1375. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهم ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ وَجَبَتِ الشَّمْسُ، فَسَمِعَ صَوْتًا فَقَالَ "" يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا "". وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَوْنٌ، سَمِعْتُ أَبِي، سَمِعْتُ الْبَرَاءَ، عَنْ أَبِي أَيُّوبَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1375. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்துவிட்டிருந்தபோது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, “யூதர் கள் அவர்களின் கப்றுகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்” எனக் கூறி னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23

1376. حَدَّثَنَا مُعَلًّى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَتْنِي ابْنَةُ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ.
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1376. மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையைவிட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய புதல்வியார் (உம்மு காலித்) கூறுகிறார்.

1377. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ "".
பாடம் : 87
அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரல்
1377. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! நான் அடக்கத் தலத்தின் வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகிய வற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனப் பிரார்த்திப்பவர் களாக இருந்தார்கள்.

1378. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ "" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ مِنْ كَبِيرٍ ـ ثُمَّ قَالَ ـ بَلَى أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ، وَأَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ "". قَالَ ثُمَّ أَخَذَ عُودًا رَطْبًا فَكَسَرَهُ بِاثْنَتَيْنِ ثُمَّ غَرَزَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى قَبْرٍ، ثُمَّ قَالَ "" لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "".
பாடம் : 88
புறம் பேசுவதாலும் சிறுநீரின் காரணத்தாலும் ஏற்படும் மண்ணறை வேதனை
1378. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு மண்ணறைகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்படு கிறார்கள்; ஆனால், ஒரு பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. ஒருவர் கோள்சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்ளாத வர்” என்று கூறினார்கள்.
பிறகு ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரு மண்ணறை களிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள்.30

1379. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 89
இறந்தவருக்கு அவர் தங்கு மிடம் (சொர்க்கம் அல்லது நரகம்) காலையிலும் மாலை யிலும் எடுத்துக்காட்டப்படு வது
1379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). மேலும், “இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் அல்லாஹ் உன்னை மறுமை நாளில் எழுப்பி இங்குதான் அனுப்புவான்” என்றும் கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1380. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ قَدِّمُونِي قَدِّمُونِي. وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا. يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَىْءٍ إِلاَّ الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الإِنْسَانُ لَصَعِقَ "".
பாடம் : 90
(சவப்) பெட்டியில் உள்ள பிரேதம் கூறுவது
1380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தம் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால், “என்னை விரைந்து கொண்டுசெல்லுங் கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருந்தால், “நாசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும்.
இவ்வாறு கூறும் அதன் சப்தத்தை, மனிதனைத் தவிர அனைத்துப் பொருட் களும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மூர்ச்சையாகிவிடுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1381. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا مِنَ النَّاسِ مُسْلِمٌ يَمُوتُ لَهُ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلاَّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ "".
பாடம் : 91
முஸ்லிம்களின் குழந்தைகள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவருக்கு பருவமெய்தாத மூன்று குழந்தைகள் இறந்துபோனால், அவை அவருக்கு நரகத்தைவிட்டுப் பாதுகாக்கும் திரையாகும்; அல்லது அவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் முஸ்லிமான ஒருவருக் குப் பருவமடையாத மூன்று குழந்தை கள் இறந்துவிட்டால், அக்குழந்தை களின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணையின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.31
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1382. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ "".
பாடம் : 91
முஸ்லிம்களின் குழந்தைகள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவருக்கு பருவமெய்தாத மூன்று குழந்தைகள் இறந்துபோனால், அவை அவருக்கு நரகத்தைவிட்டுப் பாதுகாக்கும் திரையாகும்; அல்லது அவர் சொர்க்கத்தில் நுழையக் காரணமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1382. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தபோது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் கூறினார்கள்.

1383. حَدَّثَنَا حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهم ـ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَوْلاَدِ الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்களின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர்கள், “அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்” எனக் கூறினார்கள்.

1384. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ فَقَالَ "" اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1384. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்களின் குழந்தை கள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார் கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்” எனக் கூறினார்கள்.

1385. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ، هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ "".
