7146. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ الرَّحْمَنِ لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ يَمِينَكَ، وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ "".
பாடம்: 5 ஆட்சியதிகாரத்தை (விரும்பிக்) கேட்காதவருக்கு (அது வழங்கப் பட்டால்) அதற்காக அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான்.
7146. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்.

நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)திற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்” என்று சொன்னார்கள்.13

அத்தியாயம் : 93
7147. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ، وَكَفِّرْ عَنْ يَمِينِكَ "".
பாடம்: 6 ஆட்சியதிகாரத்தைக் கேட்டுப் பெறுபவர் அதோடு (தனியாக) விடப்படுவார்.
7147. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துர் ரஹ்மான் பின் சமுரா! ஆட்சித் தலைமையை (நீங்களாக)க் கேட்காதீர்கள். கேட்டு அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதோடு (தனியாக) விடப்படுவீர்கள். (இறையுதவி உங்களுக்குக் கிடைக்காது. நீங்களாகக்) கேட்காமல் அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (இறைவனின்) உதவி கிடைக்கும்.

நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால், சிறந்தது எதுவோ அதைச் செய்துவிட்டு, உங்களது சத்தியத்(தை முறித்த)திற்காகப் பரிகாரம் செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.14

அத்தியாயம் : 93
7148. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ "". وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَوْلَهُ.
பாடம்: 7 ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்ட தாகும்.
7148. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி(ப்பால்)தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப்பாலை நிறுத்துவது)தான் மோசமானது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 93
7149. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ. وَقَالَ الآخَرُ مِثْلَهُ. فَقَالَ "" إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ "".
பாடம்: 7 ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்ட தாகும்.
7149. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ் விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 93
7150. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنِ الْحَسَنِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ، عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلاَّ لَمْ يَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ "".
பாடம்: 8 குடிமக்களின் பொறுப்பு அளிக்கப் பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?
7150. ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்) மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்ப தற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 93
7151. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، قَالَ زَائِدَةُ ذَكَرَهُ عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ أَتَيْنَا مَعْقِلَ بْنَ يَسَارٍ نَعُودُهُ فَدَخَلَ عُبَيْدُ اللَّهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ أُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنَ الْمُسْلِمِينَ، فَيَمُوتُ وَهْوَ غَاشٌّ لَهُمْ، إِلاَّ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ "".
பாடம்: 8 குடிமக்களின் பொறுப்பு அளிக்கப் பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?
7151. ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்:

“முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 93
7152. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنِ طَرِيفٍ أَبِي تَمِيمَةَ، قَالَ شَهِدْتُ صَفْوَانَ وَجُنْدَبًا وَأَصْحَابَهُ وَهْوَ يُوصِيهِمْ فَقَالُوا هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا قَالَ سَمِعْتُهُ يَقُولُ "" مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ ـ وَمَنْ يُشَاقِقْ يَشْقُقِ اللَّهُ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ "". فَقَالُوا أَوْصِنَا. فَقَالَ"" إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الإِنْسَانِ بَطْنُهُ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ لاَ يَأْكُلَ إِلاَّ طَيِّبًا فَلْيَفْعَلْ، وَمَنِ اسْتَطَاعَ أَنْ لاَ يُحَالَ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ بِمِلْءِ كَفِّهِ مِنْ دَمٍ أَهْرَاقَهُ فَلْيَفْعَلْ "". قُلْتُ لأَبِي عَبْدِ اللَّهِ مَنْ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جُنْدَبٌ قَالَ نَعَمْ جُنْدَبٌ.
பாடம்: 9 (மக்களை) யார் சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.
7152. தரீஃப் அபீதமீமா பின் முஜாலித் அல்ஹுஜைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள், ஸஃப்வான் (பின் முஹ்ரிஸ் -ரஹ்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களுடைய தோழர்களும், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்க ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள்:

யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக் கத்தை) அல்லாஹ் மறுமை நாளில் விளம் பரப்படுத்துவான்.15 யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள் ளாக்குவான்.

