1671. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى وَالِبَةَ الْكُوفِيُّ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلإِبِلِ فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ وَقَالَ "" أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالإِيضَاعِ "". أَوْضَعُوا أَسْرَعُوا. خِلاَلَكُمْ مِنَ التَّخَلُّلِ بَيْنَكُمْ، وَفَجَّرْنَا خِلاَلَهُمَا. بَيْنَهُمَا.
பாடம் : 94 (அரஃபாவிலிருந்து) திரும்பும் போது அமைதியாகச் செல்லு மாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதும் சாட்டை யால் அவர்கள் சைகை செய்த தும்
1671. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா (துல்ஹஜ் பத்தாம்) நாளன்று நபி (ஸல்) அவர்களுடன் நான் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக்கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தமது சாட்டை யால் சைகை செய்து “மக்களே! அமைதி யைக் கடைப்பிடியுங்கள். நன்மையென்பது வேகத்தில் இல்லை” எனக் கூறினார்கள்.

(இங்கு மூலத்தில் ‘வேகம்’ என்பதைக் குறிக்க ‘ஈளாஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. இச்சொல்லில் இருந்த பிறந்த வினைச்சொல்லான) ‘அவ்ளஊ’ என்பதற்கு ‘அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்’ என்பது பொருள். “உங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேகம் காட்டியிருப்பார்கள்” (9:47) எனும் இறைவசனத்தில் இச்சொல் (அவ்ளஊ) இடம்பெறுகிறது. இதில் ‘கிலால(க்)கும்’ என்பதற்கு ‘உங்களுக்கு மத்தியில்’ (பைன(க்)கும்) என்பது பொருள் ஆகும். “அவ்விரண்டுக்கும் இடையில் (கிலால ஹுமா) ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்” (18:33) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தியாயம் : 25
1672. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ، فَنَزَلَ الشِّعْبَ، فَبَالَ ثُمَّ تَوَضَّأَ، وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ لَهُ الصَّلاَةُ. فَقَالَ "" الصَّلاَةُ أَمَامَكَ "". فَجَاءَ الْمُزْدَلِفَةَ، فَتَوَضَّأَ، فَأَسْبَغَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.
பாடம் : 95 முஸ்தலிஃபாவில் (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகை களைச் சேர்த்துத் தொழுவது51
1672. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) திரும்பி னார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான் அவர்களிடம் “தொழப்போகிறீர் களா?” என்றேன்.

அதற்கு அவர்கள் “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) இருக்கிறது!” என்றார்கள். பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத் தைத் தத்தமது இருப்பிடத்தில் படுக்க வைத்தார்கள். பிறகு (இஷா) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை.

அத்தியாயம் : 25
1673. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ، وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلاَ عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا.
பாடம் : 96 இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத (கூடுதல்) தொழுகைகளைத் தொழாதிருத்தல்
1673. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத் சொல்லப்பட்டது. இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக் கும் பின்போ கடமையல்லாத (கூடுதல்) தொழுகை எதையும் அவர்கள் தொழ வில்லை.


அத்தியாயம் : 25
1674. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْخَطْمِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ.
பாடம் : 96 இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத (கூடுதல்) தொழுகைகளைத் தொழாதிருத்தல்
1674. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷா வையும் இணைத்து (ஜம்உ செய்து) தொழுதார்கள்.

