1328. . وَعَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا.
பாடம் : 60
தொழுகைத் திடலிலும் (முஸல்லா) பள்ளிவாசலிலும் இறுதித் தொழுகை தொழுதல்
1328. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களை தொழு கைத் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷீ மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள்.
அத்தியாயம் : 23

1329. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ.
பாடம் : 60
தொழுகைத் திடலிலும் (முஸல்லா) பள்ளிவாசலிலும் இறுதித் தொழுகை தொழுதல்
1329. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் தம் சமூகத்தில் விபசாரம் செய்துவிட்ட ஓர் ஆணையும் பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விரு வரும் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை தொழும் இடத்திற்கருகில் கொண்டுசெல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

1330. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ هِلاَلٍ ـ هُوَ الْوَزَّانُ ـ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ "" لَعَنَ اللَّهُ الْيَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا "". قَالَتْ وَلَوْلاَ ذَلِكَ لأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا.
பாடம் : 61
அடக்கத் தலங்கள் (கப்றுகள்) மீது பள்ளிவாசல்கள் கட்டுவது விரும்பத் தக்கதன்று.
ஹசன் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் இறந்தபோது, அவருடைய மனைவி அவரது அடக்கத் தலத்தின் மீது கூடாரம் அமைத்(து அதில் ஒரு வருட காலமாகத் தங்கியிருந்)தார். பின்பு அது அகற்றப்பட்டது. அப்போது ஒருவர், “(இவ்வாறு செய்வதன் மூலமாக) இழந்து விட்டதை அவர்கள் அடைந்துகொண்ட னரோ?” எனச் சப்தமாகக் கேட்டார்.
அதற்கு மற்றொருவர், “இல்லை! மாறாக, நம்பிக்கையிழந்து திரும்பி விட்டனர்” எனப் பதில் கூறினார்.25
1330. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாம் இறப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்கள்.
இந்த அச்சம் மட்டும் இல்லையாயின், நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும், அதுவும் வழிபாட்டுத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

1331. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ سَمُرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا وَسَطَهَا.
பாடம் : 62
மகப்பேறு உதிரப்போக்கின் போது இறந்துவிட்ட பெண் ணுக்கு இறுதித் தொழுகை தொழுவது
1331. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மகப்பேறு உதிரப்போக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை தொழுத போது, சடலத்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன்.

1332. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا وَسَطَهَا.
பாடம் : 63
இறுதித் தொழுகையின்போது ஆண், பெண் பிரேதத்தின் எந்தப் பகுதிக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்?
1332. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, மகப்பேறு உதிரப்போக்கில் இறந்துபோன பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை தொழுதிருக்கிறேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரேதத்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்றிருந்தார்கள்.

1333. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، وَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى فَصَفَّ بِهِمْ، وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ.
பாடம் : 64
இறுதித் தொழுகையில் நான்கு தக்பீர்கள்
“அனஸ் (ரலி) அவர்கள், ஜனாஸா தொழுகை தொழுவித்தபோது மூன்று தக்பீர்கள் கூறிவிட்டுப் பிறகு (மறதியாக) ‘சலாம்’ கூறிவிட்டார்கள். அன்னாருக்கு இது உணர்த்தப்பட்டதும் உடனே கிப்லாவை முன்னோக்கி, நான்காவது தக்பீரும் கூறிவிட்டுப் பின்பு ‘சலாம்’ கூறினார்கள்” என ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1333. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபிசீனிய மன்னர்) நஜாஷீ இறந்த அன்றே அச்செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் தொழும் திடலில் (முஸல்லா) அனைவரையும் ஒன்றுகூட்டி அணி வகுக்கச்செய்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள்.

