7117. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "".
பாடம்: 23 சிலைகள் வணங்கப்படும் அளவுக் குக் காலம் மாறிவிடும்
7117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘கஹ்தான்’ குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச்செல்லாத வரை மறுமை நாள் வராது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47

அத்தியாயம் : 92
7118. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ، تُضِيءُ أَعْنَاقَ الإِبِلِ بِبُصْرَى "".
பாடம்: 24 நெருப்பு கிளம்புவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், மக்களைக் கிழக்கிலிருந்து (விரட்டிக்கொண்டு) மேற்கு நோக்கி ஒன்றுதிரட்டிச் செல்லும் ஒரு நெருப்பேயாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48
7118. அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது.49

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 92
7119. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَدِّهِ، حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئًا "". قَالَ عُقْبَةُ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ "" يَحْسِرُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ "".
பாடம்: 24 நெருப்பு கிளம்புவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், மக்களைக் கிழக்கிலிருந்து (விரட்டிக்கொண்டு) மேற்கு நோக்கி ஒன்றுதிரட்டிச் செல்லும் ஒரு நெருப்பேயாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48
7119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித் துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் “தங்கமலை ஒன்றை வெளிப்படுத் தவுள்ளது” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 92
7120. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا مَعْبَدٌ، سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" تَصَدَّقُوا، فَسَيَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا "". قَالَ مُسَدَّدٌ حَارِثَةُ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ لأُمِّهِ قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ.
பாடம்: 25
7120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு (அதைப் பெறுபவரைத் தேடி) நடந்துசெல்வார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காணமாட்டார்.

இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: அறிவிப்பாளர் ஹாரிஸா (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்.


அத்தியாயம் : 92
7121. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ، يَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ، دَعْوَتُهُمَا وَاحِدَةٌ، وَحَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ، قَرِيبٌ مِنْ ثَلاَثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ، وَحَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ وَهْوَ الْقَتْلُ، وَحَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لاَ أَرَبَ لِي بِهِ. وَحَتَّى يَتَطَاوَلَ النَّاسُ فِي الْبُنْيَانِ، وَحَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ يَا لَيْتَنِي مَكَانَهُ. وَحَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ ـ يَعْنِي ـ آمَنُوا أَجْمَعُونَ، فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلاَنِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا، فَلاَ يَتَبَايَعَانِهِ وَلاَ يَطْوِيَانِهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدِ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلاَ يَطْعَمُهُ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهْوَ يُلِيطُ حَوْضَهُ فَلاَ يَسْقِي فِيهِ، وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلاَ يَطْعَمُهَا "".
பாடம்: 25
7121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோ டொன்று சண்டையிட்டுக்கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும்.51

மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான்.52

மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது..53

மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் வராது. அப்போது செல்வன் தனது தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லிவிடுவார்..54

மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, ‘அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?’ என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது..55

சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக் காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறை நம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.56

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்துவைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவுமாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவுமாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்)கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும்.

ஒருவர் தமது தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டுசென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதை உண்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 92
7122. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي قَيْسٌ، قَالَ قَالَ لِي الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الدَّجَّالِ مَا سَأَلْتُهُ وَإِنَّهُ قَالَ لِي "" مَا يَضُرُّكَ مِنْهُ "". قُلْتُ لأَنَّهُمْ يَقُولُونَ إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَاءٍ. قَالَ "" هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ "".
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7122. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிக மாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், “அவனால் உமக்கென்ன தீங்கு?” என்று கேட்டார்கள். நான், “(அச்சம்தான்.) ஏனெனில், தஜ்ஜாலு டன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “இது என்ன (பிரமாதம்)? (அவன்மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கின்றானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 92
7123. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أُرَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى، كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ "".
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7123. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்” என்று சொன்னார்கள்.

இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிட மிருந்து கேட்டுச் சொன்னதாகவே நான் கருதுகின்றேன்.58


அத்தியாயம் : 92
7124. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَجِيءُ الدَّجَّالُ حَتَّى يَنْزِلَ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، ثُمَّ تَرْجُفُ الْمَدِينَةُ ثَلاَثَ رَجَفَاتٍ، فَيَخْرُجُ إِلَيْهِ كُلُّ كَافِرٍ وَمُنَافِقٍ "".
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59


அத்தியாயம் : 92
7125. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّالِ، وَلَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ باب مَلَكَانِ "".
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7125. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மஸீஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60


அத்தியாயம் : 92
7126. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ باب مَلَكَانِ "". قَالَ وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْتُ الْبَصْرَةَ فَقَالَ لِي أَبُو بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7126. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவிற்குள் மஸீஹுத் தஜ்ஜால் குறித்த அச்சம் புகாது. அந்நாளில் மதீனாவிற்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இராக்கிலுள்ள) பஸ்ரா சென்றேன். (அங்கு) அபூபக்ரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்.


