1471. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ فَيَأْتِيَ بِحُزْمَةِ الْحَطَبِ عَلَى ظَهْرِهِ فَيَبِيعَهَا فَيَكُفَّ اللَّهُ بِهَا وَجْهَهُ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ أَعْطَوْهُ أَوْ مَنَعُوهُ "".
பாடம் : 50
யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1471. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம், அவருக்கு இழிவு ஏற்படாமல் அல்லாஹ் தடுத்து விடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்க வும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.
இதை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24

1472. وَحَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ "" يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "". قَالَ حَكِيمٌ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا. فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَىْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ.
பாடம் : 50
யாசிக்காமல் (தன்மானத்தோடு) இருத்தல்
1472. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கி னார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கி விட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையான தும் ஆகும். யார் இதைப் பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் (பரகத்) வழங்கப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாத வரைப் போன்றவர் ஆவார். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்தது” என்று கூறி னார்கள்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப்பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்டு (அவரது செல்வத்தை)க் குறைக்கமாட்டேன்” எனக் கூறினேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நன்கொடை பெற்றுக்கொள்ளுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஹகீமுக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்துவிட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “முஸ்லிம் சமுதாயமே! இந்தப் பொது நிதியிலிருந்து (ஃபைஉ) தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கி றேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!” எனக் கூறினார்கள்.
ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பின் வேறு யாரிடமும் தாம் இறக்கும்வரை எதையும் கேட்கவே யில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1473. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي فَقَالَ "" خُذْهُ، إِذَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ شَىْءٌ، وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ، وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ "".
பாடம் : 51
யாசிக்காமலும் பேராசை கொள் ளாமலும் ஒன்றை இறைவன் (பிறர் மூலம்) கொடுத்தால்...?
அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்களின் செல்வத்தில் யாசிப் போர்க்கும் வசதியற்றோருக்கும் பங்கு உண்டு. (51:19)
1473. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான், “இதை என்னைவிட அதிகத் தேவையுடையவருக்குக் கொடுங்களேன்” என்பேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக்கொள்ளுங்கள்; நீங்கள் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு உங்களுக்கு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்றார்கள்.

1474. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ حَمْزَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ ". وَقَالَ إِنَّ الشَّمْسَ تَدْنُو يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَبْلُغَ الْعَرَقُ نِصْفَ الأُذُنِ، فَبَيْنَا هُمْ كَذَلِكَ اسْتَغَاثُوا بِآدَمَ، ثُمَّ بِمُوسَى، ثُمَّ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم ". وَزَادَ عَبْدُ اللَّهِ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ أَبِي جَعْفَرٍ " فَيَشْفَعُ لِيُقْضَى بَيْنَ الْخَلْقِ، فَيَمْشِي حَتَّى يَأْخُذَ بِحَلْقَةِ الْبَابِ، فَيَوْمَئِذٍ يَبْعَثُهُ اللَّهُ مَقَامًا مَحْمُودًا، يَحْمَدُهُ أَهْلُ الْجَمْعِ كُلُّهُمْ ". وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ النُّعْمَانِ بْنِ رَاشِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، أَخِي الزُّهْرِيِّ عَنْ حَمْزَةَ، سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْأَلَةِ.
பாடம் : 52
அதிகம் பொருள் சேர்ப்ப தற்காக மக்களிடம் யாசிப்பது
1474. 1475 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் யாசிப்பதையே வழக்க மாகக் கொண்டுள்ள மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாத வனாகவே மறுமை நாளன்று வருவான்.
மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடை யும் அளவுக்கு மறுமை நாளன்று சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம் (அலை) அவர்களிடமும் பிறகு மூசா (அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத் (ஸல்) அவர்களிடமும் வந்து உதவி தேடு வார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று (சொர்க்க)வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளில் அல்லாஹ், நபி (ஸல்) அவர்களைப் புகழுக்குரிய இடத் திற்கு (மகாமு மஹ்மூத்) அனுப்புவான். அப்போது அங்கு குழுமியிருக்கும் அனைவரும் நபி (ஸல்) அவர்களைப் பாராட்டுவார்கள்” என்று கூடுதலாகக் காணப்படுகின்றது.