அப்போது நண்பர்கள், “எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்க, ஜுன்தப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்தபிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனது வயிறுதான். ஆகவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

(ஃபர்பரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

நான் அபூஅப்தில்லாஹ் (புகாரீ-ரஹ்) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொல்பவர் யார்? ஜுன்தப் (ரலி) அவர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; ஜுன்தப் (ரலி) அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 93
7153. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم خَارِجَانِ مِنَ الْمَسْجِدِ فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا أَعْدَدْتَ لَهَا "" فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ وَلاَ صَلاَةٍ وَلاَ صَدَقَةٍ، وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ "" أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ "".
பாடம்: 10 சாலையில் தீர்ப்பு வழங்குவதும் மார்க்க விளக்கம் அளிப்பதும் (நீதிபதி) யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் சாலையில் தீர்ப்பளித்தார்கள். ஷஅபீ (ரஹ்) அவர்கள் தமது வீட்டின் வாசலில் தீர்ப்பளித்தார்கள்.
7153. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் பள்ளி வாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டி ருந்தபோது பள்ளிவாசலின் முற்றத் தருகே எங்களை ஒரு மனிதர் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்துவைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப்போனவரைப் போன்று காணப்பட்டார்.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழு கையோ தானதர்மங்களோ செய்து வைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.16

அத்தியாயம் : 93
7154. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، يَقُولُ لاِمْرَأَةٍ مِنْ أَهْلِهِ تَعْرِفِينَ فُلاَنَةَ قَالَتْ نَعَمْ. قَالَ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِهَا وَهْىَ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ "" اتَّقِي اللَّهَ وَاصْبِرِي "". فَقَالَتْ إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ خِلْوٌ مِنْ مُصِيبَتِي. قَالَ فَجَاوَزَهَا وَمَضَى فَمَرَّ بِهَا رَجُلٌ فَقَالَ مَا قَالَ لَكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتْ مَا عَرَفْتُهُ قَالَ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَجَاءَتْ إِلَى بَابِهِ فَلَمْ تَجِدْ عَلَيْهِ بَوَّابًا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ مَا عَرَفْتُكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ الصَّبْرَ عِنْدَ أَوَّلِ صَدْمَةٍ "".
பாடம்: 11 நபி (ஸல்) அவர்களுக்கு வாயிற் காவலர் இருந்ததில்லை.
7154. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், “இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம் (தெரியும்)” என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், “என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்துசென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்.

அப்பெண், “எனக்கு அவர் யாரென்று தெரியாது” எனக் கூறினாள். அம்மனிதர், “அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், “பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைகொள்வதேயாகும்” என்று சொன்னார்கள்.17

அத்தியாயம் : 93
7155. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ الذُّهْلِيُّ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، مُحَمَّدٌ حَدَّثَنَا أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ، كَانَ يَكُونُ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَنْزِلَةِ صَاحِبِ الشُّرَطِ مِنَ الأَمِيرِ.
பாடம்: 12 நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சி யாளரின் (சிறப்பு) அனுமதி பெறாம லேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம்.
7155. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்சாரிகளில் ஒருவரான) கைஸ் பின் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களது அவையில்) ஆட்சித் தலை வருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டுவந்தார்கள்.18


அத்தியாயம் : 93
7156. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ قُرَّةَ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَهُ وَأَتْبَعَهُ بِمُعَاذٍ.
பாடம்: 12 நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சி யாளரின் (சிறப்பு) அனுமதி பெறாம லேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம்.
7156. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிற்கு நீதி மற்றும் நிர்வாக அதிகாரி யாக) அனுப்பினார்கள். என்னைத் தொடர்ந்து முஆத் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்.19


அத்தியாயம் : 93
7157. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا مَحْبُوبُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ رَجُلاً، أَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ، فَأَتَى مُعَاذُ بْنُ جَبَلٍ وَهْوَ عِنْدَ أَبِي مُوسَى فَقَالَ مَا هَذَا قَالَ أَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ. قَالَ لاَ أَجْلِسُ حَتَّى أَقْتُلَهُ، قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم.
பாடம்: 12 நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சி யாளரின் (சிறப்பு) அனுமதி பெறாம லேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம்.
7157. (தொடர்ந்து) அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டுப் பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். “இவருக்கு என்ன?” என்று முஆத் கேட்டார்கள். நான், “இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு யூதராகிவிட்டார்” என்று சொன்னேன்.

முஆத் (ரலி) அவர்கள், “நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காத வரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்” என்று சொன்னார்கள்.20

அத்தியாயம் : 93
7158. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، قَالَ كَتَبَ أَبُو بَكْرَةَ إِلَى ابْنِهِ وَكَانَ بِسِجِسْتَانَ بِأَنْ لاَ تَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهْوَ غَضْبَانُ "".
பாடம்: 13 நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?
7158. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான்- ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார்.- “நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்ப ளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்” (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).