1334. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى أَصْحَمَةَ النَّجَاشِيِّ فَكَبَّرَ أَرْبَعًا. وَقَالَ يَزِيدُ بْنُ هَارُونَ وَعَبْدُ الصَّمَدِ عَنْ سَلِيمٍ أَصْحَمَةَ. وَتَابَعَهُ عَبْدُ الصَّمَدِ.
பாடம் : 64
இறுதித் தொழுகையில் நான்கு தக்பீர்கள்
“அனஸ் (ரலி) அவர்கள், ஜனாஸா தொழுகை தொழுவித்தபோது மூன்று தக்பீர்கள் கூறிவிட்டுப் பிறகு (மறதியாக) ‘சலாம்’ கூறிவிட்டார்கள். அன்னாருக்கு இது உணர்த்தப்பட்டதும் உடனே கிப்லாவை முன்னோக்கி, நான்காவது தக்பீரும் கூறிவிட்டுப் பின்பு ‘சலாம்’ கூறினார்கள்” என ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1334. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்ஹமா’ எனும் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களுக்கு நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1335. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ طَلْحَةَ، قَالَ صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ قَالَ لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ.
பாடம் : 65
ஜனாஸா தொழுகையில் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுதல்
“குழந்தைக்கு ஜனாஸா தொழுகை தொழும்போது, ‘ஃபாத்திஹா’ அத்தியாயம் ஓதுவதுடன், “அல்லாஹும்மஜ்அல்ஹு லனா ஃபரத்தன் வ சலஃபன் வ அஜ்ரன்” (இறைவா, இக்குழந்தையை (நன்மைக்கான) சேமிப்பாகவும் முன் வைப்பாகவும் நற்பலனாகவும் ஆக்குவாயாக!) என்றும் கூற வேண்டும்” என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1335. தல்ஹா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். பிறகு “நீங்கள் இது ஒரு நபிவழி என்பதை அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதி னேன்)” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1336. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّهُمْ وَصَلَّوْا خَلْفَهُ. قُلْتُ مَنْ حَدَّثَكَ هَذَا يَا أَبَا عَمْرٍو قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ.
பாடம் : 66
பிரேதம் அடக்கப்பட்ட பிறகு அடக்கத் தலம் அருகில் இறுதித் தொழுகை தொழுதல்
1336. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள், தனியாக இருந்த ஓர் அடக்கத் தலத்திற்கு (கப்று) வந்து, மக்களுக்கு இமாமாக இருந்து (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். (தோழர்கள்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதார்கள்” என்று அங்கு நபி (ஸல்) அவர்களுடன் இருந்த ஒருவர் எனக்குக் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அப்போது நான், “அம்ரின் தந்தை(யான ஷஅபீ)யே! உமக்கு இதை அறிவித்தவர் யார்?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்தான்” என்றார்கள்.

1337. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ أَسْوَدَ ـ رَجُلاً أَوِ امْرَأَةً ـ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ فَمَاتَ، وَلَمْ يَعْلَمِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَوْتِهِ فَذَكَرَهُ ذَاتَ يَوْمٍ فَقَالَ "" مَا فَعَلَ ذَلِكَ الإِنْسَانُ "". قَالُوا مَاتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" أَفَلاَ آذَنْتُمُونِي "". فَقَالُوا إِنَّهُ كَانَ كَذَا وَكَذَا قِصَّتَهُ. قَالَ فَحَقَرُوا شَأْنَهُ. قَالَ "" فَدُلُّونِي عَلَى قَبْرِهِ "". فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ.
பாடம் : 66
பிரேதம் அடக்கப்பட்ட பிறகு அடக்கத் தலம் அருகில் இறுதித் தொழுகை தொழுதல்
1337. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கறுப்பு நிற ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் (திடீரென்று) அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அந்த மனிதர் என்ன ஆனார்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு (தோழர்கள்) “அல்லாஹ் வின் தூதரே! அவர் இறந்துவிட்டார்” என்றதும், “எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள். தோழர் கள், அவரைப் பற்றி தகுதிக் குறைவாகக் கருதி, “அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்” எனக் கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரது அடக்கத் தலத்தை (கப்று) எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, அங்கு சென்று அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுதார்கள்.

