7546. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أُرَاهُ عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ {وَالتِّينِ وَالزَّيْتُونِ} فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ.
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7546. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழு கையில் ‘வத்தீனீ வஸ்ஸைத்தூனி...’ எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களை விடவும் ‘அழகிய குரலுடையவரை’ அல்லது ‘அழகாக ஓதுபவரை’ நான் கண்டதில்லை.186

அத்தியாயம் : 97
7547. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُتَوَارِيًا بِمَكَّةَ، وَكَانَ يَرْفَعُ صَوْتَهُ، فَإِذَا سَمِعَ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا}
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7547. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (தொழுகையில்) தமது குரலை உயர்த்தி (குர்ஆனை ஓதி)வந்தார்கள். இணைவைப்பாளர்கள் கேட்கும்போது குர்ஆனையும், அதை (மக்கள்முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.

இதனால், அல்லாஹ் தன் தூதருக்கு “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தவும் வேண்டாம்; (ஒரேயடியாய்) தாழ்த்தவும் வேண்டாம்” (17:110) எனக் கட்டளையிட்டான்.187

அத்தியாயம் : 97
7548. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ "" إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ لِلصَّلاَةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَىْءٌ، إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7548. அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன்’ அல்லது ‘உங்கள் பாலைவனத்தில்’ இருக்கும்போது தொழு கைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள்.

ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமை நாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.188

அத்தியாயம் : 97
7549. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ الْقُرْآنَ وَرَأْسُهُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ.
பாடம்: 52 “குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரியோரும் நல்லோருமான(வான)வர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7549. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நான் மாதவிடாயு டன் இருந்தபோது என் மடியில் தமது தலையை வைத்தபடி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.189

அத்தியாயம் : 97
7550. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ، حَدَّثَاهُ أَنَّهُمَا، سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَبْتُهُ بِرِدَائِهِ فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ قَالَ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ كَذَبْتَ، أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ. فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا. فَقَالَ "" أَرْسِلْهُ، اقْرَأْ يَا هِشَامُ "". فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَذَلِكَ أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْرَأْ يَا عُمَرُ "". فَقَرَأْتُ الَّتِي أَقْرَأَنِي فَقَالَ "" كَذَلِكَ أُنْزِلَتْ، إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ "".
பாடம்: 53 “குர்ஆனில் (உங்களுக்கு) எது எளிதானதோ அதை ஓதிக் கொள்ளுங்கள்” எனும் (73:20 ஆவது) இறைவசனம்
7550. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். நான் அவரது ஓதுதலை செவிதாழ்த்திக் கேட்ட போது, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பிக்காத பல (வட்டார) மொழிவழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். ஆகவே, தொழுகையில் வைத்தே அவரைத் தண்டிக்க நான் முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுது முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுமையாயிருந் தேன். (அவர் சலாம் கொடுத்தவுடன்) அவரது மேல்துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, “நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக்காட்டியது யார்?” என்று கேட்டேன்.

அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு இதை ஓதிக் காட்டினார்கள்” என்று சொன்னார். நான் “நீர் சொல்வது பொய். நீர் ஓதியதற்கு மாறாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டினார்கள்” என்று சொல்லி, அவரை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

“இவர் அல்ஃபுர்கான் அத்தியாயத்தை தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத வேறு முறைகளின்படி ஓதுவதை நான் செவியுற்றேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவரை விடுங்கள்” என்று சொல்லிவிட்டு, “ஹிஷாமே! ஓதுங்கள்!” என்றார்கள்.