அத்தியாயம் : 93
7159. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَاللَّهِ لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ، مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا. قَالَ فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ "" يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ، فَإِنَّ فِيهِمُ الْكَبِيرَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ "".
பாடம்: 13 நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?
7159. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை.

பிறகு அவர்கள், “மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்” என்று சொன்னார்கள்.21


அத்தியாயம் : 93
7160. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الْكِرْمَانِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ مُحَمَّدٌ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ أَنَّهُ، طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَتَغَيَّظَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ "" لِيُرَاجِعْهَا، ثُمَّ لْيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ فَتَطْهُرَ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا "".
பாடம்: 13 நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?
7160. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் மனைவி மாதவிடாயில் இருந்த போது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்துக் கோபமடைந்தார்கள்.

பிறகு, “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும். பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவளை மணவிலக்குச் செய்தே தீர வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அவளை மணவிலக்குச் செய்துவிடட்டும்” என்று சொன்னார்கள்.22

அத்தியாயம் : 93
7161. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كَانَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَىَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، وَمَا أَصْبَحَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَىَّ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ. ثُمَّ قَالَتْ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ مِنْ حَرَجٍ أَنْ أُطْعِمَ الَّذِي لَهُ عِيَالَنَا قَالَ لَهَا "" لاَ حَرَجَ عَلَيْكِ أَنْ تُطْعِمِيهِمْ مِنْ مَعْرُوفٍ "".
பாடம்: 14 மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி தமது சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்; ஆனால், சந்தேகமும் அவதூறும் கிளம்பும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாகாது. நபி (ஸல்) அவர்கள், ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று: உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள். (மக்களிடையே) பிரபலமாக உள்ள விஷயங்களில்தான் இது செல்லும்.23
7161. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும்விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றபிறகு) இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது” என்று கூறிவிட்டுப் பிறகு, “(என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் குழந்தைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நியாயமான அளவுக்கு (எடுத்து) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதால் உன்மீது குற்றமேதும் வராது” என்று பதிலளித்தார்கள்.24

