1647. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ تَلاَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம் : 80 ஸஃபா-மர்வாவுக்கிடையே (சுற்றும்போது) விரைந்து நடப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறு விரைந்து நடப்பது (சயீ), (ஸஃபா-மர்வா இடையே உள்ள) பனூ அப்பாத் கூட்டத்தாரின் வீட்டி(ன் வாசலி)லிருந்து பனூ அபீஹுசைன் கூட்டத்தாரின் குறுகிய பாதை (உள்ள வாசல்)வரை ஆகும்.42
1647. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்தபின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா-மர்வாவுக் கிடையே ஓடினார்கள்” என்று கூறி னார்கள்.

இதை அறிவித்த பிறகு, “நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்ற இறைவசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதினார்கள்.


அத்தியாயம் : 25
1648. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَكُنْتُمْ تَكْرَهُونَ السَّعْىَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ نَعَمْ. لأَنَّهَا كَانَتْ مِنْ شَعَائِرِ الْجَاهِلِيَّةِ، حَتَّى أَنْزَلَ اللَّهُ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا}.
பாடம் : 80 ஸஃபா-மர்வாவுக்கிடையே (சுற்றும்போது) விரைந்து நடப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறு விரைந்து நடப்பது (சயீ), (ஸஃபா-மர்வா இடையே உள்ள) பனூ அப்பாத் கூட்டத்தாரின் வீட்டி(ன் வாசலி)லிருந்து பனூ அபீஹுசைன் கூட்டத்தாரின் குறுகிய பாதை (உள்ள வாசல்)வரை ஆகும்.42
1648. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவதை (அன்சாரிகளான) நீங்கள் வெறுக்கக்கூடியவர்களாக இருந்தீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! ஏனெனில், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்ற மன்று” (2:158) எனும் இறைவசனம் அருளப்பெறும்வரை அவ்விரண்டும் (எங்கள் பழைய நம்பிக்கைப்படி) அறியாமைக் காலச் சின்னங்களாகவே இருந்தன” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1649. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّمَا سَعَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيُرِيَ الْمُشْرِكِينَ قُوَّتَهُ. زَادَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، سَمِعْتُ عَطَاءً، عَنِ ابْنِ عَبَّاسٍ، مِثْلَهُ.
பாடம் : 80 ஸஃபா-மர்வாவுக்கிடையே (சுற்றும்போது) விரைந்து நடப்பது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறு விரைந்து நடப்பது (சயீ), (ஸஃபா-மர்வா இடையே உள்ள) பனூ அப்பாத் கூட்டத்தாரின் வீட்டி(ன் வாசலி)லிருந்து பனூ அபீஹுசைன் கூட்டத்தாரின் குறுகிய பாதை (உள்ள வாசல்)வரை ஆகும்.42
1649. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வரும்போது தொங்கோட்டம் ஓடியது, இணைவைப்பாளர் களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1650. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ قَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، قَالَتْ فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" افْعَلِي كَمَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي "".
பாடம் : 81 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் ஹஜ்ஜில் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வ தைத் தவிர மற்றெல்லா கிரியை களையும் செய்யலாம் என்ப தும், ஸஃபா-மர்வாவுக்கிடையே அங்கத் தூய்மை (உளூ) இன்றி தொங்கோட்டம் ஓடுதலும்44
1650. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். அப்போது நான் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யவு மில்லை. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன்.

அப்போது அவர்கள், “ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையாத வரை இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யாதே” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1651. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ،. قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم هُوَ وَأَصْحَابُهُ بِالْحَجِّ، وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْىٌ، غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَقَدِمَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ، وَمَعَهُ هَدْىٌ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصْحَابَهُ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، وَيَطُوفُوا، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا، إِلاَّ مَنْ كَانَ مَعَهُ الْهَدْىُ، فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى، وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ "". وَحَاضَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا طَهُرَتْ طَافَتْ بِالْبَيْتِ. قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ، وَأَنْطَلِقُ بِحَجٍّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ.
பாடம் : 81 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் ஹஜ்ஜில் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வ தைத் தவிர மற்றெல்லா கிரியை களையும் செய்யலாம் என்ப தும், ஸஃபா-மர்வாவுக்கிடையே அங்கத் தூய்மை (உளூ) இன்றி தொங்கோட்டம் ஓடுதலும்44
1651. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்க வில்லை. யமனிலிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து தலை முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் ‘மினா’வுக்குச் செல்ல வேண்டுமா? என்று பேசிக்கொண்டார்கள்.45

