6801. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ، فَقَالَ "" أُبَايِعُكُمْ عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُونِي فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَأُخِذَ بِهِ فِي الدُّنْيَا فَهْوَ كَفَّارَةٌ لَهُ وَطَهُورٌ، وَمَنْ سَتَرَهُ اللَّهُ فَذَلِكَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ إِذَا تَابَ السَّارِقُ بَعْدَ مَا قُطِعَ يَدُهُ، قُبِلَتْ شَهَادَتُهُ، وَكُلُّ مَحْدُودٍ كَذَلِكَ إِذَا تَابَ قُبِلَتْ شَهَادَتُهُ.
பாடம்: 14 திருடனின் பாவமன்னிப்புக் கோரிக்கை17
6801. உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி அளித்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களி டையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயóலும் எனக்கு மாறு செய்வதில்லை” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கு கின்றேன். உங்களில் எவர் (இவற்றை) நிறைவேற்றுகிறாரோ அவரது பிரதிபலன் அல்லாஹ்விடத்தில் உள்ளது.

மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக்கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்:

கை வெட்டப்பட்டதற்குப்பின் திருடன் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திவிட்டால், அவனது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே குற்றவியல் தண்டனைகள் பெற்ற அனைவரும்; அதைச் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கோரி திருந்தி விட்டால் அவர்களது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்தியாயம் : 86
6802. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ الْجَرْمِيُّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم نَفَرٌ مِنْ عُكْلٍ، فَأَسْلَمُوا فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمْ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَفَعَلُوا فَصَحُّوا، فَارْتَدُّوا وَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا، فَبَعَثَ فِي آثَارِهِمْ فَأُتِيَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ، ثُمَّ لَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا.
பாடம்: 15 இறைமறுப்பாளர்கள் மற்றும் மதம் மாறியோரில் வன்முறை யாளர்கள் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர்தொடுத்து, பூமியில் கலகம் விளைவித்துக்கொண்டிருப்போரின் தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது தூக்கிலிடப்பட வேண்டும். அல்லது மாறுகை, மாறுகால் வெட்டப்பட வேண்டும். அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். (5:33)20
6802. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச்சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள்.

அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.21

அத்தியாயம் : 86
6803. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَطَعَ الْعُرَنِيِّينَ وَلَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا.
பாடம்: 16 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோரின் காயங்களுக்கு மருந்திடாமல் அவர்கள் மாண்டு போகும்வரை நபி (ஸல்) அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.
6803. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச்செய்தார் கள். அவர்கள் இறக்கும்வரை அவர் களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.22

அத்தியாயம் : 86
6804. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ وُهَيْبٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ رَهْطٌ مِنْ عُكْلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم كَانُوا فِي الصُّفَّةِ، فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَبْغِنَا رِسْلاً. فَقَالَ "" مَا أَجِدُ لَكُمْ إِلاَّ أَنْ تَلْحَقُوا بِإِبِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "". فَأَتَوْهَا فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم الصَّرِيخُ، فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَأَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ وَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَمَا حَسَمَهُمْ، ثُمَّ أُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَمَا سُقُوا حَتَّى مَاتُوا. قَالَ أَبُو قِلاَبَةَ سَرَقُوا وَقَتَلُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ.
பாடம்: 17 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோருக்கு அவர்கள் சாகும் வரை தண்ணீர் தரப்படவில்லை.
6804. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் முகாமாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே, அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறுவழி இருப்பதாக) நான் காணவில்லை” என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல்வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உக்ல்’ குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள்.

அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியே விட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகரிலிருந்த ‘ஹர்ரா’ பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக்கொண்டிருந் தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.

(அறிவிப்பாளர்) அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள்.

