1098. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ سَالِمٌ كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي عَلَى دَابَّتِهِ مِنَ اللَّيْلِ وَهْوَ مُسَافِرٌ، مَا يُبَالِي حَيْثُ مَا كَانَ وَجْهُهُ. قَالَ ابْنُ عُمَرَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ، وَيُوتِرُ عَلَيْهَا، غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ.
பாடம் : 9
கடமையான தொழுகைகளைத் தொழும்போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1098. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் பயணம் செய்யும் போது தமது ஊர்தி ஒட்டகத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். தமது முகம் எத்திசையில் இருக்கிறதென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்திசை நோக்கிச் சென்றாலும் ஊர்தி ஒட்டகத்தின்மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளையும் ‘வித்ர்’ தொழுகையையும் தொழுவார்கள். எனினும், கடமையான தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள் (வாகனத்திலிருந்து இறங்கித்தான் தொழு வார்கள்)” என்றும் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 18

1099. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ فَإِذَا أَرَادَ أَنْ يُصَلِّيَ الْمَكْتُوبَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ.
பாடம் : 9
கடமையான தொழுகைகளைத் தொழும்போது வாகனத்தில் இருந்து இறங்க வேண்டும்.
1099. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவாகள் தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து கிழக்கு நோக்கித் தொழுவார்கள். கடமையான தொழுகை யைத் தொழ விரும்பும்போது (ஊர்தி யிலிருந்து) இறங்கி ‘கிப்லா’வை முன் னோக்குவார்கள்.

1100. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا حَبَّانُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ اسْتَقْبَلْنَا أَنَسًا حِينَ قَدِمَ مِنَ الشَّأْمِ، فَلَقِينَاهُ بِعَيْنِ التَّمْرِ، فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ مِنْ ذَا الْجَانِبِ، يَعْنِي عَنْ يَسَارِ الْقِبْلَةِ. فَقُلْتُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ. فَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ لَمْ أَفْعَلْهُ. رَوَاهُ ابْنُ طَهْمَانَ عَنْ حَجَّاجٍ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 10
கழுதையின் மீது அமர்ந்து கூடுதலான தொழுகைகளைத் தொழுதல்
1100. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அப்துல் மலிக் பின் மர்வானைச் சந்தித்து பஸ்ராவின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பற்றி முறையிட்டுவிட்டு) ஷாம் (சிரியா) நாட்டி லிருந்து திரும்பி வந்தபோது, அவர்களை நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அவர்களை நாங்கள் ‘அய்னுத் தம்ர்’ எனும் இடத்தில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து (கூடுதலான தொழுகை) தொழுவதை நான் பார்த்தேன்.
அவர்களின் முகம் கிப்லாவுக்கு அந்தப் பக்கம் -அதாவது இடப்புறம்- நோக்கி அமைந்திருந்தது. “கிப்லா அல்லாத வேறு திசையில் நீங்கள் தொழுவதை நான் கண்டேனே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்கமாட்டேன்” என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1101. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ حَفْصَ بْنَ عَاصِمٍ، حَدَّثَهُ قَالَ سَافَرَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ صَحِبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمْ أَرَهُ يُسَبِّحُ فِي السَّفَرِ، وَقَالَ اللَّهُ جَلَّ ذِكْرُهُ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}.
பாடம் : 11
பயணத்தின்போது (கடமை யான) தொழுகைக்கு முன்பும் பின்பும் கூடுதலான தொழுகை களைத் தொழாமலிருத்தல்
1101. ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தின்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் (பயணத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தில் கூடுதலான தொழு கைகளைத் தொழுவதை நான் பார்த்ததே யில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (33:21) என்று புகழுக்குரிய அல்லாஹ்வே கூறுகின்றான்” என்றார்கள்.

1102. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِيسَى بْنِ حَفْصِ بْنِ عَاصِمٍ، قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ صَحِبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ لاَ يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ، وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَذَلِكَ ـ رضى الله عنهم.
பாடம் : 11
பயணத்தின்போது (கடமை யான) தொழுகைக்கு முன்பும் பின்பும் கூடுதலான தொழுகை களைத் தொழாமலிருத்தல்
1102. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்திருக்கி றேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிட (கூடுதலாக) வேறெந்தத் தொழுகையையும் தொழமாட்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் இவ்வாறே நான் (பயணத்தில்) இருந்திருக்கிறேன் (அவர்கள் அனைவரும் இவ்வாறே செய்தனர்).12