இச்செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்கள், “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்வது செல்லும் என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், குர்பானி(ப் பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் என்னுடன் கொண்டு வந்திருக்கவில்லையாயின், இஹ்ராமி லிருந்து விடுபட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறை வேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எல்லாரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்கள். நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேனே” எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின் உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1652. حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ أَنْ أُخْتَهَا كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ، قَالَتْ كُنَّا نُدَاوِي الْكَلْمَى وَنَقُومُ عَلَى الْمَرْضَى. فَسَأَلَتْ أُخْتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ هَلْ عَلَى إِحْدَانَا بَأْسٌ إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ قَالَ "" لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَلْتَشْهَدِ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ "". فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ سَأَلْنَهَا ـ أَوْ قَالَتْ سَأَلْنَاهَا ـ فَقَالَتْ وَكَانَتْ لاَ تَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ قَالَتْ بِأَبِي. فَقُلْنَا أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كَذَا وَكَذَا قَالَتْ نَعَمْ بِأَبِي. فَقَالَ "" لِتَخْرُجِ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ ـ أَوِ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ ـ وَالْحُيَّضُ، فَيَشْهَدْنَ الْخَيْرَ، وَدَعْوَةَ الْمُسْلِمِينَ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى "". فَقُلْتُ الْحَائِضُ. فَقَالَتْ أَوَ لَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَتَشْهَدُ كَذَا وَتَشْهَدُ كَذَا
பாடம் : 81 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் ஹஜ்ஜில் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வ தைத் தவிர மற்றெல்லா கிரியை களையும் செய்யலாம் என்ப தும், ஸஃபா-மர்வாவுக்கிடையே அங்கத் தூய்மை (உளூ) இன்றி தொங்கோட்டம் ஓடுதலும்44
1652. ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (இரு பெருநாள்களிலும் தொழும் திடலுக்கு) எங்கள் இளம் பெண்கள் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அந்தப் பெண் கூறினார்: என் சகோதரி (உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களுடைய தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார்.

அவருடைய கணவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் கலந்துகொண்டார். ஒரு முறை என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் (போர்க் களத்தில்) காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை யளித்து வந்தோம்; நோயாளிகளைக் கவனித்து வந்தோம்; நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்களில் ஒருத்திக்கு துப்பட்டா இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?” எனக் கேட்டேன். அதற்கு “அவளுடைய தோழி, தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்; அவள் நன்மை யான காரியங்களிலும் இறைநம்பிக்கை யாளர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வந்தபோது, அவரிடம் ‘(பெண்களாகிய) நாங்கள் கேட்டோம்’ அல்லது ‘பெண்கள் கேட்டனர்’. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘(அவர்களுக்கு) என் தந்தை அர்ப்பணமாகட்டும்!’ என்று கூறாமல் இருக்கவில்லை.

(அதன்படி,) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர், “ஆம்! என் தந்தை அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்:

‘திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களும்’ அல்லது ‘கன்னிப் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும்’ மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கு கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.

(அந்த மாளிகையில் தங்கியிருந்த) அப்பெண்மணி கூறினார்:

இதைக் கேட்ட நான், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என (உம்மு அத்தியா விடம்) வினவினேன். அதற்கு “மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண் அரஃபாவுக் கும் (மினா, முஸ்தலிஃபா போன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில் லையா?” என உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள்.

அத்தியாயம் : 25
1653. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قُلْتُ أَخْبِرْنِي بِشَىْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى. قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ. ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ.
பாடம் : 82 மக்காவாசியும் மினாவுக்குப் புறப்படும் (தமத்துஉ செய்யும் வெளியூர்) ஹாஜியும் (மக்கா வில் உள்ள) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங் களில் இஹ்ராம் கட்டுதல்46 மக்காவில் தங்கியிருப்போர் ஹஜ்ஜுக் காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறுவது பற்றி அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ர் தொழுதுவிட்டு, தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறியமர்ந்தும் தல்பியா கூறுவார்கள்” எனப் பதிலளித்தார்கள். “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வந்து (உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். துல்ஹஜ் எட்டாம் நாளன்று (மினா புறப்பட்டபோது) மக்கா எங்கள் முதுகுக்கு அப்பால் இருக்க ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “நாங்கள் (மக்காவில் உள்ள) ‘அல் பத்ஹா’ பள்ளத்தாக்கிலிருந்து இஹ்ராம் கட்டினோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் துல்ஹஜ் பிறையைப் பார்த்ததும் இஹ்ராம் கட்டுகிறார்கள்; ஆனால், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள்வரை இஹ்ராம் கட்டுவதில்லையே, ஏன்?” எனக் கேட்டார் கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (மினா செல்வதற்காக, துல்ஹஜ் எட்டாம் நாள்) தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறும்வரை அவர்கள் இஹ்ராம் கட்டியதை நான் பார்த்ததில்லை” எனக் கூறினார்கள். பாடம் : 83 (ஹஜ்ஜுக்குச் செல்வோர்) துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ரை எங்கே தொழுவர்?
1653. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்’ என்றார்கள்.

பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் எங்கு அஸ்ர் தொழுதார்கள் எனக் கேட்டதும், ‘அல்அப்தஹ்’ (அல்முஹஸ்ஸப்) எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, “உம்முடைய தலைவர்கள் செய்வதைப் போன்றே செய்வீராக!” என்றும் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1654. حَدَّثَنَا عَلِيٌّ، سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَيَّاشٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، لَقِيتُ أَنَسًا. وَحَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ خَرَجْتُ إِلَى مِنًى يَوْمَ التَّرْوِيَةِ فَلَقِيتُ أَنَسًا ـ رضى الله عنه ـ ذَاهِبًا عَلَى حِمَارٍ فَقُلْتُ أَيْنَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم هَذَا الْيَوْمَ الظُّهْرَ فَقَالَ انْظُرْ حَيْثُ يُصَلِّي أُمَرَاؤُكَ فَصَلِّ.
பாடம் : 82 மக்காவாசியும் மினாவுக்குப் புறப்படும் (தமத்துஉ செய்யும் வெளியூர்) ஹாஜியும் (மக்கா வில் உள்ள) ‘அல்பத்ஹா’ பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங் களில் இஹ்ராம் கட்டுதல்46 மக்காவில் தங்கியிருப்போர் ஹஜ்ஜுக் காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறுவது பற்றி அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ர் தொழுதுவிட்டு, தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறியமர்ந்தும் தல்பியா கூறுவார்கள்” எனப் பதிலளித்தார்கள். “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வந்து (உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். துல்ஹஜ் எட்டாம் நாளன்று (மினா புறப்பட்டபோது) மக்கா எங்கள் முதுகுக்கு அப்பால் இருக்க ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “நாங்கள் (மக்காவில் உள்ள) ‘அல் பத்ஹா’ பள்ளத்தாக்கிலிருந்து இஹ்ராம் கட்டினோம்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் துல்ஹஜ் பிறையைப் பார்த்ததும் இஹ்ராம் கட்டுகிறார்கள்; ஆனால், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள்வரை இஹ்ராம் கட்டுவதில்லையே, ஏன்?” எனக் கேட்டார் கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் (மினா செல்வதற்காக, துல்ஹஜ் எட்டாம் நாள்) தமது ஊர்தி ஒட்டகத்தில் ஏறும்வரை அவர்கள் இஹ்ராம் கட்டியதை நான் பார்த்ததில்லை” எனக் கூறினார்கள். பாடம் : 83 (ஹஜ்ஜுக்குச் செல்வோர்) துல்ஹஜ் எட்டாம் நாள் லுஹ்ரை எங்கே தொழுவர்?
1654. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் துல்ஹஜ் எட்டாம் நாள் மினாவுக் குப் புறப்பட்டேன். அப்போது கழுதையில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நான் அவர்களிடம், “இன்றைய (துல்ஹஜ் எட்டாம்) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “கவனியுங்கள்! உம்முடைய தலைவர்கள் எந்த இடத்தில் தொழுகின்றார்களோ அந்த இடத்தில் தொழுங்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1655. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1655. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உஸ்மான் (ரலி) அவர்கள், தமது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.


அத்தியாயம் : 25
1656. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا قَطُّ وَآمَنُهُ بِمِنًى رَكْعَتَيْنِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1656. ஹாரிஸா பின் வஹ்ப் அல் குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்க ளுக்கு இரு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம்; எந்த அச்சமும் இல்லாமலும் இருந்தோம்.


