6434. حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ مِرْدَاسٍ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ، وَيَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ، لاَ يُبَالِيهِمُ اللَّهُ بَالَةً "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ حُفَالَةٌ وَحُثَالَةٌ.
பாடம்: 9
நல்லோர்களின் மறைவு
(‘மறைவு’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஹாப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதையே சற்று மாற்றி) ‘திஹாப்’ என்று சொன்னால் ‘மழை’ என்பது பொருள்.
6434. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகைவிட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட் படுத்தமாட்டான்.
இதை மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.26
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (‘மட்டம்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘ஹுஃபாலத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘ஹுஸாலத்’ என்றும் கூறப்படும்.
அத்தியாயம் : 81

6435. حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ وَالْقَطِيفَةِ وَالْخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ "".
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் நற்பேறற்றவன் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.28

6436. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَوْ كَانَ لاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا، وَلاَ يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ "".
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6436. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6437. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ عَطَاءً، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لأَحَبَّ أَنَّ لَهُ إِلَيْهِ مِثْلَهُ، وَلاَ يَمْلأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ "". قَالَ ابْنُ عَبَّاسٍ فَلاَ أَدْرِي مِنَ الْقُرْآنِ هُوَ أَمْ لاَ. قَالَ وَسَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ يَقُولُ ذَلِكَ عَلَى الْمِنْبَرِ.
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந் தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த வாசகம் திருக்குர்ஆனில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பது எனக்குத் தெரியாது.
அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்கா விலுள்ள) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு கூறக் கேட்டுள்ளேன்.

6438. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْغَسِيلِ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ، عَلَى الْمِنْبَرِ بِمَكَّةَ فِي خُطْبَتِهِ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" لَوْ أَنَّ ابْنَ آدَمَ أُعْطِيَ وَادِيًا مَلأً مِنْ ذَهَبٍ أَحَبَّ إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ أُعْطِيَ ثَانِيًا أَحَبَّ إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَسُدُّ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ "".
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6438. அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன்: மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

6439. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ "".
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6439. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படு வான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6440. وَقَالَ لَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنْ أُبَىٍّ، قَالَ كُنَّا نَرَى هَذَا مِنَ الْقُرْآنِ حَتَّى نَزَلَتْ {أَلْهَاكُمُ التَّكَاثُرُ}
பாடம்: 10
அஞ்சப்பட வேண்டிய செல்வத்தின் சோதனை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் செல்வங்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான பிரதிபலன் உள்ளது.(64:15)27
6440. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இ(ந்த ஹதீஸான)து குர்ஆனிலுள்ள ஒரு வசனம் என்றே நாங்கள் கருதி வந்தோம்; “செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைத் திசை திருப்பிவிட்டது” எனும் (102:1ஆவது) வசனம் அருளப் பெறும்வரை.29

6441. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي عُرْوَةُ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ "" هَذَا الْمَالُ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ قَالَ لِي يَا حَكِيمُ ـ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى "".
பாடம்: 11
“இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
பெண்கள், ஆண் மக்கள், பொன் மற்றும் வெள்ளியாலான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரகக்) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், வேளாண் நிலங்கள் ஆகியவற்றின்மீது ஆசை கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. (உண்மையில்) இவை (யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்கள் ஆகும். (3:14)
(இந்த வசனம் தொடர்பாக) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைவா! எங்களுக்காக எதை நீ அலங்கரித்துள் ளாயோ அதைக் கொண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. (ஆனால்,) இறைவா! இந்தச் செல்வங்களை அவற்றுக்குரிய வழியில் நான் செலவழிக்க (நீ அருள் புரிய) வேண்டுமென்று உன்னிடம் கோருகிறேன்.
6441. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களி டம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத் தார்கள்.
பிறகு “ ‘இந்தச் செல்வம்’ அல்லது ‘என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஹகீமே! இந்தச் செல்வம்’ பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.30

6442. حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، قَالَ عَبْدُ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّكُمْ مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا مِنَّا أَحَدٌ إِلاَّ مَالُهُ أَحَبُّ إِلَيْهِ. قَالَ "" فَإِنَّ مَالَهُ مَا قَدَّمَ، وَمَالُ وَارِثِهِ مَا أَخَّرَ "".
பாடம்: 12
ஒருவர் தமது செல்வத்திலிருந்து எதை (அறவழியில்) செலவிட் டாரோ அதுதான் அவருக்குரிய (நன்மை பயக்கும்) செல்வ மாகும்.
6442. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் “உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விடத் தம்முடைய வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தைவிட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்” என்று பதிலளித்தார்கள்.
“அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்குமுன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அதுதான் அவரது செல்வமாகும். (இறக்கும்போது) எதை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.31

