816. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا "".
பாடம் : 138 தொழும்போது (தரையில் படாத வாறு) ஆடையைப் பிடிக்கக் கூடாது.
816. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதென வும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
817. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "" يَتَأَوَّلُ الْقُرْآنَ.
பாடம் : 139 சஜ்தாவில் (இறையைத்) துதிப்ப தும் பிரார்த்திப்பதும்
817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும் மஃக்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதி பதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.68

அத்தியாயம் : 10
818. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ، قَالَ لأَصْحَابِهِ أَلاَ أُنَبِّئُكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَذَاكَ فِي غَيْرِ حِينِ صَلاَةٍ، فَقَامَ، ثُمَّ رَكَعَ فَكَبَّرَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَقَامَ هُنَيَّةً، ثُمَّ سَجَدَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ هُنَيَّةً، فَصَلَّى صَلاَةَ عَمْرِو بْنِ سَلِمَةَ شَيْخِنَا هَذَا. قَالَ أَيُّوبُ كَانَ يَفْعَلُ شَيْئًا لَمْ أَرَهُمْ يَفْعَلُونَهُ، كَانَ يَقْعُدُ فِي الثَّالِثَةِ وَالرَّابِعَةِ.
பாடம் : 140 இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
818. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை உங்களுக்கு நான் (செய்து) காட்டட்டுமா?” என்று கேட்டார் கள். -அது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.-

அவர்கள் (முதலில்) நின்றார்கள். பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉ செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அசையாமல்) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (அமர்ந்து) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அம்ர் பின் சலிமா (ரஹ்) அவர்கள் தொழுவதைப் போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுதுகாட்டினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

அ(ந்தப் பெரிய)வர் (தொழும்போது) ஒரு முறையைக் கையாள்வார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை நான் கண்ட தில்லை. அவர் மூன்றாவது ரக்அத்தில், அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக இருந்தார்.


அத்தியாயம் : 10
819. قَالَ فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَقَمْنَا عِنْدَهُ فَقَالَ " لَوْ رَجَعْتُمْ إِلَى أَهْلِيكُمْ صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ "
பாடம் : 140 இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
819. மா-க் பின் அல்ஹுவைரிஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(பனூ லைஸ் இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கி னோம். (நாங்கள் ஊர் திரும்பும்போது) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழு கையை இன்ன நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இன்ன நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்! உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்!” என்று கூறினார்கள்.69


அத்தியாயம் : 10
820. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ سُجُودُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرُكُوعُهُ، وَقُعُودُهُ بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பாடம் : 140 இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
820. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கு இடையில் அவர்கள் அமர்வது ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.


அத்தியாயம் : 10
821. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ إِنِّي لاَ آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي بِنَا. قَالَ ثَابِتٌ كَانَ أَنَسٌ يَصْنَعُ شَيْئًا لَمْ أَرَكُمْ تَصْنَعُونَهُ، كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ. وَبَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ.
பாடம் : 140 இரு சஜ்தாக்களுக்கு இடையே (சிறிது நேரம்) அமர்வது
821. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள்

தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று நான் உங்களுக்குத் தொழுவிப்பதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால், அதை நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை.

அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம்) நிற்பார்கள். எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார் கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம். இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள்). எந்த அளவுக்கென்றால் ‘அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூறிவிடலாம்.

அத்தியாயம் : 10
822. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ "".
பாடம் : 141 சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது. நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தம் கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காம லும் சஜ்தா செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
822. நபி (ஸல்) அவர்கள் கூறினாôர்கள்:

சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் யாரும், நாய் பரப்பிவைப்பதைப் போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
823. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا.
பாடம் : 142 தொழுகையில் ஒற்றைப்படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது70
823. மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்கள்.

அத்தியாயம் : 10
824. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ جَاءَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ فَصَلَّى بِنَا فِي مَسْجِدِنَا هَذَا فَقَالَ إِنِّي لأُصَلِّي بِكُمْ، وَمَا أُرِيدُ الصَّلاَةَ، وَلَكِنْ أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي. قَالَ أَيُّوبُ فَقُلْتُ لأَبِي قِلاَبَةَ وَكَيْفَ كَانَتْ صَلاَتُهُ قَالَ مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا ـ يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ ـ قَالَ أَيُّوبُ وَكَانَ ذَلِكَ الشَّيْخُ يُتِمُّ التَّكْبِيرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ.
பாடம் : 143 ஒரு ரக்அத்தை முடித்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா?
824. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:

அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார்.

