7451. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ حَبْرٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يَضَعُ السَّمَاءَ عَلَى إِصْبَعٍ، وَالأَرْضَ عَلَى إِصْبَعٍ، وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ وَالأَنْهَارَ عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الْخَلْقِ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ بِيَدِهِ أَنَا الْمَلِكُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ "" {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ}""
பாடம்: 26 “அல்லாஹ் (ஈர்ப்பு சக்தியால்) வானங்கள் மற்றும் பூமியை விழாமல் தடுத்து நிறுத்தியிருக் கின்றான்” எனும் (35:41ஆவது) இறைவசனம்
7451. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதப் பாதிரியார் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! மறுமை நாளில் அல்லாஹ் வானத்தை ஒரு விரலிலும் பூமியை ஒரு விரலிலும் மலைகளை ஒரு விரலிலும் மரம் மற்றும் நதிகளை ஒரு விரலிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரலிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தனது கரத்தால் (சைகை செய்தவாறு) ‘நானே அரசன்’ எனக் கூறுவான்” என்று சொன்னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (6:91ஆவது) வசனத்தைக் கூறினார்கள்.91

அத்தியாயம் : 97
7452. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ لَيْلَةً وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا لأَنْظُرَ كَيْفَ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ، فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ أَوْ بَعْضُهُ قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَرَأَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ} إِلَى قَوْلِهِ {لأُولِي الأَلْبَابِ} ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ، ثُمَّ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ أَذَّنَ بِلاَلٌ بِالصَّلاَةِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى لِلنَّاسِ الصُّبْحَ.
பாடம்: 27 (இறைவன்) வானங்கள் மற்றும் பூமி உள்பட எல்லாப் படைப்பு களையும் படைத்தது தொடர்பாக வந்துள்ளவை படைத்தல் என்பது வளமும் உயர்வும் மிக்க இறைவனின் செயலும் அவனது கட்டளையுமாகும். இறைவன் தன் பண்பு களால், செயலால், கட்டளையால் படைப் போனாகவும் ஆக்குவோனாகவும் இருக் கின்றான்; அவன் யாராலும் படைக்கப் பட்டவன் அல்லன். அவனது செயலால், கட்டளையால், படைப்பால், ஆக்கத்தால் உருவானவையே எல்லாச் செயல்களும் படைப்புகளும் சிருஷ்டிகளும் ஆகும்.
7452. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில், இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒருநாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத் தூங்கிவிட்டார்கள்.

‘இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு- பகல் மாறி மாறிவருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன” எனும் (3:190 ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பிறகு, பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள்.

பின்னர் பிலால் (ரலி) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு அழைப்புக்கொடுத்தார்கள். உடனே இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதுவிட்டுப் புறப்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தார்கள்.92

அத்தியாயம் : 97
7453. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَمَّا قَضَى اللَّهُ الْخَلْقَ كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ، إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي "".
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7453. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளை படைத்த போது தன்னிடமுள்ள அரியணையின் (அர்ஷின்) மேலே ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று தன்னிடம் எழுதி வைத்துக் கொண்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.93

அத்தியாயம் : 97
7454. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ "" إِنَّ خَلْقَ أَحَدِكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا وَأَرْبَعِينَ لَيْلَةً، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَهُ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَهُ، ثُمَّ يُبْعَثُ إِلَيْهِ الْمَلَكُ فَيُؤْذَنُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيَكْتُبُ رِزْقَهُ وَأَجَلَهُ وَعَمَلَهُ وَشَقِيٌّ أَمْ سَعِيدٌ ثُمَّ يَنْفُخُ فِيهِ الرُّوحَ، فَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى لاَ يَكُونُ بَيْنَهَا وَبَيْنَهُ إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ، وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهَا وَبَيْنَهُ إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا "".
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7454. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படு கின்றன:

அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனது வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) நற்பேறற்றவரா; அல்லது நற்பேறுபெற்றவரா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார்.

பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயல்களை செய்துகொண்டேயிருப்பார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து, அதன் விளைவாக நரகம் புகுந்துவிடுவார்.