6443. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجْتُ لَيْلَةً مِنَ اللَّيَالِي فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي وَحْدَهُ، وَلَيْسَ مَعَهُ إِنْسَانٌ ـ قَالَ ـ فَظَنَنْتُ أَنَّهُ يَكْرَهُ أَنْ يَمْشِيَ مَعَهُ أَحَدٌ ـ قَالَ ـ فَجَعَلْتُ أَمْشِي فِي ظِلِّ الْقَمَرِ فَالْتَفَتَ فَرَآنِي فَقَالَ "" مَنْ هَذَا "". قُلْتُ أَبُو ذَرٍّ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ "" يَا أَبَا ذَرٍّ تَعَالَهْ "". قَالَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً فَقَالَ "" إِنَّ الْمُكْثِرِينَ هُمُ الْمُقِلُّونَ يَوْمَ الْقِيَامَةِ، إِلاَّ مَنْ أَعْطَاهُ اللَّهُ خَيْرًا، فَنَفَحَ فِيهِ يَمِينَهُ وَشِمَالَهُ وَبَيْنَ يَدَيْهِ وَوَرَاءَهُ، وَعَمِلَ فِيهِ خَيْرًا "". قَالَ فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً فَقَالَ لِي "" اجْلِسْ هَا هُنَا "". قَالَ فَأَجْلَسَنِي فِي قَاعٍ حَوْلَهُ حِجَارَةٌ فَقَالَ لِي "" اجْلِسْ هَا هُنَا حَتَّى أَرْجِعَ إِلَيْكَ "". قَالَ فَانْطَلَقَ فِي الْحَرَّةِ حَتَّى لاَ أَرَاهُ فَلَبِثَ عَنِّي فَأَطَالَ اللُّبْثَ، ثُمَّ إِنِّي سَمِعْتُهُ وَهْوَ مُقْبِلٌ وَهْوَ يَقُولُ "" وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى "". قَالَ فَلَمَّا جَاءَ لَمْ أَصْبِرْ حَتَّى قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ مَنْ تُكَلِّمُ فِي جَانِبِ الْحَرَّةِ مَا سَمِعْتُ أَحَدًا يَرْجِعُ إِلَيْكَ شَيْئًا. قَالَ "" ذَلِكَ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ عَرَضَ لِي فِي جَانِبِ الْحَرَّةِ، قَالَ بَشِّرْ أُمَّتَكَ أَنَّهُ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، قُلْتُ يَا جِبْرِيلُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ. قَالَ قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ نَعَمْ، وَإِنْ شَرِبَ الْخَمْرَ. قَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ، وَحَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَالأَعْمَشُ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، بِهَذَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ حَدِيثُ أَبِي صَالِحٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، مُرْسَلٌ، لاَ يَصِحُّ، إِنَّمَا أَرَدْنَا لِلْمَعْرِفَةِ، وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ. قِيلَ لأَبِي عَبْدِ اللَّهِ حَدِيثُ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ مُرْسَلٌ أَيْضًا لاَ يَصِحُّ، وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ. وَقَالَ اضْرِبُوا عَلَى حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ هَذَا. إِذَا مَاتَ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. عِنْدَ الْمَوْتِ.
பாடம்: 13
(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே (மறுமையில் நன்மை) குறைந்தவர்கள் ஆவர்.32
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்க(ளின் பலன்)களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு (பலன் வழங்குவதில்) குறை செய்யப்படாது. (ஆனால்,) அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு (அடியோடு) அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும். (11:15,16)
6443. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந் தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். ஆகவே, நான் நிலவின் (ஒளி படாத) நிழலில் நடக்கலானேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!” என்றார்கள்.
நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர. அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின்பக்கமும் வாரி வழங்கி அந்தச் செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)” என்று சொன்னார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் “இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சமவெளியில் என்னை அமரச் செய்தார்கள். “நான் உங்களிடம் திரும்பி வரும்வரை இங்கேயே அமர்ந்திருங்கள்” என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றார்கள்.
பிறகு அவர்களை நான் காண முடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டே “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!” என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘அல்ஹர்ரா’ பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?” என்று வினவினேன்.
நபி (ஸல்) அவர்கள் “அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். அவர் ‘அல்ஹர்ரா’ பகுதியில் என்முன் தோன்றி, “யார் (ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்” என்றார்.
நான் “ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்று சொன்னார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.33
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் அபுத்தர்தா (ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது (அறிவிப்பாளர்தொடர் முறிந்த) ‘முர்சல்’ ஆகும். அபூதர் (ரலி) அவர்களது அறிவிப்பே சரியானதாகும்.
அபுத்தர்தா (ரலி) அவர்களது அறிவிப் பில் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று கூறி இறந்தால்” என்று காணப்படுகிறது.

