7411. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَدُ اللَّهِ مَلأَى لاَ يَغِيضُهَا نَفَقَةٌ، سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ـ وَقَالَ ـ أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ ـ وَقَالَ ـ عَرْشُهُ عَلَى الْمَاءِ وَبِيَدِهِ الأُخْرَى الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ "".
பாடம்: 19 “நான் என் கரங்களால் படைத்த வருக்குச் சிரம்பணிய விடாமல் உன்னைத் தடுத்தது எது?” எனும் (38:75ஆவது) இறைவசனம்
7411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது; வாரிவழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப்போல் அது தன் அருள் மழையைப்) பொழிந்துகொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்துவிடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?. (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியணை (அர்ஷ்), நீரின் மீது இருந்தது. அவனது இன்னொரு கரத்தில் தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; அவனே உயர்த்துகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49

அத்தியாயம் : 97
7412. حَدَّثَنَا مُقَدَّمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي عَمِّي الْقَاسِمُ بْنُ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ اللَّهَ يَقْبِضُ يَوْمَ الْقِيَامَةِ الأَرْضَ وَتَكُونُ السَّمَوَاتُ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ ". رَوَاهُ سَعِيدٌ عَنْ مَالِكٍ.
பாடம்: 19 “நான் என் கரங்களால் படைத்த வருக்குச் சிரம்பணிய விடாமல் உன்னைத் தடுத்தது எது?” எனும் (38:75ஆவது) இறைவசனம்
7412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனது வலக் கரத்தில் இருக்கும். பிறகு “நானே அரசன்” என்று சொல்வான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.50

அத்தியாயம் : 97
7413. وَقَالَ عُمَرُ بْنُ حَمْزَةَ سَمِعْتُ سَالِمًا سَمِعْتُ ابْنَ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا. وَقَالَ أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقْبِضُ اللَّهُ الأَرْضَ ".
பாடம்: 19 “நான் என் கரங்களால் படைத்த வருக்குச் சிரம்பணிய விடாமல் உன்னைத் தடுத்தது எது?” எனும் (38:75ஆவது) இறைவசனம்
7413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன் கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்தியாயம் : 97
7414. حَدَّثَنَا مُسَدَّدٌ، سَمِعَ يَحْيَى بْنَ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ يَهُودِيًّا، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ. فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ}. قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَزَادَ فِيهِ فُضَيْلُ بْنُ عِيَاضٍ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبِيدَةَ عَنْ عَبْدِ اللَّهِ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَعَجُّبًا وَتَصْدِيقًا لَهُ.
பாடம்: 19 “நான் என் கரங்களால் படைத்த வருக்குச் சிரம்பணிய விடாமல் உன்னைத் தடுத்தது எது?” எனும் (38:75ஆவது) இறைவசனம்
7414. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ‘நானே அரசன்’ என்று கூறுவான்” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, “அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த யூதரின் சொல்லைக் கேட்டு வியப்படைந்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் சிரித்தார்கள்”.51

அத்தியாயம் : 97
7415. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ الْكِتَابِ فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ، وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَالْخَلاَئِقَ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَنَا الْمَلِكُ. فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ}
பாடம்: 19 “நான் என் கரங்களால் படைத்த வருக்குச் சிரம்பணிய விடாமல் உன்னைத் தடுத்தது எது?” எனும் (38:75ஆவது) இறைவசனம்
7415. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல் காசிமே! (மறுமையில்) அல்லாஹ் வானங்களை ஒரு விரலின் மீதும் பூமிகளை ஒரு விரலின் மீதும் மரத்தையும் ஈரமண்ணையும் ஒரு விரலின் மீதும், (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு, ‘நானே அரசன்; நானே அரசன்’ எனக் கூறுவான்” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, “அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டி னார்கள்.52