1338. حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا ابْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولاَنِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ. فَيُقَالُ انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ، أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَرَاهُمَا جَمِيعًا ـ وَأَمَّا الْكَافِرُ ـ أَوِ الْمُنَافِقُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ. فَيُقَالُ لاَ دَرَيْتَ وَلاَ تَلَيْتَ. ثُمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ، فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلاَّ الثَّقَلَيْنِ "".
பாடம் : 67
(உயிரோடு உள்ளவர்களின்) காலணி ஓசையை இறந்தவர் செவியுறுகிறார்.
1338. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவரு டைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார்.
அதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, “முஹம்மத் (ஸல்) எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகின்றேன்” என்பார்.
பிறகு “(நீர் கெட்டவராக இருந்திருந் தால் நரகத்தில் உமக்குக் கிடைக்க விருந்த) தங்குமிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உமக்குச் சொர்க்கத் தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்படும். அப்போது அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.
இறைமறுப்பாளராகவோ நயவஞ்சக ராகவோ அவர் இருந்தால் (கேள்வி கேட்கப்பட்டதும்), “எனக்கு (ஒன்றும்) தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்” என்பார். அப்போது அவரிடம் “நீ(யாக) எதையும் அறிந்ததுமில்லை; (குர் ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும்.
பிறகு இரும்பாலான சுத்தியால் அவருடைய இரு காதுகளுக்கிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் ஆகியோரைத் தவிர, அருகிலுள்ள மற்ற அனைவருக்கும் கேட்கும் அளவுக்கு அவர் அலறுவார்.”
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1339. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ "" أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ. قَالَ أَىْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ "". قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَلَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ "".
பாடம் : 68
புனித பூமியிலோ அது போன்ற இடங்களிலோ தாம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என ஒருவர் விரும்புவது
1339. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் நபி மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள், (அவரது கண் பிதுங்கும் அளவுக்கு) அவரை அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறையிடம் திரும்பிச் சென்று, “(இறைவா!) இறக்க விரும்பாத ஓர் அடியாரிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்” என்றார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், “நீர் அவரிடம் திரும்பிச் சென்று, அவரை ஒரு காளை மாட்டின் முதுகில் கையை வைக்கச்சொல்லி, அவரது கை எத்தனை முடிகளை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு அவர் உயிர் வாழலாம் என்று கூறுவீராக!” என அனுப்பிவைத்தான்.
(அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை) அவர்கள், “இறைவா, அதற்குப் பிறகு?” எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்” என்றான். உடனே மூசா (அலை) அவர்கள், “அப்படியானால் இப்பொழுதே (தயார்)” எனக் கூறிவிட்டு, அல்லாஹ் விடம் (பைத்துல் மக்திஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத் திலுள்ள இடத்தில் தமது உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்தால், அந்த செம்மணற்குன்றுக்கு அருகில் சாலையோரத்தில் மூசா (அலை) அவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள்.

1340. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ بَعْدَ مَا دُفِنَ بِلَيْلَةٍ قَامَ هُوَ وَأَصْحَابُهُ، وَكَانَ سَأَلَ عَنْهُ فَقَالَ "" مَنْ هَذَا "". فَقَالُوا فُلاَنٌ، دُفِنَ الْبَارِحَةَ. فَصَلَّوْا عَلَيْهِ.
பாடம் : 69
இரவில் அடக்கம் செய்தல்
அபூபக்ர் (ரலி) அவர்கள் இரவில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
1340. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரவில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை தொழ நாடி) தோழர்களுடன் நின்றார்கள். முதலில் “இ(ந்தக் கப்றுக்குரிய)வர் யார்?” எனக் கேட்டார்கள். “இவர் இன்னார்; நேற்றி ரவுதான் அடக்கம் செய்யப்பட்டார்” என (தோழர்கள்) கூறியதும், அவருக் காக (ஜனாஸா தொழுகை) தொழு தார்கள்.

1341. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا اشْتَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ، يُقَالُ لَهَا مَارِيَةُ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ ـ رضى الله عنهما ـ أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ، فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا، فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ "" أُولَئِكَ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّورَةَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ "".
பாடம் : 70
அடக்கத் தலத்தின் மீது பள்ளி வாசல் நிறுவுதல்
1341. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, அவர்களின் துணைவி யரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த ‘மாரியா’ எனப்படும் ஒரு கிறித் தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்மு சலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களை யும் பற்றி வர்ணிக்கலாயினர்.
உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது அடக்கத் தலத்தின் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பி, அதில் அவருடைய உருவங்களைப் பொறித்துவிடுவார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்புகளிலேயே மிக மோசமானவர்கள் இவர்களே” என்று கூறினார்கள்.

