6960. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ. قُلْتُ لِنَافِعٍ مَا الشِّغَارُ قَالَ يَنْكِحُ ابْنَةَ الرَّجُلِ وَيُنْكِحُهُ ابْنَتَهُ بِغَيْرِ صَدَاقٍ، وَيَنْكِحُ أُخْتَ الرَّجُلِ وَيُنْكِحُهُ أُخْتَهُ بِغَيْرِ صَدَاقٍ. وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ حَتَّى تَزَوَّجَ عَلَى الشِّغَارِ، فَهْوَ جَائِزٌ، وَالشَّرْطُ بَاطِلٌ. وَقَالَ فِي الْمُتْعَةِ النِّكَاحُ فَاسِدٌ، وَالشَّرْطُ بَاطِلٌ. وَقَالَ بَعْضُهُمُ الْمُتْعَةُ وَالشِّغَارُ جَائِزٌ، وَالشَّرْطُ بَاطِلٌ.
பாடம்: 4 திருமண விஷயத்தில் தந்திரம் செய்தல்
6960. உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார் கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது நான் நாஃபிஉ அவர்களிடம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?” என்று கேட்டேன்.

அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.13

சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து ‘ஷிஃகார்’ முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன்நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணைமுறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன்நிபந்தனையும் செல்லாது.

வேறுசிலரோ, “தவணைமுறைத் திருமணமும் ‘ஷிஃகார்’ முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறுகின்றனர்.


அத்தியாயம் : 90
6961. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنِ الْحَسَنِ، وَعَبْدِ اللَّهِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ قِيلَ لَهُ إِنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَرَى بِمُتْعَةِ النِّسَاءِ بَأْسًا. فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا يَوْمَ خَيْبَرَ، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ. وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ حَتَّى تَمَتَّعَ، فَالنِّكَاحُ فَاسِدٌ. وَقَالَ بَعْضُهُمُ النِّكَاحُ جَائِزٌ وَالشَّرْطُ بَاطِلٌ.
பாடம்: 4 திருமண விஷயத்தில் தந்திரம் செய்தல்
6961. முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தவணைமுறைத் திருமணம் (நிகா ஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணைமுறைத் திருமணத்திற்கும் நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித் தார்கள்” என்று கூறினார்கள்.14

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

“ஒரு மனிதர் தந்திரமாகத் தவணை முறைத் திருமணம் செய்தால் அத்திரு மணம் செல்லாது” என்று சிலர் கூறினர்.

வேறுசிலரோ, “அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப் பட்ட) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறினர்.

அத்தியாயம் : 90
6962. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ فَضْلُ الْكَلإِ "".
பாடம்: 5 வியாபாரங்களில் தந்திரம் செய்வது விரும்பத் தகாததாகும். மேலும் (தேவைக்கதிகமாக) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. அவ்வாறு தடுத்தால் (அதைச் சுற்றி முளைத்துள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளை)த் தடுத்ததாகிவிடும்.
6962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடை களை)த் தடுத்ததாகிவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

அத்தியாயம் : 90
6963. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّجْشِ.
பாடம்: 6 (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்திவிடுவது அருவருக்கத் தக்கதாகும்.
6963. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின்போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.16

அத்தியாயம் : 90
6964. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "".
பாடம்: 7 வியாபாரங்களில் மோசடி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள், மனிதனை ஏமாற்றுவதைப் போன்றே இறைவனையும் ஏமாற்ற விழைகின்றனர். அவர்கள் (ஒளிவு மறைவில்லாமல்) பகிரங்கமாக (உரிய விலையைவிட அதிகத் தொகை கேட்டு) விஷயத்திற்கு வருவார்களானால், அது எனக்கு எளிதானதாக அமையும். (அதை விடுத்து எதற்காக அவர்கள் மோசடி செய்ய வேண்டும்?)
6964. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரங்களில் ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ வியாபாரத்தின்போது ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு” என்று சொன்னார்கள்.17