6444. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ قَالَ أَبُو ذَرٍّ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرَّةِ الْمَدِينَةِ فَاسْتَقْبَلَنَا أُحُدٌ فَقَالَ "" يَا أَبَا ذَرٍّ "". قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" مَا يَسُرُّنِي أَنَّ عِنْدِي مِثْلَ أُحُدٍ هَذَا ذَهَبًا، تَمْضِي عَلَىَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ، إِلاَّ شَيْئًا أُرْصِدُهُ لِدَيْنٍ، إِلاَّ أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ خَلْفِهِ. ثُمَّ مَشَى فَقَالَ "" إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ـ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ خَلْفِهِ ـ وَقَلِيلٌ مَا هُمْ "". ثُمَّ قَالَ لِي "" مَكَانَكَ لاَ تَبْرَحْ حَتَّى آتِيَكَ "". ثُمَّ انْطَلَقَ فِي سَوَادِ اللَّيْلِ حَتَّى تَوَارَى فَسَمِعْتُ صَوْتًا قَدِ ارْتَفَعَ، فَتَخَوَّفْتُ أَنْ يَكُونَ قَدْ عَرَضَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَرَدْتُ أَنْ آتِيَهُ فَذَكَرْتُ قَوْلَهُ لِي "" لاَ تَبْرَحْ حَتَّى آتِيَكَ "" فَلَمْ أَبْرَحْ حَتَّى أَتَانِي، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَقَدْ سَمِعْتُ صَوْتًا تَخَوَّفْتُ، فَذَكَرْتُ لَهُ فَقَالَ "" وَهَلْ سَمِعْتَهُ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" ذَاكَ جِبْرِيلُ أَتَانِي فَقَالَ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ "" وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ "".
பாடம்: 14
‘இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது...’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
6444. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவு நேரத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ‘ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கழிந்துசெல்வதுகூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!” என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள்.
பிறகு (சிறிது தூரம்) நடந்துவிட்டு “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ள வர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; இப்படி இப்படி யெல்லாம் (இறைவழியில் தமது செல்வத் தைச்) செலவிட்டவர்களைத் தவிர” என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள். “(ஆனால்,) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே” என்றும் கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நான் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு, இரவு இருளில் நடந்துசென்று மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த குரல் ஒன்றை நான் கேட்டு நபி (ஸல்) அவர்களை யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் என்று அஞ்சினேன். அவர்களிடம் செல்லலாம் என்று நினைத்தேன். (ஆனால்,) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது.
ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அங்கேயே இருந்தேன். (அவர்கள் வந்ததும்) “அல்லாஹ்வின் தூதரே! ஏதோ ஒரு குரலைக் கேட்டு நான் பயந்துவிட்டேன்” என்று கூறி, (நான் நினைத்தது பற்றியும்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தான். அவர் என்னிடம் வந்து, “உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்” என்றார். நான் (ஜிப்ரீலிடம்), “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6445. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا لَسَرَّنِي أَنْ لاَ تَمُرَّ عَلَىَّ ثَلاَثُ لَيَالٍ وَعِنْدِي مِنْهُ شَىْءٌ، إِلاَّ شَيْئًا أُرْصِدُهُ لِدَيْنٍ "".
பாடம்: 14
‘இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்காது...’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
6445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34

6446. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ "".
பாடம்: 15
போதுமென்ற மனமே (உண்மையான) செல்வம்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நாம் அவர்களுக்கு அதிகமான செல்வத்தையும் ஆண் மக்களையும் அளித்திருப்பது குறித்து (அது நன்மைக் கென) அவர்கள் எண்ணுகின்றனரா? (23:55-63).
(23:63ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதுவரை அவர்கள் செய்யாத, கட்டாயம் செய்தே தீர வேண்டிய (வேறுபல தீய) செயல்களும் உள்ளன.
6446. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.35
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6447.
பாடம்: 16
ஏழ்மையின் சிறப்பு36
6447. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(செல்வமும் செல்வாக்கும் பெற்ற) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர்” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமைதியாக இருந்தார்கள்.
பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழி யாகச்) சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் கேட்ட அதே நண்பரிடம்) “இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவராவார். இவர் பெண் கேட்டால் மணமுடித்துவைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று பதிலளித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரைப் போன்ற (செல்)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்” என்று கூறினார்கள்.37
அத்தியாயம் :

