6635. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَرَأَيْتُمْ إِنْ كَانَ أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرًا مِنْ تَمِيمٍ وَعَامِرِ بْنِ صَعْصَعَةَ وَغَطَفَانَ وَأَسَدٍ، خَابُوا وَخَسِرُوا "". قَالُوا نَعَمْ. فَقَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُمْ خَيْرٌ مِنْهُمْ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6635. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “பனூ தமீம், பனூ ஆமிர் பின் ஸஅஸஆ, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள்தானே!” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.19

அத்தியாயம் : 83
6636. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ عَامِلاً فَجَاءَهُ الْعَامِلُ حِينَ فَرَغَ مِنْ عَمَلِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. فَقَالَ لَهُ "" أَفَلاَ قَعَدْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ فَنَظَرْتَ أَيُهْدَى لَكَ أَمْ لاَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشِيَّةً بَعْدَ الصَّلاَةِ فَتَشَهَّدَ وَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَمَا بَالُ الْعَامِلِ نَسْتَعْمِلُهُ، فَيَأْتِينَا فَيَقُولُ هَذَا مِنْ عَمَلِكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. أَفَلاَ قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ فَنَظَرَ هَلْ يُهْدَى لَهُ أَمْ لاَ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَغُلُّ أَحَدُكُمْ مِنْهَا شَيْئًا، إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ، إِنْ كَانَ بَعِيرًا جَاءَ بِهِ لَهُ رُغَاءٌ، وَإِنْ كَانَتْ بَقَرَةً جَاءَ بِهَا لَهَا خُوَارٌ، وَإِنْ كَانَتْ شَاةً جَاءَ بِهَا تَيْعَرُ، فَقَدْ بَلَّغْتُ "". فَقَالَ أَبُو حُمَيْدٍ ثُمَّ رَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ حَتَّى إِنَّا لَنَنْظُرُ إِلَى عُفْرَةِ إِبْطَيْهِ. قَالَ أَبُو حُمَيْدٍ وَقَدْ سَمِعَ ذَلِكَ مَعِي زَيْدُ بْنُ ثَابِتٍ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلُوهُ.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6636. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூóக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்தபிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே!

(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறைகேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார். ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; பசுவாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்” என்று கூறிவிட்டு, “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள்.

அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவுக்குத் தமது கையை உயர்த்தி னார்கள்.

இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20

அத்தியாயம் : 83
6637. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَام ٌ ـ هُوَ ابْنُ يُوسُفَ ـ عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَضَحِكْتُمْ قَلِيلاً "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6637. அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

அத்தியாயம் : 83
6638. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ انْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ فِي ظِلِّ الْكَعْبَةِ "" هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ، هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ "" قُلْتُ مَا شَأْنِي أَيُرَى فِيَّ شَىْءٌ مَا شَأْنِي فَجَلَسْتُ إِلَيْهِ وَهْوَ يَقُولُ، فَمَا اسْتَطَعْتُ أَنْ أَسْكُتَ، وَتَغَشَّانِي مَا شَاءَ اللَّهُ، فَقُلْتُ مَنْ هُمْ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الأَكْثَرُونَ أَمْوَالاً، إِلاَّ مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6638. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! அவர்கள் இழப்புக்குரியவர்கள், கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக அவர்கள் இழப்புக்குரியவர்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், “என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?” என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன்.

அப்போது நபியவர்கள், “என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் முன் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

அத்தியாயம் : 83
6639. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ سُلَيْمَانُ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةً، كُلُّهُنَّ تَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ. فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَطَافَ عَلَيْهِنَّ جَمِيعًا، فَلَمْ تَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَايْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ. لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), “நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர், “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.)

மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர் களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப் பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

அத்தியாயம் : 83
6640. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَرَقَةٌ مِنْ حَرِيرٍ، فَجَعَلَ النَّاسُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ، وَيَعْجَبُونَ مِنْ حُسْنِهَا وَلِينِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَعْجَبُونَ مِنْهَا "". قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْهَا "". لَمْ يَقُلْ شُعْبَةُ وَإِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6640. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) “இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சஅத் (பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) மற்றும் இஸ்ராயீல் (ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக’ என்பது இடம் பெறவில்லை.23

அத்தியாயம் : 83
6641. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ مِمَّا عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ ـ أَوْ خِبَائِكَ، شَكَّ يَحْيَى ـ ثُمَّ مَا أَصْبَحَ الْيَوْمَ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ أَوْ خِبَائِكَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَأَيْضًا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ قَالَ "" لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6641. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ’ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உனது இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று கூறினார்கள்.

அவர் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது” என்று பதிலளித்தார்கள்.24

‘வீட்டார்கள்’ என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 83
6642. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُضِيفٌ ظَهْرَهُ إِلَى قُبَّةٍ مِنْ أَدَمٍ يَمَانٍ إِذْ قَالَ لأَصْحَابِهِ "" أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" أَفَلَمْ تَرْضَوْا أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6642. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை யமன் நாட்டுத் தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ (விரும்புவோம்) என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.25

அத்தியாயம் : 83
6643. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6643. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். விடிந்ததும் அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத்திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்” என்று சொன்னார்கள்.26

அத்தியாயம் : 83
6644. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِ ظَهْرِي إِذَا مَا رَكَعْتُمْ وَإِذَا مَا سَجَدْتُمْ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6644. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(தொழுகையில்) ருகூவையும் (குனி தலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத் தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போதும் சஜ்தா செய்யும்போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6645. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَهَا أَوْلاَدٌ لَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّكُمْ لأَحَبُّ النَّاسِ إِلَىَّ "". قَالَهَا ثَلاَثَ مِرَارٍ.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6645. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என்னுயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.27

அத்தியாயம் : 83
6646.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6646. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்துகொண்டிருந்தபோது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள்.