(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரகவாசிகளின் செயலை செய்து கொண்டேயிருப்பார். இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும். அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் (நற்)செயல்களைச் செய்து, அதன் விளைவாக சொர்க்கம் புகுவார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.94

அத்தியாயம் : 97
7455. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَا جِبْرِيلُ مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا "". فَنَزَلَتْ {وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} إِلَى آخِرِ الآيَةِ. قَالَ هَذَا كَانَ الْجَوَابَ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7455. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள். அப்போதுதான், “(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவ தில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமான வையே! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.

இதுவே முஹம்மத் (ஸல்) அவர் களு(டைய கேள்வி)க்குப் பதிலாக அமைந்தது.95

அத்தியாயம் : 97
7456. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرْثٍ بِالْمَدِينَةِ وَهْوَ مُتَّكِئٌ عَلَى عَسِيبٍ، فَمَرَّ بِقَوْمٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ عَنِ الرُّوحِ. فَسَأَلُوهُ فَقَامَ مُتَوَكِّئًا عَلَى الْعَسِيبِ وَأَنَا خَلْفَهُ، فَظَنَنْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ فَقَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً} فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ قَدْ قُلْنَا لَكُمْ لاَ تَسْأَلُوهُ.
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7456. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோப்பில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்)கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) “இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!” என்றார். இன்னொருவர், “இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)” என்றார்.

பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன்.

பிறகு அவர்கள், “(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். கூறுக: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்குச் சிறிதளவு அறிவே கொடுக்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் “அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!” என்றார்கள்.96

அத்தியாயம் : 97
7457. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلاَّ الْجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَاتِهِ، بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7457. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் போராடு வதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனது பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப் பேற்றுக்கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.97

அத்தியாயம் : 97
7458. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الرَّجُلُ يُقَاتِلُ حَمِيَّةً وَيُقَاتِلُ شَجَاعَةً وَيُقَاتِلُ رِيَاءً، فَأَىُّ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ "" مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا، فَهْوَ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 28 “இறைத்தூதர்களான நம் அடி யார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்தி விட்டது” எனும் (37:171ஆவது) இறைவசனம்
7458. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக்கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறாரோ அவர்தான் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.98

அத்தியாயம் : 97
7459. حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَزَالُ مِنْ أُمَّتِي قَوْمٌ ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ "".
பாடம்: 29 “நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், நாம் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்பதுதான். உடனே அது உண்டாகிவிடும்” எனும் (16:40ஆவது) இறைவசனம்
7459. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும்வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்கள்மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.99

அத்தியாயம் : 97
7460. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ، وَلاَ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ "". فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ. فَقَالَ مُعَاوِيَةُ هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ.
பாடம்: 29 “நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், நாம் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்பதுதான். உடனே அது உண்டாகிவிடும்” எனும் (16:40ஆவது) இறைவசனம்
7460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்துகொண்டேயிருப்பர். அவர்களை நம்ப மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்துகொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூற, முஆவியா (ரலி) அவர்கள், “இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்” என்றார்கள்.100

அத்தியாயம் : 97
7461. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ فَقَالَ "" لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ "".
பாடம்: 29 “நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், நாம் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்பதுதான். உடனே அது உண்டாகிவிடும்” எனும் (16:40ஆவது) இறைவசனம்
7461. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புடைசூழ (தன்னை நபி என வாதிட்ட மகா பொய்யன்) முசைலிமாவுக்கு அருகே நின்றார்கள். அப்போது (தலைமைப் பதவியை உங்களுக்குப்பின் எனக்குத் தர வேண்டும் என அவன் கேட்டான். அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “நீ இந்தப் பேரீச்சமட்டையின் துண்டை என்னிடம் கேட்டாலும் நான் அதை உனக்குத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத் தில் விதித்துள்ள கட்டளையை உன்னால் தாண்டிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால், அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்” என்று சொன்னார்கள்.101

அத்தியாயம் : 97
7462. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ حَرْثِ الْمَدِينَةِ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَرْنَا عَلَى نَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ. فَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ أَنْ يَجِيءَ فِيهِ بِشَىْءٍ تَكْرَهُونَهُ. فَقَالَ بَعْضُهُمْ لَنَسْأَلَنَّهُ. فَقَامَ إِلَيْهِ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ مَا الرُّوحُ فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَعَلِمْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ فَقَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُوا مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً}. قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرِاءَتِنَا.
பாடம்: 29 “நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், நாம் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்பதுதான். உடனே அது உண்டாகிவிடும்” எனும் (16:40ஆவது) இறைவசனம்
7462. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்துசென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் பேரீச்சமட்டை ஒன்றை ஊன்றியபடி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் “அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். அதற்கு மற்றவர் “அவரிடம் கேட்காதீர்கள்; இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்துவிடக்கூடும்” என்று சொல்ல, மற்றவர்கள் “நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்” என்று சொன்னார்கள்.