அத்தியாயம் : 25
1675. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ حَجَّ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ فَأَتَيْنَا الْمُزْدَلِفَةَ حِينَ الأَذَانِ بِالْعَتَمَةِ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، فَأَمَرَ رَجُلاً فَأَذَّنَ وَأَقَامَ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ، وَصَلَّى بَعْدَهَا رَكْعَتَيْنِ، ثُمَّ دَعَا بِعَشَائِهِ فَتَعَشَّى، ثُمَّ أَمَرَ ـ أُرَى رَجُلاً ـ فَأَذَّنَ وَأَقَامَ ـ قَالَ عَمْرٌو لاَ أَعْلَمُ الشَّكَّ إِلاَّ مِنْ زُهَيْرٍ ـ ثُمَّ صَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ، فَلَمَّا طَلَعَ الْفَجْرُ قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يُصَلِّي هَذِهِ السَّاعَةَ إِلاَّ هَذِهِ الصَّلاَةَ، فِي هَذَا الْمَكَانِ، مِنْ هَذَا الْيَوْمِ. قَالَ عَبْدُ اللَّهِ هُمَا صَلاَتَانِ تُحَوَّلاَنِ عَنْ وَقْتِهِمَا صَلاَةُ الْمَغْرِبِ بَعْدَ مَا يَأْتِي النَّاسُ الْمُزْدَلِفَةَ، وَالْفَجْرُ حِينَ يَبْزُغُ الْفَجْرُ. قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.
பாடம் : 97 (இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது) ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பாங்கும் இகாமத்தும் கூறுவது
1675. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். நாங்கள் இஷாவின் பாங்கு கூறப்படும் நேரத்திலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ முஸ்தலிஃபாவிற்கு வந்தோம். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார்.

பின்னர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுதுவிட்டு அதன்பின் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுதார் கள். பிறகு இரவு உணவைக் கொண்டுவரச் சொல்லி உண்டார்கள். பிறகு ஒருவருக்கு அவர்கள் கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பிறகு இரண்டு ரக்அத்கள் இஷா தொழுதார்கள். விடிந்ததும் “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் இந்நாளில் இந்த நேரத்தில் தொழுததில்லை” என்று கூறினார்கள்.

மேலும், “இவ்விரு தொழுகைகளும் (இங்கு, இந்த தினத்தில் மட்டும்) அவற்றுக் குரிய (வழக்கமான) நேரங்களைவிட்டு மாற்றப்பட்டுள்ளன. (அதாவது) மஃக்ரிப் தொழுகை, மக்கள் முஸ்தலிஃபாவுக்கு வந்த பின்பு (இஷாவில்) என்றும், ஃபஜ்ர் தொழுகை ஃபஜ்ர் உதயமாகும் வேளை யில் (சற்று விரைவாக) என்றும் (ஹஜ்ஜின் போது முஸ்தலிஃபாவில் மட்டும்) மாற்றப் பட்டுள்ளன. இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1676. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ، فَيَقِفُونَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ، فَيَذْكُرُونَ اللَّهَ مَا بَدَا لَهُمْ، ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ، وَقَبْلَ أَنْ يَدْفَعَ، فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الْفَجْرِ، وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ، فَإِذَا قَدِمُوا رَمَوُا الْجَمْرَةَ، وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1676. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர் களை முன்கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். எனவே, அவர்கள் (பலவீனர்கள்) முஸ்தலிஃபாவில் ‘மஷ்அருல் ஹராம்’ எனுமிடத்தில் இரவில் (சிறிது நேரம்) தங்கி, அங்கு தமக்குத் தெரிந்த வகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பிவிடுவார்கள்.

அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக் காக முன்கூட்டியே மினா சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் செல்வர். அவர்கள் அங்கு சென்றதும் ‘ஜம்ரா’வில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதற்கு) அனுமதி வழங்கியுள்ளார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.


அத்தியாயம் : 25
1677. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ جَمْعٍ بِلَيْلٍ.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1677. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே (மினாவுக்கு) அனுப்பிவைத்தார்கள்.


அத்தியாயம் : 25
1678. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ أَنَا مِمَّنْ، قَدَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ الْمُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1678. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பிவைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பிவைத்தவர்களில் நானும் ஒருவன்.