நான் செவியுற்ற அதே முறைப்படி அவர் ஓதினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் இந்த அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, “உமரே! நீங்கள் ஓதுங்கள்!” என்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டியபடி ஓதினேன்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவ்வாறுதான் இது அருளப்பெற்றது. இந்த குர்ஆன் ஏழு முறைப்படி அருளப்பெற்றுள்ளது. ஆகவே, இதிலிருந்து உங்களுக்கு எளிதானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.190

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7551. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ يَزِيدُ حَدَّثَنِي مُطَرِّفُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عِمْرَانَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فِيمَا يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ "" كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ "".
பாடம்: 54 “(மக்கள்) நல்லுணர்வு பெறு வதற்காகவே இந்த குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” எனும் (54:17 ஆவது) இறைவசனம் நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு வரும் எ(தை அடைவ)தற்காகப் படைக் கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக் கப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் (மேற் கண்ட வசனத்திற்கு) “உமது நாவால் அதை ஓதிக்காட்டுவதை எளிதாக்கியுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினார்கள். ம(த்)தர் அல்வர்ராக் (ரஹ்) அவர்கள், “நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” என்பதற்கு “கல்வியைத் தேடுவோர் உண்டா? அவர்களுக்கு உதவி நல்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்கள்.
7551. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! நற்செயல் புரிபவர்கள் எதற்காக நற்செயல் புரிய வேண்டும்? (இன்னார் சொர்க்கவாசி, இன்னார் நரகவாசி என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதே?)” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு வரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.191

அத்தியாயம் : 97
7552. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، سَمِعَا سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ فِي جِنَازَةٍ فَأَخَذَ عُودًا فَجَعَلَ يَنْكُتُ فِي الأَرْضِ فَقَالَ "" مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الْجَنَّةِ "". قَالُوا أَلاَ نَتَّكِلُ. قَالَ "" اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} "". الآيَةَ.
பாடம்: 54 “(மக்கள்) நல்லுணர்வு பெறு வதற்காகவே இந்த குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” எனும் (54:17 ஆவது) இறைவசனம் நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு வரும் எ(தை அடைவ)தற்காகப் படைக் கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக் கப்படுகிறார்கள்” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் (மேற் கண்ட வசனத்திற்கு) “உமது நாவால் அதை ஓதிக்காட்டுவதை எளிதாக்கியுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினார்கள். ம(த்)தர் அல்வர்ராக் (ரஹ்) அவர்கள், “நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” என்பதற்கு “கல்வியைத் தேடுவோர் உண்டா? அவர்களுக்கு உதவி நல்கப்படும்” என விளக்கமளித்துள்ளார்கள்.
7552. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) கலந்துகொண்டார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், “சொர்க்கத்திலோ நரகத்திலோ தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவருமே உங்களிடையே இல்லை” என்று சொன் னார்கள். உடனே மக்கள் “நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு, (நற்செயல்கள் புரியாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று சொல்லிவிட்டு, “எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவர் (சொர்க்கத்தின்) நல்வழியில் செல்வதை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:5-10ஆகிய) இறைவசனங்களைக் கூறினார்கள்.192

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7553. وَقَالَ لِي خَلِيفَةُ بْنُ خَيَّاطٍ حَدَّثَنَا مُعْتَمِرٌ، سَمِعْتُ أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَمَّا قَضَى اللَّهُ الْخَلْقَ كَتَبَ كِتَابًا عِنْدَهُ غَلَبَتْ ـ أَوْ قَالَ سَبَقَتْ ـ رَحْمَتِي غَضَبِي. فَهْوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ "".
பாடம்: 55 “மாறாக, இது பெருமை மிக்க குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது” எனும் (85:21,22 ஆகிய) இறைவசனங்கள் அல்லாஹ் கூறுகின்றான்: தூர் (சினாய்) மலைமீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2). கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘எழுதப்பெற்றது’ என்பதற்கு ‘மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்றது’ என்பது பொருள். 50:18ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை, தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. (5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு ‘அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்பதே அதற்குப் பொருளாகும். (6:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘திராசா’ என்பதற்கு ‘ஓதுவது’ என்பது பொருள். (69:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஇய’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாத்தல்’ என்பது பொருள். “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இந்த குர்ஆன் எனக்கு அருளப்பெற்றது” எனும் (6:19ஆவது) வசனத்தின் பொருளாவது: மக்காவாசிகளுக்கும், இது யார் யாருக்கு எட்டுகிறதோ அவர்களுக்கும் இந்த குர்ஆன் ஓர் எச்சரிக்கையாகும்.
7553. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியணைக்குமேலே ‘என் கோபத்தை என் கருணை வென்றுவிட்டது’ அல்லது ‘முந்திவிட்டது’ என்றொரு விதியை எழுதினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.193