1476. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تَرُدُّهُ الأُكْلَةُ وَالأُكْلَتَانِ، وَلَكِنِ الْمِسْكِينُ الَّذِي لَيْسَ لَهُ غِنًى وَيَسْتَحْيِي أَوْ لاَ يَسْأَلُ النَّاسَ إِلْحَافًا "".
பாடம் : 53
“மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள்” (2:273) எனும் இறைவசனம்.
தன்னிறைவின் அளவு என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் தம் (அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர் களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்துகொள்வீர். (2:273)
1476. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக அலைப வன் ஏழையல்லன்; மாறாக, தன் வாழ்க் கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந் தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்ற வனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) வற்புறுத்திக் கேட்காதவனுமே ஏழையாவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1477. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنِ اكْتُبْ، إِلَىَّ بِشَىْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم. فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ "".
பாடம் : 53
“மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள்” (2:273) எனும் இறைவசனம்.
தன்னிறைவின் அளவு என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் தம் (அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர் களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்துகொள்வீர். (2:273)
1477. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
அப்போது முஃகீரா (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல் களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப் பட்டது; அவர் சொன்னார் (என ஆதார மின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக் குவது, அதிகமாக (பிறரிடம்) யாசிப்பது ஆகியவையே அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் எனப் பதில் எழுதினார்கள்.18

1478. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا وَأَنَا جَالِسٌ فِيهِمْ قَالَ فَتَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهُمْ رَجُلاً لَمْ يُعْطِهِ، وَهُوَ أَعْجَبُهُمْ إِلَىَّ، فَقُمْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَارَرْتُهُ فَقُلْتُ مَا لَكَ عَنْ فُلاَنٍ وَاللَّهِ إِنِّي لأُرَاهُ مُؤْمِنًا. قَالَ "" أَوْ مُسْلِمًا "" قَالَ فَسَكَتُّ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ فِيهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ. مَا لَكَ عَنْ فُلاَنٍ وَاللَّهِ إِنِّي لأُرَاهُ مُؤْمِنًا. قَالَ "" أَوْ مُسْلِمًا "". قَالَ فَسَكَتُّ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ فِيهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ وَاللَّهِ إِنِّي لأُرَاهُ مُؤْمِنًا. قَالَ "" أَوْ مُسْلِمًا ـ يَعْنِي فَقَالَ ـ إِنِّي لأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَىَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يُكَبَّ فِي النَّارِ عَلَى وَجْهِهِ "". وَعَنْ أَبِيهِ عَنْ صَالِحٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ هَذَا فَقَالَ فِي حَدِيثِهِ فَضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَجَمَعَ بَيْنَ عُنُقِي وَكَتِفِي ثُمَّ قَالَ "" أَقْبِلْ أَىْ سَعْدُ إِنِّي لأُعْطِي الرَّجُلَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {فَكُبْكِبُوا} قُلِبُوا {مُكِبًّا} أَكَبَّ الرَّجُلُ إِذَا كَانَ فِعْلُهُ غَيْرَ وَاقِعٍ عَلَى أَحَدٍ، فَإِذَا وَقَعَ الْفِعْلُ قُلْتَ كَبَّهُ اللَّهُ لِوَجْهِهِ، وَكَبَبْتُهُ أَنَا.
பாடம் : 53
“மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள்” (2:273) எனும் இறைவசனம்.
தன்னிறைவின் அளவு என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் தம் (அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர் களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்துகொள்வீர். (2:273)
1478. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நான் அமர்ந்திருந்தபோது, (தர்மப் பொருட்களை) அவர்கள் ஒரு குழுவின ருக்குக் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட் டார்கள். அவர் எனக்கு மிகவும் பிடித்த வராவார். அப்போது நான் எழுந்து சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (ஏன் அவரை விட்டு விட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் இறை நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருது கிறேன்” என்று இரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர் என்று சொல்வீராக)” என்றார்கள். சிறிது நேரம் மௌனமாக இருந்தேன்.
தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி?) அல்லாஹ்வின் மீதாணை யாக! நிச்சயமாக நான் அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்” என்றேன். “அவரை முஸ்லிம் (என்று சொல்வீராக!)” என்று நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள்.
சிறிது நேரம் நான் மௌனமாக இருந்தேன். அவரைப் பற்றி நான் அறிந் திருந்த விஷயம் என்னை மிகைத்து விடவே, அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன (அதி ருப்தி?) அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன் என்றேன். “அவரை முஸ்லிம் (என்று சொல்வீராக”) என்றார்கள்.
பிறகு “(சஅதே!) நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்கு) காரணம், (ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையால் அவர் குற்றம் இழைத்து அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புறத் தள்ளப்படுவரோ என்ற அச்சம்தான்” என்றார்கள்.19
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
(மூன்று முறை கேட்டு பதிலுரைத்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களது தோளுக்கும் கழுத்திற்கும் மத்தியில் அடித்து, “சஅதே, இங்கே வா!” என அழைத்து “நிச்சயமாக நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன் எனில்...” என்று மேற்கண்ட ஹதீஸைக் கூறி னார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(‘முகம் குப்புறத் தள்ளப்படல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் ‘யுகப்பு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குர்ஆனில் 26:94 ஆவது வசனத்தில்) “அவர்கள் அதில் தள்ளப்படுவார்கள்” என்பதைக் குறிக்க ‘குப்கிபூ’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது.
(67:22ஆவது வசனத்தில்) ‘முகம் குப்புற விழுந்து கிடப்பவன்’ என்பதைக் குறிக்க ‘முகிப்பு’ எனும் சொல் ஆளப்படு கிறது. ஒருவர் தாமாக -யாரும் தள்ளி விடாமல்- குப்புற விழுந்தால் (அதாவது தன் வினையாக இருந்தால்), ‘அகப்ப’ என்பர். பிறர் தள்ளிவிட்டால் (பிறவினை யாக இருந்தால்), ‘கப்ப’ என்பர். அவனை அல்லாஹ் முகங்குப்புற தள்ளினான் (கப்பஹுல்லாஹ்); நான் முகம் குப்புற தள்ளினேன் (கபப்(த்)துஹு) என்பதைப் போல.