அத்தியாயம் : 97
7416. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ عَنِ الْمُغِيرَةِ، قَالَ قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ لَوْ رَأَيْتُ رَجُلاً مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ. فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" تَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، وَاللَّهِ لأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي، وَمِنْ أَجْلِ غَيْرَةِ اللَّهِ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْعُذْرُ مِنَ اللَّهِ، وَمِنْ أَجْلِ ذَلِكَ بَعَثَ الْمُبَشِّرِينَ وَالْمُنْذِرِينَ وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ وَمِنْ أَجْلِ ذَلِكَ وَعَدَ اللَّهُ الْجَنَّةَ "". وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ "" لاَ شَخْصَ أَغْيَرُ مِنَ اللَّهِ "".
பாடம்: 20 “அல்லாஹ்வைவிடவும் ரோஷ முள்ளவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இந்த ஹதீஸை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
7416. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று சொல்ல, இந்தச் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது.

அப்போது அவர்கள், “சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால்தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் (ஆபாசங்கள்) அனைத்தையும் தடை செய்துவிட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகின்றவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. அதனால்தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமில்லை. அதனால்தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்.53

அத்தியாயம் : 97
7417. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِرَجُلٍ "" أَمَعَكَ مِنَ الْقُرْآنِ شَىْءٌ "". قَالَ نَعَمْ سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا. لِسُوَرٍ سَمَّاهَا.
பாடம்: 21 (நபியே!) “மிக வலுவான சாட்சியம் எது? என்று (அவர்களிடம்) நீர் கேட்பீராக! அல்லாஹ்வே (வலு வான சாட்சி ஆவான். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியாக இருக்கின்றான்” என்று நீர் கூறுவீராக! (எனும் 6:19ஆவது இறைவசனம்) இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிடு கின்றான். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பண்புகளில் அடங்கும் அவனது உரையான குர்ஆனைப் பற்றி ஒரு பொருள் (ஷைஉ) என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவனது (திரு)முகத்தைத் தவிர அனைத்துப் பொருட்களும் அழியக்கூடியவைதான். (28:88)54
7417. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “குர்ஆனிலிருந்து உங்களுடன் (மனனமாக) ஏதேனும் ஒன்று (ஷைஉ) இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அம்மனிதர் “ஆம். இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்” என்று சில அத்தியாயங்களைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னார்.55

அத்தியாயம் : 97
7418. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ إِنِّي عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَبِلْنَا. جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الأَمْرِ مَا كَانَ. قَالَ "" كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ قَبْلَهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ "". ثُمَّ أَتَانِي رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ فَانْطَلَقْتُ أَطْلُبُهَا، فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا، وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7418. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூ தமீம் குலத் தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று சொன்னார் கள். அதற்கு அவர்கள், “எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட் டும்! தர்மம்) கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டான தன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான்; அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பேரண்டத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, “இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது” என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்குமுன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57

அத்தியாயம் : 97
7419. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ يَمِينَ اللَّهِ مَلأَى لاَ يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فَإِنَّهُ لَمْ يَنْقُصْ مَا فِي يَمِينِهِ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ وَبِيَدِهِ الأُخْرَى الْفَيْضُ ـ أَوِ الْقَبْضُ ـ يَرْفَعُ وَيَخْفِضُ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பி யுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போதுவரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல் லுங்கள். அதுவும்கூட அவனது வலக் கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை.

(வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனது மற்றொரு கரத்தில் ‘கொடைப் பொழிவு’ அல்லது ‘கொடைக் குறைவு’ உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகின்றான்; (சிலரைத்) தாழ்த்துகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.58

அத்தியாயம் : 97
7420. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ زَيْدُ بْنُ حَارِثَةَ يَشْكُو فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اتَّقِ اللَّهَ، وَأَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ "". قَالَتْ عَائِشَةُ لَوْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَاتِمًا شَيْئًا لَكَتَمَ هَذِهِ. قَالَ فَكَانَتْ زَيْنَبُ تَفْخَرُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ زَوَّجَكُنَّ أَهَالِيكُنَّ، وَزَوَّجَنِي اللَّهُ تَعَالَى مِنْ فَوْقِ سَبْعِ سَمَوَاتٍ. وَعَنْ ثَابِتٍ {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ} نَزَلَتْ فِي شَأْنِ زَيْنَبَ وَزَيْدِ بْنِ حَارِثَةَ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7420. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் மனைவியின் (ஸைனப்) போக்கு குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச்செய்” என்று கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37ஆவது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள்.