மேலும், “அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் :
6647. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ "". قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاكِرًا وَلاَ آثِرًا. قَالَ مُجَاهِدٌ {أَوْ أَثَرَةٍ مِنْ عِلْمٍ} يَأْثُرُ عِلْمًا. تَابَعَهُ عُقَيْلٌ وَالزُّبَيْدِيُّ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ عُيَيْنَةَ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6647. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி; பிறரது பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (‘பிறரது பேச்சை எடுத்துரைத் தல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4ஆவது வசனத் தின் மூலத்தில் இடம்பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்பது பொருள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

வேறு இரு அறிவிப்புகளில், உமர் (ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 83
6648. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهُ صلى الله عليه وسلم "" لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ "".
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6649. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، وَالْقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ، قَالَ كَانَ بَيْنَ هَذَا الْحَىِّ مِنْ جَرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فِيهِ لَحْمُ دَجَاجٍ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ أَحْمَرُ كَأَنَّهُ مِنَ الْمَوَالِي، فَدَعَاهُ إِلَى الطَّعَامِ فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ أَنْ لاَ آكُلَهُ. فَقَالَ قُمْ فَلأُحَدِّثَنَّكَ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ "" وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ "". فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَهْبِ إِبِلٍ فَسَأَلَ عَنَّا. فَقَالَ "" أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ "". فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا مَا صَنَعْنَا حَلَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَحْمِلُنَا وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا ثُمَّ حَمَلَنَا، تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمِينَهُ، وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ إِنَّا أَتَيْنَاكَ لِتَحْمِلَنَا فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا، وَمَا عِنْدَكَ مَا تَحْمِلُنَا. فَقَالَ "" إِنِّي لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا "".
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6649. ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூமூசா (ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூமூசா (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் ‘பனூ தைம்’ குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார்.

அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், “இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை நான் கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் நான் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) அபூமூசா (ரலி) அவர்கள், “எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்துசெல்ல ஒட்டகங்கள் தரும்படி கேட்டுச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (ஊர்தி) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை. எனவே, உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்” என்று கூறினார்கள். (ஆகவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (ஃகனீமத்) ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே, “அஷ்அரீ குலத்தார் எங்கே?” என எங்களைக் குறித்து கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.

நாங்கள் (அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு) சென்றுகொண்டிருந்த போது (நாங்கள் எங்களுக்குள்) “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு (ஊர்தி) ஒட்டகங்கள் வழங்கப் போவதில்லையெனச் சத்தியம் செய்தார்கள்; அவர்களிடம் (அதற்கான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. பிறகு (என்ன நடந்ததோ!) நமக்கு ஒட்டகங்களை வழங்கினார்கள். (ஒருவேளை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கும்படி செய்துவிட்டோமா! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை” என்று பேசிக்கொண்டோம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். அவர்களிடம், “நாங்கள் தங்களிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் கேட்டு (முதலில்) வந்தபோது எங்களுக்கு ஒட்டகங்கள் தரப்போவதில்லையெனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். தங்களிடம் எங்களை ஏற்றியனுப்ப(த் தேவையான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. (பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் தரும்படி மறதியாகச் சொல்லிவிட்டீர்களோ?)” என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (பொதுவாக) நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று கூறினார்கள்.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 83
6650. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ "".
பாடம்: 5 லாத், உஸ்ஸா உள்ளிட்ட (பொய்த் தெய்வச்) சிலைகள் பெயரால் சத்தியம் செய்யலாகாது.
6650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது, (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூதாடலாம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30

அத்தியாயம் : 83
6651. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ يَلْبَسُهُ، فَيَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ، فَصَنَعَ النَّاسُ خَوَاتِيمَ ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ "" إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتِمَ وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ "". فَرَمَى بِهِ ثُمَّ قَالَ "" وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا "". فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 6 சத்தியம் செய்யும்படி கோரப்படாதபோதும் சத்தியம் செய்தல்31
6651. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன்மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்துகொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்த னர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற் பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, “நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.

பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்.” என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.32

அத்தியாயம் : 83
6652.
பாடம்: 7 இஸ்லாம் அல்லாத வேறொரு மார்க்கத்தின் பெயரால் சத்தியம் செய்வது “யார் ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’ ஆகியவற்றின் பெயரால் சத்தியம் செய்தாரோ, அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.33 (ஆனால், இவ்வாறு) சத்தியம் செய்தவரை இறைமறுப்பின் பக்கம் நபியவர்கள் சேர்க்கவில்லை.34
6652. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன்மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன்மூலம் அவர் நரக நெருப்பில் வேதûனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.

இதை ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

அத்தியாயம் :
6653. وَقَالَ عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَرَادَ اللَّهُ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ مَلَكًا فَأَتَى الأَبْرَصَ فَقَالَ تَقَطَّعَتْ بِي الْحِبَالُ، فَلاَ بَلاَغَ لِي إِلاَّ بِاللَّهِ، ثُمَّ بِكَ "". فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 8 ‘அல்லாஹ்வும் நீயும் நாடினால்’ என்று கூறலாகாது. ‘அல்லாஹ் வால், பிறகு உன்னால்’ என்று கூறலாமா?36
6653. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் (தொழுநோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். ஆகவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, “பயணத்தில் என் வாழ்வா தாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது). இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை” என்று கூறினார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.37

அத்தியாயம் : 83