7048. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَتْ أَسْمَاءُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَنَا عَلَى، حَوْضِي أَنْتَظِرُ مَنْ يَرِدُ عَلَىَّ، فَيُؤْخَذُ بِنَاسٍ مِنْ دُونِي فَأَقُولُ أُمَّتِي. فَيَقُولُ لاَ تَدْرِي، مَشَوْا عَلَى الْقَهْقَرَى "". قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ أَنْ نَرْجِعَ عَلَى أَعْقَابِنَا أَوْ نُفْتَنَ.
பாடம்: 1 “நீங்கள் ஒரு வேதனை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது (வரும்போது) உங்களில் அநீதியிழைத்தவர்களை மட்டும் தாக்குவதில்லை” எனும் (8:25ஆவது) இறைவசனம்2 தொடர்பாக வந்துள்ள செய்தி களும் நபி (ஸல்) அவர்கள் முன் னெச்சரிக்கை செய்துவந்த குழப்பங்களும்
7048. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகின்றவர் களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் சமுதாயத்தார்” என்பேன். அதற்கு “உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்த வழியே அப்படியே திரும்பிச் சென்றுவிட்டார் கள்” என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் (வந்த வழியே) எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள்.3


அத்தியாயம் : 92
7049. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، لَيُرْفَعَنَّ إِلَىَّ رِجَالٌ مِنْكُمْ حَتَّى إِذَا أَهْوَيْتُ لأُنَاوِلَهُمُ اخْتُلِجُوا دُونِي فَأَقُولُ أَىْ رَبِّ أَصْحَابِي. يَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
பாடம்: 1 “நீங்கள் ஒரு வேதனை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது (வரும்போது) உங்களில் அநீதியிழைத்தவர்களை மட்டும் தாக்குவதில்லை” எனும் (8:25ஆவது) இறைவசனம்2 தொடர்பாக வந்துள்ள செய்தி களும் நபி (ஸல்) அவர்கள் முன் னெச்சரிக்கை செய்துவந்த குழப்பங்களும்
7049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது” என்று கூறுவான்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4


அத்தியாயம் : 92
7050. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ، مَنْ وَرَدَهُ شَرِبَ مِنْهُ، وَمَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهُ أَبَدًا، لَيَرِدُ عَلَىَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ "".
பாடம்: 1 “நீங்கள் ஒரு வேதனை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது (வரும்போது) உங்களில் அநீதியிழைத்தவர்களை மட்டும் தாக்குவதில்லை” எனும் (8:25ஆவது) இறைவசனம்2 தொடர்பாக வந்துள்ள செய்தி களும் நபி (ஸல்) அவர்கள் முன் னெச்சரிக்கை செய்துவந்த குழப்பங்களும்
7050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். யார் அதை அருந்துகிறாரோ அவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வரு வார்கள். அவர்களை நான் அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள் வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறிவிப் பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இந்த ஹதீஸை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு, “நீங்கள் இவ்வாறுதான் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று வினவினார்கள். நான், “ஆம்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதை அறிவித்ததற்கு நான் சாட்சி. அவர்கள் தமது அறிவிப்பில் கூடுதலாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

“அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தான்” என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்து வானாக!” என்று சொல்வேன்.5

அத்தியாயம் : 92
7052. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً وَأُمُورًا تُنْكِرُونَهَا"". قَالُوا فَمَا تَأْمُرُنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ "" أَدُّوا إِلَيْهِمْ حَقَّهُمْ وَسَلُوا اللَّهَ حَقَّكُمْ "".
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7052. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளான) எங்களிடம், “எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்” என்று சொன்னார்கள்.

மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.7


அத்தியாயம் : 92
7053. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنِ الْجَعْدِ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً "".
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7053. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள (ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து யார் ஒரு சாண் அளவு வெளியேறுகிறாரோ அவர் அஞ்ஞான கால மரணத்தை அடைவார்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 92
7054. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ، إِلاَّ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً "".
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தம் (ஆட்சித்) தலைவரிட மிருந்து (மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறாரோ அவர் அதைப் பொறுத்துக்கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 92
7055. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، قَالَ دَخَلْنَا عَلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهْوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ، يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، صلى الله عليه وسلم. قَالَ دَعَانَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَايَعْنَاهُ
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7055. ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், “அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்” என்று சொன்னோம்.