அத்தியாயம் : 25
1657. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1657. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இரண்டு ரக்அத்களாவே தொழுதேன்; அபூபக்ர் (ரலி) அவர்களுட னும் உமர் (ரலி) அவர்களுடனும் (மினாவில்) (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். பின்னர் உங்களிடம் பல்வேறு கருத்துகள் தோன்றிவிட்டன. (நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!47

அத்தியாயம் : 25
1658. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَالِمٌ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الْفَضْلِ عَنْ أُمِّ الْفَضْلِ، شَكَّ النَّاسُ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَعَثْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرَابٍ فَشَرِبَهُ.
பாடம் : 85 அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றல்48
1658. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் ஒன்றை அனுப்பிவைத்தேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.

அத்தியாயம் : 25
1659. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُهِلُّ مِنَّا الْمُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ.
பாடம் : 86 மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டதும் தல்பியாவும் தக்பீரும் கூறல்
1659. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக் குப் போகும்போது அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய (அரஃபா) நாள் என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டேன்.

அதற்கு, “அன்று எங்களில் சிலர் தல்பியா கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறினார்கள்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1660. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، قَالَ كَتَبَ عَبْدُ الْمَلِكِ إِلَى الْحَجَّاجِ أَنْ لاَ يُخَالِفَ ابْنَ عُمَرَ فِي الْحَجِّ، فَجَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ وَأَنَا مَعَهُ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِ الْحَجَّاجِ، فَخَرَجَ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ فَقَالَ مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ. قَالَ هَذِهِ السَّاعَةَ قَالَ نَعَمْ. قَالَ فَأَنْظِرْنِي حَتَّى أُفِيضَ عَلَى رَأْسِي ثُمَّ أَخْرُجَ. فَنَزَلَ حَتَّى خَرَجَ الْحَجَّاجُ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي، فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ. فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَبْدِ اللَّهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ عَبْدُ اللَّهِ قَالَ صَدَقَ.
பாடம் : 87 அரஃபா நாளில் நண்பகலில் (நமிரா’விலிருந்து அரஃபா) புறப்படுதல்
1660. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மன்னர்) அப்துல் மலிக் (பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ள வேண்டாம் என (அமீர்) ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் மஞ்சள் சாயம் பூசப்பட்ட பெரிய கீழங்கியுடன் வெளியே வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?” எனக் கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்” என்றார்கள். ஹஜ்ஜாஜ் “இந்த நேரத்திலா?” எனக் கேட்டதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகின் றேன், அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார்கள்.

ஹஜ்ஜாஜ், எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் உரையை (குத்பா) சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும்” என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களைப் பார்க்கலானார். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அதைக் கண்டபோது, “சாலிம் சொன்னது உண்மைதான்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1661. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا، اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهْوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَهُ.
பாடம் : 88 அரஃபாவில் (நீண்ட நேரம்) வாகனத்தில் தங்குதல்
1661. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது தொடர்பாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்துகொண்டிருந்தனர். சிலர், ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் வேறுசிலர், ‘இல்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.

எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பி னேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டே அதை அருந்தி னார்கள்.

அத்தியாயம் : 25
1662. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ، عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ سَأَلَ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَيْفَ تَصْنَعُ فِي الْمَوْقِفِ يَوْمَ عَرَفَةَ فَقَالَ سَالِمٌ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ صَدَقَ. إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السُّنَّةِ. فَقُلْتُ لِسَالِمٍ أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَالِمٌ وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلاَّ سُنَّتَهُ
பாடம் : 89 அரஃபாவில் (லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இரு தொழுகைகளைச் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதல் இப்னு உமர் (ரலி) அவர்கள், (அரஃபா நாளில்) தமக்கு இமாமுடன் சேர்ந்து தொழும் வாய்ப்புத் தவறிவிட்டால், (லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இருவேளைத் தொழு கைகளை (தமது இருப்பிடத்தில்) சேர்த்தே தொழுவார்கள்.
1662. இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில் (ஹஜ்ஜுக்கு வந்திருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள்?” என ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு சாலிம் (ரஹ்) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் அரஃபா நாளில் நண்பகலில் தொழுது விடுவீராக!” என்றார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “சாலிம் கூறியது உண்மைதான். (நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹ்ரையும் அஸ்ரையும் நபிவழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்” என்றார்கள்.

நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழியை நபித்தோழர்கள் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 25
1663. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، كَتَبَ إِلَى الْحَجَّاجِ أَنْ يَأْتَمَّ، بِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الْحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ جَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَأَنَا مَعَهُ حِينَ زَاغَتِ الشَّمْسُ أَوْ زَالَتْ، فَصَاحَ عِنْدَ فُسْطَاطِهِ أَيْنَ هَذَا فَخَرَحَ إِلَيْهِ فَقَالَ ابْنُ عُمَرَ الرَّوَاحَ. فَقَالَ الآنَ قَالَ نَعَمْ. قَالَ أَنْظِرْنِي أُفِيضُ عَلَىَّ مَاءً. فَنَزَلَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ حَتَّى خَرَجَ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي. فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ الْيَوْمَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ. فَقَالَ ابْنُ عُمَرَ صَدَقَ.
பாடம் : 90 அரஃபாவில் உரையைச் சுருக் கிக்கொள்ளல்
1663. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மன்னர்) அப்துல் மலிக் பின் மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர் களைப் பின்பற்றுமாறு (அமீர்) ஹஜ்ஜாஜுக் குக் கடிதம் எழுதினார். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று ‘எங்கே அவர்?’ என்று சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் வெளியே வந்தார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘புறப்படு வீராக!’ என்றார் ஹஜ்ஜாஜ், ‘இப்போதேவா?’ எனக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “நான் தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகிறேன்; அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை, (தமது வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார்கள். ஹஜ்ஜாஜ் எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்கு மிடையே நடந்துகொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால், உரையை (குத்பாவை)ச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்துவீராக!” என்றேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் “(சாலிம்) உண்மையே சொன்னார்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1664. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، كُنْتُ أَطْلُبُ بَعِيرًا لِي. وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ هَذَا وَاللَّهِ مِنَ الْحُمْسِ فَمَا شَأْنُهُ هَا هُنَا
பாடம் : 91 அரஃபாவில் தங்குதல்
1664. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒரு முறை) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளன்று எனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக்கொண்டு வந்த போது, நபி (ஸல்) அவர்கள் அரஃபா பெரு வெளியில் தங்கியிருப்பதைக் கண்டேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (நபி (ஸல்) அவர்கள்), கடினமான சமயப் பற்றுடைய (குறைஷிக் குலத்த)வர் ஆயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என என்னுள் கூறிக் கொண்டேன்.49

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1665. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ عُرْوَةُ كَانَ النَّاسُ يَطُوفُونَ فِي الْجَاهِلِيَّةِ عُرَاةً إِلاَّ الْحُمْسَ، وَالْحُمْسُ قُرَيْشٌ وَمَا وَلَدَتْ، وَكَانَتِ الْحُمْسُ يَحْتَسِبُونَ عَلَى النَّاسِ يُعْطِي الرَّجُلُ الرَّجُلَ الثِّيَابَ يَطُوفُ فِيهَا، وَتُعْطِي الْمَرْأَةُ الْمَرْأَةَ الثِّيَابَ تَطُوفُ فِيهَا، فَمَنْ لَمْ يُعْطِهِ الْحُمْسُ طَافَ بِالْبَيْتِ عُرْيَانًا، وَكَانَ يُفِيضُ جَمَاعَةُ النَّاسِ مِنْ عَرَفَاتٍ، وَيُفِيضُ الْحُمْسُ مِنْ جَمْعٍ. قَالَ وَأَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الْحُمْسِ {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} قَالَ كَانُوا يُفِيضُونَ مِنْ جَمْعٍ فَدُفِعُوا إِلَى عَرَفَاتٍ.
பாடம் : 91 அரஃபாவில் தங்குதல்
1665. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றி வருவார்கள்; ‘ஹும்ஸ்’ (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! ‘ஹும்ஸ்’ என்போர், குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர்.50

இந்த ‘ஹும்ஸ்’கள் இறைவனுக்காக மக்களுக்கு நற்பணி ஆற்றிவந்தனர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு ஆணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ‘ஹும்ஸ்’கள் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார்.

மேலும், மக்கள் கூட்டம் அரஃபாவி லிருந்தே திரும்பிச் செல்வார்கள். ஆனால், (குறைஷியரான) ஹும்ஸ்களோ (எல்லாம் முடிந்த பின்பு) முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

“பின்பு மக்கள் திரும்புகிற இடத்தி லிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199) எனும் இறைவசனம் ‘ஹும்ஸ்’கள் தொடர் பாகவே அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா) எனும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களா யிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்கள் திருப்பி விடப்பட்டனர்.

அத்தியாயம் : 25