6448. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ عُدْنَا خَبَّابًا فَقَالَ هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نُرِيدُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَضَى لَمْ يَأْخُذْ مِنْ أَجْرِهِ، مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ نَمِرَةً فَإِذَا غَطَّيْنَا رَأْسَهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ بَدَا رَأْسُهُ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَنَجْعَلَ عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدُبُهَا.
பாடம்: 16
ஏழ்மையின் சிறப்பு36
6448. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(உடல் நலமில்லாதிருந்த) கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை நாங்கள் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலன் அளிப்பது உயர்ந்தோனான அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் போர் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடு போட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். (அதன் மூலம் அவருக்கு ‘கஃபன்’ அணிவிக்க) அவரது தலையை நாங்கள் மறைத்தபோது அவருடைய கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய கால்களை நாங்கள் மறைத்தபோது அவரது தலை வெளியே தெரிந்தது.
ஆகவே, அவரது தலையை (அத்துணியால்) மறைத்துவிட்டு அவருடைய கால்கள்மீது ‘இத்கிர்’ புல்லையிடுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.38

6449. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "". تَابَعَهُ أَيُّوبُ وَعَوْفٌ، وَقَالَ صَخْرٌ وَحَمَّادُ بْنُ نَجِيحٍ عَنْ أَبِي رَجَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ.
பாடம்: 16
ஏழ்மையின் சிறப்பு36
6449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.39
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.

6450. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَأْكُلِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خِوَانٍ حَتَّى مَاتَ، وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ.
பாடம்: 16
ஏழ்மையின் சிறப்பு36
6450. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை. இறக்கும்வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.40

6451. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَقَدْ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَا فِي رَفِّي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ، فَكِلْتُهُ، فَفَنِيَ.
பாடம்: 16
ஏழ்மையின் சிறப்பு36
6451. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (வீட்டு) நிலைப்பேழையிலிருந்த சிறிது தொலி நீக்கப்படாத கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். அதனால் (சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்துபோய்விட்டது.41

