6388. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ، لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا "".
பாடம்: 54 மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ளச்) செல்லும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை
6388. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69

அத்தியாயம் : 80
6389. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ "".
பாடம்: 55 “எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மை அருள் வாயாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
6389. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக; மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக.)70

அத்தியாயம் : 80
6390. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا هَؤُلاَءِ الْكَلِمَاتِ كَمَا تُعَلَّمُ الْكِتَابَةُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ "".
பாடம்: 56 இம்மையின் சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
6390. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எழுத்து கற்பிக்கப்படுவதைப் போன்று இந்த (பிரார்த்தனை)ச் சொற்களை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கற்பித்துவந்தார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மின் அன் நுறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க, மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். உன்னிடம் நான் கோழைத் தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். நாங்கள் தள்ளாடும் வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக்கோருகிறேன்.)71

அத்தியாயம் : 80
6391. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْذِرٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طُبَّ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ قَدْ صَنَعَ الشَّىْءَ وَمَا صَنَعَهُ، وَإِنَّهُ دَعَا رَبَّهُ ثُمَّ قَالَ "" أَشَعَرْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ "". فَقَالَتْ عَائِشَةُ فَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" جَاءَنِي رَجُلاَنِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي، وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي ذَرْوَانَ، وَذَرْوَانُ بِئْرٌ فِي بَنِي زُرَيْقٍ "". قَالَتْ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ "" وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ، وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ "". قَالَتْ فَأَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهَا عَنِ الْبِئْرِ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهَلاَّ أَخْرَجْتَهُ قَالَ "" أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ، وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا "". زَادَ عِيسَى بْنُ يُونُسَ وَاللَّيْثُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَعَا وَدَعَا وَسَاقَ الْحَدِيثَ
பாடம்: 57 திரும்பத் திரும்பப் பிரார்த்திப்பது
6391. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட் டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), “(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டுபேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், “இந்த மனிதரின் நோய் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளிக்க, முதலாமவர், “இவருக்குச் சூனியம் வைத்தது யார்?” என்று வினவினார்.

அதற்கு “லபீத் பின் அல்அஃஸம்” என்று தோழர் பதிலளித்தார். “அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று முதலாமவர் கேட்க, “சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம்பாளையின் உறையிலும்” என்று பதிலளித்தார். அவர், “அது எங்கே உள்ளது?” என்று கேட்க, மற்றவர், “தர்வானில் உள்ளது” என்றார்.

-’தர்வான்’ என்பது பனூஸுரைக் குலத்தாரிடையே இருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம்மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன” என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், “அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ளே இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், அதை வெளியே எடுக்கவில்லை)” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில், “நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.72

அத்தியாயம் : 80
6392. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ "".
பாடம்: 58 (கொடுஞ்செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த் தனை “நபி (ஸல்) அவர்கள், “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு ஆண்டு களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், “இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை...” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6392. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த) எதிரணியினருக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது, “அல்லா ஹும்ம முன்ஸிலல் கித்தாபி, சரீஅல் ஹிஸாபி, அஹ்ஸிமில் அஹ்ஸாப, அஹ்ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்” என்று கூறினார்கள்.

(பொருள்: இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய நெறியை வேர றுக்கப் பல குலங்களிலிருந்து ஒன்றுதிரண்டு வந்துள்ள) இக்கூட்டுப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களைத் தோல்வி யுறச்செய்து நடுக்கத்திற்குள்ளாக்கு வாயாக.)76


அத்தியாயம் : 80
6393. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "". فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ "" اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ "".
பாடம்: 58 (கொடுஞ்செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த் தனை “நபி (ஸல்) அவர்கள், “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு ஆண்டு களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், “இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை...” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6393. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை யின் இறுதி ரக்அத்தில் ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு ‘குனூத்’ (சிறப்பு துஆ) ஓதினார்கள். அதில், “இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்று வாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று வாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் சில ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.77


அத்தியாயம் : 80
6394. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فَأُصِيبُوا، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَجَدَ عَلَى شَىْءٍ مَا وَجَدَ عَلَيْهِمْ، فَقَنَتَ شَهْرًا فِي صَلاَةِ الْفَجْرِ وَيَقُولُ "" إِنَّ عُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ "".
பாடம்: 58 (கொடுஞ்செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த் தனை “நபி (ஸல்) அவர்கள், “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு ஆண்டு களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், “இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை...” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6394. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை.

ஆகவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்றும் சொன்னார்கள்.78


அத்தியாயம் : 80
6395. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ الْيَهُودُ يُسَلِّمُونَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُونَ السَّامُ عَلَيْكَ. فَفَطِنَتْ عَائِشَةُ إِلَى قَوْلِهِمْ فَقَالَتْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَهْلاً يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ "". فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَوَلَمْ تَسْمَعْ مَا يَقُولُونَ قَالَ "" أَوَلَمْ تَسْمَعِي أَنِّي أَرُدُّ ذَلِكَ عَلَيْهِمْ فَأَقُولُ وَعَلَيْكُمْ "".
பாடம்: 58 (கொடுஞ்செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த் தனை “நபி (ஸல்) அவர்கள், “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு ஆண்டு களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், “இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை...” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6395. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி) முகமன் கூறிவந்தார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்துக்கொண்ட நான், “அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா (மரணமும் சாபமும் உங்களுக்கே உண்டாகட்டும்)” என்று பதில் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அ(வர்கள் சொன்ன)தையே அவர்களுக்கு நான் பதிலாகக் கூறியதை நீ செவியுறவில்லையா? நான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கும் ஆகட்டும்) என்று (நளினமாய்) குறிப்பிட்டேனே?” என்று சொன்னார்கள்.79


அத்தியாயம் : 80
6396. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَنَا عَبِيدَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْخَنْدَقِ، فَقَالَ "" مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ نَارًا، كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ "". وَهْىَ صَلاَةُ الْعَصْرِ.
பாடம்: 58 (கொடுஞ்செயல் புரிந்த) இணை வைப்பாளருக்கெதிரான பிரார்த் தனை “நபி (ஸல்) அவர்கள், “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்துப் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு ஆண்டு களை அளித்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.73 மேலும், “இறைவா! (கொடியவன்) அபூஜஹ்லை நீயே கவனித்துக்கொள் வாயாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.74 இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! இன்னான் இன்னானை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், “(நபியே!) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை...” எனும் (3:128ஆவது) வசனத்தை அருளினான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75
6396. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “எதிரிகளுடைய புதைகுழிகளையும் அவர்களுடைய வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும்வரை நடுத்தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகையாகும்.80

அத்தியாயம் : 80
6397. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَا. فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ، فَقَالَ "" اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ "".
பாடம்: 59 இணைவைப்பாளர்களுக்காகப் பிரார்த்திப்பது
6397. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தி யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர்.

(ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக” என்று (நல்வழி வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.81

அத்தியாயம் : 80
6398. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكَ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ "" رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَاىَ وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ "". وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ.
பாடம்: 60 “இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும் பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
6398. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ. வ குல்லு தாலிக்க இன்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. அன்த்தல் முகத்திமு. வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

(பொருள்: என் இறைவா! என் குற்றங் களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித் திடுவாயாக. மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச்செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 80
6399. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، وَأَبِي، بُرْدَةَ ـ أَحْسِبُهُ ـ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَدْعُو "" اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَاىَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي "".
பாடம்: 60 “இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும் பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
6399. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்: அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ. வ குல்லு தாலிக்க இன்தீ.

(பொருள்: இறைவா! என் குற்றங்களை யும், என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததை யும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 80
6400. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" فِي الْجُمُعَةِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا مُسْلِمٌ وَهْوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ خَيْرًا إِلاَّ أَعْطَاهُ "". وَقَالَ بِيَدِهِ قُلْنَا يُقَلِّلُهَا يُزَهِّدُهَا.
பாடம்: 61 வெள்ளிக்கிழமையன்று (துஆ ஏற்கப்படும்) அந்த நேரத்தில் பிரார்த்திப்பது
6400. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள், “வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.82

அத்தியாயம் : 80
6401. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ الْيَهُودَ، أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ. قَالَ "" وَعَلَيْكُمْ "". فَقَالَتْ عَائِشَةُ السَّامُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ وَغَضِبَ عَلَيْكُمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ أَوِ الْفُحْشَ "". قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ "" أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ "".
பாடம்: 62 “யூதர்கள் விஷயத்தில் நாம் செய்யும் பிரார்த்தனை ஏற்கப் படும். எமது விஷயத்தில் அவர்கள் செய்யும் பிரார்த்தனை ஏற்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
6401. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அஸ்ஸாமு அலைக்க” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “வ அலைக்கும்” (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்தார்கள். உடனே, நான் (வேகப்பட்டவளாக) “அஸ்ஸாமு அலைக்கும், வ லஅனக்கமுல்லாஹு, வ ஃகளிப அலைக்கும்” (உங்களுக்கு மரணம் நேரட்டும். இறைவனின் சாபம் உங்களுக்கு ஏற்படட்டும். உங்கள்மீது அவனது கோபம் உண்டாகட்டும்) என்று பதிலளித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! நளினத்தைக் கடைப்பிடிப்பாயாக! ‘வன்மையாக நடந்துகொள்வதிலிருந்து’ அல்லது ‘அருவருப்பாகப் பேசுவதிலிருந்து’ உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “நான் (பதில்) சொன்னதை நீ செவியுறவில்லையா?” என்று (திருப்பி என்னிடம் கேட்டுவிட்டு), “அவர்களுக்கு நான் பதில் (முகமன்) கூறிவிட்டேன். அவர்கள் விஷயத்தில் நான் செய்த பிரார்த்தனை (இறைவனிடம்) அங்கீகரிக்கப்படும். என் விஷயத்தில் அவர்கள் புரிந்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது” என்று சொன்னார்கள்.83