அத்தியாயம் : 10
825. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى لَنَا أَبُو سَعِيدٍ فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ، وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 144 இரண்டாவது சஜ்தாவி-ருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போதே ‘தக்பீர்’ கூற வேண் டும்.71 இரண்டாவது சஜ்தாவி-ருந்து எழும் போதே அப்துல்லாஹ் பின் அஸஸுபைர் (ரலி) அவர்கள் ‘தக்பீர்’ கூறுவார்கள்.
825. சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள்.

(அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 10
826. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي فَقَالَ لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 144 இரண்டாவது சஜ்தாவி-ருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போதே ‘தக்பீர்’ கூற வேண் டும்.71 இரண்டாவது சஜ்தாவி-ருந்து எழும் போதே அப்துல்லாஹ் பின் அஸஸுபைர் (ரலி) அவர்கள் ‘தக்பீர்’ கூறுவார்கள்.
826. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன்

(ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
827. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَتَرَبَّعُ فِي الصَّلاَةِ إِذَا جَلَسَ، فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَقَالَ إِنَّمَا سُنَّةُ الصَّلاَةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِيَ الْيُسْرَى. فَقُلْتُ إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ إِنَّ رِجْلَىَّ لاَ تَحْمِلاَنِي.
பாடம் : 145 ‘அத்தஹிய்யாத்’ அமர்வில் உட்காரும் முறை உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா (ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவதைப் போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச் சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்.
827. அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்த்துவந்தேன். ஆகவே, நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் வயதில் சிறியவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அவ்வாறு செய்யக் கூடாதென என்னைத் தடுத்துவிட்டு, “தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால், உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும்” என்று கூறினார்கள். “அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(முதுமை யின் காரணத்தால்) என் கால்கள் என்னைத் தாங்காது” என்று பதிலளித் தார்கள்.


அத்தியாயம் : 10
828. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ،. وَحَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، وَيَزِيدَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ نَفَرٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ، فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ، فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ. وَسَمِعَ اللَّيْثُ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ وَيَزِيدُ مِنْ مُحَمَّدِ بْنِ حَلْحَلَةَ وَابْنُ حَلْحَلَةَ مِنَ ابْنِ عَطَاءٍ. قَالَ أَبُو صَالِحٍ عَنِ اللَّيْثِ كُلُّ فَقَارٍ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرٍو حَدَّثَهُ كُلُّ فَقَارٍ.
பாடம் : 145 ‘அத்தஹிய்யாத்’ அமர்வில் உட்காரும் முறை உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா (ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவதைப் போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச் சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்.
828. முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தொழுகை (முறை) பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தம் கைகளைத் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள்மீது நன்கு ஊன்றிக்கொள்வார்கள்.

பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்ப்பார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும்போது, முதுகெலும்புகளில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தா செய்யும்போது அவர்கள் தம் கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலா வுடன் ஒடுக்கி வைக்கவுமாட்டார்கள்; கால்விரல் முனைகளைக் கிப்லாவை நோக்கி வைப்பார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய் யாத் அமர்வில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக் காலை நட்டு வைப்பார்கள். இறுதி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும் போது இடக் காலை (குறுக்கு வாட்டில் வலப்புறம்) கொண்டுவந்து, வலக் காலை நட்டு வைத்து, தமது புட்டம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
829. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ، مَوْلَى بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ـ وَقَالَ مَرَّةً مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ـ أَنَّ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ ـ وَهْوَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ مَنَافٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهْوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ.
பாடம் : 146 முதலாவது ‘அத்தஹிய்யாத்’ அமர்வு கட்டாயமல்ல என்ற கருத்து ஏனெனில், இரண்டாவது ரக்அத்தை முடித்து (அத்தஹிய்யாத்தில்) அமராம லேயே எழுந்துவிட்ட நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்து அமரவில்லை.
829. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது முந்திய இரு ரக் அத்கள் முடிந்ததும் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காராமலேயே எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர்.