பாடம் : 92
இணைவைப்போரின் குழந்தை கள் தொடர்பாகக் கூறப்பட்டுள் ளவை
1385. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அவ்வாறே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக் கின்றன. விலங்குகள் அங்கக் குறைவு டன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக் கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர் களாகவோ அக்னி ஆராதனையாளர் களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1386. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ "" مَنْ رَأَى مِنْكُمُ اللَّيْلَةَ رُؤْيَا "". قَالَ فَإِنْ رَأَى أَحَدٌ قَصَّهَا، فَيَقُولُ مَا شَاءَ اللَّهُ، فَسَأَلَنَا يَوْمًا، فَقَالَ "" هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ رُؤْيَا "". قُلْنَا لاَ. قَالَ "" لَكِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخَذَا بِيَدِي، فَأَخْرَجَانِي إِلَى الأَرْضِ الْمُقَدَّسَةِ، فَإِذَا رَجُلٌ جَالِسٌ، وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ كَلُّوبٌ مِنْ حَدِيدٍ ـ قَالَ بَعْضُ أَصْحَابِنَا عَنْ مُوسَى إِنَّهُ ـ يُدْخِلُ ذَلِكَ الْكَلُّوبَ فِي شِدْقِهِ، حَتَّى يَبْلُغَ قَفَاهُ، ثُمَّ يَفْعَلُ بِشِدْقِهِ الآخَرِ مِثْلَ ذَلِكَ، وَيَلْتَئِمُ شِدْقُهُ هَذَا، فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ. قُلْتُ مَا هَذَا قَالاَ انْطَلِقْ. فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ عَلَى قَفَاهُ، وَرَجُلٌ قَائِمٌ عَلَى رَأْسِهِ بِفِهْرٍ أَوْ صَخْرَةٍ، فَيَشْدَخُ بِهِ رَأْسَهُ، فَإِذَا ضَرَبَهُ تَدَهْدَهَ الْحَجَرُ، فَانْطَلَقَ إِلَيْهِ لِيَأْخُذَهُ، فَلاَ يَرْجِعُ إِلَى هَذَا حَتَّى يَلْتَئِمَ رَأْسُهُ، وَعَادَ رَأْسُهُ كَمَا هُوَ، فَعَادَ إِلَيْهِ فَضَرَبَهُ، قُلْتُ مَنْ هَذَا قَالاَ انْطَلِقْ. فَانْطَلَقْنَا إِلَى ثَقْبٍ مِثْلِ التَّنُّورِ، أَعْلاَهُ ضَيِّقٌ وَأَسْفَلُهُ وَاسِعٌ، يَتَوَقَّدُ تَحْتَهُ نَارًا، فَإِذَا اقْتَرَبَ ارْتَفَعُوا حَتَّى كَادَ أَنْ يَخْرُجُوا، فَإِذَا خَمَدَتْ رَجَعُوا فِيهَا، وَفِيهَا رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ. فَقُلْتُ مَنْ هَذَا قَالاَ انْطَلِقْ. فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ، فِيهِ رَجُلٌ قَائِمٌ عَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ، فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ، فَإِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ، فَرَدَّهُ حَيْثُ كَانَ، فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ، فَيَرْجِعُ كَمَا كَانَ. فَقُلْتُ مَا هَذَا قَالاَ انْطَلِقْ. فَانْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى رَوْضَةٍ خَضْرَاءَ، فِيهَا شَجَرَةٌ عَظِيمَةٌ، وَفِي أَصْلِهَا شَيْخٌ وَصِبْيَانٌ، وَإِذَا رَجُلٌ قَرِيبٌ مِنَ الشَّجَرَةِ بَيْنَ يَدَيْهِ نَارٌ يُوقِدُهَا، فَصَعِدَا بِي فِي الشَّجَرَةِ، وَأَدْخَلاَنِي دَارًا لَمْ أَرَ قَطُّ أَحْسَنَ مِنْهَا، فِيهَا رِجَالٌ شُيُوخٌ وَشَبَابٌ، وَنِسَاءٌ وَصِبْيَانٌ، ثُمَّ أَخْرَجَانِي مِنْهَا فَصَعِدَا بِي الشَّجَرَةَ فَأَدْخَلاَنِي دَارًا هِيَ أَحْسَنُ وَأَفْضَلُ، فِيهَا شُيُوخٌ وَشَبَابٌ. قُلْتُ طَوَّفْتُمَانِي اللَّيْلَةَ، فَأَخْبِرَانِي عَمَّا رَأَيْتُ. قَالاَ نَعَمْ، أَمَّا الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ فَكَذَّابٌ يُحَدِّثُ بِالْكَذْبَةِ، فَتُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الآفَاقَ، فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. وَالَّذِي رَأَيْتَهُ يُشْدَخُ رَأْسُهُ فَرَجُلٌ عَلَّمَهُ اللَّهُ الْقُرْآنَ، فَنَامَ عَنْهُ بِاللَّيْلِ، وَلَمْ يَعْمَلْ فِيهِ بِالنَّهَارِ، يُفْعَلُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ. وَالَّذِي رَأَيْتَهُ فِي الثَّقْبِ فَهُمُ الزُّنَاةُ. وَالَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُو الرِّبَا. وَالشَّيْخُ فِي أَصْلِ الشَّجَرَةِ إِبْرَاهِيمُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَالصِّبْيَانُ حَوْلَهُ فَأَوْلاَدُ النَّاسِ، وَالَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ. وَالدَّارُ الأُولَى الَّتِي دَخَلْتَ دَارُ عَامَّةِ الْمُؤْمِنِينَ، وَأَمَّا هَذِهِ الدَّارُ فَدَارُ الشُّهَدَاءِ، وَأَنَا جِبْرِيلُ، وَهَذَا مِيكَائِيلُ، فَارْفَعْ رَأْسَكَ، فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا فَوْقِي مِثْلُ السَّحَابِ. قَالاَ ذَاكَ مَنْزِلُكَ. قُلْتُ دَعَانِي أَدْخُلْ مَنْزِلِي. قَالاَ إِنَّهُ بَقِيَ لَكَ عُمْرٌ لَمْ تَسْتَكْمِلْهُ، فَلَوِ اسْتَكْمَلْتَ أَتَيْتَ مَنْزِلَكَ "".
பாடம் : 93
1386. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (வைகறை தொழுகை) தொழுது முடித்ததும் எங்களை முன்னோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?” என்று கேட்பார் கள். யாரேனும் கனவுகண்டிருந்தால், அதை விவரிப்பார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் கூறு வார்கள்.
இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘இல்லை’ என்றோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் (வானவர்) இருவர் என்னிடம் வந்து என் கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கே ஒருவர் உட்கார்ந் திருந்தார். நின்றுகொண்டிருந்த இன் னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த் தாடையின் ஒருபுறம் குத்த அது அவரு டைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி சீராகிவிட்டது. பின்பு அவர் மறுபடியும் அவ்வாறே (தொடர்ந்து) செய்கிறார்.
உடனே நான் “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர். அவ்வாறே நடந்து ஒரு மனிதரிடம் வந்தோம். அவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டில் பெரிய கற்பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைக்கிறார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை சீராகி பழைய நிலைக்கு மாறிவிடுகிறது. மீண்டும் வந்து உடைத்தார். அப்போது “இவர் யார்?” என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர்.
அவ்வாறே நடந்து, அடுப்பு போன்ற ஒரு பொந்தை அடைந்தோம். அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார் கள். நான் “இவர்கள் யார்?” எனக் கேட் டேன். அதற்கும் அவர்கள் ‘நடங்கள்’ என்றார்கள்.
அவ்வாறே நடந்து, ஓர் இரத்த ஆற்றுக்கு வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுகொண்டி ருந்தார். ஆற்றின் கரையில் மற்றொருவர் நின்றார். அவருக்கு முன்னால் கற்கள் (குவிக்கப்பட்டுள்ளன). ஆற்றுக்குள் இருக் கும் மனிதர் முன்னேறி ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது, கரையில் நிற்பவர், அவரது வாயில் கல்லை எறிந்து, பழைய இடத்துக்கே அவரைத் தள்ளிவிடுகிறார். இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே செல்கிறார்.
அப்போது நான் “என்ன இது?” எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர்.