அத்தியாயம் : 80
6402. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَمَّنَ الْقَارِئُ فَأَمِّنُوا، فَإِنَّ الْمَلاَئِكَةَ تُؤَمِّنُ، فَمَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம்: 63 ‘ஆமீன்’ (‘இறைவா! ஏற்றுக்கொள் வாயாக’ என்று) கூறுவது
6402. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ கூறுங்கள். ஏனெனில், வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். யார் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்திருக்கிறதோ அவரு டைய முன்சென்ற பாவங்கள் மன்னிக் கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.84

அத்தியாயம் : 80
6403. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ، حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ "".
பாடம்: 64 “லா இலாஹ இல்லல்லாஹ்” (‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று) கூறுவதன் சிறப்பு
6403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்கலஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)” என்று யார் ஒரு நாளில் நூறுமுறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும்.

மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.85


அத்தியாயம் : 80
6404. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ مَنْ قَالَ عَشْرًا كَانَ كَمَنْ أَعْتَقَ رَقَبَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ. قَالَ عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ عَنِ الشَّعْبِيِّ عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ مِثْلَهُ. فَقُلْتُ لِلرَّبِيعِ مِمَّنْ سَمِعْتَهُ فَقَالَ مِنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ. فَأَتَيْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ فَقَالَ مِنِ ابْنِ أَبِي لَيْلَى. فَأَتَيْتُ ابْنَ أَبِي لَيْلَى فَقُلْتُ مِمَّنْ سَمِعْتَهُ فَقَالَ مِنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ يُحَدِّثُهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ أَبِي أَيُّوبَ قَوْلَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ إِسْمَاعِيلُ عَنِ الشَّعْبِيِّ عَنِ الرَّبِيعِ قَوْلَهُ. وَقَالَ آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ سَمِعْتُ هِلاَلَ بْنَ يَسَافٍ عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ وَعَمْرِو بْنِ مَيْمُونٍ عَنِ ابْنِ مَسْعُودٍ قَوْلَهُ. وَقَالَ الأَعْمَشُ وَحُصَيْنٌ عَنْ هِلاَلٍ عَنِ الرَّبِيعِ عَنْ عَبْدِ اللَّهِ قَوْلَهُ. وَرَوَاهُ أَبُو مُحَمَّدٍ الْحَضْرَمِيُّ عَنْ أَبِي أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ كَمَنْ أَعْتَقَ رَقَبَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلِ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَالصَّحِيحُ قَوْلُ عَبْدِ الْمَلِكِ بْنِ عَمْرٍو.
பாடம்: 64 “லா இலாஹ இல்லல்லாஹ்” (‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று) கூறுவதன் சிறப்பு
6404. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் (மேற்கண்ட வாக்கியங்களை) பத்துமுறை ஓதுகின்றாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)” என்றார்கள்.

ஆகவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்.?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)” என்றார்கள்.

ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர் களிடமிருந்து (நான் செவியுற்றேன்)” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து மொத்தம் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.

இதே ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (முதலாவது அறிவிப்பாளர்தொடரில் உள்ளபடி) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர் களிடமிருந்து உமர் பின் ஸாயிதா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதே (மற்ற வர்கள் அபூஇஸ்ஹாக்கிடமிருந்து அறிவிப்பதைவிடச்) சரியானதாகும். இவர் ‘உமர்’ பின் ஸாயிதா என்பதே சரியானதாகும்; ‘அம்ர்’ அல்ல.

அத்தியாயம் : 80
6405. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ "".
பாடம்: 65 ‘சுப்ஹானல்லாஹ்’ (‘அல்லாஹ் தூயவன்’ என்று) கூறுவதன் சிறப்பு
6405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 80
6406. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ "".
பாடம்: 65 ‘சுப்ஹானல்லாஹ்’ (‘அல்லாஹ் தூயவன்’ என்று) கூறுவதன் சிறப்பு
6406. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும்; (நன்மை. தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி.

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 80
6407. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ "".
பாடம்: 66 வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதன் சிறப்பு
6407. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ள வரின் நிலையையும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக் கிறது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 80