6628. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَتْ يَمِينُ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6628. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக” என்பது நபி (ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)ய மாக இருந்தது.13

அத்தியாயம் : 83
6629. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَإِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6629. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(தற்போதுள்ள கிழக்கு ரோமானிய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற் போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14

அத்தியாயம் : 83
6630. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6630. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதுள்ள கிழக்கு ரோமானிய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப்பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

அத்தியாயம் : 83
6631. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَضَحِكْتُمْ قَلِيلاً "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6631. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர் களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர் கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16

அத்தியாயம் : 83
6632. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ لَهُ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ كُلِّ شَىْءٍ إِلاَّ مِنْ نَفْسِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ "". فَقَالَ لَهُ عُمَرُ فَإِنَّهُ الآنَ وَاللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ نَفْسِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الآنَ يَا عُمَرُ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6632. அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உம்மைவிடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகாத வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது)” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்)” என்று கூறினார்கள்.17

அத்தியாயம் : 83
6633. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُهُمَا اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. وَقَالَ الآخَرُ وَهْوَ أَفْقَهُهُمَا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَائْذَنْ لِي أَنْ أَتَكَلَّمَ. قَالَ " تَكَلَّمْ ". قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا ـ قَالَ مَالِكٌ وَالْعَسِيفُ الأَجِيرُ ـ زَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ عَلَيْكَ ". وَجَلَدَ ابْنَهُ مِائَةً وَغَرَّبَهُ عَامًا، وَأُمِرَ أُنَيْسٌ الأَسْلَمِيُّ أَنْ يَأْتِيَ امْرَأَةَ الآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ رَجَمَهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6633. அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், “எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர், “ஆம். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “பேசுங்கள்” என்றார்கள்.

அந்த மனிதர், “என் மகன் இவரிடம் ‘அஸீஃப்’ ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். -’அஸீஃப்’ என்பதற்கு ‘கூலியாள்’ என்பது பொருள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்- (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். ஆகவே, மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு” என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன்.

பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், “(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவருடைய மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: “உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்” என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச்செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள்.

மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.18

அத்தியாயம் : 83
6635. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَرَأَيْتُمْ إِنْ كَانَ أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرًا مِنْ تَمِيمٍ وَعَامِرِ بْنِ صَعْصَعَةَ وَغَطَفَانَ وَأَسَدٍ، خَابُوا وَخَسِرُوا "". قَالُوا نَعَمْ. فَقَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُمْ خَيْرٌ مِنْهُمْ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6635. அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “பனூ தமீம், பனூ ஆமிர் பின் ஸஅஸஆ, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள்தானே!” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.19

அத்தியாயம் : 83
6636. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَعْمَلَ عَامِلاً فَجَاءَهُ الْعَامِلُ حِينَ فَرَغَ مِنْ عَمَلِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. فَقَالَ لَهُ "" أَفَلاَ قَعَدْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ فَنَظَرْتَ أَيُهْدَى لَكَ أَمْ لاَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشِيَّةً بَعْدَ الصَّلاَةِ فَتَشَهَّدَ وَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَمَا بَالُ الْعَامِلِ نَسْتَعْمِلُهُ، فَيَأْتِينَا فَيَقُولُ هَذَا مِنْ عَمَلِكُمْ، وَهَذَا أُهْدِيَ لِي. أَفَلاَ قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ وَأُمِّهِ فَنَظَرَ هَلْ يُهْدَى لَهُ أَمْ لاَ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَغُلُّ أَحَدُكُمْ مِنْهَا شَيْئًا، إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ، إِنْ كَانَ بَعِيرًا جَاءَ بِهِ لَهُ رُغَاءٌ، وَإِنْ كَانَتْ بَقَرَةً جَاءَ بِهَا لَهَا خُوَارٌ، وَإِنْ كَانَتْ شَاةً جَاءَ بِهَا تَيْعَرُ، فَقَدْ بَلَّغْتُ "". فَقَالَ أَبُو حُمَيْدٍ ثُمَّ رَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ حَتَّى إِنَّا لَنَنْظُرُ إِلَى عُفْرَةِ إِبْطَيْهِ. قَالَ أَبُو حُمَيْدٍ وَقَدْ سَمِعَ ذَلِكَ مَعِي زَيْدُ بْنُ ثَابِتٍ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلُوهُ.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6636. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூóக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்தபிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே!

(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறைகேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார். ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; பசுவாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்” என்று கூறிவிட்டு, “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள்.

அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவுக்குத் தமது கையை உயர்த்தி னார்கள்.

இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20

அத்தியாயம் : 83
6637. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَام ٌ ـ هُوَ ابْنُ يُوسُفَ ـ عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَضَحِكْتُمْ قَلِيلاً "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6637. அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

அத்தியாயம் : 83
6638. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ انْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ فِي ظِلِّ الْكَعْبَةِ "" هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ، هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ "" قُلْتُ مَا شَأْنِي أَيُرَى فِيَّ شَىْءٌ مَا شَأْنِي فَجَلَسْتُ إِلَيْهِ وَهْوَ يَقُولُ، فَمَا اسْتَطَعْتُ أَنْ أَسْكُتَ، وَتَغَشَّانِي مَا شَاءَ اللَّهُ، فَقُلْتُ مَنْ هُمْ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الأَكْثَرُونَ أَمْوَالاً، إِلاَّ مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6638. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! அவர்கள் இழப்புக்குரியவர்கள், கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக அவர்கள் இழப்புக்குரியவர்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், “என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?” என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன்.

அப்போது நபியவர்கள், “என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் முன் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

அத்தியாயம் : 83
6639. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ سُلَيْمَانُ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةً، كُلُّهُنَّ تَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ. فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَطَافَ عَلَيْهِنَّ جَمِيعًا، فَلَمْ تَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ وَاحِدَةٌ، جَاءَتْ بِشِقِّ رَجُلٍ، وَايْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ. لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), “நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர், “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.)

மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர் களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப் பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

அத்தியாயம் : 83
6640. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَرَقَةٌ مِنْ حَرِيرٍ، فَجَعَلَ النَّاسُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ، وَيَعْجَبُونَ مِنْ حُسْنِهَا وَلِينِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَعْجَبُونَ مِنْهَا "". قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَمَنَادِيلُ سَعْدٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْهَا "". لَمْ يَقُلْ شُعْبَةُ وَإِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6640. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) “இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சஅத் (பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) மற்றும் இஸ்ராயீல் (ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக’ என்பது இடம் பெறவில்லை.23

அத்தியாயம் : 83
6641. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ مِمَّا عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ ـ أَوْ خِبَائِكَ، شَكَّ يَحْيَى ـ ثُمَّ مَا أَصْبَحَ الْيَوْمَ أَهْلُ أَخْبَاءٍ ـ أَوْ خِبَاءٍ ـ أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ أَوْ خِبَائِكَ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَأَيْضًا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَىَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ قَالَ "" لاَ إِلاَّ بِالْمَعْرُوفِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6641. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ’ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உனது இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று கூறினார்கள்.

அவர் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது” என்று பதிலளித்தார்கள்.24

‘வீட்டார்கள்’ என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 83
6642. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُضِيفٌ ظَهْرَهُ إِلَى قُبَّةٍ مِنْ أَدَمٍ يَمَانٍ إِذْ قَالَ لأَصْحَابِهِ "" أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" أَفَلَمْ تَرْضَوْا أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ "". قَالُوا بَلَى. قَالَ "" فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6642. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை யமன் நாட்டுத் தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ (விரும்புவோம்) என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.25

அத்தியாயம் : 83
6643. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6643. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். விடிந்ததும் அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத்திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்” என்று சொன்னார்கள்.26

அத்தியாயம் : 83
6644. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِ ظَهْرِي إِذَا مَا رَكَعْتُمْ وَإِذَا مَا سَجَدْتُمْ "".
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6644. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

(தொழுகையில்) ருகூவையும் (குனி தலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத் தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போதும் சஜ்தா செய்யும்போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 83
6645. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَهَا أَوْلاَدٌ لَهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّكُمْ لأَحَبُّ النَّاسِ إِلَىَّ "". قَالَهَا ثَلاَثَ مِرَارٍ.
பாடம்: 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும்போது), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக!” என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின் போது) ‘லா ஹல்லாஹி இதன்’ (இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும்போது) ‘வல்லாஹி’, ‘பில்லாஹி’, ‘தல்லாஹி’ என்று சொல்லப்படுவதுண்டு.12
6645. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என்னுயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.27

அத்தியாயம் : 83
6646.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6646. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்துகொண்டிருந்தபோது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள்.

மேலும், “அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் :
6647. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ سَالِمٌ قَالَ ابْنُ عُمَرَ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ "". قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاكِرًا وَلاَ آثِرًا. قَالَ مُجَاهِدٌ {أَوْ أَثَرَةٍ مِنْ عِلْمٍ} يَأْثُرُ عِلْمًا. تَابَعَهُ عُقَيْلٌ وَالزُّبَيْدِيُّ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ عُيَيْنَةَ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عُمَرَ.
பாடம்: 4 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாம்.28
6647. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி; பிறரது பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (‘பிறரது பேச்சை எடுத்துரைத் தல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4ஆவது வசனத் தின் மூலத்தில் இடம்பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்பது பொருள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

வேறு இரு அறிவிப்புகளில், உமர் (ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 83