அவ்வாறே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு முதியவரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவர் தமக்கு முன்னால் தீ மூட்டிக்கொண்டிருந்தார். பிறகு அவ்விரு(வான)வரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டுபோய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் ஆண்கள், வயோதிகர்கள், இளைஞர் கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் இருந்தனர்.
பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதாக வும் சிறப்பானதாகவும் இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர்.
பிறகு நான் இருவரிடமும், “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்” எனக் கேட்டேன்.
அதற்கு இருவரும், “ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீர் களே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவர் வழியாக உலகின் நாலா பாகங்களையும் அடையும். நீங்கள் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.
அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீர்களே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே, அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும்.
அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீர்களே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீர்களே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள்.
மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த முதியவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். அவரைச் சுற்றியிருந்த சிறுவர் கள், மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தவர் நரகத்தின் காவலாளியான (வானவர்) மாலிக் (அலை). நீங்கள் நுழைந்த முதல் மாளிகை பொதுவான இறைநம்பிக்கை யாளர்களின் வீடாகும். இதோ இந்த மாளிகை உயிர்த்தியாகிகளின் இல்ல மாகும். நான் (வானவர்) ஜிப்ரீல். இவர் (வானவர்) மீக்காயீல்” என்று கூறிவிட்டு, “இப்போது உங்கள் தலையை உயர்த் துங்கள்” என்றனர்.
நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம்போல் இருந்தது. அவர்கள் இருவரும் “இதுவே (மறுமை யில்) உங்கள் இருப்பிடம்” என்றதும் நான், “எனது இருப்பிடத்தில் நுழைய என்னை விடுங்களேன்” என்றேன். அதற்கு இருவரும் “உங்கள் வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதை நீங்கள் பூர்த்தி செய்ததும் உமது இருப்பிடம் வருவீர்கள்” என்றனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1387. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ. وَقَالَ لَهَا فِي أَىِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ يَوْمَ الاِثْنَيْنِ. قَالَ فَأَىُّ يَوْمٍ هَذَا قَالَتْ يَوْمُ الاِثْنَيْنِ. قَالَ أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ. فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ كَانَ يُمَرَّضُ فِيهِ، بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ فَقَالَ اغْسِلُوا ثَوْبِي هَذَا، وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ فَكَفِّنُونِي فِيهَا. قُلْتُ إِنَّ هَذَا خَلَقٌ. قَالَ إِنَّ الْحَىَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ الْمَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ. فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ.
பாடம் : 94
திங்கட்கிழமை மரணம் அடைவது
1387. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்(கள் நோயுற்றிருந்தபோது அவர்)களிடம் நான் சென்றேன். அப்போது “நபி (ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் ‘கஃபன்’ செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் மேலங்கியோ தலைப் பாகையோ இல்லை” என்றேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமை யில் இறந்தார்கள்?”எனக் கேட்டார்கள். நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். “இன்று என்ன கிழமை?” என்று கேட்ட தும், நான் ‘திங்கட்கிழமை’ என்றேன்.
அதற்கு அவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்” என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந் திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந் தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் ‘கஃபன்’ இடுங்கள்” எனக் கூறினார்கள்.
நான், “இது பழையதாயிற்றே!” என்றேன். அதற்கு அவர்கள் “இறந்த வரைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர்; இ(ந்தக் கஃபனான)து, (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழ் சலத்துக்கு உரியதுதான்” என்றார்கள். பிறகு அன்று மாலைவரை அவர்கள் இறக்கவில்லை. செவ்வாய் இரவில்தான் இறந்தார்கள்; (அன்று) காலை விடிவ தற்குமுன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

1388. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ. أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ "" نَعَمْ "".
பாடம் : 95
திடீர் மரணம் அடைதல்
1388. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் திடீரென இறந்துவிட்டார். அவர் அப்போது பேசியிருந்தால் தர்மம் (செய்யுமாறு வஸிய்யத்) செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவரைச் சேருமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.32

1389. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ هِشَامٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَتَعَذَّرُ فِي مَرَضِهِ "" أَيْنَ أَنَا الْيَوْمَ أَيْنَ أَنَا غَدًا "" اسْتِبْطَاءً لِيَوْمِ عَائِشَةَ، فَلَمَّا كَانَ يَوْمِي قَبَضَهُ اللَّهُ بَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَدُفِنَ فِي بَيْتِي.
