876. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمَّ هَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ، فَالنَّاسُ لَنَا فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا وَالنَّصَارَى بَعْدَ غَدٍ "".
பாடம் : 1 ஜுமுஆ தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வெள்ளிக்கிழமை அன்று தொழு கைக்கு அழைக்கப்பட்டால், வணிகத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூர (பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு நன்மையாகும். (62:9)
876. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம்தான் (காலத்தால்) பிந்தியவர்களாக வும் மறுமை நாளில் (தகுதியால்) முந்திய வர்களாகவும் இருப்போம். எனினும், (யூத, கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும், இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக் கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளை வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு இந்த நாளை அறிவித்தான்.

இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும்; மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.2

இதை அபூ.ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
877. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்கு வரும்போது குளித்துக்கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
878. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، قَالَ أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، بَيْنَمَا هُوَ قَائِمٌ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ الأَوَّلِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَادَاهُ عُمَرُ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ قَالَ إِنِّي شُغِلْتُ فَلَمْ أَنْقَلِبْ إِلَى أَهْلِي حَتَّى سَمِعْتُ التَّأْذِينَ، فَلَمْ أَزِدْ أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ وَالْوُضُوءُ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِالْغُسْلِ.
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
878. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப்

(ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (சொற் பொழிவு மேடை- மிம்பர்மீது) நின்று உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, (இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர் களில் ஒரு நபித்தோழர் உள்ளே வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, “இது எந்த நேரம் (தெரியுமா? ஏன் இவ்வளவு தாமதம்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நான் அலுவ-ல் மூழ்கிவிட்டேன். தொழுகை அறிவிப்பைக் கேட்ட பிறகுதான் நான் என் வீட்டிற்கே திரும்பினேன். ஆகவே, அங்கத் தூய்மை (உளூ) மட்டும் செய்துவிட்டு நான் (விரைந்து) வருகிறேன்” என்று கூறினார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “(தாமத மாக வந்ததுடன்) உளூ மட்டும்தானா? (குளிக்கவில்லையா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவுக்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 11
879. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 2 வெள்ளிக்கிழமை குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் ஜுமுஆ தொழுகையில் கலந்துகொள்வது கடமையா என்பதும்
879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.3

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
880. حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ الأَنْصَارِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ قَالَ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ "". قَالَ عَمْرٌو أَمَّا الْغُسْلُ فَأَشْهَدُ أَنَّهُ وَاجِبٌ، وَأَمَّا الاِسْتِنَانُ وَالطِّيبُ فَاللَّهُ أَعْلَمُ أَوَاجِبٌ هُوَ أَمْ لاَ، وَلَكِنْ هَكَذَا فِي الْحَدِيثِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هُوَ أَخُو مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ وَلَمْ يُسَمَّ أَبُو بَكْرٍ هَذَا. رَوَاهُ عَنْهُ بُكَيْرُ بْنُ الأَشَجِّ وَسَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ وَعِدَّةٌ. وَكَانَ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ يُكْنَى بِأَبِي بَكْرٍ وَأَبِي عَبْدِ اللَّهِ.
பாடம் : 3 ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது
880. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வெள்ளிக்கிழமை குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமை யாகும்; மேலும் பல் துலக்குவதும், கிடைத்தால் நறுமணம் பூசுவதும் கடமை யாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச் சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், பல் துலக்குவதோ நறுமணம் பூசுவதோ கடமையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ஆனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) அபூபக்ர் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள், முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஆவார். அபூபக்ர் பின் அல்முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) உள்ளிட்ட பலர் (இந்த ஹதீஸை) அறிவித் துள்ளனர். முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களுக்கும் அபூபக்ர், அபூ அப்தில்லாஹ் ஆகிய குறிப்புப் பெயர்கள் உள்ளன.

அத்தியாயம் : 11
881. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ "".
பாடம் : 4 ஜுமுஆவின் சிறப்பு
881. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்ப வர், ஒரு மாட்டை ‘குர்பானி’ கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை ‘குர்பானி’ கொடுத்தவரைப் போன்றவர் ஆவார்.

நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 11
882. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ فَقَالَ عُمَرُ لِمَ تَحْتَبِسُونَ عَنِ الصَّلاَةِ فَقَالَ الرَّجُلُ مَا هُوَ إِلاَّ سَمِعْتُ النِّدَاءَ تَوَضَّأْتُ. فَقَالَ أَلَمْ تَسْمَعُوا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 5
882. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் உள்ளே வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஏன் தொழுகைக்குத் தாமதமாக வருகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்த மனிதர், “தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத் தூய்மை செய்(துவிட்டு உடனே வந்)தேன்” என்றார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக் கொள்ளட்டும்’ என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 11
883. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ، فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى "".
பாடம் : 6 ஜுமுஆவுக்காக (தலையில்) எண்ணெய் தேய்த்துக்கொள் வது
883. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் குளிக்கிறார்; தம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்திக்கொள்கிறார்; தம்மிட முள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தமது வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார்; பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து (சேர்ந்து உட்கார்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் தமக்கு எழுதப்பட்டுள்ளதைத் தொழுகிறார்; பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியுறுகிறார் எனில், அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்படும் பாவங்கள் அவருக்கு மன்னிக் கப்படாமல் இருப்பதில்லை.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
884. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ طَاوُسٌ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ذَكَرُوا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" اغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ وَاغْسِلُوا رُءُوسَكُمْ وَإِنْ لَمْ تَكُونُوا جُنُبًا، وَأَصِيبُوا مِنَ الطِّيبِ "". قَالَ ابْنُ عَبَّاسٍ أَمَّا الْغُسْلُ فَنَعَمْ، وَأَمَّا الطِّيبُ فَلاَ أَدْرِي.
பாடம் : 6 ஜுமுஆவுக்காக (தலையில்) எண்ணெய் தேய்த்துக்கொள் வது
884. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள், ‘வெள்ளிக் கிழமை நீங்கள் குளித்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளைக் கழுவிக்கொள்ளுங் கள். சிறிது நறுமணம் பூசிக்கொள்ளுங்கள். உங்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டிரா விட்டாலும் சரியே’ எனக் கூறியதாகச் சிலர் கூறுகிறார்களே?” என்று வினவினேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குளியலைப் பொறுத்த வரை (நபியவர்கள் கூறினார்கள் என நீங்கள் குறிப்பிட்டது) சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது” என்று பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 11
885. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ لاَ أَعْلَمُهُ.
பாடம் : 6 ஜுமுஆவுக்காக (தலையில்) எண்ணெய் தேய்த்துக்கொள் வது
885. தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்தபோது அவர்களிடம் நான், “ஒருவர் தம் வீட்டாரிடம் இருக்கும் எண்ணெய்யையோ நறுமணத்தையோ பூசிக்கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது பற்றி எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 11
886. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَأَى حُلَّةَ سِيَرَاءَ عِنْدَ باب الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ "". ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهَا حُلَلٌ، فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا "". فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا.
பாடம் : 7 உள்ளதிலேயே அழகான ஆடையை (ஜுமுஆவுக்காக) அணிந்துகொள்ள வேண்டும்.
886. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசல் நுழைவாயில் அருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படு வதைக் கண்டார்கள். உடனே “அல்லாஹ் வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் வெள்ளிக்கிழமையும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் அணிந்துகொள்ளலாமே!” என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவர்தான் (இம்மையில்) இதை அணிவார்” என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்துகொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த) ‘உதாரித்’ அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே!” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை நீர் அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை. (அதன் மூலம் வேறு வகையில் நீர் பயன்பெற்றுக்கொள்ளவே நான் வழங்கினேன்)” என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், மக்காவில் இருந்த இணைவைப் பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்துவிட்டார்கள்.5

அத்தியாயம் : 11
887. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ـ أَوْ عَلَى النَّاسِ ـ لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ "".
பாடம் : 8 வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்கு வது (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.6
887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘என் சமுதாயத்தாருக்கு’ அல்லது ‘மக்க ளுக்கு’ நான் சிரமத்தை ஏற்படுத்திவிடு வேனோ என்று (அச்சம்) இல்லையாயின், ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
888. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ "".
பாடம் : 8 வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்கு வது (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.6
888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பல் துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தி யுள்ளேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
889. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ.
பாடம் : 8 வெள்ளிக்கிழமை (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்கு வது (ஜுமுஆ தொழுகைக்காக) பல் துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.6
889. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும்போது, (பல் துலக்கும் குச்சியால்) தமது வாயைத் தேய்ப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 11
890. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ، وَمَعَهُ سِوَاكٌ يَسْتَنُّ بِهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ أَعْطِنِي هَذَا السِّوَاكَ يَا عَبْدَ الرَّحْمَنِ. فَأَعْطَانِيهِ فَقَصَمْتُهُ ثُمَّ مَضَغْتُهُ، فَأَعْطَيْتُهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَنَّ بِهِ وَهْوَ مُسْتَسْنِدٌ إِلَى صَدْرِي.
பாடம் : 9 பிறரது பல் குச்சியால் ஒருவர் பல் துலக்குவது
890. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்கள் இறக்கும் தறுவாயில் என் நெஞ்சில் சாய்ந்துகொண்டி ருந்தபோது என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த பல் குச்சியால் பல் துலக்கியபடி வந்தார். அவரை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், “என்னிடம் இந்தப் பல் குச்சியைக் கொடுங்கள், அப்துர் ரஹ்மானே!” என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார்.