அத்தியாயம் : 90
6965. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ عُرْوَةُ يُحَدِّثُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ}. قَالَتْ هِيَ الْيَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي مَالِهَا وَجَمَالِهَا، فَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 8 தாம் (மணந்துகொள்ள) ஆசைப் பட்ட அநாதைப் பெண் விஷயத்தில் (அவளுடைய) காப்பாளர் தந்திரங்கள் மேற்கொள்வதும் அவளுக்குரிய மணக்கொடையை முழுமையாக வழங்காமல் இருப்பதும் தடை செய்யப்பட் டுள்ளது.
6965. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண் களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நீதியோடு நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான (வேறு) பெண்களை மணந்துகொள்ளுங்கள்” என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அநாதைப் பெண் ஒருத்தி தன் காப்பாளரின் பாதுகாப்பில் இருந்துவருவாள். அவர் அப்பெண்ணின் செல்வத்தை யும் அழகையும் கண்டு ஆசைப்பட்டு அவளைப் போன்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் மணக்கொடையை விட மிகக் குறைந்த அளவு மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். அப்போதுதான், முழுமையான மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அப்பெண் களுக்கு நீங்கள் நீதி செலுத்தாத வரை அவர்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது என அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. அதன் பின்னரும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தீர்ப்புக் கேட்டனர்.

அப்போதுதான் “(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறார்கள்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

தொடர்ந்து அறிவிப்பாளர் இந்த ஹதீஸின் முழுத் தொடரையும் கூறினார்.18

அத்தியாயம் : 90
6966. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ "".
பாடம்: 9 (தந்திரம் செய்து) அடிமைப் பெண்ணை அபகரித்தல் ஒருவர் (அடுத்தவருக்குச் சொந்தமான) ஓர் அடிமைப் பெண்ணை அபகரித்துக்கொண்டார். பின்னர் அவள் இறந்துவிட்டதாக அவர் கருதியதால், இறந்துபோன அடிமைப் பெண்ணுக்கான விலையை (அடிமையின் உரிமையாளரிடம்) வழங்கிட வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவளை அவளுடைய உரிமையாளர் (உயிருடன்) கண்டார் எனில், அவள் உரிமையாளருக்கே உரியவள் ஆவாள். அவர் (தாம் பெற்ற) அந்த விலைத் தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுவார். அத்தொகை (அடிமைப் பெண்ணுக்குரிய) கிரயம் என்று (கருதி அவள் விற்கப்பட்டுவிட்டதாக) எடுத்துக்கொள்ளலாகாது. ஆனால், சிலர், “அந்த அடிமைப் பெண் அபகரித்தவருக்கே உரியவள்; ஏனெனில், உரிமையாளர் (அபகரித்த வரிடமிருந்து உரிய) தொகையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்” என்று கூறு கிறார்கள். ஆனால், இது ஒரு விதத் தந்திர மாகும். அடுத்தவருக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணை ஒருவர் விரும்பலாம்; உரிமையாளர் அவளை விற்பதற்கு முன்வராதபோது, அவளை அபகரித்துக்கொண்டுவிட்டு, அவள் இறந்துபோனாள் என்று காரணம் காட்டி, அவளுக்குரிய கிரயத்தை உரிமையாளர் ஏற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கலாம். இதன் மூலம் அபகரித்தவனுக்கே தாராளமாக அடுத்தவரின் அடிமைப் பெண் கிடைக்கும் நிலை உருவாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் உடைமைகள் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.19 மோசடி செய்கின்ற ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும்.20
6966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

அத்தியாயம் : 90
6967. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّكُمْ تَخْتَصِمُونَ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، وَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلاَ يَأْخُذْ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ "".
பாடம்: 10
6967. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்குச் சாதுரியம்மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுரியமான வரிடமிருந்து) செவியுறுவதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதளவை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகின்றேனோ அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன்.

இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

அத்தியாயம் : 90
6968. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَلاَ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ إِذْنُهَا قَالَ "" إِذَا سَكَتَتْ "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنْ لَمْ تُسْتَأْذَنِ الْبِكْرُ وَلَمْ تَزَوَّجْ. فَاحْتَالَ رَجُلٌ فَأَقَامَ شَاهِدَىْ زُورٍ أَنَّهُ تَزَوَّجَهَا بِرِضَاهَا، فَأَثْبَتَ الْقَاضِي نِكَاحَهَا، وَالزَّوْجُ يَعْلَمُ أَنَّ الشَّهَادَةَ بَاطِلَةٌ، فَلاَ بَأْسَ أَنْ يَطَأَهَا، وَهْوَ تَزْوِيجٌ صَحِيحٌ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6968. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவள் மௌனம் சாதிப்பதே (அவள் சம்மதிக்கிறாள் என்பதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.23

ஆனால், சிலர் கூறுகின்றனர்: ஒரு கன்னிப்பெண்ணிடம் அனுமதியும் கோராமல், (முறைப்படி) அவள் திருமணமும் செய்துகொள்ளப்படாமல் இருக்கும்போது, ஒருவர் தந்திரமாக இரண்டு பொய் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தி அவளை அவளது இசைவுடன் தாம் மணந்துகொண்டதாக வாதிட்டார். நீதிபதியும் (அதை உண்மை என்று நம்பி) அவளது திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சாட்சியம் பொய் என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இந்நிலையில் அவளுடன் அவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை. இது செல்லத் தகுந்த திருமணமே (என்று அந்தச் சிலர் கூறுகின்றனர்).


அத்தியாயம் : 90
6969. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ امْرَأَةً، مِنْ وَلَدِ جَعْفَرٍ تَخَوَّفَتْ أَنْ يُزَوِّجَهَا وَلِيُّهَا وَهْىَ كَارِهَةٌ فَأَرْسَلَتْ إِلَى شَيْخَيْنِ مِنَ الأَنْصَارِ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَىْ جَارِيَةَ قَالاَ فَلاَ تَخْشَيْنَ، فَإِنَّ خَنْسَاءَ بِنْتَ خِذَامٍ أَنْكَحَهَا أَبُوهَا وَهْىَ كَارِهَةٌ، فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَلِكَ. قَالَ سُفْيَانُ وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ فَسَمِعْتُهُ يَقُولُ عَنْ أَبِيهِ إِنَّ خَنْسَاءَ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6969. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் (ரஹ்), முஜம்மிஉ (ரஹ்) ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பிவைத்தார்.

அவர்கள் இருவரும், “(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்துவைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அத்திரு மணத்தை ரத்துச் செய்தார்கள்” என்று கூறியனுப்பினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்-ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்ததை நான் செவியுற்றேன்.24


அத்தியாயம் : 90
6970. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ "". قَالُوا كَيْفَ إِذْنُهَا قَالَ "" أَنْ تَسْكُتَ "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ إِنْسَانٌ بِشَاهِدَىْ زُورٍ عَلَى تَزْوِيجِ امْرَأَةٍ ثَيِّبٍ بِأَمْرِهَا، فَأَثْبَتَ الْقَاضِي نِكَاحَهَا إِيَّاهُ، وَالزَّوْجُ يَعْلَمُ أَنَّهُ لَمْ يَتَزَوَّجْهَا قَطُّ، فَإِنَّهُ يَسَعُهُ هَذَا النِّكَاحُ، وَلاَ بَأْسَ بِالْمُقَامِ لَهُ مَعَهَا.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6970. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள்.

மக்கள், “எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.

ஆனால், சிலர் கூறுகின்றனர்: இரு பொய் சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதர், கன்னிகழிந்த பெண்ணின் உத்தரவுப்படி அவளைத் தாம் மண முடித்துக்கொண்டதாகக் கூறி தந்திரம் செய்தார். (இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும்) அவளை அவர் மணமுடித்துக்கொண்டதாக உறுதி செய்தார். ஆனால், அவளைத் தாம் ஒருபோதும் மணமுடிக்கவில்லை என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இப்போது இத்திருமணம் அவனுக்குச் செல்லும். அவளுடன் அவன் தங்கியிருப்பதில் குற்றமில்லை.