பாடம் : 96
நபி (ஸல்), ஆபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் அடக்கத் தலங்கள் தொடர்பாக வந் துள்ளவை
“பின்னர் அவனை மரணிக்கச்செய்து மண்ணறைக்குள் (கப்றுக்கு) இறைவன் அனுப்புகின்றான்” (80:21) என்று குர்ஆன் கூறுகின்றது. மண்ணறையில் பிரேதத்தை வைப்பதற்கும் புதைப்பதற்கும் அக்பர, கபர என்பர்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இந்தப் பூமியை, உயிருள்ளவர்களுக்கு (வாழ) ஏற்றதாகவும் இறந்தவர்களுக்கு (புதைக்க) ஏற்றதாகவும் (கிஃபாத்) நாம் ஆக்கவில்லையா? (77:25,26)
1389. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, “இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று (ஆவலோடு) கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களது உயிரை, எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் சாய்ந்திருந்த நிலையில்) அல்லாஹ் கைப்பற்றினான். எனது வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
1389. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, “என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, “இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று (ஆவலோடு) கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களது உயிரை, எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் சாய்ந்திருந்த நிலையில்) அல்லாஹ் கைப்பற்றினான். எனது வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
1390. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِلاَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ "" لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ "". لَوْلاَ ذَلِكَ أُبْرِزَ قَبْرُهُ، غَيْرَ أَنَّهُ خَشِيَ أَوْ خُشِيَ أَنَّ يُتَّخَذَ مَسْجِدًا. وَعَنْ هِلاَلٍ قَالَ كَنَّانِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ وَلَمْ يُولَدْ لِي.
பாடம் : 96
நபி (ஸல்), ஆபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் அடக்கத் தலங்கள் தொடர்பாக வந் துள்ளவை
“பின்னர் அவனை மரணிக்கச்செய்து மண்ணறைக்குள் (கப்றுக்கு) இறைவன் அனுப்புகின்றான்” (80:21) என்று குர்ஆன் கூறுகின்றது. மண்ணறையில் பிரேதத்தை வைப்பதற்கும் புதைப்பதற்கும் அக்பர, கபர என்பர்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இந்தப் பூமியை, உயிருள்ளவர்களுக்கு (வாழ) ஏற்றதாகவும் இறந்தவர்களுக்கு (புதைக்க) ஏற்றதாகவும் (கிஃபாத்) நாம் ஆக்கவில்லையா? (77:25,26)
1390. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இறுதி நாட்களில்) நோயுற்றி ருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர் களையும் அல்லாஹ் தனது கருணை யிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிவிட்டார்கள்” எனக் கூறினார்கள்.
இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந் தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலம் திறந்தவெளியில் அமைக்கப்பட்டி ருக்கும். எனினும், நபி (ஸல்) அவர்கள் தமது அடக்கத் தலம் வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடும் என ‘அஞ்சினார்கள்’ அல்லது ‘அஞ்சப்பட்டது’.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிலால் அல்வஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தபோது) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னைக் குறிப்புப் பெயரிட்டு (இன்னவரின் தந்தையே! என) அழைத்தார்கள். ஆனால் (அப்போது) எனக்குக் குழந்தை பிறந்திருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலம் (கப்று) சற்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் பின் தீனார் அத்தம்மார் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வலீத் பின் அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது (நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அறையின்) ஒரு சுவர் இடிந்து விழுந் தது. அதை எழுப்பும் பணியில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப்போய் அது நபி (ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்த சமயத்தில் நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நபி (ஸல்) அவர் களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர் (ரலி) அவர்களின் பாதம்தான்” என்றேன்.

1391. وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَوْصَتْ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ لاَ تَدْفِنِّي مَعَهُمْ وَادْفِنِّي مَعَ صَوَاحِبِي بِالْبَقِيعِ، لاَ أُزَكَّى بِهِ أَبَدًا.