6452. حَدَّثَنِي أَبُو نُعَيْمٍ، بِنَحْوٍ مِنْ نِصْفِ هَذَا الْحَدِيثِ حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، حَدَّثَنَا مُجَاهِدٌ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يَقُولُ آللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ إِنْ كُنْتُ لأَعْتَمِدُ بِكَبِدِي عَلَى الأَرْضِ مِنَ الْجُوعِ، وَإِنْ كُنْتُ لأَشُدُّ الْحَجَرَ عَلَى بَطْنِي مِنَ الْجُوعِ، وَلَقَدْ قَعَدْتُ يَوْمًا عَلَى طَرِيقِهِمُ الَّذِي يَخْرُجُونَ مِنْهُ، فَمَرَّ أَبُو بَكْرٍ، فَسَأَلْتُهُ عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ، مَا سَأَلْتُهُ إِلاَّ لِيُشْبِعَنِي، فَمَرَّ وَلَمْ يَفْعَلْ، ثُمَّ مَرَّ بِي عُمَرُ فَسَأَلْتُهُ عَنْ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ، مَا سَأَلْتُهُ إِلاَّ لِيُشْبِعَنِي، فَمَرَّ فَلَمْ يَفْعَلْ، ثُمَّ مَرَّ بِي أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم فَتَبَسَّمَ حِينَ رَآنِي وَعَرَفَ، مَا فِي نَفْسِي وَمَا فِي وَجْهِي ثُمَّ قَالَ "" أَبَا هِرٍّ "". قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" الْحَقْ "". وَمَضَى فَتَبِعْتُهُ، فَدَخَلَ فَاسْتَأْذَنَ، فَأَذِنَ لِي، فَدَخَلَ فَوَجَدَ لَبَنًا فِي قَدَحٍ فَقَالَ "" مِنْ أَيْنَ هَذَا اللَّبَنُ "". قَالُوا أَهْدَاهُ لَكَ فُلاَنٌ أَوْ فُلاَنَةُ. قَالَ "" أَبَا هِرٍّ "". قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" الْحَقْ إِلَى أَهْلِ الصُّفَّةِ فَادْعُهُمْ لِي "". قَالَ وَأَهْلُ الصُّفَّةِ أَضْيَافُ الإِسْلاَمِ، لاَ يَأْوُونَ إِلَى أَهْلٍ وَلاَ مَالٍ، وَلاَ عَلَى أَحَدٍ، إِذَا أَتَتْهُ صَدَقَةٌ بَعَثَ بِهَا إِلَيْهِمْ، وَلَمْ يَتَنَاوَلْ مِنْهَا شَيْئًا، وَإِذَا أَتَتْهُ هَدِيَّةٌ أَرْسَلَ إِلَيْهِمْ، وَأَصَابَ مِنْهَا وَأَشْرَكَهُمْ فِيهَا، فَسَاءَنِي ذَلِكَ فَقُلْتُ وَمَا هَذَا اللَّبَنُ فِي أَهْلِ الصُّفَّةِ كُنْتُ أَحَقُّ أَنَا أَنْ أُصِيبَ مِنْ هَذَا اللَّبَنِ شَرْبَةً أَتَقَوَّى بِهَا، فَإِذَا جَاءَ أَمَرَنِي فَكُنْتُ أَنَا أُعْطِيهِمْ، وَمَا عَسَى أَنْ يَبْلُغَنِي مِنْ هَذَا اللَّبَنِ، وَلَمْ يَكُنْ مِنْ طَاعَةِ اللَّهِ وَطَاعَةِ رَسُولِهِ صلى الله عليه وسلم بُدٌّ، فَأَتَيْتُهُمْ فَدَعَوْتُهُمْ فَأَقْبَلُوا، فَاسْتَأْذَنُوا فَأَذِنَ لَهُمْ، وَأَخَذُوا مَجَالِسَهُمْ مِنَ الْبَيْتِ قَالَ "" يَا أَبَا هِرٍّ "". قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" خُذْ فَأَعْطِهِمْ "". قَالَ فَأَخَذْتُ الْقَدَحَ فَجَعَلْتُ أُعْطِيهِ الرَّجُلَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَىَّ الْقَدَحَ، فَأُعْطِيهِ الرَّجُلَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَىَّ الْقَدَحَ فَيَشْرَبُ حَتَّى يَرْوَى، ثُمَّ يَرُدُّ عَلَىَّ الْقَدَحَ، حَتَّى انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رَوِيَ الْقَوْمُ كُلُّهُمْ، فَأَخَذَ الْقَدَحَ فَوَضَعَهُ عَلَى يَدِهِ فَنَظَرَ إِلَىَّ فَتَبَسَّمَ فَقَالَ "" أَبَا هِرٍّ "". قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بَقِيتُ أَنَا وَأَنْتَ "". قُلْتُ صَدَقْتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" اقْعُدْ فَاشْرَبْ "". فَقَعَدْتُ فَشَرِبْتُ. فَقَالَ "" اشْرَبْ "". فَشَرِبْتُ، فَمَا زَالَ يَقُولُ "" اشْرَبْ "". حَتَّى قُلْتُ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أَجِدُ لَهُ مَسْلَكًا. قَالَ "" فَأَرِنِي "". فَأَعْطَيْتُهُ الْقَدَحَ فَحَمِدَ اللَّهَ وَسَمَّى، وَشَرِبَ الْفَضْلَةَ.
பாடம்: 17
நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித் தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந் தது குறித்தும்
6452. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யாரைத் தவிர வேறு இறைவ னில்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (கடும்) பசியால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக்கொண்டதும் உண்டு. ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைக்) கடந்துசென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்று விட்டார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை.
பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் நான் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி -ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ‘அபூஹிர்ரே!’ (அபூஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “(என்னைப்) பின்தொடர்ந்து வா!” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தில்) நுழைந்தார்கள்.
நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) “இந்தப் பால் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார்கள். அவர்கள் “இன்ன ‘ஆண்’ அல்லது ‘பெண்’ தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ வந்துவிட்டேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப் பொருள் வந்தால் அதை இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருட்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. “(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது” என (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி (ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும்வரை குடித்தார்.
பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும்வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தனர்.
நபி (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தமது கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு ‘அபூஹிர்!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “நானும் நீங்களும் (மட்டும்தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! (ஆம்.) உண்மைதான்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “உட்கார்ந்து (இதைப்) பருகுங்கள்” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். “இன்னும் பருகுங்கள்” என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் ‘பருகுங்கள்’ என்று சொல்óக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன்.
இறுதியில் “இல்லை; சத்திய (மார்க்க)த் தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன்மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.

6453. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ إِنِّي لأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَرَأَيْتُنَا نَغْزُو، وَمَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الْحُبْلَةِ وَهَذَا السَّمُرُ، وَإِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ، مَا لَهُ خِلْطٌ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، خِبْتُ إِذًا وَضَلَّ سَعْيِي.
பாடம்: 17
நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித் தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந் தது குறித்தும்
6453. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற்புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் அறப்போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப்போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்துவந்தோம்.
பிறகு (கூஃபாவாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறைகூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்துவந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என வருந்தினேன்).42