அத்தியாயம் : 25
1679. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ عَنْ أَسْمَاءَ، أَنَّهَا نَزَلَتْ لَيْلَةَ جَمْعٍ عِنْدَ الْمُزْدَلِفَةِ، فَقَامَتْ تُصَلِّي، فَصَلَّتْ سَاعَةً، ثُمَّ قَالَتْ يَا بُنَىَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لاَ. فَصَلَّتْ سَاعَةً، ثُمَّ قَالَتْ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ. قَالَتْ فَارْتَحِلُوا. فَارْتَحَلْنَا، وَمَضَيْنَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ، ثُمَّ رَجَعَتْ فَصَلَّتِ الصُّبْحَ فِي مَنْزِلِهَا. فَقُلْتُ لَهَا يَا هَنْتَاهْ مَا أُرَانَا إِلاَّ قَدْ غَلَّسْنَا. قَالَتْ يَا بُنَىَّ، إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذِنَ لِلظُّعُنِ.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1679. அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா வில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றதும் “புறப்படுங்கள்” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது இருப்பிடத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான் அவர்களிடம், “அம்மா! நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!” என்றேன். அதற்கு அவர்கள், “மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண் பயணிகளுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1680. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ الْقَاسِمِ ـ عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَتْ سَوْدَةُ النَّبِيَّ صلى الله عليه وسلم لَيْلَةَ جَمْعٍ وَكَانَتْ ثَقِيلَةً ثَبْطَةً فَأَذِنَ لَهَا.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1680. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சவ்தா (ரலி) அவர்கள், கனத்த சரீரமுள்ளவராகவும் மெதுவாக நடக்கக் கூடியவராகவும் இருந்ததால், முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மக்களுக்கு முன்பாகவே மினாவுக்குப் புறப்பட்டுச் செல்ல) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.


அத்தியாயம் : 25
1681. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلْنَا الْمُزْدَلِفَةَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم سَوْدَةُ أَنْ تَدْفَعَ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَكَانَتِ امْرَأَةً بَطِيئَةً، فَأَذِنَ لَهَا، فَدَفَعَتْ قَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَأَقَمْنَا حَتَّى أَصْبَحْنَا نَحْنُ، ثُمَّ دَفَعْنَا بِدَفْعِهِ، فَلأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا اسْتَأْذَنَتْ سَوْدَةُ أَحَبُّ إِلَىَّ مِنْ مَفْرُوحٍ بِهِ.
பாடம் : 98 (பெண்கள் உள்ளிட்ட) பலவீனர்களை இரவிலேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு) அனுப்புவதும், அவர்கள் முஸ்தலிஃபாவில் (சிறிது நேரம்) தங்கிப் பிரார்த்தனை செய்து விட்டு, சந்திரன் மறையும்போது (மினாவுக்குப்) புறப்படுவதும்52
1681. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ்ஜின்போது) முஸ்தலி ஃபாவில் தங்கினோம். அப்போது சவ்தா (ரலி) அவர்கள், கூட்ட நெரிசல் ஏற்படுவ தற்கு முன்பே, தாம் அங்கிருந்து (மினாவுக் குப்) புறப்பட நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர் மெதுவாக நடக்கக்கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, கூட்ட நெரிசலுக்கு முன்பே அவர் (மினா) புறப்பட்டுவிட்டார்.

நாங்கள் மட்டும் சுப்ஹுவரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். சவ்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றதைப் போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்கும்.

அத்தியாயம் : 25
1682. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةً بِغَيْرِ مِيقَاتِهَا إِلاَّ صَلاَتَيْنِ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيقَاتِهَا.
பாடம் : 99 முஸ்தலிஃபாவில் எப்போது ஃபஜ்ர் தொழ வேண்டும்?
1682. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று; (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது; மற்றொன்று; ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன்பே (இருட்டில் முஸ்தலிஃபாவில்) தொழுதது.