பாடம் : 96
நபி (ஸல்), ஆபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் அடக்கத் தலங்கள் தொடர்பாக வந் துள்ளவை
“பின்னர் அவனை மரணிக்கச்செய்து மண்ணறைக்குள் (கப்றுக்கு) இறைவன் அனுப்புகின்றான்” (80:21) என்று குர்ஆன் கூறுகின்றது. மண்ணறையில் பிரேதத்தை வைப்பதற்கும் புதைப்பதற்கும் அக்பர, கபர என்பர்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இந்தப் பூமியை, உயிருள்ளவர்களுக்கு (வாழ) ஏற்றதாகவும் இறந்தவர்களுக்கு (புதைக்க) ஏற்றதாகவும் (கிஃபாத்) நாம் ஆக்கவில்லையா? (77:25,26)
1391. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், (தமது மரணத் தறுவாயில்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம், “என்னை நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருடன் (அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்) அடக்கம் செய்ய வேண்டாம்; மாறாக, என்னை நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியருடன் அவர்களின் அடக்கத் தலங்கள் அமைந்துள்ள ‘பகீஉ’ எனும் (பொது மையவாடி) இடத்திலேயே அடக்கிவிடுங்கள். (ஏனெனில்,) அதைக் கொண்டு நான் (மற்றத் துணைவியரைவிட) ஒருபோதும் உயர்வாகக் கருதப்படலாகாது” எனக் கூறினார்கள்.

1392. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الأَوْدِيِّ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، اذْهَبْ إِلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقُلْ يَقْرَأُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَيْكِ السَّلاَمَ، ثُمَّ سَلْهَا أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَىَّ. قَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، فَلأُوثِرَنَّهُ الْيَوْمَ عَلَى نَفْسِي. فَلَمَّا أَقْبَلَ قَالَ لَهُ مَا لَدَيْكَ قَالَ أَذِنَتْ لَكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ. قَالَ مَا كَانَ شَىْءٌ أَهَمَّ إِلَىَّ مِنْ ذَلِكَ الْمَضْجَعِ، فَإِذَا قُبِضْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمُوا ثُمَّ قُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ. فَإِنْ أَذِنَتْ لِي فَادْفِنُونِي، وَإِلاَّ فَرُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ، إِنِّي لاَ أَعْلَمُ أَحَدًا أَحَقَّ بِهَذَا الأَمْرِ مِنْ هَؤُلاَءِ النَّفَرِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَنْهُمْ رَاضٍ، فَمَنِ اسْتَخْلَفُوا بَعْدِي فَهُوَ الْخَلِيفَةُ، فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا. فَسَمَّى عُثْمَانَ وَعَلِيًّا وَطَلْحَةَ وَالزُّبَيْرَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، وَوَلَجَ عَلَيْهِ شَابٌّ مِنَ الأَنْصَارِ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ، كَانَ لَكَ مِنَ الْقَدَمِ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، ثُمَّ اسْتُخْلِفْتَ فَعَدَلْتَ، ثُمَّ الشَّهَادَةُ بَعْدَ هَذَا كُلِّهِ. فَقَالَ لَيْتَنِي يَا ابْنَ أَخِي وَذَلِكَ كَفَافًا لاَ عَلَىَّ وَلاَ لِي أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ خَيْرًا، أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَأَنْ يَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ، وَأُوصِيهِ بِالأَنْصَارِ خَيْرًا الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَيُعْفَى عَنْ مُسِيئِهِمْ، وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَأَنْ لاَ يُكَلَّفُوا فَوْقَ طَاقَتِهِمْ.