அப்போது அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து (வந்து), “அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில் எதுவும் சொல்லாமல்) மௌனமாக இருந்தார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்துகொண்டேன். “(நபியே!) உம்மிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு அறிவே வழங்கப்பட்டுள்ளது” எனும் (17:85ஆவது) இறைவசனத்தை எடுத்துரைத்தார்கள்.102

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) கூறுகிறார்கள்: (‘உங்களுக்கு’ சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக) ‘அவர்களுக்கு’ என்றுதான் எங்களது ஓதலில் உள்ளது.

அத்தியாயம் : 97
7463. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ مِنْ بَيْتِهِ إِلاَّ الْجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَتِهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ إِلَى مَسْكَنِهِ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ "".
பாடம்: 30 “(நபியே!) கூறுக: என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாக ஆனாலும் என் இறைவனின் வாக்குகள் வற்றுவதற்கு முன்னால் கடல் வற்றிப்போய்விடும்; மேலதிகமாக அதைப் போன்ற (கடல்) ஒன்றை நாம் உதவிக்குக் கொண்டுவந் தாலும் சரியே” எனும் (18:109 ஆவது) இறைவசனம் மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களானாலும் கடல் முழுவதும் மையானாலும் அதற்குமேல் இன்னும் ஏழு கடல்கள் இருந்தாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்துபோகமாட்டா. நிச்சயமாக, அல்லாஹ் வல்லமை மிக்கவனும் நுண்ணறிவாளனும் ஆவான். (31:27) உங்கள் இறைவனாகிய அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அரியணையில் (ஆட்சியில்) அமர்ந்தான். அவன் இரவால் பகலை மூடுகின்றான். மேலும், அவ்விரவு பகலை விரைவாகப் பின் தொடர்கிறது. அவனே சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. படைத்தலும் பணித்தலும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் வளம் மிக்கவன் ஆவான். (7:54)
7463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே தமது வீட்டைவிட்டுப் புறப்பட்டு, அவனது பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான்; அல்லது அவர் அடைந்துகொண்ட நன்மையுடன் அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103

அத்தியாயம் : 97
7464. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَعَوْتُمُ اللَّهَ فَاعْزِمُوا فِي الدُّعَاءِ، وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللَّهَ لاَ مُسْتَكْرِهَ لَهُ "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7464. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை புரியும்போது வலியுறுத்திக் கேளுங்கள். நீ விரும்பினால் எனக்குக் கொடு என்று கேட்காதீர்கள். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அல்லாஹ்வை நிர்பந்திப்ப வர் எவருமில்லை.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106

அத்தியாயம் : 97
7465. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي عَبْدُ الْحَمِيدِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَالَ لَهُمْ "" أَلاَ تُصَلُّونَ "". قَالَ عَلِيٌّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ قُلْتُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُهُ وَهْوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ وَيَقُولُ "" {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً}""
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7465. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு(நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில்தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்” என்று சொன்னேன்.

நான் இவ்வாறு சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். திரும்பிச் சென்ற நபி (ஸல்) அவர்கள் தமது தொடையில் தட்டிக்கொண்டே “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன்.107

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7466. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ خَامَةِ الزَّرْعِ، يَفِيءُ وَرَقُهُ مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ تُكَفِّئُهَا، فَإِذَا سَكَنَتِ اعْتَدَلَتْ، وَكَذَلِكَ الْمُؤْمِنُ يُكَفَّأُ بِالْبَلاَءِ، وَمَثَلُ الْكَافِرِ كَمَثَلِ الأَرْزَةِ صَمَّاءَ مُعْتَدِلَةً حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7466. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாணல் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறைநம்பிக் கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப்படுகிறார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும்போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.108

அத்தியாயம் : 97
7467. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ قَائِمٌ عَلَى الْمِنْبَرِ "" إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ، كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُعْطِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ، فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُعْطِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ، فَعَمِلُوا بِهِ حَتَّى صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُعْطِيتُمُ الْقُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، قَالَ أَهْلُ التَّوْرَاةِ رَبَّنَا هَؤُلاَءِ أَقَلُّ عَمَلاً وَأَكْثَرُ أَجْرًا. قَالَ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَىْءٍ قَالُوا لاَ. فَقَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7467. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து (உரையாற்றியபோது) சொன்னார்கள்:

உங்களுக்குமுன் சென்ற சமுதாயத்தாருடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்து விட்டார்கள். (கூலியாக) ஒவ்வொரு வருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது.

பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்கள் (கூலியாக) வழங்கப்பட்டன.

(அப்போது) ‘தவ்ராத்’ வேதக்காரர்கள் “எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்ததோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!” என்று சொன்னார்கள். அல்லாஹ், “நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.109

அத்தியாயம் : 97
7468. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الْمُسْنَدِيُّ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ فَقَالَ "" أُبَايِعُكُمْ عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلاَ تَعْصُونِي فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَأُخِذَ بِهِ فِي الدُّنْيَا فَهْوَ لَهُ كَفَّارَةٌ وَطَهُورٌ، وَمَنْ سَتَرَهُ اللَّهُ فَذَلِكَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7468. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் ஒரு குழுவினரோடு உறுதி மொழியளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்: நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்கக் கூடாது; நீங்கள் திருடக் கூடாது; நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது; உங்கள் குழந்தைகளைக் கொல்லக் கூடாது; நீங்கள் எவர்மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பக் கூடாது; நல்ல காரியத்தில் நீங்கள் எனக்கு மாறு செய்யக் கூடாது.

உங்களில் எவர் இவற்றை எல்லாம் நிறைவேற்றுகிறாரோ அவருக்குப் பிரதிபலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இம்மையிலேயே தண்டிக்கப்பட்டுவிட்டால், அது அவருக்குப் பரிகாரமும் (அவரைத்) தூய்மைப்படுத்தக்கூடியதும் ஆகும்.

அல்லாஹ் எவரது குற்றத்தை மறைத்துவிடுகின்றானோ அவரது விவகாரம் அல்லாஹ்விடமே ஒப்படைக்கப்படும். அவன் நாடினால் அவரை வேதனைப்படுத்துவான். நாடினால் அவருக்கு மன்னிப்பளிப் பான்.110

அத்தியாயம் : 97
7469. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ سُلَيْمَانَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ لَهُ سِتُّونَ امْرَأَةً فَقَالَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى نِسَائِي، فَلْتَحْمِلْنَ كُلُّ امْرَأَةٍ وَلْتَلِدْنَ فَارِسًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ، فَطَافَ عَلَى نِسَائِهِ، فَمَا وَلَدَتْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَلَدَتْ شِقَّ غُلاَمٍ. قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كَانَ سُلَيْمَانُ اسْتَثْنَى لَحَمَلَتْ كُلُّ امْرَأَةٍ مِنْهُنَّ، فَوَلَدَتْ فَارِسًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7469. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒருமுறை), “இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவு கொள்ளச் செல்வேன். ஒவ்வோரு துணைவியாரும் கர்ப்பமுற்று அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்” என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத்தான் பெற்றெடுத்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களுடைய துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, அல்லாஹ்வின் பாதையில் போரிடும் குதிரை வீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்.111

அத்தியாயம் : 97
7470. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ فَقَالَ "" لاَ بَأْسَ عَلَيْكَ طَهُورٌ، إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ قَالَ الأَعْرَابِيُّ طَهُورٌ، بَلْ هِيَ حُمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ الْقُبُورَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَنَعَمْ إِذًا "".
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7470. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) கிராமவாசி ஒருவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். “கவலைப்படாதீர்கள்! (உமது நோய்) அல்லாஹ் நாடினால் (உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி “தூய்மைப்படுத்துமா? (இல்லை.) மாறாக, வயதான கிழவனைப் பீடிக்கின்ற கொதிக்கும் காய்ச்சல் ஆகும். அந்தக் காய்ச்சல் இவனை மண்ணறைகளைச் சந்திக்க வைத்துவிடும்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் சரி (அவ்வாறுதான் ஆகும்)” என்று சொன்னார்கள்.112

அத்தியாயம் : 97