அத்தியாயம் : 90
6971. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْبِكْرُ تُسْتَأْذَنُ "". قُلْتُ إِنَّ الْبِكْرَ تَسْتَحْيِي قَالَ "" إِذْنُهَا صُمَاتُهَا "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنْ هَوِيَ رَجُلٌ جَارِيَةً يَتِيمَةً أَوْ بِكْرًا، فَأَبَتْ فَاحْتَالَ فَجَاءَ بِشَاهِدَىْ زُورٍ عَلَى أَنَّهُ تَزَوَّجَهَا، فَأَدْرَكَتْ فَرَضِيَتِ الْيَتِيمَةُ، فَقَبِلَ الْقَاضِي شَهَادَةَ الزُّورِ، وَالزَّوْجُ يَعْلَمُ بِبُطْلاَنِ ذَلِكَ، حَلَّ لَهُ الْوَطْءُ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6971. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோர வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “கன்னிப்பெண் (வெளிப்படையாகத் தன் இசைவைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளுடைய அனுமதி” என்று சொன்னார்கள்.25

சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஓர் அநாதைச் சிறுமியை, அல்லது கன்னிப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். இந்நிலையில், அவர் தந்திரமாக இரு பொய் சாட்சிகளை அழைத்து வந்து, தாம் அவளை மணமுடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் அந்த அநாதைச் சிறுமி பருவம் எய்தினாள்; (அந்தத் திருமணத்தை) ஏற்றும்கொண்டாள். நீதிபதியோ பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அது பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்றாகவே) தெரியும். இந்நிலையில் (அவளுடன்) தாம்பத்திய உறவு கொள்ள அவனுக்கு அனுமதி உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர்.

அத்தியாயம் : 90
6972. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ، وَيُحِبُّ الْعَسَلَ، وَكَانَ إِذَا صَلَّى الْعَصْرَ أَجَازَ عَلَى نِسَائِهِ فَيَدْنُو مِنْهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ، فَاحْتَبَسَ عِنْدَهَا أَكْثَرَ مِمَّا كَانَ يَحْتَبِسُ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ فَقِيلَ لِي أَهْدَتِ امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةَ عَسَلٍ، فَسَقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهُ شَرْبَةً. فَقُلْتُ أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ. فَذَكَرْتُ ذَلِكَ لِسَوْدَةَ قُلْتُ إِذَا دَخَلَ عَلَيْكِ فَإِنَّهُ سَيَدْنُو مِنْكِ فَقُولِي لَهُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ مَغَافِيرَ فَإِنَّهُ سَيَقُولُ لاَ. فَقُولِي لَهُ مَا هَذِهِ الرِّيحُ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَشْتَدُّ عَلَيْهِ أَنْ تُوجَدُ مِنْهُ الرِّيحُ، فَإِنَّهُ سَيَقُولُ سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ. فَقُولِي لَهُ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ. وَسَأَقُولُ ذَلِكَ، وَقُولِيهِ أَنْتِ يَا صَفِيَّةُ. فَلَمَّا دَخَلَ عَلَى سَوْدَةَ، قُلْتُ تَقُولُ سَوْدَةُ وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ لَقَدْ كِدْتُ أَنْ أُبَادِرَهُ بِالَّذِي قُلْتِ لِي، وَإِنَّهُ لَعَلَى الْبَابِ فَرَقًا مِنْكِ، فَلَمَّا دَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ مَغَافِيرَ قَالَ "" لاَ "". قُلْتُ فَمَا هَذِهِ الرِّيحُ قَالَ "" سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ "". قُلْتُ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ. فَلَمَّا دَخَلَ عَلَىَّ قُلْتُ لَهُ مِثْلَ ذَلِكَ. وَدَخَلَ عَلَى صَفِيَّةَ فَقَالَتْ لَهُ مِثْلَ ذَلِكَ. فَلَمَّا دَخَلَ عَلَى حَفْصَةَ قَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَسْقِيكَ مِنْهُ قَالَ "" لاَ حَاجَةَ لِي بِهِ "". قَالَتْ تَقُولُ سَوْدَةُ سُبْحَانَ اللَّهِ لَقَدْ حَرَمْنَاهُ. قَالَتْ قُلْتُ لَهَا اسْكُتِي.
பாடம்: 12 கணவனிடமும் சக்களத்திகளிடமும் ஒரு பெண் தந்திரம் செய்வது விரும்பத் தகுந்தது அல்ல என்பதும், இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறைவசனமும்
6972. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்ப மானவையாக இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர் களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒருநாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன்.

அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, “நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். ஆதலால், ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள்.

உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுவாசலில் இருந்தபோது உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?” என்று கேட்டேன். அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.