1479. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ الْمِسْكِينُ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، وَلَكِنِ الْمِسْكِينُ الَّذِي لاَ يَجِدُ غِنًى يُغْنِيهِ، وَلاَ يُفْطَنُ بِهِ فَيُتَصَدَّقُ عَلَيْهِ، وَلاَ يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ "".
பாடம் : 53
“மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள்” (2:273) எனும் இறைவசனம்.
தன்னிறைவின் அளவு என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் தம் (அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர் களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்துகொள்வீர். (2:273)
1479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்கமாட்டான்; அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்கமாட்டான்; அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1480. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ، ثُمَّ يَغْدُوَ ـ أَحْسِبُهُ قَالَ ـ إِلَى الْجَبَلِ فَيَحْتَطِبَ، فَيَبِيعَ فَيَأْكُلَ وَيَتَصَدَّقَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ صَالِحُ بْنُ كَيْسَانَ أَكْبَرُ مِنَ الزُّهْرِيِّ، وَهُوَ قَدْ أَدْرَكَ ابْنَ عُمَرَ.
பாடம் : 53
“மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்கமாட்டார்கள்” (2:273) எனும் இறைவசனம்.
தன்னிறைவின் அளவு என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் தம் (அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கமாட்டார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள் சாரும்). அவர்களைப் பற்றி) அறியாதவர், அவர் களின் தன்னடக்கத்தால் அவர்களைச் செல்வர்கள் என்றே எண்ணுவார். அவர்களின் (எளிமையான) தோற்றத்தை வைத்து அவர்களை நீர் அறிந்துகொள்வீர். (2:273)
1480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலையில் கயிற்றை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்று (மலையேறி), விறகு வெட்டி விற்று, தாமும் உண்டு பிறருக்கும் தர்மம் செய்வதானது, மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இதற்கு முந்தைய 1948 ஆவது ஹதீஸின் அறிவிப்பாளர்களில் நான்காமவரான) ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள், (மூன்றாமவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களை விட வயதில் மூத்தவர் ஆவார். அவர் (ஸாலிஹ்) இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்துள்ளார்.

