1621. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ.
பாடம் : 66 ஒருவர் ‘தவாஃப்’ செய்யும்போது, வாரையோ விரும்பத் தகாத வேறு பொருளையோ கண்டால் அதைத் துண்டித்துவிடுவது
1621. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (கையில்) கயிரையோ வேறொரு பொருளையோ கட்டிக்கொண்டு ‘தவாஃப்’ செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித் தார்கள்.

அத்தியாயம் : 25
1622. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ يُونُسُ قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ "" أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ "".
பாடம் : 67 கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது; இணைவைப்பாளர்கள் ஹஜ் செய்வது கூடாது.
1622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜில், அபூபக்ர் (ரலி) அவர்களை (ஹஜ் குழுவிற்குத்) தலைவராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அங்கு) துல்ஹஜ் பத்தாம் நாள் (மினாவில்), “எச்சரிக்கை! இந்த ஆண்டுக்குப் பின்னர் இணை வைப்பாளர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக யாரும் தவாஃப் செய்யக் கூடாது” எனப் பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் என்னையும் ஒருவனாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

அத்தியாயம் : 25
1623. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي الْعُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}. قَالَ وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبِ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 68 தவாஃபுக்கு இடையில் (தொழுகையில்) நின்றுவிடல்35 ஒருவர் தவாஃப் செய்யும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்டால், அல்லது அந்த இடத்திலிருந்து அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டால் தொழுகை முடிந்து சலாம் கொடுத்தவுடன் விட்ட இடத்திலிருந்து தவாஃபைத் தொடர வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) ஆகியோரும் இவ்வாறு கூறியதாகவே அறிவிக்கப்பட் டுள்ளது. பாடம் : 69 (தவாஃபின்போது) ஏழு சுற்று களுக்கு ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் இரு ரக்அத்கள் தொழுதார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்கும் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “தவாஃப் செய்தபின் கடமையான தொழுகை தொழுதால், அது தவாஃபின் இரண்டு ரக்அத்களுக்குப் போதுமாகும்” என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுவதாக நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “நபிவழியே சிறந்தது; நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு ஏழு சுற்றுக்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.
1623. 1624 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ரா செய்யும் மனிதர் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் சுற்றுவதற்குமுன் தம் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா- மர்வாவிற்கு இடையில் சுற்றி னார்கள்” என்று கூறிவிட்டு, இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு அல்லாஹ் வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.

நான் இதே கேள்வியை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட் டேன். அதற்கு, “ஸஃபா-மர்வாவுக்கு இடையில் சுற்றுவதற்கு முன்னால் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்கக் கூடாது” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 25
1625. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ، فَطَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَقْرَبِ الْكَعْبَةَ بَعْدَ طَوَافِهِ بِهَا حَتَّى رَجَعَ مِنْ عَرَفَةَ.
பாடம் : 70 முதல் தவாஃப் (தவாஃபுல் குதூம்) செய்தபின் அரஃபா செல்லும்வரை தவாஃப் செய்ய கஅபாவை நெருங்காமல் இருத்தல்
1625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக) மக்காவுக்கு வந்தபோது தவாஃப் (குதூம்) செய்தார்கள்; ஸஃபா- மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்த தவாஃபிற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும்வரை நபியவர்கள் கஅபாவிற்குச் செல்லவில்லை.36

அத்தியாயம் : 25
1626. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو مَرْوَانَ يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ الْغَسَّانِيُّ عَنْ هِشَامٍ عَنْ عُرْوَةَ عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهْوَ بِمَكَّةَ، وَأَرَادَ الْخُرُوجَ، وَلَمْ تَكُنْ أُمُّ سَلَمَةَ طَافَتْ بِالْبَيْتِ وَأَرَادَتِ الْخُرُوجَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَطُوفِي عَلَى بَعِيرِكِ، وَالنَّاسُ يُصَلُّونَ "". فَفَعَلَتْ ذَلِكَ، فَلَمْ تُصَلِّ حَتَّى خَرَجَتْ.
பாடம் : 71 (மஸ்ஜிதுல் ஹராம்) பள்ளி வாசலுக்கு வெளியே, தவா ஃபிற்கான இரண்டு ரக்அத்கள் தொழுதல் புனித ஹரமுக்கு வெளியே உமர் (ரலி) அவர்கள் (அத்தொழுகையைத்) தொழு திருக்கிறார்கள்.
1626. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். (இறுதி) தவாஃப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “சுப்ஹு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட வுடன் மக்கள் தொழுதுகொண்டிருக்கும் போது, நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்துகொள்” எனக் கூறினார்கள்.

