6668. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هُزِمَ الْمُشْرِكُونَ يَوْمَ أُحُدٍ هَزِيمَةً تُعْرَفُ فِيهِمْ، فَصَرَخَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ بْنُ الْيَمَانِ فَإِذَا هُوَ بِأَبِيهِ فَقَالَ أَبِي أَبِي. قَالَتْ فَوَاللَّهِ مَا انْحَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةٌ حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6668. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூச்சலிட்டான். உடனே முஸ்óம்களில் முன்அணியினர் (எதிரிகள் என் றெண்ணி), பின்அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக்கொண்ட னர். அப்போது ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்.

உடனே, “(அவர்) என் தந்தை! என் தந்தை!” என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.60

அத்தியாயம் : 83
6669. حَدَّثَنِي يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي عَوْفٌ، عَنْ خِلاَسٍ، وَمُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ نَاسِيًا وَهْوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ "".
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6669. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால், அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும்வைத்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6670. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ، فَمَضَى فِي صَلاَتِهِ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ انْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، وَسَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَسَلَّمَ.
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6670. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களுக்குத் தொழுவித் தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தறுவாயில் நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (அமர்விலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிóருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள்.62

அத்தியாயம் : 83
6671. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ عَبْدَ الْعَزِيزِ بْنَ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ صَلاَةَ الظُّهْرِ، فَزَادَ أَوْ نَقَصَ مِنْهَا ـ قَالَ مَنْصُورٌ لاَ أَدْرِي إِبْرَاهِيمُ وَهِمَ أَمْ عَلْقَمَةُ ـ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَقَصُرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا. قَالَ فَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ ثُمَّ قَالَ "" هَاتَانِ السَّجْدَتَانِ لِمَنْ لاَ يَدْرِي، زَادَ فِي صَلاَتِهِ أَمْ نَقَصَ، فَيَتَحَرَّى الصَّوَابَ، فَيُتِمُّ مَا بَقِيَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ "".
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6671. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி’ அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுவித்தார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம் (ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா (ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது- (தொழுகை முடிந்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்படி இப்படி நீங்கள் தொழுவித்தீர்கள்” என்று சொன்னார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தா செய்தார்கள். பிறகு, “இந்த இரண்டு சஜ்தாக்கள், தமது தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.63

அத்தியாயம் : 83
6672.
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6672. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று (களிரிடம் மூசா) கூறினார்” எனும் (18:73ஆவது) வசனத்(தின் விளக்கத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியால் ஆகும்” என்று சொன்னார்கள்.64

அத்தியாயம் :
6673. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَتَبَ إِلَىَّ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَكَانَ عِنْدَهُمْ ضَيْفٌ لَهُمْ فَأَمَرَ أَهْلَهُ أَنْ يَذْبَحُوا قَبْلَ أَنْ يَرْجِعَ، لِيَأْكُلَ ضَيْفُهُمْ، فَذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الذَّبْحَ. فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عِنْدِي عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ. فَكَانَ ابْنُ عَوْنٍ يَقِفُ فِي هَذَا الْمَكَانِ عَنْ حَدِيثِ الشَّعْبِيِّ، وَيُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ بِمِثْلِ هَذَا الْحَدِيثِ، وَيَقِفُ فِي هَذَا الْمَكَانِ وَيَقُولُ لاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ غَيْرَهُ أَمْ لاَ. رَوَاهُ أَيُّوبُ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6673. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானி பிராணியை) அறுத்திடுமாறு கட்டளையிட்டேன். அதன்படி அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாகவே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் (வேறொரு) குர்பானி பிராணியை அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்டேன். (நபியவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.)65

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள், ஆமிர் அஷ் ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் (அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இத்துடன் நிறுத்திவிட்டு, “பராஉ (ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6674. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا، قَالَ شَهِدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ عِيدٍ ثُمَّ خَطَبَ ثُمَّ قَالَ "" مَنْ ذَبَحَ فَلْيُبَدِّلْ مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ "".
பாடம்: 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?55 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தவறுதலாகச் செய்து விட்ட வற்றில் உங்கள்மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்ததுதான் குற்றமாகும். (33:5) மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: “நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள்” என அவர் (மூசா) கூறினார். (18:73)
6674. ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்துகொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் “யார் தொழுகைக்குமுன் (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.66