“அப்படியானால், இது என்ன வாடை?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்” என்று சொன்னார்கள். நான், “அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டுவிட்டதுபோலும்)” என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், “அல்லாஹ்வின் தூதரே! அருந்துவதற்குத் தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்கள்.

(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! நபி (ஸல்) அவர் களை, அதை அருந்தவிடாமல் நாம் தடுத்துவிட்டோமே!” என்று (வருத்தத்து டன்) கூறுவார்கள். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.26

அத்தியாயம் : 90
6973. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ خَرَجَ إِلَى الشَّأْمِ، فَلَمَّا جَاءَ بِسَرْغَ بَلَغَهُ أَنَّ الْوَبَاءَ وَقَعَ بِالشَّأْمِ فَأَخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمْ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ "". فَرَجَعَ عُمَرُ مِنْ سَرْغَ. وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عُمَرَ إِنَّمَا انْصَرَفَ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ.
பாடம்: 13 கொள்ளை நோயிலிருந்து வெருண்டோடுவதற்காகத் தந்திரம் செய்வது விரும்பத் தக்கதன்று.
6973. அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (நாட்டு மக்களின் நிலவரம் அறிய) ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். ‘சர்ஃக்’ எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது.

அப்போது அவர்களிடம் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் (வலியப்) போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது கொள்ளைநோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரிலிருந்து) வெளியேறாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சர்ஃகிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பிவிட்டார்கள்.27

மற்றோர் அறிவிப்பில் சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸைச் செவியுற்றதால்தான் சர்ஃகிலிருந்து திரும்பிவிட்டார்கள்.


அத்தியாயம் : 90
6974. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّهُ سَمِعَ أُسَامَةَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ سَعْدًا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرَ الْوَجَعَ فَقَالَ "" رِجْزٌ ـ أَوْ عَذَابٌ ـ عُذِّبَ بِهِ بَعْضُ الأُمَمِ، ثُمَّ بَقِيَ مِنْهُ بَقِيَّةٌ، فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الأُخْرَى، فَمَنْ سَمِعَ بِهِ بِأَرْضٍ فَلاَ يَقْدَمَنَّ عَلَيْهِ، وَمَنْ كَانَ بِأَرْضٍ وَقَعَ بِهَا فَلاَ يَخْرُجْ فِرَارًا مِنْهُ "".
பாடம்: 13 கொள்ளை நோயிலிருந்து வெருண்டோடுவதற்காகத் தந்திரம் செய்வது விரும்பத் தக்கதன்று.
6974. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொள்ளை நோய் பற்றிக் குறிப்பிட்ட போது, “அது (இறைவன் வழங்கும்) வேதனையாகும். (அட்டூழியங்கள் புரிந்த) சில சமுதாயத்தார் அதன்மூலம் வேதனைக் குள்ளாக்கப்பட்டனர். பிறகு அதில் சிறிதளவு (இன்றளவும்) எஞ்சியுள்ளது. ஆகவே, அது அவ்வப்போது வந்துபோகும்.

ஒரு பகுதியில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கே நீங்கள் செல்லாதீர்கள். அது பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று சொன்னார்கள்.28

அத்தியாயம் : 90
6975. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ، لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ "".
பாடம்: 14 அன்பளிப்பு மற்றும் விலைக்கோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகிய வற்றில் தந்திரம் செய்வது29 “ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதைவிட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்டுகள் இருந்து வந்தன. பின்னர் அன்பளிப்பு வழங்கியவர் (அன்பளிப்பு பெற்றவரிடம் சமரசம் செய்துகொண்டு) அந்த வெள்ளிக் காசுகளைத் தந்திரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இந்த இருவரில் எவர்மீதும் ஸகாத் கடமையாகாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறுகின்றவர்கள், அன்பளிப்பு தொடர்பாக (அதைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதுடன், (பொருள் கைமாறுவதன் மூலம்) ஸகாத் கடமையாவதையும் நீக்கிவிடுகிறார்கள்.
6975. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளை திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் வாந்தி எடுத்ததைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இதுபோன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30