அவ்வாறே நான் செய்தேன். இதனால் (தவாஃபுக்கான இரு ரக்அத்களை அங்கிருந்து) வெளியேறும்வரை நான் தொழவில்லை. (அதன் பிறகே தொழு தேன்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “(இறுதி தவாஃப் செய்யாதது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன்” என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 25
1627. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا، وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம் : 72 மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுதல்
1627. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது கஅபாவை ஏழு முறை (தவாஃப்) சுற்றினார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரியுள்ளது” (33:21) என உயர்ந்தோன் அல்லாஹ் கூறியுள்ளான்.

அத்தியாயம் : 25
1628. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نَاسًا، طَافُوا بِالْبَيْتِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ قَعَدُوا إِلَى الْمُذَكِّرِ، حَتَّى إِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامُوا يُصَلُّونَ فَقَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَعَدُوا حَتَّى إِذَا كَانَتِ السَّاعَةُ الَّتِي تُكْرَهُ فِيهَا الصَّلاَةُ قَامُوا يُصَلُّونَ.
பாடம் : 73 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37 இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள். உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1628. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “சிலர் சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு, மார்க்கச் சொற்பொழிவாள ரிடத்தில் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமானபோது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள், (சொற்பொழி வில் அமர்ந்தவர்களைக் குறித்து) “இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, தொழுகை வெறுக்கப்படும் நேரம் வந்தவுடன் எழுந்து தொழுகிறார்கள்” என்று (கண்டித்துக்) கூறினார்கள்.38


அத்தியாயம் : 25
1629. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا.
பாடம் : 73 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37 இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள். உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1629. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியன் உதிக்கும்போதும் மறையும் போதும் தொழக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற் றிருக்கிறேன்.


அத்தியாயம் : 25
1630. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ الزَّعْفَرَانِيُّ ـ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ يَطُوفُ بَعْدَ الْفَجْرِ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ. ق
பாடம் : 73 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37 இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள். உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1630. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், சுப்ஹுக்குப்பின் தவாஃப் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன்.


அத்தியாயம் : 25
1631. َالَ عَبْدُ الْعَزِيزِ وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلاَّ صَلاَّهُمَا.
பாடம் : 73 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழு கைகளுக்குப் பின்னால் தவாஃப் செய்வது37 இப்னு உமர் (ரலி) அவர்கள், சூரியன் உதிப்பதற்கு முன்னால் தவாஃபின் இரண்டு ரக்அத்கைளைத் தொழுவார்கள். உமர் (ரலி) அவர்கள், சுப்ஹு தொழுகைக்குப் பின்னால் தவாஃப் செய்துவிட்டு ‘தூத்துவா’விற்குச் சென்று தவாஃபுடைய இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
1631. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் அஸ்ருக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டில் நுழையும் போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவித் துள்ளார்கள்.

அத்தியாயம் : 25
1632. حَدَّثَنِي إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَافَ بِالْبَيْتِ، وَهْوَ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ فِي يَدِهِ وَكَبَّرَ.
பாடம் : 74 நோயாளி ஊர்தியில் அமர்ந்து (கஅபாவை) ‘தவாஃப்’ செய்ய லாம்.
1632. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டு இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தமது கையிலுள்ள ஒரு பொருளால் ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு தக்பீர் சொன்னார்கள்.