1103. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ مَا أَنْبَأَ أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الضُّحَى غَيْرُ أُمِّ هَانِئٍ ذَكَرَتْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا، فَصَلَّى ثَمَانِ رَكَعَاتٍ، فَمَا رَأَيْتُهُ صَلَّى صَلاَةً أَخَفَّ مِنْهَا، غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ.
பாடம் : 12
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் தவிர மற்ற நேரங்களில் கூடுதல் தொழுகைகளைத் தொழுவது
நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (முன் சுன்னத்)கள் தொழுதிருக்கிறார்கள்.13
1103. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘ளுஹா’ தொழுகை தொழுவதைக் கண்டதாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் நமக்கு அறிவிக்கவில்லை.
“நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் எனது இல்லத்தில் குளித்துவிட்டு, எட்டு ரக்அத் கள் தொழுதார்கள். அதைவிடச் சுருக்க மாக வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும், ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்தார்கள்’ என்று உம்மு ஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

1104. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ.
பாடம் : 12
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் தவிர மற்ற நேரங்களில் கூடுதல் தொழுகைகளைத் தொழுவது
நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (முன் சுன்னத்)கள் தொழுதிருக்கிறார்கள்.13
1104. ஆமிர் பின் ரபிஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்தபோது, தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து அது சென்ற திசை நோக்கிக் கூடுதல் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன்.

1105. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَبِّحُ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ، يُومِئُ بِرَأْسِهِ، وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ.
பாடம் : 12
கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் தவிர மற்ற நேரங்களில் கூடுதல் தொழுகைகளைத் தொழுவது
நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (முன் சுன்னத்)கள் தொழுதிருக்கிறார்கள்.13
1105. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் அமர்ந்து, தாம் செல்ல வேண்டிய திசையில் தலையால் சைகை செய்து கூடுதல் தொழுகைகளைத் தொழுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.

1106. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ.
பாடம் : 13
பயணத்தின்போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்14
1106. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.

1107. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ الْحُسَيْنِ الْمُعَلِّمِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الظُّهْرِ وَالْعَصْرِ إِذَا كَانَ عَلَى ظَهْرِ سَيْرٍ، وَيَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ.
பாடம் : 13
பயணத்தின்போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்14
1107. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்) பயணத்தில் இருக்கும்போது லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழுகையையும் சேர்த்துத் தொழு வார்கள்.

1108. وَعَنْ حُسَيْنٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ. وَتَابَعَهُ عَلِيُّ بْنُ الْمُبَارَكِ وَحَرْبٌ عَنْ يَحْيَى عَنْ حَفْصٍ عَنْ أَنَسٍ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 13
பயணத்தின்போது மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்14
1108. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிப் தொழுகையையும் இஷா தொழு கையையும் சேர்த்துத் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1109. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ صَلاَةَ الْمَغْرِبِ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ. قَالَ سَالِمٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ، وَيُقِيمُ الْمَغْرِبَ فَيُصَلِّيهَا ثَلاَثًا، ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ الْعِشَاءَ، فَيُصَلِّيهَا رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ وَلاَ يُسَبِّحُ بَيْنَهَا بِرَكْعَةٍ، وَلاَ بَعْدَ الْعِشَاءِ بِسَجْدَةٍ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ.
பாடம் : 14
(பயணத்தில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழும்போது பாங்கும் இகா மத்தும் சொல்ல வேண்டுமா?
1109. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி மஃக்ரிபை யும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுவதை நான் பார்த்திருக்கி றேன்” என்று கூறினார்கள்.
அவசரமாகப் பயணம் செல்ல நேரிட்டால் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். மஃக்ரிப் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி மூன்று ரக்அத்கள் தொழுது சலாம் கொடுப்பார்கள். பிறகு சிறிய இடைவெளி விட்டு இஷா தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ‘சலாம்’ கொடுப்பார்கள். அவ்விரு தொழுகை களுக்கும் இடையே கூடுதலான தொழுகை எதையும் தொழமாட்டார்கள். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து இரவுத் தொழுகைக்காக எழும் நேரம் (நடுநிசி)வரை வேறெதையும் தொழ மாட்டார்கள்.

1110. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَرْبٌ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ فِي السَّفَرِ. يَعْنِي الْمَغْرِبَ وَالْعِشَاءَ.
பாடம் : 14
(பயணத்தில்) மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழும்போது பாங்கும் இகா மத்தும் சொல்ல வேண்டுமா?
1110. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் -மஃக்ரிப், இஷா ஆகிய- இவ்விரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள்.