அத்தியாயம் : 90
6976. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ إِنَّمَا جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الشُّفْعَةَ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ. وَقَالَ بَعْضُ النَّاسِ الشُّفْعَةُ لِلْجِوَارِ. ثُمَّ عَمَدَ إِلَى مَا شَدَّدَهُ فَأَبْطَلَهُ، وَقَالَ إِنِ اشْتَرَى دَارًا فَخَافَ أَنْ يَأْخُذَ الْجَارُ بِالشُّفْعَةِ، فَاشْتَرَى سَهْمًا مِنْ مِائَةِ سَهْمٍ، ثُمَّ اشْتَرَى الْبَاقِيَ، وَكَانَ لِلْجَارِ الشُّفْعَةُ فِي السَّهْمِ الأَوَّلِ، وَلاَ شُفْعَةَ لَهُ فِي بَاقِي الدَّارِ، وَلَهُ أَنْ يَحْتَالَ فِي ذَلِكَ.
பாடம்: 14 அன்பளிப்பு மற்றும் விலைக்கோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகிய வற்றில் தந்திரம் செய்வது29 “ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதைவிட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்டுகள் இருந்து வந்தன. பின்னர் அன்பளிப்பு வழங்கியவர் (அன்பளிப்பு பெற்றவரிடம் சமரசம் செய்துகொண்டு) அந்த வெள்ளிக் காசுகளைத் தந்திரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இந்த இருவரில் எவர்மீதும் ஸகாத் கடமையாகாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறுகின்றவர்கள், அன்பளிப்பு தொடர்பாக (அதைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதுடன், (பொருள் கைமாறுவதன் மூலம்) ஸகாத் கடமையாவதையும் நீக்கிவிடுகிறார்கள்.
6976. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிரிக்கப்படாத ஒவ்வொரு (அசையாச்) சொத்தில்தான், பங்காளிக்கே விற்க வேண்டும் என்ற விலைக்கோள் உரிமையை (ஷுஃப்ஆ) நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு பாதைகள் குறிக்கப்பட்டுவிட்டால் பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற (கட்டாய) நிலையில்லை.31

சிலர், “(பங்காளிக்கு இருப்பதைப் போன்றே) அண்டை வீட்டாருக்கும் விலைக்கோள் (ஷுஃப்ஆ) உரிமை உண்டு” என்று கூறுகின்றனர். பிறகு இவ்விதியை உறுதிப்படுத்த விரும்பிய அவர்கள், (முன்னுக்குப்பின் முரணாக ஒரு கட்டத்தில்) இதே விதியைச் செல்லாததாக்கிவிடுகிறார்கள். (அதன் விவரமாவது:) ஒருவர் ஒரு வீட்டை (முழுவதும்) வாங்க விரும்பினார். ஆனால், அண்டை வீட்டான் விலைக்கோள் (ஷுஃப்ஆ) உரிமை கோரக்கூடும் என அஞ்சினார். ஆகவே, (அந்த வீட்டின்) நூறு பங்குகளில் (பிரிக்கப்படாத) ஒரு பங்கை (மட்டும் முதலில்) விலைக்கு வாங்கினார். (இதையடுத்து அவர் வீட்டு உரிமையாளருக்குப் பங்காளியாகிவிடுகிறார்.)

பிறகு மீதிப் பங்குகளையும் விலைக்கு வாங்கினார். (இப்போது அண்டை வீட்டானுக்கு விலைக்கோள் உரிமை இல்லாமல் போய்விடும். ஏனெனில், அவர் வாங்கிய) முதலாவது பங்கில் மட்டும்தான் அண்டை வீட்டானுக்கு விலைக்கோள் உரிமை இருந்தது. (அதை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.) வீட்டின் மீதியுள்ள பங்குகளில் அவனுக்கு அந்த உரிமை கிடையாது. (பங்காளிக்கே அந்த உரிமை உண்டு.) இவ்வாறு அவர் தந்திரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்கள்.32