அத்தியாயம் : 86
6805. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَهْطًا، مِنْ عُكْلٍ ـ أَوْ قَالَ عُرَيْنَةَ وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ مِنْ عُكْلٍ ـ قَدِمُوا الْمَدِينَةَ، فَأَمَرَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلِقَاحٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَشَرِبُوا حَتَّى إِذَا بَرِئُوا قَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا النَّعَمَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم غُدْوَةً فَبَعَثَ الطَّلَبَ فِي إِثْرِهِمْ، فَمَا ارْتَفَعَ النَّهَارُ حَتَّى جِيءَ بِهِمْ، فَأَمَرَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ، فَأُلْقُوا بِالْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ. قَالَ أَبُو قِلاَبَةَ هَؤُلاَءِ قَوْمٌ سَرَقُوا، وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ.
பாடம்: 18 வன்முறையாளர்களின் கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச் செய்தது
6805. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ (குலத்தாரில் பத்துப்பேருக்கும் குறைவான) சிலர் மதீனா வந்தனர். அப்போது (அவர்கள் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டனர். ஆகவே) நபி (ஸல்) அவர்கள் பால் தரும் ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் (சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும்) அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அவர்கள் மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். அதிகாலையில் இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.

உடனே அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைத் தேடி ஆட்களை அனுப்பிவைத்தார்கள். சூரியன் உச்சியை அடைவதற்குள் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களைத் தரித்து அவர்களின் கண்களில் சூடிடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு, அவர்கள் ‘ஹர்ரா’ பகுதியில் எறியப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இந்த (உக்ல்) குலத்தார் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்செயல்களில் ஈடுபட்டார்கள். (ஆகவேதான், கொடுஞ் செயல் புரிந்த அவர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது.)

அத்தியாயம் : 86
6806. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ. وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ "".
பாடம்: 19 மானக்கேடான செயல்களைக் கைவிட்டவரின் சிறப்பு23
6806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதர்.

4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர்.

5. இறைவழியில் நட்பு கொண்ட இருவர்.

6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று கூறியவர்.

7. தமது இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24


அத்தியாயம் : 86
6807. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ. وَحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ، تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ "".
பாடம்: 19 மானக்கேடான செயல்களைக் கைவிட்டவரின் சிறப்பு23
6807. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளத(ôன பாலுறுப்பி)ற்கும், தம் இரு தாடைகளுக்கிடையே உள்ளத(ôன நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக் கிறாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 86
6808. أَخْبَرَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَخْبَرَنَا أَنَسٌ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمُوهُ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَقُومُ السَّاعَةُ ـ وَإِمَّا قَالَ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ ـ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِلْخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ "".
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6808. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்:

கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் ‘மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும்’; அல்லது ‘இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது’.


அத்தியாயம் : 86
6809. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا الْفُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَزْنِي الْعَبْدُ حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَقْتُلُ وَهْوَ مُؤْمِنٌ "". قَالَ عِكْرِمَةُ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ يُنْزَعُ الإِيمَانُ مِنْهُ قَالَ هَكَذَا ـ وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ ثُمَّ أَخْرَجَهَا ـ فَإِنْ تَابَ عَادَ إِلَيْهِ هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். மேலும், அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்ய மாட்டான்.26

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்?” என்று நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறுதான்’ என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். ‘அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்துவிடுகிறது’ என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 86
6810. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ، وَالتَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ "".
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கை யாளனாக இருந்துகொண்டு திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 86
6811.
பாடம்: 20 விபசாரம் செய்வோருக்கு நேரும் பாவம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனின் உண்மையான அடி யார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். நிச்சயமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6811. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், “அல்லாஹ்வின் தூதரே! மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்” என்று சொன்னார்கள். “பிறகு, எது (பெரிய பாவம்)?” என்று கேட்டேன். அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்” என்று சொன்னார்கள்.

நான், “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் அண்டை வீட்டாரின் மனைவி யுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில் அறிவிப்பாளர் அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கும் அபூவாயில் (ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூமைசரா (ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக! விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

அத்தியாயம் :
6812. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه حِينَ رَجَمَ الْمَرْأَةَ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6812. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன்” என்று சொன்னார்கள்.29


அத்தியாயம் : 86
6813. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ. قُلْتُ قَبْلَ سُورَةِ النُّورِ أَمْ بَعْدُ قَالَ لاَ أَدْرِي.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6813. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், “(குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா; அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.30


அத்தியாயம் : 86
6814. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ أَنَّهُ قَدْ زَنَى، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَ، وَكَانَ قَدْ أُحْصِنَ.
பாடம்: 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்27 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங் கப்படும்.28
6814. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் பின் மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார்.