1342. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ عَلَى الْقَبْرِ، فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ فَقَالَ "" هَلْ فِيكُمْ مِنْ أَحَدٍ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ "". فَقَالَ أَبُو طَلْحَةَ أَنَا. قَالَ "" فَانْزِلْ فِي قَبْرِهَا "". فَنَزَلَ فِي قَبْرِهَا فَقَبَرَهَا. قَالَ ابْنُ الْمُبَارَكِ قَالَ فُلَيْحٌ أُرَاهُ يَعْنِي الذَّنْبَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {لِيَقْتَرِفُوا} أَىْ لِيَكْتَسِبُوا.
பாடம் : 71
பெண்ணின் (பிரேதத்தை அடக்குவதற்காகக்) குழிக்குள் ஆண் இறங்குவது
1342. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் (உம்மு குல்ஸும்) அடக்கத்தில் கலந்துகொண் டோம். அப்போது அடக்கத் தலத்தின் அருகே அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
“கடந்த இரவு தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரும் உங்களில் உள்ளாரா?”என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “நான் உள்ளேன்” என்றதும், “இந்தக் குழியில் இறங்குவீராக!” என்றார்கள். உடனே அவர் குழியில் இறங்கி அடக்கம் செய்தார்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (தாம்பத்திய உறவு என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘முகாரஃபத்’ (யுகாரிஃப்) என்பதற்கு ‘பாவம் செய்தல்’ என்பதே (சொற்)பொருளாகும் என நான் கருதுகிறேன்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘யக்தரிஃபூ’ என்ற (6:113 வசனத்தில் உள்ள இறைச்) சொல்லுக்கு, ‘(தீமையைத்) தேடிக்கொள்ளல்’ என்பது பொருளாகும்.

1343. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ "" أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ "". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ "" أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ "". وَأَمَرَ بِدَفْنِهِمْ فِي دِمَائِهِمْ، وَلَمْ يُغَسَّلُوا وَلَمْ يُصَلَّ عَلَيْهِمْ.
பாடம் : 72
உயிர்த்தியாகி (ஷஹீத்)களுக்கு இறுதித் தொழுகை
1343. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘உஹுத்’ போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடை யில் ‘கஃபன்’ இட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவ ரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள்.
பின்னர் “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (இறுதித் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

1344. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம் : 72
உயிர்த்தியாகி (ஷஹீத்)களுக்கு இறுதித் தொழுகை
1344. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவிப்பதைப் போன்று ‘உஹுத்’ போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார் கள்.
பிறகு சொற்பொழிவுமேடை (மிம் பர்)க்குத் திரும்பி வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன்.
மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொரு வர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

1345. حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ.
பாடம் : 73
இருவரை அல்லது மூவரை ஒரே குழியில் அடக்கம் செய்வது
1345. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உஹுத் போரில் (உயிர் நீத்தவர்களில்) இரண்டி ரண்டு நபர்களைச் சேர்த்து (ஒரே கப்றில்) அடக்கம் செய்தார்கள்.

1346. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبٍ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ادْفِنُوهُمْ فِي دِمَائِهِمْ "". ـ يَعْنِي يَوْمَ أُحُدٍ ـ وَلَمْ يُغَسِّلْهُمْ.
பாடம் : 74
உயிர்த் தியாகிகளை நீராட்ட வேண்டியதில்லை என்ற கருத்து
1346. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இவர்களை -உஹுத் போரில் இறந்தவர்களை- அவர்களின் இரத்தத் துடனேயே அடக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மேலும், அவர்களை நபி (ஸல்) அவர்கள், நீராட்டவில்லை.

1347. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ " أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ ". فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ " أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ ". وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.
பாடம் : 75
அடக்கத் தலத்தின் உட்குழியில் முதலில் வைக்கப்படுபவர்
(‘உட்குழி’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்லஹ்த்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, ‘விலகுதல்’ என்பது சொற்பொருளாகும்.) உட்குழியானது, குழியின் (நடுவிலிருந்து விலகி) ஓர் ஓரத்தில் அமைவதால் இப்பெயர் வரலாயிற்று.
நீதி வழுவும் ஒவ்வொருவரையும் ‘முல்ஹித்’ (விலகியவர்) என்பர். (குர்ஆனில் 18:27ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள) ‘முல்(த்)தஹத்’ எனும் சொல்லுக்கு ‘ஒதுங்கும் இடம்’ என்பது பொருள்.
(உட்குழியாக இல்லாமல்) சமமாக இருந்தால் அக்குழிக்கு ‘ளரீஹ்’ என்பது பெயர்.
1347. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர் களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் ‘கஃபன்’ இட்டுவிட்டு, “இவர் களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்பார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும், அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைப்பார்கள்.
மேலும், “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர் களுக்கு நபி (ஸல்) அவர்கள் (இறுதித்) தொழுகை நடத்தவுமில்லை.