அத்தியாயம் : 90
6977. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، سَمِعْتُ عَمْرَو بْنَ الشَّرِيدِ، قَالَ جَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى مَنْكِبِي، فَانْطَلَقْتُ مَعَهُ إِلَى سَعْدٍ فَقَالَ أَبُو رَافِعٍ لِلْمِسْوَرِ أَلاَ تَأْمُرُ هَذَا أَنْ يَشْتَرِيَ مِنِّي بَيْتِي الَّذِي فِي دَارِي. فَقَالَ لاَ أَزِيدُهُ عَلَى أَرْبَعِمِائَةٍ، إِمَّا مُقَطَّعَةٍ وَإِمَّا مُنَجَّمَةٍ. قَالَ أُعْطِيتُ خَمْسَمِائَةٍ نَقْدًا، فَمَنَعْتُهُ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ "". مَا بِعْتُكَهُ أَوْ قَالَ مَا أَعْطَيْتُكَهُ. قُلْتُ لِسُفْيَانَ إِنَّ مَعْمَرًا لَمْ يَقُلْ هَكَذَا. قَالَ لَكِنَّهُ قَالَ لِي هَكَذَا. وَقَالَ بَعْضُ النَّاسِ إِذَا أَرَادَ أَنْ يَبِيعَ الشُّفْعَةَ فَلَهُ أَنْ يَحْتَالَ حَتَّى يُبْطِلَ الشُّفْعَةَ فَيَهَبُ الْبَائِعُ لِلْمُشْتَرِي الدَّارَ، وَيَحُدُّهَا وَيَدْفَعُهَا إِلَيْهِ، وَيُعَوِّضُهُ الْمُشْتَرِي أَلْفَ دِرْهَمٍ، فَلاَ يَكُونُ لِلشَّفِيعِ فِيهَا شُفْعَةٌ.
பாடம்: 14 அன்பளிப்பு மற்றும் விலைக்கோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகிய வற்றில் தந்திரம் செய்வது29 “ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதைவிட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்டுகள் இருந்து வந்தன. பின்னர் அன்பளிப்பு வழங்கியவர் (அன்பளிப்பு பெற்றவரிடம் சமரசம் செய்துகொண்டு) அந்த வெள்ளிக் காசுகளைத் தந்திரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இந்த இருவரில் எவர்மீதும் ஸகாத் கடமையாகாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறுகின்றவர்கள், அன்பளிப்பு தொடர்பாக (அதைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதுடன், (பொருள் கைமாறுவதன் மூலம்) ஸகாத் கடமையாவதையும் நீக்கிவிடுகிறார்கள்.
6977. அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தமது கையை வைத்து, (என் மாமா) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்றேன். அப்போது (நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையான) அபூராஃபிஉ (ரலி) அவர்கள் மிஸ்வர் (ரலி) அவர்களிடம், “என் வீட்டிலுள்ள ஓர் அறையை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு சஅத் அவர்களுக்கு நீங்கள் யோசனை கூறமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நான் (வாங்குவதாக இருந்தால்) அவருக்கு (பொற்காசுகளில்) நானூறைவிட அதிகமாகத் தரமாட்டேன்; அதையும் பல தவணைகளில்தான் தர முடியும்” என்று கூறினார்கள்.

அபூராஃபிஉ (ரலி) அவர்கள், “(இந்த வீட்டை விலைக்குக் கேட்டு) எனக்கு ரொக்கமாக ஐநூறு (வெள்ளி அல்லது பொற்காசுகள்) தரப்பட்டது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ‘அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மட்டும் நான் கேட்டிராவிட்டால், இந்த வீட்டை உங்களுக்கு நான் ‘விற்க’ அல்லது ‘கொடுக்க’ முன்வந்திருக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

(எனக்கு இதை அறிவித்த) சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் நான் “மஅமர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு (இந்த அறிவிப்பாளர்தொடரில்) கூறவில்லையே?” என்று கேட்டேன். சுஃப்யான் அவர்கள், “ஆனால், மஅமர் (ரஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறே கூறினார்கள்” என்று சொன்னார்கள்.

சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் (அண்டை வீட்டாருக்குரிய) விலைக்கோள் உரிமையை மறுக்க எண்ணினால், தந்திரம் செய்து, அதை இல்லாமல் ஆக்கிவிடலாம். அதாவது விற்பவர் வாங்கும் எண்ணத்தில் உள்ளவருக்கு அந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கிட வேண்டும். அத்துடன் அதற்கு எல்லைகளை வகுத்து அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். வாங்கியவர் (முன்பே பேரம் பேசாமல்) அதற்குப் பதிலாக ஆயிரம் வெள்ளிக் காசுகளை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு செய்துவிட்டால் (அன்பளிப்பு என்பது வாரிசுரிமை என்பதால்) விலைக்கோள் உரிமை கோர அதில் எவருக்கும் அதிகாரம் கிடையாது.


