1128. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَدَعُ الْعَمَلَ وَهْوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ، وَمَا سَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُبْحَةَ الضُّحَى قَطُّ، وَإِنِّي لأُسَبِّحُهَا.
பாடம் : 5
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை, மற்ற கூடுதலான தொழுகைகள் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தாமல் ஆர்வமூட்டியது
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் ஃபாத்திமா (ரலி) அவர்களையும் அலீ (ரலி) அவர்களையும் (இரவுத் தொழுகைக்காக) எழுப்பிவிடச் சென்றார்கள்.
1128. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில (கூடுதலான) வழிபாடுகளைச் செய்ய விருப்பம் இருந்தாலும்கூட, அவற்றைச் செய்யாமல் விட்டுவிடுவது உண்டு. (எங்கே தாம் செய்வதைப் போன்று) மக்களும் அவற்றைச் செய்ய, அவர்கள்மீது அவை கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.
நான் ‘ளுஹா’ தொழுகை தொழுதுவரு கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ளுஹா தொழு(து நான் பார்த்)ததில்லை.5
அத்தியாயம் : 19

1129. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى ذَاتَ لَيْلَةٍ فِي الْمَسْجِدِ فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ، ثُمَّ صَلَّى مِنَ الْقَابِلَةِ فَكَثُرَ النَّاسُ، ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا أَصْبَحَ قَالَ "" قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ وَلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ إِلاَّ أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ ""، وَذَلِكَ فِي رَمَضَانَ.
பாடம் : 5
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை, மற்ற கூடுதலான தொழுகைகள் ஆகியவற்றைக் கட்டாயப்படுத்தாமல் ஆர்வமூட்டியது
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் ஃபாத்திமா (ரலி) அவர்களையும் அலீ (ரலி) அவர்களையும் (இரவுத் தொழுகைக்காக) எழுப்பிவிடச் சென்றார்கள்.
1129. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையை) ஓர் இரவில் பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர் களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதபோது, மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு மக்கள் திரண்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை.
அதிகாலையானதும் “நீங்கள் செய்ததை நிச்சயாக நான் பார்த்(துக்கொண்டுதான் இருந்)தேன். இத்தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வர விடாமல் என்னைத் தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.6

1130. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ زِيَادٍ، قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ، فَيُقَالُ لَهُ فَيَقُولُ "" أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا "".
பாடம் : 6
பாதங்கள் வீங்கும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழுதது
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்களில் வெடிப்பு(ம் வீக்கமும்) ஏற்படும் அளவுக்கு (இரவில்) நின்று வழிபடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘ஃபுத்தூர்’ எனும் சொல்லுக்கு ‘வெடிப்பு’ என்பது பொருள். (ஃபுத்தூர் என்பதன் வினைச் சொல்லான) ‘இன்ஃபத்தரத்’ எனும் சொல்லுக்கு ‘வெடித்தது; பிளந்தது’ என்பது பொருள்.
1130. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘தம் பாதங்கள்’ அல்லது ‘தம் கணைக்கால்கள்’ வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது, “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.7

1131. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ عَمْرَو بْنَ أَوْسٍ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ "" أَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، وَكَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ، وَيَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا "".
பாடம் : 7
சஹர் நேரத்தில் உறங்குதல்
1131. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று தொழுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்.8

1132. حَدَّثَنِي عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَشْعَثَ، سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ مَسْرُوقًا، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَىُّ الْعَمَلِ كَانَ أَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتِ الدَّائِمُ. قُلْتُ مَتَى كَانَ يَقُومُ قَالَتْ يَقُومُ إِذَا سَمِعَ الصَّارِخَ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ قَالَ أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ عَنِ الأَشْعَثِ قَالَ إِذَا سَمِعَ الصَّارِخَ قَامَ فَصَلَّى.
பாடம் : 7
சஹர் நேரத்தில் உறங்குதல்
1132. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான நற்செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நிலையாகச் செய்யும் நற்செயல்’ என்று விடையளித்தார் கள். “(இரவுத் தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சேவல் கூவும் நேரம் (இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதியில்) எழுவார்கள்”’ என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது.