1481. حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم غَزْوَةَ تَبُوكَ فَلَمَّا جَاءَ وَادِيَ الْقُرَى إِذَا امْرَأَةٌ فِي حَدِيقَةٍ لَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ " اخْرُصُوا ". وَخَرَصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةَ أَوْسُقٍ فَقَالَ لَهَا " أَحْصِي مَا يَخْرُجُ مِنْهَا ". فَلَمَّا أَتَيْنَا تَبُوكَ قَالَ " أَمَا إِنَّهَا سَتَهُبُّ اللَّيْلَةَ رِيحٌ شَدِيدَةٌ فَلاَ يَقُومَنَّ أَحَدٌ، وَمَنْ كَانَ مَعَهُ بَعِيرٌ فَلْيَعْقِلْهُ ". فَعَقَلْنَاهَا وَهَبَّتْ رِيحٌ شَدِيدَةٌ فَقَامَ رَجُلٌ فَأَلْقَتْهُ بِجَبَلِ طَيِّئٍ ـ وَأَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم بَغْلَةً بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ ـ فَلَمَّا أَتَى وَادِيَ الْقُرَى قَالَ لِلْمَرْأَةِ " كَمْ جَاءَ حَدِيقَتُكِ ". قَالَتْ عَشَرَةَ أَوْسُقٍ خَرْصَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي مُتَعَجِّلٌ إِلَى الْمَدِينَةِ، فَمَنْ أَرَادَ مِنْكُمْ أَنْ يَتَعَجَّلَ مَعِي فَلْيَتَعَجَّلْ ". فَلَمَّا ـ قَالَ ابْنُ بَكَّارٍ كَلِمَةً مَعْنَاهَا ـ أَشْرَفَ عَلَى الْمَدِينَةِ قَالَ " هَذِهِ طَابَةُ ". فَلَمَّا رَأَى أُحُدًا قَالَ " هَذَا جُبَيْلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ ". قَالُوا بَلَى. قَالَ " دُورُ بَنِي النَّجَّارِ، ثُمَّ دُورُ بَنِي عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ دُورُ بَنِي سَاعِدَةَ، أَوْ دُورُ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ ـ يَعْنِي ـ خَيْرًا ". وَقَالَ سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ حَدَّثَنِي عَمْرٌو، " ثُمَّ دَارُ بَنِي الْحَارِثِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ ". وَقَالَ سُلَيْمَانُ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كُلُّ بُسْتَانٍ عَلَيْهِ حَائِطٌ فَهْوَ حَدِيقَةٌ، وَمَا لَمْ يَكُنْ عَلَيْهِ حَائِطٌ لَمْ يَقُلْ حَدِيقَةٌ.
பாடம் : 54
(மரத்திலிருக்கும்) பேரீச்சம் பழத்தை மதிப்பிடுவது
1481. 1482 அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் சென்றோம். அப்பயணத் தில் நபியவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை அடைந்தபோது, ஒரு பெண் தன் தோட்டத்தில் இருந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “(இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும், கணித்துக் கூறுங்கள்” என்றார்கள். (தோழர்கள் மதிப்பிட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்து ‘வஸ்க்’ அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் “இதில் கிடைப்பதைக் கணக்கிட்டுவை” எனக் கூறினார்கள்.
நாங்கள் தபூக்கை அடைந்தபோது “இன்றிரவு கடும் காற்று வீசும்; எனவே, யாரும் எழுந்திருக்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர் அதை நன்கு கட்டிவைக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டோம். கடும் காற்று வீசத் தொடங்கிற்று. (நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக) ஒரு மனிதர் எழுந்து வந்தார். உடனே காற்று அவரை ‘தய்யி’ என்ற மலையில் கொண்டுபோய் போட்டது.
(வழியில்,) ‘அய்லா’ என்ற ஊரின் மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்பாகக் கொடுத்த(னுப்பின)ôர். நபியவர்கள் அவருக்கு சால்வையொன் றைக் கொடுத்த(னுப்பின)ôர்கள். மேலும், (காப்புவரி கட்டுவதாக அரசர் எழுதி யிருந்த கடிதத்திற்கு) அக்கடற்கரைவாசி களைக் கொண்டே (பதில்) எழுதினார்கள்.
(போரிலிருந்து) திரும்பி, ‘வாதில் குராவை’ அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம், “உனது தோட்டத்தில் எவ்வளவு தேறியது?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணித்த பத்து ‘வஸ்க்’தான் எனக் கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள், “நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்” என்றார்கள்.
மதீனா நெருங்கியபோது, “இது ‘தாபா’ (தூய நகரம்)” என்றார்கள். பின்பு உஹுத் மலையைப் பார்த்தபோது, “இது (அழகிய) குட்டி மலை; இது நம்மை நேசிக்கிறது; நாம் அதை நேசிக்கிறோம்” என்று கூறிவிட்டு, “அன்சாரிகளின் சிறந்த கிளைக் குடும்பங்களை நான் அறிவிக்கட்டுமா?” எனக் கேட்க, தோழர்களும் ‘ஆம்’ என்றனர். நபி (ஸல்) அவர்கள், “பனுந் நஜ்ஜார் குடும்பம்; பின்பு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனூ சாஇதா அல்லது பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பம்; இன்னும் அன்சாரிகளின் ஒவ்வொரு கிளைக் குடும்பங்களிலும் நன்மை உண்டு” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், பனுல் ஹாரிஸ் குடும்பத்தார், அடுத்து பனு சாஇதா குடும்பத்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
இதே ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள் ளது. அதில், “உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; அதை நாம் நேசிக்கிறோம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் ‘தோட்டம்’ என்பதைக் குறிக்க ‘ஹதீகா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) சுற்றுச் சுவர் உள்ள தோட்டத்திற்கே ‘ஹதீகா’ என்பர். சுற்றுச் சுவர் இல்லாத தோட்டத் திற்கு ‘ஹதீகா’ எனப்படுவதில்லை.

