்; ‘அல்முஅதா’: அந்த ஒட்டகங் களை (ஏக்கத்தோடு) பார்க்கும் பணக்காரர் அல்லது ஏழை (ஆனால், யாசிக்காதவர்); ‘ஷஆயிர்’ (அடையாளச் சின்னங்கள்): குர்பானி ஒட்டகங்களை மதிப்பதும் அவற்றிடம் வாஞ்சையோடு நடந்து கொள்வதும்; ‘வஜபத்’ பூமியில் சரிந்து விழுதல்; சூரியன் மறையப்போவதற்கும் ‘வஜபத்’ என்பர். (“தொன்மை வாய்ந்த அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவரட்டும்’! (22:29) எனும் வசனத்தில் உள்ள) ‘அ(த்)தீக்’ என்பதற்கு, ‘கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது’ என்பது பொருள்.
1690. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே?” என்றார். “(பரவாயில்லை அதில்) ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். மீண்டும் அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அப்போதும் “(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்!” என மூன்றாம் முறையும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1691. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، وَأَهْدَى فَسَاقَ مَعَهُ الْهَدْىَ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَبَدَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَهَلَّ بِالْعُمْرَةِ، ثُمَّ أَهَلَّ بِالْحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، فَكَانَ مِنَ النَّاسِ مَنْ أَهْدَى فَسَاقَ الْهَدْىَ، وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، قَالَ لِلنَّاسِ "" مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى فَإِنَّهُ لاَ يَحِلُّ لِشَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَقْضِيَ حَجَّهُ، وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى فَلْيَطُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَلْيُقَصِّرْ، وَلْيَحْلِلْ، ثُمَّ لِيُهِلَّ بِالْحَجِّ، فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا فَلْيَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ "". فَطَافَ حِينَ قَدِمَ مَكَّةَ، وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَىْءٍ، ثُمَّ خَبَّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعًا، فَرَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا فَطَافَ بِالصَّفَا وَالْمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ، ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَىْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ، وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَىْءٍ حَرُمَ مِنْهُ، وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَهْدَى وَسَاقَ الْهَدْىَ مِنَ النَّاسِ.
பாடம் : 104 குர்பானி ஒட்டகங்களை ஒருவர் தம்முடன் ஓட்டிச்செல்லல்
1691. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது உம்ரா வுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள்.53

(மதீனாவாசிகளின் எல்லையான) துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச்சென்று குர்பானியும் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர் களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். வேறுசிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (ஆகவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை).

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், “உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்துள் ளாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறை வேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது; யார் குர்பானிப் பிராணியைக் கொண்டுவரவில்லையோ அவர் இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்து விட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, பிறகு ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்!

யாருக்கு குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையோ அவர், ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தமது வீடு திரும்பிய தும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!” என்று கூறினார்கள்.

பிறகு மக்காவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்ததும், (இறையில்லம் கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்துவிட்டு முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டி பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். (ஏழில்) மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடியும் நான்கு சுற்றுகள் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்தார்கள். தவாஃப் செய்து முடித்ததும், மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சலாம் கொடுத்ததும் ஸஃபாவுக்கு வந்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழு தடவை ‘சயீ’ செய்தார்கள்.

பிறகு, தமது ஹஜ்ஜை முடிக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் தமது குர்பானிப் பிராணியைப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட் டார்கள்.

மக்களில் குர்பானி பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர் களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தார்கள்.


அத்தியாயம் : 25
1692. وَعَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَمَتُّعِهِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 104 குர்பானி ஒட்டகங்களை ஒருவர் தம்முடன் ஓட்டிச்செல்லல்
1692. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா செய்தனர்.

இவ்வாறு தெரிவித்த ஆயிஷா (ரலி) அவர்கள், தொடர்ந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய (முந்தைய ஹதீஸில் உள்ள) செய்தியையே என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1693. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهم ـ لأَبِيهِ أَقِمْ، فَإِنِّي لاَ آمَنُهَا أَنْ سَتُصَدُّ عَنِ الْبَيْتِ. قَالَ إِذًا أَفْعَلَ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ قَالَ اللَّهُ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} فَأَنَا أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عَلَى نَفْسِي الْعُمْرَةَ. فَأَهَلَّ بِالْعُمْرَةِ، قَالَ ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِالْبَيْدَاءِ أَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ، وَقَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلاَّ وَاحِدٌ. ثُمَّ اشْتَرَى الْهَدْىَ مِنْ قُدَيْدٍ، ثُمَّ قَدِمَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، فَلَمْ يَحِلَّ حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا.
பாடம் : 105 வழியில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்குதல்
1693. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் (இந்த ஆண்டு ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில், இறையில்லம் கஅபாவை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது” எனக் கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியாயின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது’ (33:21) என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே, நான் என்மீது உம்ராவைக் கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சி யாக்குகிறேன்” எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு ‘பைதாஉ’ எனுமிடத்தை அடைந்தததும் ஹஜ்ஜுக் கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். அப்போது அவர்கள் “ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே” எனக் கூறிவிட்டு, ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்.