அத்தியாயம் : 97
7554. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي غَالِبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَبَا رَافِعٍ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ الْخَلْقَ إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي. فَهْوَ مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ "".
பாடம்: 55 “மாறாக, இது பெருமை மிக்க குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது” எனும் (85:21,22 ஆகிய) இறைவசனங்கள் அல்லாஹ் கூறுகின்றான்: தூர் (சினாய்) மலைமீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2). கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘எழுதப்பெற்றது’ என்பதற்கு ‘மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்றது’ என்பது பொருள். 50:18ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை, தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. (5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு ‘அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்பதே அதற்குப் பொருளாகும். (6:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘திராசா’ என்பதற்கு ‘ஓதுவது’ என்பது பொருள். (69:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஇய’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாத்தல்’ என்பது பொருள். “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இந்த குர்ஆன் எனக்கு அருளப்பெற்றது” எனும் (6:19ஆவது) வசனத்தின் பொருளாவது: மக்காவாசிகளுக்கும், இது யார் யாருக்கு எட்டுகிறதோ அவர்களுக்கும் இந்த குர்ஆன் ஓர் எச்சரிக்கையாகும்.
7554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைப்ப தற்கு முன்பாக தனக்குத்தானே விதி யொன்றை எழுதிக்கொண்டான். ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்பதுதான் அந்த விதி. அது அவனிட முள்ள அரியணைக்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 97
7555. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، وَالْقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ، قَالَ كَانَ بَيْنَ هَذَا الْحَىِّ مِنْ جُرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ فَقُرِّبَ إِلَيْهِ الطَّعَامُ فِيهِ لَحْمُ دَجَاجٍ، وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ كَأَنَّهُ مِنَ الْمَوَالِي، فَدَعَاهُ إِلَيْهِ فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ لاَ آكُلُهُ. فَقَالَ هَلُمَّ فَلأُحَدِّثْكَ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ قَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ "". فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِنَهْبِ إِبِلٍ فَسَأَلَ عَنَّا فَقَالَ "" أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ "". فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، ثُمَّ انْطَلَقْنَا قُلْنَا مَا صَنَعْنَا حَلَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَحْمِلُنَا، وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا، ثُمَّ حَمَلَنَا، تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمِينَهُ، وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ فَقَالَ "" لَسْتُ أَنَا أَحْمِلُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، إِنِّي وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ مِنْهُ، وَتَحَلَّلْتُهَا "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7555. ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜர்ம் குலத்தாரைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தாருக்கும் அஷ்அரீ குலத்துக்கு மிடையே நேசமும் சகோதரத்துவ உறவும் இருந்துவந்தது. நாங்கள் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுக்குக் கோழி இறைச்சியுடன் உணவு பரிமாறப்பட்டது. அன்னாருடன் பனூ தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் இருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் போன்றிருந்தார். அவரை அபூமூசா (ரலி) அவர்கள் உணவுண்ண அழைத்தார்கள்.

அப்போது அவர், “இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதைக் கண்டு அதனால் அருவருப்படைந்து அதை உண்ணமாட்டேன் என நான் சத்தியம் செய்துவிட்டேன்” என்று கூறினார். அதைக் கேட்ட அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இங்கே வா! நான் உனக்கு இதைப் பற்றி (விவரமாக)த் தெரிவிக்கின்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் வாகனம் கேட்டுச் சென்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை வாகனம் எதிலும் ஏற்றியனுப்பமாட்டேன். உங்களை ஏற்றியனுப்ப என்னிடம் வாகனம் எதுவுமில்லை” என்று சொன்னார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் சில கொண்டுவரப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பற்றி “அஷ்அரீ குலத்து ஆட்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டு, “வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் சென்றுவிட்டோம். (என்றாலும்,) “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நம்மை வாகனத்தில் ஏற்றி அனுப்ப மாட்டேன் என்றும், தம்மிடம் நமக்கு வழங்க வாகனம் இல்லை என்றும் சத்தியம் செய்தார்கள். பிறகு நமக்கு வாகனம் வழங்கிவிட்டார்களே! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்களது சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பிவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் ஒருபோதும் வெற்றியடையமாட்டோம்” என்று எங்க ளுக்குள் பேசிக்கொண்டோம்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று இதைப் பற்றிக் கூறினோம். அதற்கு அவர்கள் “உங்களை நான் (வாகனத்தில்) ஏற்றியனுப்ப வில்லை; உங்களை அல்லாஹ்வே ஏற்றியனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு சத்தியம் செய்து அஃதல்லாத வேறொன்று அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக எனக்குத் தென்பட்டால், அந்த வெறோன்றையே செய்வேன். சத்தியத்தை முறித்து, அதற் காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.194

