741. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا وَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ رُكُوعُكُمْ وَلاَ خُشُوعُكُمْ، وَإِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي "".
பாடம் : 88
தொழுகையில் உள்ளச்சத்துட னும் அடக்கத்துடனும் இருப் பது
741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் முன்னோக்கும் திசை இதுதான் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது குனிதலும் (ருகூவும்) உங்களது பணிவும் எனக்குத் தெரியாமல்போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் நிச்சயமாக உங்களை நான் காண்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10

742. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَاللَّهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِي ـ وَرُبَّمَا قَالَ مِنْ بَعْدِ ظَهْرِي ـ إِذَا رَكَعْتُمْ وَسَجَدْتُمْ "".
பாடம் : 88
தொழுகையில் உள்ளச்சத்துட னும் அடக்கத்துடனும் இருப் பது
742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருகூஉவையும் சஜ்தாவையும் நிறை வாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ‘எனக்குப் பின்புறமாக’ அல்லது ‘என் முதுகுக்குப் பின்புறமாக’ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் நிச்சயமாக உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

743. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ ـ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ}
பாடம் : 89
முதல் தக்பீர் கூறியபின் ஓத வேண்டியவை
743. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...’ என ஓதியே தொழுகையை ஆரம்பிப்பார்கள்.39

744. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً ـ قَالَ أَحْسِبُهُ قَالَ هُنَيَّةً ـ فَقُلْتُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ "" أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ "".
பாடம் : 89
முதல் தக்பீர் கூறியபின் ஓத வேண்டியவை
744. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.
-(இதன் இரண்டாவது அறிவிப்பாள ரான) அபூஸர்ஆ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ‘சிறிது நேரம்’ (ஹுனய்யத்) என்று சொன்ன தாகவே நான் கருதுகிறேன்.-
(தொடர்ந்து) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட் டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் “நான், ‘அல்லாஹும்ம பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்’ என்று கூறுகிறேன்” என்றார்கள்.40
(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கி-ருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவு வாயாக!)

745. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الْكُسُوفِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ ثُمَّ رَفَعَ فَسَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ ثُمَّ انْصَرَفَ فَقَالَ "" قَدْ دَنَتْ مِنِّي الْجَنَّةُ حَتَّى لَوِ اجْتَرَأْتُ عَلَيْهَا لَجِئْتُكُمْ بِقِطَافٍ مِنْ قِطَافِهَا، وَدَنَتْ مِنِّي النَّارُ حَتَّى قُلْتُ أَىْ رَبِّ وَأَنَا مَعَهُمْ فَإِذَا امْرَأَةٌ ـ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ تَخْدِشُهَا هِرَّةٌ قُلْتُ مَا شَأْنُ هَذِهِ قَالُوا حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، لاَ أَطْعَمَتْهَا، وَلاَ أَرْسَلَتْهَا تَأْكُلُ "". قَالَ نَافِعٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ "" مِنْ خَشِيشِ أَوْ خُشَاشِ الأَرْضِ "".
பாடம் : 90
745. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉ வி-ருந்து நிமிர்ந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவி-ருந்து) நிமிர்ந்துவிட்டுப் பிறகு (சஜ்தா விற்குச் சென்று) நீண்ட நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பின்பு (முதல் சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திவிட்டுப் பிறகு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள்.
பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவி-ருந்து தலையை) உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு குனிந்து நீண்ட நேரம் (மறுபடியும்) ருகூஉ செய்தார்கள். பிறகு (ருகூவி-ருந்து தலையை) உயர்த்தி சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் (தலையை) உயர்த்திவிட்டு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் கூறினார்கள்:
(நான் தொழுதுகொண்டிருந்தபோது) சொர்க்கம் என்னை நெருங்கி வந்தது; எனக்குச் சக்தியிருந்திருக்குமானால் அதன் பழக்குலைகளில் ஒன்றை நான் (பறித்து) உங்களிடம் தந்திருப்பேன். நரகமும் என்னை நெருங்கி வந்தது. எந்த அளவுக்கென்றால், “இறைவா! நானும் இ(ந்த நரகத்தி-ருப்ப)வர்களுடன் இருக்கப் போகிறேனா?” என்று நான் (மருண்டு போய்க்)கேட்டேன்.
அ(ந்த நரகத்)தில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக்கொண்டிருந்தது. “இவளுக்கு என்ன நேர்ந்தது (ஏன் இவள் இவ்வாறு வேதனை செய்யப்படுகிறாள்)?” என்று நான் கேட்டேன். அதற்கு அ(ங்கி ருந்த வான)வர்கள், “இந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும்வரை இந்தப் பெண் அடைத்துவைத்திருந்தாள். அதற்கு, தானும் உணவளிக்கவில்லை; அது பூமி யிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை” என்று பதிலளித்தனர்.41

746. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.
பாடம் : 91
தொழும்போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்துவது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்தபோது, “நான் பின்னே செல்வதைப் போன்று என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.42
746. அபூமஅமர் (அப்துல்லாஹ் பின் சக்பரா அல்அஸ்தீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகை யிலும் (கூடுதல் அத்தியாயம்) ஓதுவார் களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.
“அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, “அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்துகொண்டோம்.)” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

747. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، يَخْطُبُ قَالَ حَدَّثَنَا الْبَرَاءُ، وَكَانَ، غَيْرَ كَذُوبٍ أَنَّهُمْ كَانُوا إِذَا صَلَّوْا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامُوا قِيَامًا حَتَّى يَرَوْنَهُ قَدْ سَجَدَ.
பாடம் : 91
தொழும்போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்துவது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்தபோது, “நான் பின்னே செல்வதைப் போன்று என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.42
747. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் உரையாற்றியபோது கூறியதாவது:
உண்மைக்குப் புறம்பாகப் பேசாத வரான பராஉ (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் ருகூஉவி-ருந்து (தலையை) உயர்த்தி சஜ்தாவுக்குச் சென்றுவிட்டதைப் பார்க்காத வரை நாங்கள் (சஜ்தாவுக்குச் செல்லாமல்) நின்றுகொண்டேயிருப்போம்.

748. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى، قَالُوا يَا رَسُولَ اللَّهِ، رَأَيْنَاكَ تَنَاوَلُ شَيْئًا فِي مَقَامِكَ، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. قَالَ "" إِنِّي أُرِيتُ الْجَنَّةَ، فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا، وَلَوْ أَخَذْتُهُ لأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا "".
பாடம் : 91
தொழும்போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்துவது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்தபோது, “நான் பின்னே செல்வதைப் போன்று என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.42
748. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (அதற்காக) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகை) தொழு(வித்)தார்கள். (தொழுகை முடிந்ததும்) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டி ருக்கையில்) எதையோ எடுக்க முயன்ற தைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சி யி-ருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே (அது ஏன்?)” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்குச் சொர்க்கம் எடுத்துக்காட்டப் பட்டது. அதி-ருந்து ஒரு (பழக்) குலையைப் எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் அதை நீங்கள் உண்டிருப்பீர் கள்” என்று கூறினார்கள்.43

749. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّى لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ رَقَا الْمِنْبَرَ، فَأَشَارَ بِيَدَيْهِ قِبَلَ قِبْلَةِ الْمَسْجِدِ ثُمَّ قَالَ "" لَقَدْ رَأَيْتُ الآنَ مُنْذُ صَلَّيْتُ لَكُمُ الصَّلاَةَ الْجَنَّةَ وَالنَّارَ مُمَثَّلَتَيْنِ فِي قِبْلَةِ هَذَا الْجِدَارِ، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ "" ثَلاَثًا.
பாடம் : 91
தொழும்போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்துவது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்தபோது, “நான் பின்னே செல்வதைப் போன்று என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.42
749. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஒரு தொழுகையை)த் தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி பள்ளிவாச-ன் கிப்லா திசையில் சைகை செய்தவாறு, “உங்களுக்கு நான் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது இந்த (முன்) சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் தோற்றம் காட்சியளிப்பதைக் கண்டேன். நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று போல் என்றும் நான் கண்டதில்லை” என மூன்று முறை கூறினார்கள்.44

750. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُمْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ "". فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ حَتَّى قَالَ "" لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ "".
பாடம் : 92
தொழுதுகொண்டிருக்கும்போது வானத்தை ஏறெடுத்துப் பார்ப்பது
750. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “சில மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தொழும்போது அவர்கள் வானத்தை நோக்கித் தமது பார்வையை உயர்த்துகின்றனர்!” என்று கூறினார்கள்.
இவ்வாறு செய்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் வன்மையாகவே கண்டித்தார் கள்; “இதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டார்கள்.

751. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ فَقَالَ "" هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ الْعَبْدِ "".
பாடம் : 93
தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது
751. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது தொடர்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாரின் தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று கூறினார்கள்.

752. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ فَقَالَ "" شَغَلَتْنِي أَعْلاَمُ هَذِهِ، اذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ "".
பாடம் : 93
தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்ப்பது
752. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையொன்றை அணிந்து தொழுதார் கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்தபோது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப் பாடுகள் (தொழுகையி-ருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டன. இதை, (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, (அபூஜஹ்மிடமிருக்கும் வேலைப் பாடுகளற்ற) ‘அன்பிஜான்’ (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்” என்று கூறினார்கள்.

753. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، وَهْوَ يُصَلِّي بَيْنَ يَدَىِ النَّاسِ، فَحَتَّهَا ثُمَّ قَالَ حِينَ انْصَرَفَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ، فَلاَ يَتَنَخَّمَنَّ أَحَدٌ قِبَلَ وَجْهِهِ فِي الصَّلاَةِ "". رَوَاهُ مُوسَى بْنُ عُقْبَةَ وَابْنُ أَبِي رَوَّادٍ عَنْ نَافِعٍ.
பாடம் : 94
(தொழும்போது) ஒருவர் தமக்கு ஆபத்து நேரப்போவதாக உணர்ந்தாலோ, அல்லது (ஊறு விளைவிக்கும்) எதையேனும் பார்த்தாலோ, அல்லது தொழும் திசையில் எச்சிலைக் கண் டாலோ திரும்பிப் பார்க்கலாமா?
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.45
753. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குமுன் நின்று தொழுவித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிவாசலின் கிப்லா திசையி(லுள்ள சுவரி)ல் எச்சிலைக் கண்டார்கள். பின்னர் அதைச் சுரண்டிவிட்டார்கள்.
தொழுகை முடிந்ததும் (மக்களைப் பார்த்து), “உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருந்தால், அவரது முகத்துக்கெதிரே அல்லாஹ் இருக்கிறான். எனவே, தொழும்போது யாரும் தமது முகத்துக்கெதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

754. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسٌ، قَالَ بَيْنَمَا الْمُسْلِمُونَ فِي صَلاَةِ الْفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ، فَتَبَسَّمَ يَضْحَكُ، وَنَكَصَ أَبُو بَكْرٍ رضى الله عنه عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الْخُرُوجَ، وَهَمَّ الْمُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ، فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلاَتَكُمْ، فَأَرْخَى السِّتْرَ، وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ الْيَوْمِ.
பாடம் : 94
(தொழும்போது) ஒருவர் தமக்கு ஆபத்து நேரப்போவதாக உணர்ந்தாலோ, அல்லது (ஊறு விளைவிக்கும்) எதையேனும் பார்த்தாலோ, அல்லது தொழும் திசையில் எச்சிலைக் கண் டாலோ திரும்பிப் பார்க்கலாமா?
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
(இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.45
754. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்கள் இமாமாக நிற்க) முஸ்-ம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது (உடல் நலமில்லாமல் இருந்த) நபி (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களைத் திகைப்புள்ளாக்கிவிட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:)
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கித் தொழுகையில் அணிவகுத்து நின்றுகொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அறையி-ருந்து) வெளியே வர விரும்புகிறார்கள் என்று எண்ணிய அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர் களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசை யில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் வந்தார்கள். (நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தமது (கவனம் சிதறி) தொழுகையில் குழப்பம் நேர்ந்துவிடுமோ என எண்ணலாயினர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, “உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்” என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்க விட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலேயே அவர்கள் இறந்துவிட்டார்கள்.46

755. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ ـ رضى الله عنه ـ فَعَزَلَهُ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا، فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لاَ يُحْسِنُ يُصَلِّي، فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ يَا أَبَا إِسْحَاقَ إِنَّ هَؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّكَ لاَ تُحْسِنُ تُصَلِّي قَالَ أَبُو إِسْحَاقَ أَمَّا أَنَا وَاللَّهِ فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلاَةَ الْعِشَاءِ فَأَرْكُدُ فِي الأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ. قَالَ ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ. فَأَرْسَلَ مَعَهُ رَجُلاً أَوْ رِجَالاً إِلَى الْكُوفَةِ، فَسَأَلَ عَنْهُ أَهْلَ الْكُوفَةِ، وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلاَّ سَأَلَ عَنْهُ، وَيُثْنُونَ مَعْرُوفًا، حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قَالَ أَمَّا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْدًا كَانَ لاَ يَسِيرُ بِالسَّرِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَعْدِلُ فِي الْقَضِيَّةِ. قَالَ سَعْدٌ أَمَا وَاللَّهِ لأَدْعُوَنَّ بِثَلاَثٍ، اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالْفِتَنِ، وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ. قَالَ عَبْدُ الْمَلِكِ فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنَ الْكِبَرِ، وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ.
பாடம் : 95
ஊரிலிருக்கும்போதும் பயணத் தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும், சப்தமிட்டு ஓதப்படும் மெது வாக ஓதப்படும் தொழுகைகளி லும் தொழவைக்கும் இமாமும் பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங் களை) ஓதியாக வேண்டும்.
755. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபாவாசிகள் (சிலர் கலீஃபா) உமர்
(ரலி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே, (அது குறித்து தீர விசாரித்த) உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை (பதவியி-ருந்து) நீக்கிவிட்டு, அம்மார்
(ரலி) அவர்களை கூஃபாவாசிகளுக்கு அதிகாரியாக நியமித்தார்கள்.
சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து, “அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழவைப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)” என்று கேட்டார்கள்.
அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ்-ர-) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டிய முறைப் படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுதுகாட்டி யதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷா தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.47
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அபூஇஸ்ஹாக்! உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே” என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ‘ஒருவரை’ அல்லது ‘சிலரை’ சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பி வைத்து, சஅத் (ரலி) அவர்கள் தொடர்பாக கூஃபாவாசிகளிடம் விசாரணை நடத்தி னார்கள்.
விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசி களிடம் விசாரணை மேற்கொண்டார். (கூஃபாவி-ருந்த) ஒரு பள்ளிவாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத்
(ரலி) அவர்களை மெச்சி நல்ல வித மாகவே கூறினர்.
இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது, அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:
“சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிடமாட்டார். தீர்ப்பு அளிக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்” என்று (குறை) கூறினார்.
இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகளை நான் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய குற்றச்சாட்டில்) பொய் சொல்-யிருந்தால், பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால், அவரது வாழ்நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி)விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்
ம-க் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் (சஅத் அவர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக் கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது” என்று கூறுவார்.
அப்துல் ம-க் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னா(ளி)ல் அவரை நான் பார்த்தி ருக்கிறேன். முதுமையினால் அவருடைய புருவங்கள் அவருடைய கண்கள்மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களைத் துன்புறுத்துவார்.

756. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ "".
பாடம் : 95
ஊரிலிருக்கும்போதும் பயணத் தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும், சப்தமிட்டு ஓதப்படும் மெது வாக ஓதப்படும் தொழுகைகளி லும் தொழவைக்கும் இமாமும் பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங் களை) ஓதியாக வேண்டும்.
756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது.48
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

757. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ وَقَالَ "" ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ "". فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ "" ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. فَقَالَ "" إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا "".
பாடம் : 95
ஊரிலிருக்கும்போதும் பயணத் தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும், சப்தமிட்டு ஓதப்படும் மெது வாக ஓதப்படும் தொழுகைகளி லும் தொழவைக்கும் இமாமும் பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங் களை) ஓதியாக வேண்டும்.
757. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த்தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (குனிந்ததும் நிமிர்ந்துவிடாமல்) நன்கு நிலை கொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்த நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக!
பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! இதையே (இதே வழிமுறையையே) உம்முடைய எல்லாத் தொழுகை களிலும் கடைப்பிடிப்பீராக!49

758. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ سَعْدٌ كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَتَىِ الْعَشِيِّ لاَ أَخْرِمُ عَنْهَا، أَرْكُدُ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ ذَلِكَ الظَّنُّ بِكَ.
பாடம் : 95
ஊரிலிருக்கும்போதும் பயணத் தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும், சப்தமிட்டு ஓதப்படும் மெது வாக ஓதப்படும் தொழுகைகளி லும் தொழவைக்கும் இமாமும் பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங் களை) ஓதியாக வேண்டும்.
758. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவாசிகள் கூறிய புகாருக்கு) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டிய முறைப்படியே நான் (கூஃபாவாசிகளான) அவர்களுக்கு மாலைத் தொழுகை(களான லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இரண்டையும் தொழுவித்து வந்தேன். (நபி-ஸல்) அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிட வில்லை; முதல் இரண்டு ரக்அத்களிலும் நான் நீளமாக ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன்” என்று (விளக்கம்) கூறினார்கள்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி நமது எண்ணமும் அதுவே!” என்று கூறினார்கள்.

759. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، يُطَوِّلُ فِي الأُولَى، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيُسْمِعُ الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يَقْرَأُ فِي الْعَصْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى، وَكَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الصُّبْحِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ.
பாடம் : 96
லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்கள்) ஓதுதல்
759. அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ர-) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும் (ஒரு ரக்அத்தில் ஓர் அத்தியாயம் வீதம்) வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். (அவ்விரு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்.
அஸ்ர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) அல்ஃபாத்திஹா அத்தியாத்தையும் வேறு இரு அத்தி யாயங்களையும் ஓதுவார்கள். முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். அவ்வாறே, சுப்ஹு தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள்.

760. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.
பாடம் : 96
லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்கள்) ஓதுதல்
760. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதுவார்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.
“அ(வர்கள் மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்துகொண்டிருந் தீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அவர்களது தாடி அசைவதை வைத்து (அறிந்துகொண்டோம்)” என்று பதிலளித்தார்கள்.