பின்னர் இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக் காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு தவாஃப் செய்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.54

அத்தியாயம் : 25
1694. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ زَمَنَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، حَتَّى إِذَا كَانُوا بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْهَدْىَ وَأَشْعَرَ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ.
பாடம் : 106 (மதீனாவாசிகளின் எல்லையான) ‘துல்ஹுலைஃபா’வில் குர்பானி பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்ட பின்னர் இஹ்ராம் கட்டுதல் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவிலிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால், துல்ஹுலைஃபாவில் அடையாள மாலை தொங்கவிடுவார்கள்; குர்பானி பிராணியை கிப்லாவை நோக்கிப் படுக்கவைத்து அதன் வலப்புற திமிலின் ஓரத்தில் கத்தியால் கீறி அடையாளமிடுவார்கள்.
1694. 1695 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியோர் கூறியதாவது:

ஹுதைபியா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனா விலிருந்து புறப்பட்டார்கள்; துல்ஹுலை ஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணி யின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டு அடையாளமும் இட்டார்கள்; பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள்.


அத்தியாயம் : 25
1696. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَأَهْدَاهَا، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ أُحِلَّ لَهُ.
பாடம் : 106 (மதீனாவாசிகளின் எல்லையான) ‘துல்ஹுலைஃபா’வில் குர்பானி பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்ட பின்னர் இஹ்ராம் கட்டுதல் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவிலிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால், துல்ஹுலைஃபாவில் அடையாள மாலை தொங்கவிடுவார்கள்; குர்பானி பிராணியை கிப்லாவை நோக்கிப் படுக்கவைத்து அதன் வலப்புற திமிலின் ஓரத்தில் கத்தியால் கீறி அடையாளமிடுவார்கள்.
1696. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களுக்கு நான் என் கைகளால் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவற்றை நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களின் கழுத்தில் தொங்கவிட்டு, அவற்றுக்கு அடையாளமிட்டார்கள். (பிறகு மக்காவில்) குர்பானி கொடு(ப்பதற்காக அனுப்பிவை)த்தார்கள்.

ஆனால், (அதற்குமுன்) அவர்களுக்கு அனுமதிக்கப்படடிருந்த எதுவும் (அப்போது மதீனாவிலிருந்த) அவர்கள்மீது (இஹ்ராம் கட்டியவருக்குப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.55

அத்தியாயம் : 25
1697. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، رضى الله عنهم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنَ الْحَجِّ "".
பாடம் : 107 குர்பானி ஒட்டகங்களுக்காகவும் மாடுகளுக்காகவும் மாலைகள் திரித்தல்
1697. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால், நீங்கள் இஹ்ராவிலிருந்து விடுபடவில்லையே!?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர்கள் “நான் தலைமுடி யில் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்க விட்டுள்ளேன்; எனவே, நான் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1698. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُهْدِي مِنَ الْمَدِينَةِ، فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ، ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ.
பாடம் : 107 குர்பானி ஒட்டகங்களுக்காகவும் மாடுகளுக்காகவும் மாலைகள் திரித்தல்
1698. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து குர்பானிப் பிராணியை அனுப்பிவைப்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களது குர்பானி பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் திரிப்பேன். (குர்பானி பிராணியை அனுப்பிய) பிறகு அவர்கள், இஹ்ராம் கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள்.

அத்தியாயம் : 25
1699. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا ـ أَوْ قَلَّدْتُهَا ـ ثُمَّ بَعَثَ بِهَا إِلَى الْبَيْتِ، وَأَقَامَ بِالْمَدِينَةِ، فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ لَهُ حِلٌّ.
பாடம் : 108 குர்பானி பிராணிக்கு அடையாளமிடல் “நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலைகளைத் தொங்கவிட்டு, அதற்கு அடையாளமிட்டுவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்” என மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கு நான் அடையாள மாலைகள் திரித்தேன். பிறகு அவர்கள் அதற்கு அடையாளமிட்டு மாலைகளைத் தொங்க விட்டார்கள் -அல்லது நான் தொங்க விட்டேன்.

பிறகு அதை இறையில்லம் கஅபா வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்பட்டதாக ஆகவில்லை.

அத்தியாயம் : 25
1700. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ زِيَادَ بْنَ أَبِي سُفْيَانَ كَتَبَ إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ حَتَّى يُنْحَرَ هَدْيُهُ. قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ، أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْىِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَىْءٌ أَحَلَّهُ اللَّهُ حَتَّى نُحِرَ الْهَدْىُ.
பாடம் : 109 ஒருவர் தமது கையாலேயே குர்பானி பிராணிகளுக்கு மாலைகளைத் தொங்கவிடுதல்
1700. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபீசுஃப்யான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவுக்கு) குர்பானி பிராணியை அனுப்பிவைப்பவருக்கும், அப்பிராணி அறுக்கப்படும்வரை ஹாஜிகளுக்குத் தடை செய்யப்படும் அனைத்தும் தடை செய்யப் படும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறாரே! (இது சரியா?) எனக் கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்வது போலில்லை; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்பானி பிராணிக்கான அடையாள மாலைகளை எனது கையாலேயே திரித்திருக்கிறேன்; பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மாலைகளைத் தம் கரங்களால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்; பிறகு, பிராணியை என் தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பிவைத் தார்கள்; ஆனால், அந்த குர்பானிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்த எதுவும் தடை செய்யப்பட வில்லை” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 25