நபியவர்கள் தொழுகையை முடித்து, சலாம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அமர்ந்தபடியே நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள்; சலாம் கொடுப்பதற்குமுன் (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.72

இதன் அறிவிப்பாளரான இப்னு புஹைனா (ரலி) அவர்கள், பனூ அப்தி மனாஃப் குலத்தாரின் நட்புக் கூட்டமான அஸ்த் ஷநூஆ குலத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஆவார்.

அத்தியாயம் : 10
830. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهْوَ جَالِسٌ.
பாடம் : 147 முதலாவது ‘அத்தஹிய்யாத்’ அமர்வு (உண்டு)
830. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (முதலாவது அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார வேண்டிய திருக்க, அவர்கள் அதில் உட்காராமலேயே எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்குமுன்) உட்கார்ந்தபடியே (மறதிக்கான) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.73

அத்தியாயம் : 10
831. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْنَا السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ. فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "".
பாடம் : 148 இறுதி அமர்வில் ‘அத்தஹிய்யாத்’ ஓதுவது
831. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வ ஃபுலான்’ (ஜிப்ரீல்மீதும் மீக்காயீல்மீதும் சாந்தி உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தோம்.

(தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ் தான் ‘சலாம்’ (எனும் சாந்தி அளிப்பவன்) ஆவான். உங்களில் ஒருவர் தொழு(கை யின் அமர்வில் இருக்கு)ம்போது, “அத்தஹிய்யாத்து -ல்லாஹி வஸ்ஸல வாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வ அலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன்” என்று கூறட்டும்!

(பொருள்: சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்.)

இதை நீங்கள் கூறினால், வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடி யார்கள்மீதும் சலாம் கூறியதாக அமையும். “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும்!” என்றார்கள்.

அத்தியாயம் : 10
832. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ". فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ ".
பாடம் : 149 (தொழுகையில்) சலாம் கொடுப் பதற்குமுன் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
832. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (இறுதி அமர்வில்) பிரார்த் தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வ ஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! மண்ணறையின் வேதனையி-ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜா-ன் குழப்பத்தி-ருந்து உன்னிடம் பாதுôகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையி-ருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்தி-ருந்தும் கடனி-ருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதி-ருந்து அதிகமாகப் பாதுகாப்புக் கோர என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 10
833. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
பாடம் : 149 (தொழுகையில்) சலாம் கொடுப் பதற்குமுன் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
833. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜா-ன் குழப்பத்தி-ருந்து பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றுள்ளேன்.


அத்தியாயம் : 10
834. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ـ رضى الله عنه ـ. أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي. قَالَ "" قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ "".
பாடம் : 149 (தொழுகையில்) சலாம் கொடுப் பதற்குமுன் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
834. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “எனது தொழுகையில் நான் பிரார்த்திப் பதற்கு (ஏற்ற) ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வ லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்” என்று கூறுங்கள் என்றார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங் களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பி-ருந்து எனக்கு மன்னிப்பு அளிப் பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கருணை யாளனும் ஆவாய்.)

அத்தியாயம் : 10
835. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ قُلْنَا السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ. فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُو "".
பாடம் : 150 அத்தஹிய்யாத்துக்குப்பின் (சலாம் கொடுப்பதற்குமுன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட் டுள்ளது. அது கட்டாயம் கிடையாது.
835. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருக்கும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலான்’ (அடியார் கள் சார்பாக அல்லாஹ்வுக்கு சலாம் உண்டாகட்டும்; இன்னார் இன்னாருக்கும் சலாம்) என்று கூறிக்கொண்டிருந்தோம்.

(இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “அல்லாஹ் வின் மீது சலாம் உண்டாகட்டும்” என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ‘சலாம்’ (சாந்தி அளிப்பவன்) ஆக இருக்கின்றான். மாறாக, ‘(சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கை களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் கள் அனைவர்மீதும் சலாம் உண்டா கட்டும்” எனக் கூறுங்கள்.

இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்” என்றும் கூறுங்கள்.

இதன் பிறகு உங்களுக்கு விருப்பமான பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள்.

அத்தியாயம் : 10