அத்தியாயம் : 83
6675. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْكَبَائِرُ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ "".
பாடம்: 16 பொய்ச் சத்தியம்67 நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே தவறாகப் பயன்படுத் தாதீர்கள். அவ்வாறு செய்தால் (பூமியில்) பதிந்தபின், பாதம் பிறழ்ந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தை அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (16:94) (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தகல்’ (தவறு) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள்.
6675. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6676. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
பாடம்: 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்த கையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட் டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கும், மக்களிடையே சமாதா னம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ் வை(க் கருவி) ஆக்கிவிட வேண்டாம். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அதுதான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95) நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற் றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (16:91)
6676. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக யார் திட்டமிட்டு, (பொய்ச்) சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்” என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தைஉறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ், “அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை” எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான்.68

அத்தியாயம் : 83
6677. فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فَقَالَ مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، فَقَالُوا كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ ". قُلْتُ إِذًا يَحْلِفُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، وَهْوَ فِيهَا فَاجِرٌ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ، وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ".
பாடம்: 17 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்த கையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவுமாட் டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்கும், மக்களிடையே சமாதா னம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ் வை(க் கருவி) ஆக்கிவிட வேண்டாம். அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224) மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அதுதான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95) நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற் றுங்கள். அல்லாஹ்வைப் பொறுப்பாளியாக்கி, நீங்கள் செய்யும் சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர், அவற்றை நீங்கள் முறித்துவிடாதீர்கள். (16:91)
6677. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்) அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பின்னர் அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்து, “அபூஅப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?” என்று கேட்டார்கள். “இப்படி, இப்படி” என மக்கள் கூறினார்கள்.

அப்போது அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் “(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரது சத்தியம்” என்று கூறினார்கள். (உடனே) நான் “அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக்கொள்வதற்காக யார் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்” என்று கூறினார்கள்.69

அத்தியாயம் : 83
6678. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ أَرْسَلَنِي أَصْحَابِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَسْأَلُهُ الْحُمْلاَنَ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ عَلَى شَىْءٍ "". وَوَافَقْتُهُ وَهْوَ غَضْبَانُ فَلَمَّا أَتَيْتُهُ قَالَ "" انْطَلِقْ إِلَى أَصْحَابِكَ فَقُلْ إِنَّ اللَّهَ ـ أَوْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ـ يَحْمِلُكُمْ "".
பாடம்: 18 தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6678. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப ஊர்தி ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது” என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள்.

பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்வின் தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71

அத்தியாயம் : 83
6679. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا الْحَجَّاجُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الأَيْلِيُّ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا ـ كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} الْعَشْرَ الآيَاتِ كُلَّهَا فِي بَرَاءَتِي. فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ لِقَرَابَتِهِ مِنْهُ ـ وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا، بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ. فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى} الآيَةَ. قَالَ أَبُو بَكْرٍ بَلَى وَاللَّهِ إِنِّي لأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي. فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ وَقَالَ وَاللَّهِ لاَ أَنْزِعُهَا عَنْهُ أَبَدًا.
பாடம்: 18 தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)

அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறியபின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள்.72

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6680. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ الْقَاسِمِ، عَنْ زَهْدَمٍ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ، فَوَافَقْتُهُ وَهْوَ غَضْبَانُ فَاسْتَحْمَلْنَاهُ، فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا ثُمَّ قَالَ "" وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம்: 18 தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத் துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்70
6680. ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.

பிறகு (எங்களுக்கு ஊர்தி ஒட்டகங் களைத் தந்துவிட்டு) “அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று சொன்னார்கள்.73

அத்தியாயம் : 83
6681. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ كَلِمَةً. أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ "".
பாடம்: 19 ஒருவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது ‘சுப்ஹானல்லாஹ்’ என்றார்; அல்லது ‘அல்லாஹு அக்பர்’ என்று சொன்னார்; அல்லது ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்றார்; அல்லது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார் என்றால், அவர் எண்ணப்படியே அமையும்.74 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது நான்காகும்: 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்.) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்.) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமாபுரிப் பேரரசர்) ஹிரக்ளீயஸிற்கு எழுதிய கடிதத்தில், ‘(வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்” என்று எழுதினார்கள்.75 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்பதாகும்.76
6681. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணவேளை நெருங்கியபோது அவரிடம் வந்து,” ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.77