அத்தியாயம் : 25
1633. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي. فَقَالَ "" طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ "". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، وَهْوَ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
பாடம் : 74 நோயாளி ஊர்தியில் அமர்ந்து (கஅபாவை) ‘தவாஃப்’ செய்ய லாம்.
1633. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் நோய்வாய்பட்டுள்ளேன்” என முறையிட்டேன். அதற்கு அவர்கள், “நீ வாகனத்தில் அமர்ந்து மக்களுக்குப் பின்னால் (இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1634. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اسْتَأْذَنَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ ـ رضى الله عنه ـ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ، فَأَذِنَ لَهُ.
பாடம் : 75 ஹாஜிகளுக்குத் தண்ணீர் விநி யோகித்தல்
1634. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக ‘மினா’வுடைய (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி யளித்தார்கள்.


அத்தியாயம் : 25
1635. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ إِلَى السِّقَايَةِ، فَاسْتَسْقَى، فَقَالَ الْعَبَّاسُ يَا فَضْلُ اذْهَبْ إِلَى أُمِّكَ، فَأْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشَرَابٍ مِنْ عِنْدِهَا. فَقَالَ "" اسْقِنِي "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ. قَالَ "" اسْقِنِي "". فَشَرِبَ مِنْهُ، ثُمَّ أَتَى زَمْزَمَ، وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا، فَقَالَ "" اعْمَلُوا، فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ ـ ثُمَّ قَالَ ـ لَوْلاَ أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ حَتَّى أَضَعَ الْحَبْلَ عَلَى هَذِهِ "". ـ يَعْنِي عَاتِقَهُ ـ وَأَشَارَ إِلَى عَاتِقِهِ.
பாடம் : 75 ஹாஜிகளுக்குத் தண்ணீர் விநி யோகித்தல்
1635. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (தம் புதல்வர்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் “ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவரிடமுள்ள குடிதண்ணீரை கொண்டுவந்து அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடு” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்” எனக் கேட்க, அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகின்றார்கள்” என்று கூறினார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை!) இந்தத் தண்ணீரையே கொடுங்கள்” என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் அருந்தினார்கள்.

பிறகு ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள். அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், “செய்யுங்கள்! நீங்கள் நல்ல சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள்“ எனக் கூறிவிட்டு, “மக்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள் என்றில்லாவிட்டால், (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நானும் இதில் கயிற்றை வை(த்து தண்ணீர் சும)ப்பேன்” என்று கூறி, தமது தோளைச் சுட்டிக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 25
1636. وَقَالَ عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ جِبْرِيلُ "".
பாடம் : 76 ஸம்ஸம் தொடர்பாக வந்துள் ளவை39
1636. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு இறைநம்பிக்கையும் ஞானமும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டு வந்து, அதிலுள்ளதை என் நெஞ்சில் நிரப்பி, நெஞ்சை மூடினார்.

பிறகு என் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு ஏற்றிச் சென்றார். முதல் வானத்தின் காவலரிடம் ‘திறப்பீராக!’ என்றார். “யார் அது?” என அக்காவலர் கேட்க, ‘ஜிப்ரீல்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 25
1637. حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ حَدَّثَهُ قَالَ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ. قَالَ عَاصِمٌ فَحَلَفَ عِكْرِمَةُ مَا كَانَ يَوْمَئِذٍ إِلاَّ عَلَى بَعِيرٍ.
பாடம் : 76 ஸம்ஸம் தொடர்பாக வந்துள் ளவை39
1637. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் அருந்தக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா (ரஹ்) அவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள் என ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்.

அத்தியாயம் : 25
1638. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ "" مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيُهِلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ ثُمَّ لاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا "". فَقَدِمْتُ مَكَّةَ، وَأَنَا حَائِضٌ، فَلَمَّا قَضَيْنَا حَجَّنَا أَرْسَلَنِي مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرْتُ، فَقَالَ صلى الله عليه وسلم "" هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ "". فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ، بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ طَافُوا طَوَافًا وَاحِدًا.
பாடம் : 77 ‘கிரான்’ முறை ஹஜ் செய்பவர் ‘தவாஃப்’ செய்யும் முறை
1638. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிப் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! பிறகு இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!” எனக் கூறினார்கள்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு அனுப்பிவைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது (விடுபட்ட) உன் உம்ராவுக்குப் பகரமாகும்” எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் தவாஃப் செய்து விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பிறகு (ஹஜ்ஜுக்காக மற்றொரு இஹ்ராம் கட்டி) மினாவிலிருந்து திரும்பிய பிறகு (ஹஜ்ஜிற்காக) மற்றொரு தவாஃப் செய்தார் கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்தவர்கள் ஒரே தவாஃப் தான் செய்தார்கள்.