இதன் காரணத்தால் ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக்கொள்வார்கள். “உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழு வானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக்கொடுத்தான்” என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டீர்” எனும் (33:37ஆவது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி (ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது)தான் அருளப்பெற்றது” என்று அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.59

அத்தியாயம் : 97
7421. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ آيَةُ الْحِجَابِ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَأَطْعَمَ عَلَيْهَا يَوْمَئِذٍ خُبْزًا وَلَحْمًا وَكَانَتْ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ تَقُولُ إِنَّ اللَّهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7421. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் விஷயத்தில்தான் அருளப்பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (‘வலீமா’ விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: “அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்து வைத்தான்” என்று சொல்வார்கள்.

அத்தியாயம் : 97
7422. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ لَمَّا قَضَى الْخَلْقَ كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7422. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (படைப்புகளைப்) படைக் கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியணைக்கு மேலே, “என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது” என்று எழுதினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60

அத்தியாயம் : 97
7423. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ، فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ. قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ، كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்)செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தனது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்குமேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியணை (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள்.61

அத்தியாயம் : 97
7424. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ ـ هُوَ التَّيْمِيُّ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ "" يَا أَبَا ذَرٍّ هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ "". قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّهَا تَذْهَبُ تَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا، وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ. فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا "". ثُمَّ قَرَأَ {ذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا} فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7424. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். அவர்கள், “இது இறைவனுக்கு (அவனது அரியணைக்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், “நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்” என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும்.

உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதிநாளில்) உதயமாகும்” என்று சொல்லிவிட்டு, “அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்” (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது ஓதல் முறைப்படி (36:38ஆவது வசனத்தை) ஓதினார்கள்.62

அத்தியாயம் : 97
7425. حَدَّثَنَا مُوسَى، عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرِهِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} حَتَّى خَاتِمَةِ بَرَاءَةٌ. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، بِهَذَا وَقَالَ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7425. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். ஆகவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான அபூகுஸைமா (ரலி) அவர்களிடம் கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை.

அந்த இறுதிப் பகுதி, “உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்” என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான ‘அவனே மகத்தான அரியணையின் அதிபதி ஆவான்’ என்பது)வரை உள்ளதாகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.63

அத்தியாயம் : 97
7426. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ عِنْدَ الْكَرْبِ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيمُ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7426. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, “லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்” (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை; மகத்தான அரியணையின் அதிபதி யான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியணையின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள்.64

அத்தியாயம் : 97
7427. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ ".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7427. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மக்கள் மயக்க மடைந்துவிடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழும் போது) மூசாவின் அருகில் இருப்பேன். அவர் (இறை) அரியணையின் கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.65

அத்தியாயம் : 97
7428. وَقَالَ الْمَاجِشُونُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ ".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7428. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்போது நான்தான் முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்ட வனாக இருப்பேன். அப்போது மூசா (இறை) அரியணையைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66

அத்தியாயம் : 97
7429. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْعَصْرِ وَصَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ بِكُمْ فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து (இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்த வர்கள் (வானத்திற்கு) ஏறிச்செல்கின் றார்கள்.

அவர்களிடம் அல்லாஹ் “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே- கேட்கின்றான். “அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69

அத்தியாயம் : 97
7430. وَقَالَ خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلاَّ الطَّيِّبُ، فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "". وَرَوَاهُ وَرْقَاءُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلاَّ الطَّيِّبُ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம்பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறாரோ அ(வரது தர்மத்)தை அல்லாஹ் தன் வலக் கரத்தால் ஏற்றுக்கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும்- பிறகு அதை, உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவுக்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச்செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.70

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97