அத்தியாயம் : 25
1683. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ إِلَى مَكَّةَ، ثُمَّ قَدِمْنَا جَمْعًا، فَصَلَّى الصَّلاَتَيْنِ، كُلَّ صَلاَةٍ وَحْدَهَا بِأَذَانٍ وَإِقَامَةٍ، وَالْعَشَاءُ بَيْنَهُمَا، ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ، قَائِلٌ يَقُولُ طَلَعَ الْفَجْرُ. وَقَائِلٌ يَقُولُ لَمْ يَطْلُعِ الْفَجْرُ. ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ حُوِّلَتَا عَنْ وَقْتِهِمَا فِي هَذَا الْمَكَانِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ، فَلاَ يَقْدَمُ النَّاسُ جَمْعًا حَتَّى يُعْتِمُوا، وَصَلاَةَ الْفَجْرِ هَذِهِ السَّاعَةَ "". ثُمَّ وَقَفَ حَتَّى أَسْفَرَ، ثُمَّ قَالَ لَوْ أَنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَفَاضَ الآنَ أَصَابَ السُّنَّةَ. فَمَا أَدْرِي أَقَوْلُهُ كَانَ أَسْرَعَ أَمْ دَفْعُ عُثْمَانَ ـ رضى الله عنه ـ فَلَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ يَوْمَ النَّحْرِ.
பாடம் : 99 முஸ்தலிஃபாவில் எப்போது ஃபஜ்ர் தொழ வேண்டும்?
1683. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹஜ்ஜுக்காக) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் மக்காவுக்குப் புறப்பட்டோம். பிறகு முஸ்தலிஃபாவுக்கு நாங்கள் வந்தபோது, அவர்கள் தனித்தனியாக (மஃக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளை, தனித் தனி பாங்கு, இகாமத்துடன் தொழுதார்கள். இரு தொழுகைகளுக்கிடையே இரவு உணவு அருந்தினார்கள். பிறகு ஃபஜ்ர் உதயமானபோது தொழுதார்கள். அப்போது சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகிவிட்டது’ என்றும் சிலர் ‘ஃபஜ்ர் உதயமாகவில்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.

பிறகு அவர்கள், “இந்த இடத்தில் இவ்விரு தொழுகைகளுக்கான நேரங்கள் நமக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒன்று: மக்ரிப் மற்றும் இஷாவாகும்; ஏனெனில், மக்கள் இருள் சூழ்ந்த பின்புதான் (இஷாவின் நேரத்தில்தான்) முஸ்தலிஃபாவை அடை வார்கள். மற்றொன்று: இந்த நேரத்தின் ஃபஜ்ர் தொழுகை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றார்கள்.

பிறகு அவர்கள் விடியும்வரை தங்கியிருந்துவிட்டு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உஸ்மான் (ரலி) அவர்கள்) இப்போது இங்கிருந்து (மினா) திரும்பினால் நபிவழியைச் செயல்படுத்தியவர் ஆவார்” எனக் கூறினார்கள்.

“இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் இக்கூற்று விரைவானதா, அல்லது உஸ்மான் (ரலி) அவர்கள் புறப்பட்டது விரைவானதா?” என்பது எனக்குத் தெரியவில்லை. (அந்த அளவுக்கு விரைவாக உஸ்மான் (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.) பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் ‘ஜம்ரத்துல் அகபா’வுக்கு வந்து கல்லெறியும்வரை ‘தல்பியா’ சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1684. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، يَقُولُ شَهِدْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ صَلَّى بِجَمْعٍ الصُّبْحَ، ثُمَّ وَقَفَ فَقَالَ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَيَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ. وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَالَفَهُمْ، ثُمَّ أَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ.
பாடம் : 100 முஸ்தலிஃபாவிலிருந்து எப்போது திரும்ப வேண்டும்?
1684. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா வில் ஃபஜ்ர் தொழுததை நான் கண்டேன். பிறகு அங்கு அவர்கள் தங்கினார்கள்.

“இணைவைப்பாளர்கள், சூரியன் உதயமாகாத வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை; அவர்கள் ‘ஸபீர் மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்!’ என்றும் கூறுவார்கள்; ஆனால், நபி (ஸல்) அவர் களோ இணைவைப்பாளர்களுக்கு மாற்ற மாக நடந்தார்கள்” என்று கூறினார்கள். பிறகு சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்.