அத்தியாயம் : 25
1639. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ دَخَلَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، وَظَهْرُهُ فِي الدَّارِ، فَقَالَ إِنِّي لاَ آمَنُ أَنْ يَكُونَ الْعَامَ بَيْنَ النَّاسِ قِتَالٌ، فَيَصُدُّوكَ عَنِ الْبَيْتِ، فَلَوْ أَقَمْتَ. فَقَالَ قَدْ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ، فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} ثُمَّ قَالَ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ مَعَ عُمْرَتِي حَجًّا. قَالَ ثُمَّ قَدِمَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا.
பாடம் : 77 ‘கிரான்’ முறை ஹஜ் செய்பவர் ‘தவாஃப்’ செய்யும் முறை
1639. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) வந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் செல்ல) வாகனம் வீட்டில் தயாராக இருந்தது. அப்போது அப்துல்லாஹ், “நிச்சயமாக, இவ்வாண்டு மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்; எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் (நல்லது”) எனக் கூறினார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவுக்காகப்) புறப்பட்டபோது, கஅபாவுக்குச் செல்ல விடாமல் அவர்களை குறைஷி இறைமறுப்பாளர்கள் தடுத்தனர். எனவே, நான் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.’ நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டுகிறேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்கு கிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப் செய்தார்கள்.


அத்தியாயம் : 25
1640. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَرَادَ الْحَجَّ عَامَ نَزَلَ الْحَجَّاجُ بِابْنِ الزُّبَيْرِ. فَقِيلَ لَهُ إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ. فَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} إِذًا أَصْنَعَ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً. ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ الْبَيْدَاءِ قَالَ مَا شَأْنُ الْحَجِّ وَالْعُمْرَةِ إِلاَّ وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجًّا مَعَ عُمْرَتِي. وَأَهْدَى هَدْيًا اشْتَرَاهُ بِقُدَيْدٍ وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، فَلَمْ يَنْحَرْ، وَلَمْ يَحِلَّ مِنْ شَىْءٍ حَرُمَ مِنْهُ، وَلَمْ يَحْلِقْ وَلَمْ يُقَصِّرْ حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ، فَنَحَرَ وَحَلَقَ، وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَ الْحَجِّ، وَالْعُمْرَةِ بِطَوَافِهِ الأَوَّلِ. وَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 77 ‘கிரான்’ முறை ஹஜ் செய்பவர் ‘தவாஃப்’ செய்யும் முறை
1640. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில், இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்.40

அப்போது அவர்களிடம், “மக்களி டையே போர் மூண்டுள்ளது; எனவே, ஹஜ் செய்ய விடாமல் உங்களை அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகின் றோம்” எனக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது எனவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்” எனக் கூறினார்கள்.

பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டு ‘பைதா’ எனுமிடத்தின் பிரதான பகுதிக்கு வந்ததும், “ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான்; (எனவே) நான் எனது உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் கட்டி யுள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” எனக் கூறினார்கள். மேலும், ‘குதைத்’ எனுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டுசென்றார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. குர்பானி கொடுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை அவர்கள் பலியிடவில்லை; இஹ்ராம் கட்டியிருக்கும்போது விலக்கப் பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை.

துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (குர்பானிப் பிராணியை) பலியிட்டுவிட்டுத் தலை முடியை மழித்தார்கள். முதலில் தாம் நிறைவேற்றிய தவாஃபே, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்றும் அவர்கள் கருதினார்கள். மேலும், “இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 25