1133. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ ذَكَرَ أَبِي عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلاَّ نَائِمًا. تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 7
சஹர் நேரத்தில் உறங்குதல்
1133. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தங்கியிருக்கும் தினத்தில் (சேவல் கூவும் நேரம் எழுந்து தொழுத பின்னர்) உறங்கிய நிலையில் தவிர, சஹர் நேரம் அவர்களை அடைந்ததில்லை.

1134. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم وَزَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ تَسَحَّرَا، فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ فَصَلَّى. قُلْنَا لأَنَسٍ كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ قَالَ كَقَدْرِ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً.
பாடம் : 8
சஹர் உணவு அருந்தியதும் உறங்காமல் ‘சுப்ஹு’ தொழுகை தொழுவது
1134. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் (நோன்பு நோற்க) சஹர் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகைக்காக எழுந்து சென்று தொழு தார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?” என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “ஒருவர் ஐம்பது இறைவசனங்கள் ஓதும் அளவு நேரம் (இடைவெளி) இருந்தது” என்று பதிலளித்தார்கள்.9

1135. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً، فَلَمْ يَزَلْ قَائِمًا حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سَوْءٍ. قُلْنَا وَمَا هَمَمْتَ قَالَ هَمَمْتَ أَنْ أَقْعُدَ وَأَذَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 9
இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்றல்
1135. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நான் ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அவர்கள் (நீண்ட நேரம் நிலையில்) நின்றுகொண்டே இருந்தார்கள். நான் தவறான ஒரு முடிவுக்குக்கூட சென்று விட்டேன் (அந்த அளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள்)” என்று கூறினார்கள்.
நான், “அந்தத் தவறான முடிவு என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுவிட்டு உட்கார்ந்து விடலாம் என்று எண்ணினேன்” என விடையளித்தார்கள்.

1136. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
பாடம் : 9
இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்றல்
1136. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ் ஜுத்’ தொழுவதற்காக எழும்போது, பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைச் சுத்தம் செய்)வார்கள்.10

1137. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ صَلاَةُ اللَّيْلِ قَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ "".
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால், ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக” என்று கூறினார்கள்.

1138. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً. يَعْنِي بِاللَّيْلِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பதிமூன்று ரக்அத்களாக இருந்தது.
அத்தியாயம் : 19
1138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பதிமூன்று ரக்அத்களாக இருந்தது.
அத்தியாயம் : 19
1139. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ. فَقَالَتْ سَبْعٌ وَتِسْعٌ وَإِحْدَى عَشْرَةَ سِوَى رَكْعَتَىِ الْفَجْرِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1139. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி கேட்டேன்.
அதற்கு அவர்கள் “ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தவிர ஏழு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) பதினொன்று ரக்அத்கள் (தொழுவார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