அத்தியாயம் : 93
7162. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا. فَاتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
பாடம்: 15 முத்திரையிடப்பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரது கடிதம்தான் என்று) சாட்சியமளிப்பதும், அதில் எது செல்லும்; அல்லது செல்லாது என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எழுதும் கடிதமும் (அறிஞர் பெரு)மக்களில் சிலர், “குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் தவிர மற்ற விஷயங்களில் (நீதிபதிக்கு ஆலோசனை கூறி) ஆட்சியாளர் கடிதம் எழுதலாம்” என்று கூறினர். பிறகு அவர்களே, “தவறுதலாக நடந்துவிடும் கொலை விஷயத்தில் மட்டுமே (இப்படி ஆலோசனை கூறி ஆட்சியாளர் நீதிபதிக்குக்) கடிதம் எழுதுவது செல்லும்” என்று கூறுகிறார்கள். ஏனெனில், இது அவர்களைப் பொறுத்தவரை (இழப்பீடு வழங்க வேண்டிய) பொருள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். (ஆனால், இந்தக் கருத்து தவறானதாகும்.) ஏனென்றால், இது பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறுவதெல்லாம் கொலை நிரூபணமான பின்புதான். ஆகவே, (ஆரம்பக் கட்டத்தில்,) தவறுதலாக நடந்த கொலையானாலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையானாலும் இரண்டும் ஒன்றே. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25 உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும் உடைக்கப்பட்ட ஒரு பல் தொடர்பான வழக்கில் (தனி மனிதரின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று) தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு (ஆலோசனைகள் கூறி) கடிதம் எழுதுவது செல்லும்; எந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டதோ அவர் கடிதத்தையும் முத்திரையையும் (உண்மையானவை என) அறிந்திருந்தால் மட்டுமே செல்லும். ஷஅபீ (ரஹ்) அவர்கள் நீதிபதியிடமிருந்து தமக்கு வருகின்ற முத்திரையிடப்பட்ட கடிதத்தில் உள்ளவற்றை செயல்படுத்திவந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகிறது. முஆவியா பின் அப்தில் கரீம் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: நான் பஸ்ரா நீதிபதி அப்துல் மலிக் பின் யஅலா (ரஹ்) அவர்களை யும், இயாஸ் பின் முஆவியா (ரஹ்), ஹசன் அல்பளி (ரஹ்), ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்), பிலால் பின் அபீபுர்தா (ரஹ்), அப்துல்லாஹ் பின் புரைதா அல்அஸ்லமீ (ரஹ்), ஆமிர் பின் அபீதா (ரஹ்), அப்பாத் பின் மன்ஸூர் (ரஹ்) ஆகியோரையும் கண்டுள்ளேன். அவர்கள் ‘சாட்சிகள் ஆஜராகாமலேயே நீதிபதிகளின் கடிதங்களை (விசாரணை முடிவுகளை) ஆதாரமாகக் கொள்ளலாம்’ என அனுமதித்துள்ளனர். ‘இக்கடிதம் போலியானது’ என யாருக்கெதிராகக் கடிதம் வந்ததோ அவர் (எதிரி) கூறினால், ‘அதிலிருந்து வெளியேறும் வழியைப் பார்’ என்று அவரிடம் சொல்லப்படும். இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களும் சவ்வார் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களும்தான் முதன்முதலில் நீதிபதியின் கடிதத்திற்கு (இது நீதிபதியின் கடிதம்தான் என்பதற்கு) ஆதாரத்தைக் கேட்டவர்கள் ஆவர். உபைதுல்லாஹ் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பஸ்ரா நீதிபதியான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து கடிதமொன்றைக் கொண்டுவந்தேன். நான் அன்னாரிடம் எனக்கு கூஃபாவில் உள்ள இன்னார் இவ்வளவு தர வேண்டியுள்ளது என்று ஆதாரம் சமர்ப்பித்திருந்தேன். நான் அ(ந்தக் கடிதத்)தை (கூஃபா நீதிபதி) காசிம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். அதை அவர்கள் செல்லுமென ஏற்றுக்கொண்டார்கள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களும் அபூகிலாபா (ரஹ்) அவர்களும், ஒருவர் எழுதிய மரண சாசனத்தில் என்ன உள்ளது என்பதை அறியாமல் அதற்குச் சாட்சியம் அளிப்பதை வெறுத்துள்ளார் கள். ஏனெனில், அதில் தவறு நடந்திருக்க இடமுண்டு; அது அவருக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்கள் கைபர்வாசிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் “(உங்கள் பகுதியில் கொல்லப்பட்ட) உங்களுடைய தோழ(ர் அப்துல்லாஹ் பின் சஹ்ல் என்பவ)ருக்காக இழப்பீடு வழங்க வேண்டும்; அல்லது போருக்குத் தயாராக வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். திரைக்கப்பாலுள்ள பெண்ணுக்கெதி ராகச் சாட்சியம் அளிப்பது குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறும்போது, “அவளை நீ அறிந்திருந்தால் சாட்சியம் அளிக்கலாம்; இல்லையேல் அளிக்க வேண்டாம்” என்றார்கள்.
7162. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு) ரோமானி யர்களுக்குக் கடிதம் எழுத விரும்பிய போது மக்கள், “ரோமர்கள் முத்திரையிடப் பட்ட கடிதத்தை மட்டுமே படிப்பார்கள்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக்கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்றும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.26