அதற்கு உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 92
7056. فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ، فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا، وَعُسْرِنَا، وَيُسْرِنَا، وَأَثَرَةٍ عَلَيْنَا، وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ، إِلاَّ أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا، عِنْدَكُمْ مِنَ اللَّهِ فِيهِ بُرْهَانٌ.
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7056. “நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும்போதும் சிரமத்திலிருக் கும்போதும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும்போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர் களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டால் தவிர” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.


அத்தியாயம் : 92
7057. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اسْتَعْمَلْتَ فُلاَنًا وَلَمْ تَسْتَعْمِلْنِي. قَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي "".
பாடம்: 2 “எனக்குப் பிறகு நீங்கள் வெறுக் கின்ற பல விஷயங்களைக் காண்பீர்கள்” என்று (அன்சாரி களிடம்) நபி (ஸல்) அவர்கள் கூறியது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அன்சாரிகளே!) என்னை (மறுமை யில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகே சந்திக்கும்வரை (நிலைகுலையாது) பொறுமையுடன் இருங்கள். இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
7057. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்சாரிகளில்) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தீர்கள்; என்னை நீங்கள் அதிகாரியாக நியமிக்கவில்லையே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை அளிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று சொன்னார்கள்.8

அத்தியாயம் : 92
7058. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي جَدِّي، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي هُرَيْرَةَ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ وَمَعَنَا مَرْوَانُ قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ الصَّادِقَ الْمَصْدُوقَ يَقُولُ "" هَلَكَةُ أُمَّتِي عَلَى يَدَىْ غِلْمَةٍ مِنْ قُرَيْشٍ "". فَقَالَ مَرْوَانُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِمْ غِلْمَةً. فَقَالَ أَبُو هُرَيْرَةَ لَوْ شِئْتُ أَنْ أَقُولَ بَنِي فُلاَنٍ وَبَنِي فُلاَنٍ لَفَعَلْتُ. فَكُنْتُ أَخْرُجُ مَعَ جَدِّي إِلَى بَنِي مَرْوَانَ حِينَ مَلَكُوا بِالشَّأْمِ، فَإِذَا رَآهُمْ غِلْمَانًا أَحْدَاثًا قَالَ لَنَا عَسَى هَؤُلاَءِ أَنْ يَكُونُوا مِنْهُمْ قُلْنَا أَنْتَ أَعْلَمُ.
பாடம்: 3 “என் சமுதாயத்தாரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
7058. சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர் களின் பள்ளிவாசலில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது எங்களுடன் மர்வான் பின் அல்ஹகமும் இருந்தார். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தாரின் அழிவு குறைஷி இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்.

அப்போது மர்வான், “இந்த இளைஞர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சொன்னார். உடனே அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நினைத்தால் (அந்த இளைஞர்கள்) இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள் என்று (குறிப்பிட்டுச்) சொல்ல முடியும்” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:)

நான் என் பாட்டனார் சயீத் பின் அம்ர் பின் சயீத் அல்உமவீ (ரஹ்) அவர்களுடன் ‘பனூ மர்வான்’ குலத்தாரிடம் அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்கு அதிபர்களான வேளையில் சென்றிருந்தேன். அவர்கள் இளம் வாலிபர்களாக இருப்பதைப் பார்த்துவிட்டு எங்களிடம், “இவர்கள் (அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த இளைஞர்களாக இருக்கலாம்” என்று என் பாட்டனார் கூறினார்கள். நாங்கள், “நீங்கள்தான் (இது பற்றி எங்களைவிட) அதிகமாக அறிந்தவர்கள்” என்று கூறினோம்.9

அத்தியாயம் : 92
7059. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ ـ رضى الله عنهن ـ أَنَّهَا قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ النَّوْمِ مُحْمَرًّا وَجْهُهُ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَاجُوجَ وَمَاجُوجَ مِثْلُ هَذِهِ "". وَعَقَدَ سُفْيَانُ تِسْعِينَ أَوْ مِائَةً. قِيلَ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ "" نَعَمْ، إِذَا كَثُرَ الْخَبَثُ "".
பாடம்: 4 “நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7059. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

-அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (‘இந்த அளவுக்கு’ என்று கூறியபோது, தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.-

அப்போது “நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம். தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள்.10


அத்தியாயம் : 92
7060. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْد ٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى أُطُمٍ مِنْ آطَامِ الْمَدِينَةِ فَقَالَ "" هَلْ تَرَوْنَ مَا أَرَى "". قَالُوا لاَ. قَالَ "" فَإِنِّي لأَرَى الْفِتَنَ تَقَعُ خِلاَلَ بُيُوتِكُمْ كَوَقْعِ الْقَطْرِ "".
பாடம்: 4 “நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7060. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக் கொண்டு (நோட்டமிட்டவாறு), “நான் பார்க் கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?” என்று கேட்க மக்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் விளையப்போவதைப் பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.11

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 92
7061. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَتَقَارَبُ الزَّمَانُ، وَيَنْقُصُ الْعَمَلُ، وَيُلْقَى الشُّحُّ، وَتَظْهَرُ الْفِتَنُ، وَيَكْثُرُ الْهَرْجُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّمَ هُوَ. قَالَ "" الْقَتْلُ الْقَتْلُ "". وَقَالَ شُعَيْبٌ وَيُونُسُ وَاللَّيْثُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7061. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய் விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கருமித்தனம் உருவாக்கப்பட்டுவிடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன (ஹர்ஜ்)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 92
7062. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالاَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ لأَيَّامًا يَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْلُ ".
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7062. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளுக்குமுன் ஒரு கால கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டுவிடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அபூமூசா அல்அஷ் அரீ (ரலி) அவர்களும் அறிவிக்கிறார் கள்.


அத்தியாயம் : 92
7064. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، قَالَ جَلَسَ عَبْدُ اللَّهِ وَأَبُو مُوسَى فَتَحَدَّثَا فَقَالَ أَبُو مُوسَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ أَيَّامًا يُرْفَعُ فِيهَا الْعِلْمُ، وَيَنْزِلُ فِيهَا الْجَهْلُ، وَيَكْثُرُ فِيهَا الْهَرْجُ، وَالْهَرْجُ الْقَتْلُ "".
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7064. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், “மறுமை நாளுக்கு முன்பு ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்பட்டுவிடும்; அறியாமை நிலவும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள்.


அத்தியாயம் : 92
7065. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ إِنِّي لَجَالِسٌ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى ـ رضى الله عنهما ـ فَقَالَ أَبُو مُوسَى سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ، وَالْهَرْجُ بِلِسَانِ الْحَبَشَةِ الْقَتْلُ.
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7065. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லக் கேட்டேன். மேலும், ‘ஹர்ஜ்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘கொலை’ என்பது பொருள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 92
7066. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَأَحْسِبُهُ، رَفَعَهُ قَالَ "" بَيْنَ يَدَىِ السَّاعَةِ أَيَّامُ الْهَرْجِ، يَزُولُ الْعِلْمُ، وَيَظْهَرُ فِيهَا الْجَهْلُ "". قَالَ أَبُو مُوسَى وَالْهَرْجُ الْقَتْلُ بِلِسَانِ الْحَبَشَةِ.
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7066. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலகட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூமூசா (ரலி) அவர்கள், “ ‘ஹர்ஜ்’ என்பது அபீசீனிய மொழியில் கொலை யைக் குறிக்கும்” என்று கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 92
7067. وَقَالَ أَبُو عَوَانَةَ عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الأَشْعَرِيِّ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ تَعْلَمُ الأَيَّامَ الَّتِي ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيَّامَ الْهَرْجِ. نَحْوَهُ. قَالَ ابْنُ مَسْعُودٍ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُمُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ "".
பாடம்: 5 குழப்பங்கள் தோன்றுதல்
7067. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்” என்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்:

யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள்தான் மக்களிலேயே தீயோர் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அத்தியாயம் : 92