அத்தியாயம் : 25
1685. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ، فَأَخْبَرَ الْفَضْلُ أَنَّهُ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ.
பாடம் : 101 துல்ஹஜ் பத்தாம் நாள் காலை யில் ‘ஜம்ரா’வில் கல்லெறியும் வரை தல்பியாவும் தக்பீரும் கூறுவதும், (மினா போகும்) வழியில் வாகனத்தில் பின்னால் யாரையேனும் ஏற்றிக்கொள்வ தும்
1685. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அரஃபாவி லிருந்து திரும்புகையில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் ஜம்ரா (அகபா)வில் கல்லெறிகின்ற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்” என ஃபள்ல் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.


அத்தியாயம் : 25
1686. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى ـ قَالَ ـ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ.
பாடம் : 101 துல்ஹஜ் பத்தாம் நாள் காலை யில் ‘ஜம்ரா’வில் கல்லெறியும் வரை தல்பியாவும் தக்பீரும் கூறுவதும், (மினா போகும்) வழியில் வாகனத்தில் பின்னால் யாரையேனும் ஏற்றிக்கொள்வ தும்
1686. 1687 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவரை நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பிறகு முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை ஃபள்ல் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாம் நாள்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருந் தார்கள்” என அவ்விருவரும் கூறினர்.

அத்தியாயம் : 25
1688. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ الْمُتْعَةِ، فَأَمَرَنِي بِهَا، وَسَأَلْتُهُ عَنِ الْهَدْىِ، فَقَالَ فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ قَالَ وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا، فَنِمْتُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي حَجٌّ مَبْرُورٌ، وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ. فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَحَدَّثْتُهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم قَالَ وَقَالَ آدَمُ وَوَهْبُ بْنُ جَرِيرٍ وَغُنْدَرٌ عَنْ شُعْبَةَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، وَحَجٌّ مَبْرُورٌ.
பாடம் : 102 அல்லாஹ் கூறுகின்றான்: யார் ஹஜ்ஜையும் உம்ராவையும் ‘தமத்துஉ’ முறையில் நிறைவேற்றுகிறாரோ அவர் (தமக்கு) வசதிப்பட்ட பலிப் பிராணியை (பலியிட வேண்டும்). அது கிடைக்கப்பெறாதவர் ஹஜ்ஜின்போது மூன்று நாட்களும் திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இது முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும். இது யாருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் இல்லையோ அவருக்கே (பொருந்தும்). (2:196)
1688. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் அதையே நிறைவேற்றுமாறு என்னிடம் கூறினார்கள். பிறகு நான் அவர்களிடம், குர்பானி கொடுப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆட்டை குர்பானி கொடுக்கலாம்; அல்லது ஒரு (ஒட்டகத்தின் அல்லது மாட்டின்) குர்பானியில் ஒரு பங்காளியாகச் சேரலாம்” என்று கூறினார்கள்.

மக்களோ, ‘தமத்துஉ’ வகை ஹஜ்ஜை வெறுத்தது போன்றிருந்தது. இந்நிலையில் (கஅபா அருகில்) நான் உறங்கியபோது கனவில் ஒருவர், “ஏற்கப்பட்ட ஹஜ்ஜும் ஒப்புக்கொள்ளப்பட்ட ‘தமத்துஉ’வும் (உமக்குக் கிடைத்துவிட்டன)” என்று உரக்கக் கூவியதைப் போன்று தெரிந்தது.

உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து என் கனவைக் கூறினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்; அபுல்காசிம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையே இது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் ஏற்கப்பட்ட ஹஜ்ஜும்’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 25
1689. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ "" ارْكَبْهَا "". فَقَالَ إِنَّهَا بَدَنَةٌ. فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا، وَيْلَكَ "". فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ.
பாடம் : 103 (குர்பானி) ஒட்டகங்களில் பயணம் செய்தல் அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானி) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் நன்மை உள்ளது. எனவே, (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுத்துவிடு)வீர்களாக! பிறகு அவை பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்(து உயிர் பிரிந்)ததும் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும் (வறுமையிலும்) கையேந்தாமல் இருப்பவருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குர்பானிப் பிராணிகளின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு இவ்வாறு அவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஆகவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (22:36, 37) (மேற்கண்ட வசனங்களில் இடம்பெற் றுள்ள சொற்களின் பொருள் விளக்கம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்புத்ன்’ என குர்பானி ஒட்டகங் களுக்குப் பெயர் வரக் காரணம், அவை கொழுத்தவையாக இருக்கும் என்பதே. (‘பத்ன்’ என்பதற்கு ‘கொழுத்த உடல்’ என்பதே சொற்பொருளாகும்.) ‘கானிஉ’: யாசிப்பவர்; ‘அல்முஅதா’: அந்த ஒட்டகங் களை (ஏக்கத்தோடு) பார்க்கும் பணக்காரர் அல்லது ஏழை (ஆனால், யாசிக்காதவர்); ‘ஷஆயிர்’ (அடையாளச் சின்னங்கள்): குர்பானி ஒட்டகங்களை மதிப்பதும் அவற்றிடம் வாஞ்சையோடு நடந்து கொள்வதும்; ‘வஜபத்’ பூமியில் சரிந்து விழுதல்; சூரியன் மறையப்போவதற்கும் ‘வஜபத்’ என்பர். (“தொன்மை வாய்ந்த அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவரட்டும்’! (22:29) எனும் வசனத்தில் உள்ள) ‘அ(த்)தீக்’ என்பதற்கு, ‘கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது’ என்பது பொருள்.
1689. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள்.

அவர் “இது குர்பானி ஒட்டகம்” என்றார். (மீண்டும்) “அதில் ஏறிக்கொள்வீராக!” எள்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது தடவையிலோ, மூன்றாவது தடவையிலோ நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 25
1690. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". ثَلاَثًا.
பாடம் : 103 (குர்பானி) ஒட்டகங்களில் பயணம் செய்தல் அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானி) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் நன்மை உள்ளது. எனவே, (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுத்துவிடு)வீர்களாக! பிறகு அவை பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்(து உயிர் பிரிந்)ததும் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும் (வறுமையிலும்) கையேந்தாமல் இருப்பவருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குர்பானிப் பிராணிகளின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு இவ்வாறு அவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஆகவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (22:36, 37) (மேற்கண்ட வசனங்களில் இடம்பெற் றுள்ள சொற்களின் பொருள் விளக்கம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அல்புத்ன்’ என குர்பானி ஒட்டகங் களுக்குப் பெயர் வரக் காரணம், அவை கொழுத்தவையாக இருக்கும் என்பதே. (‘பத்ன்’ என்பதற்கு ‘கொழுத்த உடல்’ என்பதே சொற்பொருளாகும்.) ‘கானிஉ’: யாசிப்பவர்; ‘அல்முஅதா’: அந்த ஒட்டகங் களை (ஏக்கத்தோடு) பார்க்கும் பணக்காரர் அல்லது ஏழை (ஆனால், யாசிக்காதவர்); ‘ஷஆயிர்’ (அடையாளச் சின்னங்கள்): குர்பானி ஒட்டகங்களை மதிப்பதும் அவற்றிடம் வாஞ்சையோடு நடந்து கொள்வதும்; ‘வஜபத்’ பூமியில் சரிந்து விழுதல்; சூரியன் மறையப்போவதற்கும் ‘வஜபத்’ என்பர். (“தொன்மை வாய்ந்த அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவரட்டும்’! (22:29) எனும் வசனத்தில் உள்ள) ‘அ(த்)தீக்’ என்பதற்கு, ‘கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது’ என்பது பொருள்.
1690. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே?” என்றார். “(பரவாயில்லை அதில்) ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். மீண்டும் அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அப்போதும் “(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்!” என மூன்றாம் முறையும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25