1140. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ وَرَكْعَتَا الْفَجْرِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1140. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியவை அவற்றில் அடங்கும்.11
அத்தியாயம் : 19
1140. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியவை அவற்றில் அடங்கும்.11
அத்தியாயம் : 19
1141. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّهْرِ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُومَ مِنْهُ، وَيَصُومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَكَانَ لاَ تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَّ رَأَيْتَهُ وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتَهُ. تَابَعَهُ سُلَيْمَانُ وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حُمَيْدٍ.
பாடம் : 11
இரவுத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தி லிருந்து எழுந்ததும், பின்னர் இரவுத் தொழுகை (கட்டாய நிலையிலிருந்து) மாற்றப்பட்ட தும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
போர்வை போர்த்திக்கொண்டிருப்ப வரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது (நேரம்) குறைத்துக்கொள்வீராக! அல்லது அதை விடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக! மேலும் குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! நிச்சயமாக, நாம் விரைவில் கனமான (உறுதியான) ஒரு வாக்கை உமக்கு அருள்வோம்.
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வழிபடு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங் கிணைக்க வல்லது. சொல்லைச் செம்மைப்படுத்த வல்லது. (நிச்சயமாக, உமக்குப் பகலில் (பணியாற்ற) நீண்ட ஓய்வு (நேரம்) உள்ளது. (73:1-7)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு குழுவினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவோ, அதில் பாதியோ, அதில் மூன்றில் ஒரு பாகத்திலோ நின்று வழிபடுகிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணிக்கமாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான்.
எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் பயணிக்கும் வேறுசிலரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் மற்றச் சிலரும் உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத்தும் கொடுத்துவாருங்கள்.
அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்காகச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர் களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மேலானதாகவும் நற்பலனில் மகத் தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிக்க அருள் உடையவன். (73:20)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(73:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘நாஷிஅத்’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘நஷஅ’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘நின்றான்’ என்பது பொருள். (இதே வசனத்திலுள்ள ‘வத்அன்’ எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் ‘வித்அன்’ என்று ஓதப்பட்டுள்ளது. பொருள்:) சமன் செய்யக்கூடியது. அதாவது குர்ஆனுடன் உமது செவி, பார்வை, மனம் ஆகியவற்றை நன்கு இயைந்துபோகச் செய்யும்.
(9:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி யுவாத்திஊ’ எனும் சொற்றொடருக்கு ‘சமமாக்குவதற்காக’ என்பது பொருள்.
1141. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இம்மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இம்மாதம் அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்.
அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே காண்பாய்.12
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1142. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ "".
பாடம் : 12
இரவில் தொழாவிட்டால் தலை யின் பின்பக்கத்தில் ஷைத்தான் முடிச்சுப் போடுகிறான்.
1142. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு” என்று கூறி (உங்களை விழிக்க விடாமல் உறங்கவைத்து)விடுகிறான்.
அவர் (அவனது கூற்றை ஏற்காமல்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (இரவுத் தொழுகையோ ஃபஜ்ரோ) தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகின்றன. அவர் உற்சாகத்துடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையெனில், மந்தமான மனநிலையுடனும் சோம்பலுட னும் காலைப் பொழுதை அடைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1143. حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدَبٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الرُّؤْيَا قَالَ "" أَمَّا الَّذِي يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفِضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ "".
பாடம் : 12
இரவில் தொழாவிட்டால் தலை யின் பின்பக்கத்தில் ஷைத்தான் முடிச்சுப் போடுகிறான்.
1143. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமை யான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.13

1144. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقِيلَ مَا زَالَ نَائِمًا حَتَّى أَصْبَحَ مَا قَامَ إِلَى الصَّلاَةِ. فَقَالَ "" بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ "".
பாடம் : 13
ஒருவர் தொழாமல் உறங்குகிறார் எனில், அவரது காதில் ஷைத் தான் சிறுநீர் கழித்துவிட்டான் என்று பொருள்.
1144. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம். ஒரு மனிதர் பொழுது விடியும்வரை தொழுகைக்கு எழாமல் உறங்கிக்கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.14

1145. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "".
பாடம் : 14
இரவின் இறுதிப் பகுதியில் பிரார்த்திப்பதும் தொழுவதும்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள் (யஹ்ஜஊன்). இரவின் இறுதி நேரங்களில் (சஹர்) பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (51:17,18)
1145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலோரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னி டம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1146. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ،. وَحَدَّثَنِي سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ قَالَتْ كَانَ يَنَامُ أَوَّلَهُ وَيَقُومُ آخِرَهُ، فَيُصَلِّي ثُمَّ يَرْجِعُ إِلَى فِرَاشِهِ، فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَثَبَ، فَإِنْ كَانَ بِهِ حَاجَةٌ اغْتَسَلَ، وَإِلاَّ تَوَضَّأَ وَخَرَجَ.
பாடம் : 15
இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு இறுதிப் பகுதியில் விழித்திருத்தல்
(இரவின் ஆரம்ப நேரத்தில் தொழ முயன்ற) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள், ‘உறங்குங்கள்!’ என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் ‘இப்போது எழுங்கள்!’ என்று கூறினார்கள்.
இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “சல்மான் சொன்னது உண்மையே” என்று குறிப்பிட்டார்கள்.15
1146. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்கு வார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால், அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

1147. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ. فَقَالَ "" يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 16
ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை
1147. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொன்று ரக்அத்களை விட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார் கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்குமுன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.