1111. حَدَّثَنَا حَسَّانُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا، وَإِذَا زَاغَتْ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ.
பாடம் : 15
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் மேற்கொண் டால் லுஹ்ர் தொழுகையை ‘அஸ்ர்’வரை தாமதப்படுத்தலாம்.15
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்த தாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
1111. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி யிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் மேற்கொண்டால். லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்தி, லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து (அஸ்ர் நேரத்தில்) தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலி ருந்து சாய்ந்துவிட்டால், லுஹ்ர் தொழுகை யைத் தொழுதுவிட்டே பயணம் மேற் கொள்வார்கள்.

1112. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا، فَإِنْ زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ.
பாடம் : 16
சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு பயணம் புறப்பட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பய ணம் மேற்கொள்ள வேண்டும்.
1112. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்குமுன் பயணம் புறப்பட்டுவிட்டால், லுஹ்ர் தொழுகையை அஸ்ர் நேரம்வரை தாமதப்படுத்துவார்கள். பிறகு (வாகனத்திலிருந்து) இறங்கி, லுஹ்ர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுவார்கள். (பயணம் புறப்படுவதற்குமுன்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் லுஹ்ர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.16

1113. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا "".
பாடம் : 17
அமர்ந்து தொழுவது17
1113. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது, தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்தபடியே தொழு தார்கள். (அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்திருந்த) மக்களில் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘உட்காருங்கள்’ என்று மக்களுக் குச் சைகை செய்தார்கள்.
தொழுது முடித்ததும், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். எனவே, அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள் அவர் நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள்” என்று கூறினார்கள்.18

1114. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سَقَطَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فَرَسٍ فَخُدِشَ ـ أَوْ فَجُحِشَ ـ شِقُّهُ الأَيْمَنُ، فَدَخَلْنَا عَلَيْهِ نَعُودُهُ، فَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى قَاعِدًا فَصَلَّيْنَا قُعُودًا وَقَالَ "" إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "".
பாடம் : 17
அமர்ந்து தொழுவது17
1114. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களுக்கு வலப்புற விலாப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது ஒரு தொழுகை(யின் நேரம்) வந்துவிடவே, அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். அப்போது நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்த படியே தொழுதோம்.
(தொழுது முடித்ததும்) “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட் டுள்ளார். அவர் ‘தக்பீர்’ சொன்னால் நீங்களும் ‘தக்பீர்’ சொல்லுங்கள். அவர் ருகூஉ செய்யும்போது நீங்களும் ருகூஉ செய்யுங்கள். (ருகூஉவிலிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ் வோரின் புகழுரையை ஏற்கிறான்)’ என்று கூறும் போது நீங்கள் ‘ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

1115. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَخْبَرَنَا حُسَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَأَلَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم. أَخْبَرَنَا إِسْحَاقُ قَالَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ عَنِ ابْنِ بُرَيْدَةَ قَالَ حَدَّثَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ـ وَكَانَ مَبْسُورًا ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ قَاعِدًا فَقَالَ "" إِنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ "".
பாடம் : 17
அமர்ந்து தொழுவது17
1115. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மூலவியாதி உடையவனாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு, நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1116. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ـ وَكَانَ رَجُلاً مَبْسُورًا ـ وَقَالَ أَبُو مَعْمَرٍ مَرَّةً عَنْ عِمْرَانَ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهْوَ قَاعِدٌ فَقَالَ "" مَنْ صَلَّى قَائِمًا فَهْوَ أَفْضَلُ، وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ، وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ نَائِمًا عِنْدِي مُضْطَجِعًا هَا هُنَا.
பாடம் : 18
உட்கார்ந்து சைகை செய்து தொழுவது
1116. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மூலவியாதி உடையவனாக இருந்தால் நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நின்று தொழுவதே சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு. படுத்துத் தொழுபவருக்கு, உட்கார்ந்து தொழுபவரின் நன்மையில் பாதியே உண்டு” என்று விடையளித் தார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘நாயிம்’ (தூங்குபவர்) எனும் சொல்லுக்கு ‘படுத்துத் தொழுபவர்’ என்பதே என்னைப் பொறுத்த வரை பொருளாகும்.19

1117. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فَقَالَ "" صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ "".
பாடம் : 19
உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துக்கொண்டு தொழ லாம்.
படுத்துக்கொண்டு தொழும்போது ‘கிப்லா’வை நோக்கித் திரும்ப முடியாவிட்டால், எந்தத் திசை நோக்கியும் தொழலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1117. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மூலவியாதி இருந்தது. ஆகவே, நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துக் கொண்டு தொழுவீராக!” என்று சொன் னார்கள்.20