1483. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا تَفْسِيرُ الأَوَّلِ لأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الأَوَّلِ ـ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ ـ وَفِيمَا سَقَتِ السَّمَاءُ الْعُشْرُ وَبَيَّنَ فِي هَذَا وَوَقَّتَ، وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ، وَالْمُفَسَّرُ يَقْضِي عَلَى الْمُبْهَمِ إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ، كَمَا رَوَى الْفَضْلُ بْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يُصَلِّ فِي الْكَعْبَةِ. وَقَالَ بِلاَلٌ قَدْ صَلَّى. فَأُخِذَ بِقَوْلِ بِلاَلٍ وَتُرِكَ قَوْلُ الْفَضْلِ.
பாடம் : 55
மழைநீர், வாய்க்கால் நீர் பாய்ச் சப்படும் நிலங்களின் விளைச்ச லுக்கு, பத்தில் ஒரு பாகம் (10%) ஸகாத் உண்டு.
தேனுக்கு (ஸகாத்) எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்பது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருத்து.
1483. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழையாலும் ஊற்றுகளாலும் விளைந்தவை, அல்லது நிலத்தடி நீரை உறிஞ்சி முளைத்தவை ஆகியவற்றில் பத்து சதவீதம் ஸகாத் உண்டு. ஒட்டகம் (போன்ற வற்றின்) இறவை மூலம் விளைவிக்கப்பட்டவற்றில் ஐந்து சதவீதம் ஸகாத் உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸ், விளைபொருட்களில் வழங்கப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு, எந்த அளவுள்ள விளைபொருட்களுக்கு ஸகாத் வழங்கப்பட வேண்டும் என்பதை விவரிக்கவில்லை. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமை யாகும் என்பதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் அடுத்த ஹதீஸ் விவரிக்கின்றது.
(அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக் கும்) கூடுதல் தகவல் ஏற்கப்படும். நம்பக மானவர்கள் அறிவிக்கும் விளக்கம் பூடக மான அறிவிப்புக்கு ஒரு தீர்வாக அமையும்.
எடுத்துக்காட்டாக, “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை” என்று ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால், (சம்பவ இடத்தில் இருந்த) பிலால் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்கள்” என்று அறிவிக்கிறார்கள். எனவே, பிலால் (ரலி) அவர்களின் சொல்லே எடுத்துக்கொள்ளப்படும். ஃபள்ல் (ரலி) அவர்களின் சொல் கைவிடப்படும்.

1484. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ فِيمَا أَقَلُّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسَةٍ مِنَ الإِبِلِ الذَّوْدِ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا تَفْسِيرُ الأَوَّلِ إِذَا قَالَ "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ "". وَيُؤْخَذُ أَبَدًا فِي الْعِلْمِ بِمَا زَادَ أَهْلُ الثَّبَتِ أَوْ بَيَّنُوا.
பாடம் : 56
(விளைபொருட்களில்) ஐந்து ‘வஸ்க்’ அளவிற்கும் குறைவான பொருட்களில் ஸகாத் இல்லை.
1484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விளைபொருட்களில்) ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களைவிடக் குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ‘ஊக்கியா’க்களைவிடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது.20
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: ஐந்து ‘வஸ்க்’குகளைவிடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை எனும் இந்த ஹதீஸ், முந்தைய ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது. முந்தைய ஹதீஸில் இந்த விளக்கம் இல்லை. பொதுவாக, நம்பக மானவர்கள் கூறும் கூடுதல் தகவல், அல்லது விளக்கம் நபிமொழிக் கலையில் ஏற்கப்படும்.