அத்தியாயம் : 83
6682. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ "".
பாடம்: 19 ஒருவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது ‘சுப்ஹானல்லாஹ்’ என்றார்; அல்லது ‘அல்லாஹு அக்பர்’ என்று சொன்னார்; அல்லது ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்றார்; அல்லது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார் என்றால், அவர் எண்ணப்படியே அமையும்.74 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது நான்காகும்: 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்.) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்.) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமாபுரிப் பேரரசர்) ஹிரக்ளீயஸிற்கு எழுதிய கடிதத்தில், ‘(வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்” என்று எழுதினார்கள்.75 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்பதாகும்.76
6682. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம்.

(பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78

அத்தியாயம் : 83
6683. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَلِمَةً وَقُلْتُ أُخْرَى "" مَنْ مَاتَ يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ النَّارَ "". وَقُلْتُ أُخْرَى مَنْ مَاتَ لاَ يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ الْجَنَّةَ.
பாடம்: 19 ஒருவர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது ‘சுப்ஹானல்லாஹ்’ என்றார்; அல்லது ‘அல்லாஹு அக்பர்’ என்று சொன்னார்; அல்லது ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்றார்; அல்லது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார் என்றால், அவர் எண்ணப்படியே அமையும்.74 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது நான்காகும்: 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்.) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்.) அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமாபுரிப் பேரரசர்) ஹிரக்ளீயஸிற்கு எழுதிய கடிதத்தில், ‘(வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள்” என்று எழுதினார்கள்.75 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்பதாகும்.76
6683. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்” என்று சொன்னார்கள். நான் மற்றொரு வார்த்தையில், “யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார்” என்று சொன்னேன்.79

அத்தியாயம் : 83
6684. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً، ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ آلَيْتَ شَهْرًا. فَقَالَ {إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ}
பாடம்: 20 ஒருவர், தம் வீட்டாரிடம் ஒரு மாதம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களாய் அமைந்துவிட்டால்...?80
6684. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள்.

பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்துவிட்டீர்களே?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்று சொன்னார்கள்.81

அத்தியாயம் : 83
6685. حَدَّثَنِي عَلِيٌّ، سَمِعَ عَبْدَ الْعَزِيزِ بْنَ أَبِي حَازِمٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ، صَاحِبَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَعْرَسَ فَدَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم لِعُرْسِهِ، فَكَانَتِ الْعَرُوسُ خَادِمَهُمْ. فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ هَلْ تَدْرُونَ مَا سَقَتْهُ قَالَ أَنْقَعَتْ لَهُ تَمْرًا فِي تَوْرٍ مِنَ اللَّيْلِ، حَتَّى أَصْبَحَ عَلَيْهِ فَسَقَتْهُ إِيَّاهُ.
பாடம்: 21 ஊறவைக்கப்பட்ட பழச்சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்தி விட்டால், சிலரது கூற்றுப்படி அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார். (ஏனெனில்,) அவர்களின் கருத்துப்படி இவை ‘நபீதி’ல் சேரா.82
6685. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர் அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தமது திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.

மக்களே! மணப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம்பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.83

அத்தியாயம் : 83
6686. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ سَوْدَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ مَاتَتْ لَنَا شَاةٌ فَدَبَغْنَا مَسْكَهَا ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَتْ شَنًّا.
பாடம்: 21 ஊறவைக்கப்பட்ட பழச்சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்தி விட்டால், சிலரது கூற்றுப்படி அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார். (ஏனெனில்,) அவர்களின் கருத்துப்படி இவை ‘நபீதி’ல் சேரா.82
6686. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்து விட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்துவந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

அத்தியாயம் : 83
6687. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ. وَقَالَ ابْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَائِشَةَ بِهَذَا.
பாடம்: 22 தொடுகறியுடன் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், ரொட்டியுடன் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால்...? மேலும், எதுவெல்லாம் தொடுகறியாகும்?84
6687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை அவர்களுடைய குடும்பத்தார் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.85

அத்தியாயம் : 83