நான் கடித்து (அதன் முனையைத் துப்பி)விட்டு, அதை நன்றாக மென்று (மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடியே அதைக் கொண்டு பல் துலக்கிக் கொண்டார்கள்.

அத்தியாயம் : 11
891. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ هُرْمُزَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ} السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
பாடம் : 10 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை
891. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ‘அ-ஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்ஸான்’ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அத்தியாயம் : 11
892. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ إِنَّ أَوَّلَ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ عَبْدِ الْقَيْسِ بِجُوَاثَى مِنَ الْبَحْرَيْنِ.
பாடம் : 11 நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது
892. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது பள்ளிவாச-ல் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகைக் குப் பிறகு (இஸ்லாமிய வரலாற்றில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகை, ‘ஜுவாஸா’ எனுமிடத்தில் -அதாவது பஹ்ரைன் நாட்டி-ருந்த (ஒரு கிராமத்தில்)- அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாச-ல் நடைபெற்ற தொழுகையே ஆகும்.7


அத்தியாயம் : 11
893. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ "". وَزَادَ اللَّيْثُ قَالَ يُونُسُ كَتَبَ رُزَيْقُ بْنُ حُكَيْمٍ إِلَى ابْنِ شِهَابٍ ـ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِوَادِي الْقُرَى ـ هَلْ تَرَى أَنْ أُجَمِّعَ. وَرُزَيْقٌ عَامِلٌ عَلَى أَرْضٍ يَعْمَلُهَا، وَفِيهَا جَمَاعَةٌ مِنَ السُّودَانِ وَغَيْرِهِمْ، وَرُزَيْقٌ يَوْمَئِذٍ عَلَى أَيْلَةَ، فَكَتَبَ ابْنُ شِهَابٍ ـ وَأَنَا أَسْمَعُ ـ يَأْمُرُهُ أَنْ يُجَمِّعَ، يُخْبِرُهُ أَنَّ سَالِمًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ـ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ ـ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 11 நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது
893. யூனுஸ் பின் யஸீத் அல்அய்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ருஸைக் பின் ஹுகைம் (ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார் கள். அப்போது ஸுஹ்ரீ (ரஹ்) அவர் களுடன் நானும் (மதீனாவில் உள்ள) ‘வாதில்குரா’ எனும் இடத்தில் இருந்தேன். அக்கடிதத்தில் ருஸைக் அவர்கள், ‘(என்னுடன் இங்கு இருப்போருக்கு) நான் ஜுமுஆ நடத்துவது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.

(அன்றைய நாளில்) ருஸைக் அவர்கள் விளைநில அதிகாரியாக இருந்தார். அந்நிலத்தில் சூடான் நாட்டு மக்கள் சிலரும் வேறுசிலரும் இருந்தனர். ருஸைக் அவர்கள்தான் அப்போது ‘அய்லா’ நகரின் ஆளுநராகவும் இருந்தார்.

ஆகவே, இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் ருஸைக் அவர்களுக்கு ஜுமுஆ நடத்துமாறு கட்டளை பிறப்பித்து பதில் எழுதினார்கள். (அதை அவர்கள் வாசித் துக்காட்டினார்கள்.) அதை நானும் செவியுற் றுக்கொண்டிருந்தேன். அந்தக் கடிதத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக (அவர்களுடைய புதல்வர்) சா-ம் (ரஹ்) அவர்கள், தமக்கு அறிவித்த பின்வரும் நபிமொழியை (தம் கட்டளைக்கு ஆதார மாக)க் குறிப்பிட்டார்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.8

இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “ஓர் ஆண்மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவனுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவனும் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் எண்ணுகிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 11
894. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ جَاءَ مِنْكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ "".
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள், சிறுவர்கள் போன்றோர்மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆ தொழுகை கடமையோ அவர்மீதே குளியலும் கடமை யாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் ஜுமுஆ தொழு கைக்கு வருவாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11
895. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள், சிறுவர்கள் போன்றோர்மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆ தொழுகை கடமையோ அவர்மீதே குளியலும் கடமை யாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமை யாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 11