1485. حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الأَسَدِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ، فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ ـ رضى الله عنهما ـ يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ، فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً، فَجَعَلَهَا فِي فِيهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ "" أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ "".
பாடம் : 57
பேரீச்ச மரத்தில் கனிகளைப் பறிக்கும்போதே அதன் ஸகாத் தைப் பெறுவதும், ஸகாத்தின் பேரீச்சம் பழத்தைத் தொடும் சிறுவரை (தடுக்காமல்) விட்டு விடலாமா? என்பதும்
1485. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரத்திலிருந்து கனிகளைப் பறிக்கும்போதே, அதன் (ஸகாத்) பழங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்படும். ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டுவருவார்கள். இறுதியில் அவை பேரீச்சம் பழங்களின் குவியலாக நபியவர்களிடம் மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் அக்குவியலுக்கருகே விளையாடுவார்கள்.
(ஒரு நாள்) அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தமது வாயில் போட்டார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அதை அவரது வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, “முஹம்மதின் குடும்பத்தார் தர்மப் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

1486. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا. وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1486. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதைத் தடுத்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘பலன் உறுதிப்படுவது’ என்றால் என்ன என்று கேட்கப்பட்டால், (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும் என்று பதிலளிப்பார்கள்.

1487. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ. نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1487. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

1488. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ، قَالَ حَتَّى تَحْمَارَّ.
பாடம் : 58
பத்து சதவீதமோ வேறு அளவோ ஸகாத் கடமையாகி யுள்ள பேரீச்சங் கனிகளையோ மரங்களையோ நிலத்தையோ பயிரையோ ஒருவர் விற்று விட்டு அவை அல்லாத வேறு பொருட்களை ஸகாத்தாக வழங்குவதும், ஸகாத் கடமை யாகாத கனிகளை விற்பதும்
“பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை கனிகளை விற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.
எனினும், பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் விற்பதை யாருக்கும் அவர்கள் தடை செய்யவில்லை. இதில் ஸகாத் கடமை யானவர், ஸகாத் கடமையாகாதவர் என்று அவர்கள் வித்தியாசப்படுத்தவில்லை.
1488. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மரத்திலுள்ள) பழங்கள் பக்குவம் அடையாத வரை -அதாவது சிவக்காத வரை- அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

1489. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ تَصَدَّقَ بِفَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ، فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَأْمَرَهُ فَقَالَ "" لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ "" فَبِذَلِكَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ لاَ يَتْرُكُ أَنْ يَبْتَاعَ شَيْئًا تَصَدَّقَ بِهِ إِلاَّ جَعَلَهُ صَدَقَةً.
பாடம் : 59
தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே விலைக்கு வாங்கலாமா?
ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறாகாது. ஏனெனில், தர்மம் கொடுத்த வரே அப்பொருளை விலைக்கு வாங்கு வதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்; மற்றவர்களைத் தடுக்கவில்லை.
1489. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒரு குதிரை யைத் தர்மம் செய்தார்கள். பின்பு அது விற்கப்படுவதைக் கண்டு, அதைத் தாமே விலைக்கு வாங்கிட நினைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டார்கள். அப்போது “நீர் தர்மம் செய்ததைத் திரும்பப் பெற வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதனால்தான், இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் தர்மம் செய்த பொருளை விலைக்கு வாங்கிவிட்டிருந்தால் அதை மீண்டும் தர்மம் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1490. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تَشْتَرِ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ "".
பாடம் : 59
தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே விலைக்கு வாங்கலாமா?
ஒருவருக்குப் பிறர் கொடுத்த தர்மப் பொருளை மற்றவர் விலைக்கு வாங்குவது தவறாகாது. ஏனெனில், தர்மம் கொடுத்த வரே அப்பொருளை விலைக்கு வாங்கு வதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்; மற்றவர்களைத் தடுக்கவில்லை.
1490. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்வதற்காக நான் ஒருவருக்குக் குதிரை யொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக் காமல்) வீணாக்கிவிட்டார். எனவே, நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். அதை அவர் மலிவான விலைக்கே விற்று விடுவார் என்றும் நான் எண்ணினேன். எனவே, (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர்! உமது தர்மத்தை நீர் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்! அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரியே. ஏனெனில், தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியைத் தானே உண்பவனைப் போன்றவன் ஆவான்” என்றார்கள்.