பாடம் : 96
நபி (ஸல்), ஆபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் அடக்கத் தலங்கள் தொடர்பாக வந் துள்ளவை
“பின்னர் அவனை மரணிக்கச்செய்து மண்ணறைக்குள் (கப்றுக்கு) இறைவன் அனுப்புகின்றான்” (80:21) என்று குர்ஆன் கூறுகின்றது. மண்ணறையில் பிரேதத்தை வைப்பதற்கும் புதைப்பதற்கும் அக்பர, கபர என்பர்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இந்தப் பூமியை, உயிருள்ளவர்களுக்கு (வாழ) ஏற்றதாகவும் இறந்தவர்களுக்கு (புதைக்க) ஏற்றதாகவும் (கிஃபாத்) நாம் ஆக்கவில்லையா? (77:25,26)
1392. அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை (மரணத் தறுவாயில்) பார்த்தேன். அவர்கள் (தம் புதல்வரிடம்), “அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘உமர் பின் அல்கத்தாப் உங்களுக்கு சலாம் கூறுகிறார்’ என்று சொல்லிவிட்டு என் தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருடன் நானும் அடக்கம் செய்யப் பட வேண்டும் என்பதற்கு அவர்களி டம் அனுமதி கேள்” எனக் கூறி னார்கள்.
(அவ்வாறே கேட்கப்பட்டதும்,) ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும், இன்று நான் அவருக்காக அதை விட்டுக்கொடுக்கின்றேன்” என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்கள் “என்ன பதில் கிடைத்தது?” எனக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அனுமதியளித்துவிட்டார் கள்” எனக் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. என் உயிர் கைப்பற்றப் பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மீண்டும்) எனது சலாமைக் கூறி, “உமர் அனுமதி கேட்கிறார்” எனக் கூறுங்கள். அவர்கள் எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது யார்மீது முழு திருப்தி கொண்டிருந்தார்களோ அந்த இக்குழுவினரைவிட வேறு யாரும் இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை.
எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை ஆட்சித் தலைவராக (கலீஃபா) தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர்தான் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்” எனக் கூறிவிட்டு, உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீதாலிப் (ரலி), தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோரின் பெயர் களைக் குறிப்பிட்டார்கள.
அப்போது அன்சாரிகளில் ஓர் இளைஞர் அங்கு வந்து, “இறைநம் பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! இஸ்லாத்தில் உங்களுக்கு உள்ள சிறப்பு என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராகி நீதி செலுத்தினீர்கள். அடுத்து இதற்கெல்லாம் மேலாக வீரமரணமும் (ஷஹாதத்) கிடைத்திருக் கிறது” என்றார்.
உமர் (ரலி) அவர்கள், “என் சகோதர ரின் மகனே! எனது விருப்பமெல்லாம், இந்த ஆட்சிப்பொறுப்பு எனக்கு நன்மை யாகவும் இல்லாமல், தீமையாகவும் இல்லாமல் சரிநிகராக இருந்தாலே போதும் என்பதுதான்” எனக் கூறிவிட்டு, “எனக் குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில் அவர், துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்கள் விஷயத்தில் நல்லபடி நடந்துகொள்ள வேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிக் காக்க வேண்டும்.
அவ்வாறே, அன்சாரிகளிடமும் அவர் நல்ல விதமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் இந்நகரத்தையும் (மதீனா), இறைநம்பிக்கையையும் சொந்த இடமாக ஆக்கிக்கொண்டவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்(று மதிக்)க வேண்டும்; தவறிழைக்கக்கூடியவர்களை மன்னித்துவிட வேண்டும்.
மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிம்களல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரிய வேண்டும். அவர்களது சக்திக்குமேல் அவர்களைச் சிரமப்படுத்தக் கூடாது” என்று கூறினார்கள்.

1393. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا "". وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْقُدُّوسِ عَنِ الأَعْمَشِ، وَمُحَمَّدُ بْنُ أَنَسٍ عَنِ الأَعْمَشِ. تَابَعَهُ عَلِيُّ بْنُ الْجَعْدِ وَابْنُ عَرْعَرَةَ وَابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ.
பாடம் : 97
இறந்தோரை ஏசக் கூடாது
1393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் தேடிக்கொண்டவற்றின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.33
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1394. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو لَهَبٍ ـ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ـ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ. فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} .
பாடம் : 98
இறந்தவர்களில் மோசமானவர் களைப் பற்றிக் குறிப்பிடல்
1394. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூலஹப்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவன் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ‘இனி எல்லா நாட்களிலும் உமக்கு நாசம் உண்டாகட்டும்” எனக் கூறினான்.
அப்போதுதான், “அபூலஹபின் இரு கரங்களும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும்...” என்ற (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.