அத்தியாயம் : 90
6978. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ سَعْدًا، سَاوَمَهُ بَيْتًا بِأَرْبَعِمِائَةِ مِثْقَالٍ فَقَالَ لَوْلاَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ "". لَمَا أَعْطَيْتُكَ. وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ اشْتَرَى نَصِيبَ دَارٍ، فَأَرَادَ أَنْ يُبْطِلَ الشُّفْعَةَ، وَهَبَ لاِبْنِهِ الصَّغِيرِ وَلاَ يَكُونُ عَلَيْهِ يَمِينٌ.
பாடம்: 14 அன்பளிப்பு மற்றும் விலைக்கோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகிய வற்றில் தந்திரம் செய்வது29 “ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதைவிட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்டுகள் இருந்து வந்தன. பின்னர் அன்பளிப்பு வழங்கியவர் (அன்பளிப்பு பெற்றவரிடம் சமரசம் செய்துகொண்டு) அந்த வெள்ளிக் காசுகளைத் தந்திரமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், இந்த இருவரில் எவர்மீதும் ஸகாத் கடமையாகாது” என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறுகின்றவர்கள், அன்பளிப்பு தொடர்பாக (அதைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதுடன், (பொருள் கைமாறுவதன் மூலம்) ஸகாத் கடமையாவதையும் நீக்கிவிடுகிறார்கள்.
6978. அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் என்னிடம் (எனது) வீட்டை நானூறு பொற்காசுகளுக்குப் பகரமாக விலைபேசினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்” என்று கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் (இந்த வீட்டை) உங்களுக்கு நான் வழங்கியிருக்கமாட்டேன்” என்று சொன்னேன்.

“வீட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கிய ஒருவர் (அதன் மீதுள்ள) விலைக்கோள் உரிமையைத் தடுக்க விரும்பினால் பருவமடையாத தம் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கிடலாம். (அன்பளிப்பாகத்தான் அது வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காகச்) சத்தியம் செய்ய வேண்டிய பொறுப்பு (சிறுவனான) அவனுக்குக் கிடையாது” என்று சிலர் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 90
6979. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ يُدْعَى ابْنَ اللُّتَبِيَّةِ، فَلَمَّا جَاءَ حَاسَبَهُ قَالَ هَذَا مَالُكُمْ وَهَذَا هَدِيَّةٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَهَلاَّ جَلَسْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ، حَتَّى تَأْتِيَكَ هَدِيَّتُكَ إِنْ كُنْتَ صَادِقًا "". ثُمَّ خَطَبَنَا فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنِّي أَسْتَعْمِلُ الرَّجُلَ مِنْكُمْ عَلَى الْعَمَلِ مِمَّا وَلاَّنِي اللَّهُ، فَيَأْتِي فَيَقُولُ هَذَا مَالُكُمْ وَهَذَا هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي. أَفَلاَ جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ حَتَّى تَأْتِيَهُ هَدِيَّتُهُ، وَاللَّهِ لاَ يَأْخُذُ أَحَدٌ مِنْكُمْ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ، إِلاَّ لَقِيَ اللَّهَ يَحْمِلُهُ يَوْمَ الْقِيَامَةِ، فَلأَعْرِفَنَّ أَحَدًا مِنْكُمْ لَقِيَ اللَّهَ يَحْمِلُ بَعِيرًا لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ "". ثُمَّ رَفَعَ يَدَهُ حَتَّى رُئِيَ بَيَاضُ إِبْطِهِ يَقُولُ "" اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ "". بَصْرَ عَيْنِي وَسَمْعَ أُذُنِي.
பாடம்: 15 தமக்கு அன்பளிப்புகள் வழங்கப் பட வேண்டுமென்பதற்காக அதிகாரி தந்திரம் செய்வது (விரும்பத் தக்கதன்று).
6979. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூóத்துக்கொண்டு) வந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், “இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்” என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்துசேருமா?

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்தவண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக்கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்” என்று கூறினார்கள்.

பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.33


அத்தியாயம் : 90