அத்தியாயம் : 93
7163. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ ابْنُ أُخْتِ، نَمِرٍ أَنَّ حُوَيْطِبَ بْنَ عَبْدِ الْعُزَّى، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ السَّعْدِيِّ أَخْبَرَهُ أَنَّهُ، قَدِمَ عَلَى عُمَرَ فِي خِلاَفَتِهِ فَقَالَ لَهُ عُمَرُ أَلَمْ أُحَدَّثْ أَنَّكَ تَلِي مِنْ أَعْمَالِ النَّاسِ أَعْمَالاً، فَإِذَا أُعْطِيتَ الْعُمَالَةَ كَرِهْتَهَا. فَقُلْتُ بَلَى. فَقَالَ عُمَرُ مَا تُرِيدُ إِلَى ذَلِكَ قُلْتُ إِنَّ لِي أَفْرَاسًا وَأَعْبُدًا، وَأَنَا بِخَيْرٍ، وَأَرِيدُ أَنْ تَكُونَ عُمَالَتِي صَدَقَةً عَلَى الْمُسْلِمِينَ. قَالَ عُمَرُ لاَ تَفْعَلْ فَإِنِّي كُنْتُ أَرَدْتُ الَّذِي أَرَدْتَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي. حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالاً فَقُلْتُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خُذْهُ فَتَمَوَّلْهُ وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَإِلاَّ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ ""
பாடம்: 16 நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்? ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், “நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறிவிட்டு “தாவூதே! உம்மை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். ஆகவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குவீராக! மன இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை இறைவழியிலிருந்து தவறச் செய்துவிடும். இறைவழி யிலிருந்து தவறிச்செல்பவர்களுக்கு, அவர்கள் விசாரணை நாளை மறந்து விட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு” எனும் (38:26ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். மேலும், நிச்சயமாக நாம்தான் ‘தவ்ராத்’தையும் அருளினோம்; அதில் நல்வழியும் பேரொளியும் இருந்தன; (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக் கொண்டே தீர்ப்பளித்துவந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர்களும் -அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும்- அவர்கள் அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களை அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். எவர் அல்லாஹ் அருளிய (வேதத்)தைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறைமறுப்பாளர்கள்தான்” எனும் (5:44ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். மேலும், “இன்னும் தாவூதும் சுலைமானும் (பற்றி நினைவுகூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்தபோது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்ப ளித்தனர். அவர்களது தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பளிப்பதன்முறையை)ப் புரியவைத்தோம். (அவ்விரு வரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்பளிக்கும்) ஞானத்தையும் அறிவையும் வழங்கி னோம்” எனும் (21:78,79) வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள். (இந்த வசனத்தில்) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்துள்ளான். தாவூத் (அலை) அவர்களைப் பழிக்கவில்லை. இந்த இருவரின் விவகாரத்தையும் அல்லாஹ் எடுத்துரைத்திருக்காவிட்டால், நீதிபதி கள் அழிந்துபோவதைத்தான் நான் பார்த்திருப்பேன். ஏனெனில், அல்லாஹ் ஒருவரை (சுலைமான் (அலை) அவர்களை) அவரது அறிவுக்காகப் பாராட்டியுள்ளான். மற்றொருவரை (தாவூத் (அலை) அவர் களை) அவரது ஆராய்ச்சிக்காக மன்னித்திருக்கின்றான். முஸாஹிம் பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ஒரு நீதிபதி ஐந்து பண்புகளில் எந்த ஒன்றைத் தவறவிட்டாலும் அது அவருக்குக் களங்கமாகும். அவையாவன: அவர் (விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்) விளக்கமுள்ளவராகவும், (பழிவாங்கும் எண்ணமில்லாத) சகிப்புத் தன்மையுடையவராகவும், (விலக்கப்பட்ட வற்றிலிருந்து விலகி) மார்க்கநெறி காப்பவராகவும், (எடுக்கும் முடிவில்) உறுதியானவராகவும், கல்விமானாகவும், கல்வியறிவைப் பெருக்கிக்கொள்ள அதிகம் கேள்வி கேட்பவராகவும் இருக்க வேண்டும். பாடம்: 17 ஆட்சியாளர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியம் நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் (நீதிமன்றத்தில்) தீர்ப்பு வழங்கும் தமது பணிக்காக ஊதியம் பெற்றுவந்தார்கள்.27 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அநாதையின் காப்பாளர் தமது வேலைப் பளுவுக்கேற்ப அநாதையின் செல்வத்திலிருந்து உண்ணலாம். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (நிர்வாகப் பணிக்காக அரசு நிதியிலிருந்து ஊதியம் பெற்று) உண்டார்கள்.
7163. அப்துல்லாஹ் பின் அஸ்ஸஅதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களது ஆட்சிக் காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன்.

உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்க, நான், “என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில்தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்குத் தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், “என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்” என்று சொல்லிவந்தேன்.