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7556. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ، قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ الْمُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي أَشْهُرٍ حُرُمٍ، فَمُرْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ، إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الْجَنَّةَ، وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، آمُرُكُمْ بِالإِيمَانِ بِاللَّهِ، وَهَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَتُعْطُوا مِنَ الْمَغْنَمِ الْخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ لاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالظُّرُوفِ الْمُزَفَّتَةِ، وَالْحَنْتَمَةِ "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7556. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (அப்துல் கைஸ் குலத்தாரின் நிகழ்ச்சி பற்றிக்) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் வந்து “எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இணை வைப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். ஆகவே, (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் மட்டும்தான் நாங்கள் உங்களை வந்தடைய முடியும். எனவே, சில கட்டளைகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் அவற்றின்படி செயல்பட்டால் சொர்க்கம் செல்லவும், எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அவற்றின்படி நடக்க நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்கும். (அத்தகைய கட்டளைகள் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு இடுங்கள்)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நான் உங்க ளுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளை யிடுகின்றேன். நான்கு விஷயங்களைத் தடை செய்கின்றேன். (நான் கட்டளையிடும் நான்கு விஷயங்கள் இவைதான்:)

அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்)கொள்ளும்படி உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சான்றுபகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஸகாத் கொடுப்பதும் போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

நான் நான்கு விஷயங்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன். (மது பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட) மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மண் சாடிகளில் நீங்கள் (எதையும்) அருந்தாதீர்கள்” என்று சொன்னார்கள்.195

அத்தியாயம் : 97
7557. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.196

அத்தியாயம் : 97
7558. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7558. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த (உயிரினங்களின்) உருவங் களைப் படைத்தோர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களி டம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.197

அத்தியாயம் : 97
7559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً، أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:

என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிடப் பெரிய அக்கிர மக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு தீட்டப்படாத கோதுமையையேனும் படைத்துக் காட்டட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.198

அத்தியாயம் : 97
7560. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَالَّذِي لاَ يَقْرَأُ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7560. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற இறைநம்பிக்கை யாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது, பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது.

குர்ஆனை ஓதுகின்ற பாவியின் நிலை, துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத பாவியின் நிலை, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.199

அத்தியாயம் : 97
7561. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَأَلَ أُنَاسٌ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْكُهَّانِ فَقَالَ "" إِنَّهُمْ لَيْسُوا بِشَىْءٍ "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ بِالشَّىْءِ يَكُونُ حَقًّا. قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيُقَرْقِرُهَا فِي أُذُنِ وَلِيِّهِ كَقَرْقَرَةِ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهِ أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர் களைப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகி விடுகின்றதே!” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அந்த உண்மை யான சொல், (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக்கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகின்றான்” என்று பதிலளித்தார்கள்.200

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7562. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يُحَدِّثُ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ نَاسٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ حَتَّى يَعُودَ السَّهْمُ إِلَى فُوقِهِ "". قِيلَ مَا سِيمَاهُمْ. قَالَ "" سِيمَاهُمُ التَّحْلِيقُ "". أَوْ قَالَ "" التَّسْبِيدُ "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டை யாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்கு (தானாக)த் திரும்பாதவரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

“அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள்.

அத்தியாயம் : 97