அத்தியாயம் : 92
7127. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ "" إِنِّي لأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ "".
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7127. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றியபின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அப்போது, “நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கின்றேன். இறைத்தூதர் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 92
7128. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ أَطُوفُ بِالْكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ سَبْطُ الشَّعَرِ يَنْطُفُ ـ أَوْ يُهَرَاقُ ـ رَأْسُهُ مَاءً قُلْتُ مَنْ هَذَا قَالُوا ابْنُ مَرْيَمَ. ثُمَّ ذَهَبْتُ أَلْتَفِتُ، فَإِذَا رَجُلٌ جَسِيمٌ أَحْمَرُ جَعْدُ الرَّأْسِ أَعْوَرُ الْعَيْنِ، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ قَالُوا هَذَا الدَّجَّالُ. أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ "". رَجُلٌ مِنْ خُزَاعَةَ.
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7128. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருநாள்) நான் உறங்கிக்கொண்டி ருந்தபோது நான் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன். அப்போது மா நிறமான படிந்த தலைமுடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து ‘தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க’ அல்லது ‘சிந்திக்கொண்டிருக்க’க் கண்டேன். “இவர் யார்?” என்று கேட்டேன். “மர்யமின் மைந்தர் (ஈசா)” என்று சொன்னார்கள்.

பிறகு நான் திரும்பிப் பார்த்தபடியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான, சுருட்டைத் தலைமுடியுடைய, சிவப்பான, பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். “இவன்தான் தஜ்ஜால்; மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன் ‘இப்னு கத்தன்’ எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான்” என்று சொன்னார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61


அத்தியாயம் : 92
7129. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ.
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7129. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவதை நான் கேட்டி ருக்கிறேன்.62


அத்தியாயம் : 92
7130. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فِي الدَّجَّالِ "" إِنَّ مَعَهُ مَاءً وَنَارًا، فَنَارُهُ مَاءٌ بَارِدٌ، وَمَاؤُهُ نَارٌ "". قَالَ أَبُو مَسْعُودٍ أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7130. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தஜ்ஜாலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, “அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) குளிர்ந்த நீராகவும், அவனுடன் உள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகவும் இருக்கும்” என்று சொன்னார்கள்.63

அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும், “நான் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 92
7131. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا بُعِثَ نَبِيٌّ إِلاَّ أَنْذَرَ أُمَّتَهُ الأَعْوَرَ الْكَذَّابَ، أَلاَ إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ "". فِيهِ أَبُو هُرَيْرَةَ وَابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 26 தஜ்ஜால் பற்றிய குறிப்பு57
7131. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக, உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே கருத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அத்தியாயம் : 92
7132. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا حَدِيثًا طَوِيلاً عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا يُحَدِّثُنَا بِهِ أَنَّهُ قَالَ "" يَأْتِي الدَّجَّالُ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ، فَيَنْزِلُ بَعْضَ السِّبَاخِ الَّتِي تَلِي الْمَدِينَةَ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ وَهْوَ خَيْرُ النَّاسِ أَوْ مِنْ خِيَارِ النَّاسِ، فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ فَيَقُولُونَ لاَ. فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ وَاللَّهِ مَا كُنْتُ فِيكَ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ. فَيُرِيدُ الدَّجَّالُ أَنْ يَقْتُلَهُ فَلاَ يُسَلَّطُ عَلَيْهِ "".
பாடம்: 27 தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய மாட்டான்.
7132. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவற்றில் இவையும் அடங்கும்:

மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்த நாளில் ‘மக்களிலேயே சிறந்தவரான ஒரு மனிதர்’ அல்லது ‘மக்களிலேயே சிறந்தவர்களில் ஒரு மனிதர்’ அவனிடம் புறப்பட்டுச் சென்று, “எவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார் களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறுவார்.

அப்போது தஜ்ஜால், “நான் இவரைக் கொன்று பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன்தான் எனும்) விஷயத்தில் சந்தேகம்கொள்வீர்கள்?” என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட்பான். மக்கள் “இல்லை” என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்று பிறகு உயிராக்கிவிடுவான். உடனே, அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்துகொண்டதைவிட நன்றாக வேறு எப்போதும் அறிந்துகொண்டதில்லை” என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால், அவர்மீது அவனுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது.64


அத்தியாயம் : 92
7133. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ، لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ "".
பாடம்: 27 தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய மாட்டான்.
7133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழையமாட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.65


அத்தியாயம் : 92
7134. حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ، فَيَجِدُ الْمَلاَئِكَةَ يَحْرُسُونَهَا، فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ ـ قَالَ ـ وَلاَ الطَّاعُونُ، إِنْ شَاءَ اللَّهُ "".
பாடம்: 27 தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழைய மாட்டான்.
7134. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

மதீனா நகருக்கு தஜ்ஜால் வருவான். அதை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் காண்பான். ஆகவே, அதை தஜ்ஜால் நெருங்கமாட்டான்; அல்லாஹ் நாடினால் கொள்ளைநோயும் அணுகாது.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 92
7135. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمًا فَزِعًا يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ "". وَحَلَّقَ بِإِصْبَعَيْهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا. قَالَتْ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ إِذَا كَثُرَ الْخُبْثُ "".
பாடம்: 28 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்66
7135. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கிறது. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்கு இன்று திறக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி, தமது கட்டை விரலையும் அதற்கடுத்த விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடையே நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்துபோவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருகிவிடும்போது” என்று சொன்னார்கள்.67

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 92
7136. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُفْتَحُ الرَّدْمُ رَدْمُ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلَ هَذِهِ "". وَعَقَدَ وُهَيْبٌ تِسْعِينَ.
பாடம்: 28 யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்66
7136. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவர் இந்த அளவுக்குத் திறக்கப்படுகின்றது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான வுஹைப் பின் காலித்  (ரஹ்) அவர்கள் (அரபு எண்) தொண்ணூறு என்பதைப் போன்று (விரல்களை) மடித்துக் காட்டினார்கள்.68

அத்தியாயம் : 92