அத்தியாயம் : 86
6815. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ. فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَبِكَ جُنُونٌ ". قَالَ لاَ. قَالَ " فَهَلْ أَحْصَنْتَ ". قَالَ نَعَمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ".
பாடம்: 22 (விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6815. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

அவர் திரும்பத்திரும்ப அதையே நான்கு தடவை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமணமாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (திருமணமாகிவிட்டது)” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.32

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 86
6816. قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ هَرَبَ، فَأَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ.
பாடம்: 22 (விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், “பைத்தியக்காரன் தெளிவடை யும்வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும்வரையிலும் தூங்குபவன் விழிக்கும்வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.31
6816. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந் தேன். அப்போது அவர்மீது (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவர்மீது விழுந்தபோது (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச்சென்று பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.33

அத்தியாயம் : 86
6817. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ "". زَادَ لَنَا قُتَيْبَةُ عَنِ اللَّيْثِ "" وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23 விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6817. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சை செய்துகொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்” என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) “சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.

(அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள், “விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்” என்பதையும் கூடுதல் தகவலாக எமக்கு அறிவித்தார்கள்.34


அத்தியாயம் : 86
6818. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ "".
பாடம்: 23 விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான்.
6818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத் தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

அத்தியாயம் : 86
6819. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ وَيَهُودِيَّةٍ قَدْ أَحْدَثَا جَمِيعًا فَقَالَ لَهُمْ "" مَا تَجِدُونَ فِي كِتَابِكُمْ "". قَالُوا إِنَّ أَحْبَارَنَا أَحْدَثُوا تَحْمِيمَ الْوَجْهِ وَالتَّجْبِيَةَ. قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ادْعُهُمْ يَا رَسُولَ اللَّهِ بِالتَّوْرَاةِ. فَأُتِيَ بِهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، وَجَعَلَ يَقْرَأُ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ ابْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ. فَإِذَا آيَةُ الرَّجْمِ تَحْتَ يَدِهِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا. قَالَ ابْنُ عُمَرَ فَرُجِمَا عِنْدَ الْبَلاَطِ، فَرَأَيْتُ الْيَهُودِيَّ أَجْنَأَ عَلَيْهَا.
பாடம்: 24 (மஸ்ஜிதுந் நபவீ அருகிலிருந்த) ‘பலாத்’ எனுமிடத்தில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்36
6819. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்துவிட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்” என்று சொன்னார்கள்.

(அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவருமாறு அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அவ்வாறே ‘தவ்ராத்’ கொண்டுவரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை (‘ரஜ்ம்’) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்(து அந்த வசனத்தை யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன்பின் இருந்த வசனங்களை வாசித்துக்காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. ஆகவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அப்போது அவர்கள் இருவருக்கும் ‘பலாத்’ எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்கள்மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவள்மீது (கல் விழாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக்கொண்டதை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 86
6820. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ. قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبِكَ جُنُونٌ "". قَالَ لاَ. قَالَ "" آحْصَنْتَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْرًا وَصَلَّى عَلَيْهِ. لَمْ يَقُلْ يُونُسُ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ فَصَلَّى عَلَيْهِ.
பாடம்: 25 (பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறை வேற்றுதல்
6820. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் (மாஇஸ் பின் மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர், “(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் பேசுகிறேன்)” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் திருமண மாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். எனவே, நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்மீது கற்கள் விழத் தொடங்கியதும் அவர் (வலி தாங்க முடியாமல்) தப்பியோட ஆரம்பித்தார். பிறகு, அவர் பிடிக்கப்பட்டு, இறக்கும்வரை அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்ல விதமாகப் பேசியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தாôர்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அறிவிப்பாளர்களான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோர் தம் அறிவிப்புகளில் “அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்” என்பதைக் கூறவில்லை.

அபூஅப்தில்லாஹ் (புகாரியான என்) இடம், “நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?” என வினவப்பட்டது. “(ஆம்) அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். “மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?” என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன்.

அத்தியாயம் : 86