இறுதியில் ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், “என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமை யாக்கிக்கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச்செல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 93
7164. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْطِينِي الْعَطَاءَ فَأَقُولُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي. حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالاً فَقُلْتُ أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خُذْهُ فَتَمَوَّلْهُ وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا الْمَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَمَا لاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ "".
பாடம்: 16 நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்? ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், “நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறிவிட்டு “தாவூதே! உம்மை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். ஆகவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குவீராக! மன இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை இறைவழியிலிருந்து தவறச் செய்துவிடும். இறைவழி யிலிருந்து தவறிச்செல்பவர்களுக்கு, அவர்கள் விசாரணை நாளை மறந்து விட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு” எனும் (38:26ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். மேலும், நிச்சயமாக நாம்தான் ‘தவ்ராத்’தையும் அருளினோம்; அதில் நல்வழியும் பேரொளியும் இருந்தன; (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக் கொண்டே தீர்ப்பளித்துவந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர்களும் -அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும்- அவர்கள் அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களை அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். எவர் அல்லாஹ் அருளிய (வேதத்)தைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறைமறுப்பாளர்கள்தான்” எனும் (5:44ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். மேலும், “இன்னும் தாவூதும் சுலைமானும் (பற்றி நினைவுகூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்தபோது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்ப ளித்தனர். அவர்களது தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பளிப்பதன்முறையை)ப் புரியவைத்தோம். (அவ்விரு வரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்பளிக்கும்) ஞானத்தையும் அறிவையும் வழங்கி னோம்” எனும் (21:78,79) வசனங்களையும் ஓதிக்காட்டினார்கள். (இந்த வசனத்தில்) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்துள்ளான். தாவூத் (அலை) அவர்களைப் பழிக்கவில்லை. இந்த இருவரின் விவகாரத்தையும் அல்லாஹ் எடுத்துரைத்திருக்காவிட்டால், நீதிபதி கள் அழிந்துபோவதைத்தான் நான் பார்த்திருப்பேன். ஏனெனில், அல்லாஹ் ஒருவரை (சுலைமான் (அலை) அவர்களை) அவரது அறிவுக்காகப் பாராட்டியுள்ளான். மற்றொருவரை (தாவூத் (அலை) அவர் களை) அவரது ஆராய்ச்சிக்காக மன்னித்திருக்கின்றான். முஸாஹிம் பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ஒரு நீதிபதி ஐந்து பண்புகளில் எந்த ஒன்றைத் தவறவிட்டாலும் அது அவருக்குக் களங்கமாகும். அவையாவன: அவர் (விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்) விளக்கமுள்ளவராகவும், (பழிவாங்கும் எண்ணமில்லாத) சகிப்புத் தன்மையுடையவராகவும், (விலக்கப்பட்ட வற்றிலிருந்து விலகி) மார்க்கநெறி காப்பவராகவும், (எடுக்கும் முடிவில்) உறுதியானவராகவும், கல்விமானாகவும், கல்வியறிவைப் பெருக்கிக்கொள்ள அதிகம் கேள்வி கேட்பவராகவும் இருக்க வேண்டும். பாடம்: 17 ஆட்சியாளர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியம் நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் (நீதிமன்றத்தில்) தீர்ப்பு வழங்கும் தமது பணிக்காக ஊதியம் பெற்றுவந்தார்கள்.27 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அநாதையின் காப்பாளர் தமது வேலைப் பளுவுக்கேற்ப அநாதையின் செல்வத்திலிருந்து உண்ணலாம். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (நிர்வாகப் பணிக்காக அரசு நிதியிலிருந்து ஊதியம் பெற்று) உண்டார்கள்.
7164. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், “என்னைவிட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்” என்று சொல்வேன். ஒருமுறை எனக்கு (நன்கொடைப்) பொருள் ஒன்றை அவர்கள் வழங்கியபோது நான், “என்னைவிட அதிகமாக இது யாருக்குத் தேவைப்படுகின்றதோ அவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “(முதலில்) நீங்கள் இதை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக்கொள்ளுங்கள். பிறகு (உங்களுக்குத் தேவைப்படாவிட்டால்) தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்பட்டு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இந்தச் செல்வத்திலிருந்து உங்களுக்கு (தானாக) வரும் எதுவாயினும் அதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால், நீங்களாக அதைத் தேடிச்செல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 93
7165. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ شَهِدْتُ الْمُتَلاَعِنَيْنِ وَأَنَا ابْنُ خَمْسَ، عَشْرَةَ فُرِّقَ بَيْنَهُمَا.
பாடம்: 18 பள்ளிவாசலில் தீர்ப்புக் கூறுவ தும் (தம்பதியரை) சாபஅழைப் புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்ய வைப்பதும் உமர் (ரலி) அவர்கள் (ஒரு தம்பதி யரை) நபி (ஸல்) அவர்களின் சொற் பொழிவு மேடை (மிம்பர்) அருகே சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யச் சொன்னார்கள். (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்), யஹ்யா பின் யஅமர் (ரஹ்) ஆகியோர் பள்ளிவாசலில் தீர்ப்பளித்துள்ளார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சத்தியம் செய்ய வேண்டும் என்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே (ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தீர்ப்பளித்தார்கள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களும் ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும் பள்ளிவாசலுக்கு வெளியே முற்றத்தில் வைத்துத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
7165. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள்.


அத்தியாயம் : 93