6332. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةٍ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ "". فَأَتَاهُ أَبِي فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى "".
பாடம்: 19 “மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக!” எனும் (9:103 ஆவது) இறைவசனமும், ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.22
6332. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால், “இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம்.

என் தந்தை (அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள்) தமது ஸகாத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஅவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.24


அத்தியாயம் : 80
6333. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جَرِيرًا، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَهْوَ نُصُبٌ كَانُوا يَعْبُدُونَهُ يُسَمَّى الْكَعْبَةَ الْيَمَانِيَةَ. قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَصَكَّ فِي صَدْرِي فَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". قَالَ فَخَرَجْتُ فِي خَمْسِينَ مِنْ أَحْمَسَ مِنْ قَوْمِي ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ فَانْطَلَقْتُ فِي عُصْبَةٍ مِنْ قَوْمِي ـ فَأَتَيْتُهَا فَأَحْرَقْتُهَا، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا أَتَيْتُكَ حَتَّى تَرَكْتُهَا مِثْلَ الْجَمَلِ الأَجْرَبِ. فَدَعَا لأَحْمَسَ وَخَيْلِهَا.
பாடம்: 19 “மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக!” எனும் (9:103 ஆவது) இறைவசனமும், ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.22
6333. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம், “துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார் கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்த) ஒரு பலிபீடமாகும். அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அது ‘யமன் நாட்டு கஅபா’ என அழைக் கப்பட்டுவந்தது. நான், “அல்லாஹ்வின் தூதரே! குதிரையில் நான் சரியாக உட்கார முடியாதவனாக இருக்கிறேன்” என்று கூறினேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்துவிட்டு, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

இதையடுத்து என் சமுதாயத்தாரான ‘அஹ்மஸ்’ குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்.-

பிறகு, நான் ‘துல்கலஸா’ சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்குபிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்” என்று சொன்னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளம் வேண்டிப்) பிரார்த்தித் தார்கள்.25


அத்தியாயம் : 80
6334. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ قَالَتْ أُمُّ سُلَيْمٍ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَسٌ خَادِمُكَ. قَالَ "" اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ "".
பாடம்: 19 “மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக!” எனும் (9:103 ஆவது) இறைவசனமும், ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.22
6334. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அனஸ் தங்களின் சேவகர். (அவருக் காகப் பிரார்த்தியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தை களையும் அதிகமாக்குவாயாக! அவ ருக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.26


அத்தியாயம் : 80
6335. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَقْرَأُ فِي الْمَسْجِدِ فَقَالَ "" رَحِمَهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا "".
பாடம்: 19 “மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக!” எனும் (9:103 ஆவது) இறைவசனமும், ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.22
6335. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்” என்று சொன்னார்கள்.27


அத்தியாயம் : 80
6336. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَسْمًا فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ وَقَالَ "" يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம்: 19 “மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டி)ப் பிரார்த்தனை புரிவீராக!” எனும் (9:103 ஆவது) இறைவசனமும், ஒருவர் தமக்காக அல்லாமல் தம் சகோதரருக்காகப் பிரார்த்திப்பதும் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! இறைவா! அப்தில்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.22
6336. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், “நிச்சயமாக இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். (அதை) நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். (அதைக் கேட்டபோது) நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அவர் களது முகத்தில் நான் அக்கோபத்தைக் கண்டேன்.

(அப்போது) அவர்கள், “(இறைத்தூதர்) மூசா அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதைவிட அதிகமாக அவர்கள் புண்படுத்தப்பட்டார்கள். இருப்பினும், சகித்துக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.28

அத்தியாயம் : 80
6337. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ أَبُو حَبِيبٍ، حَدَّثَنَا هَارُونُ الْمُقْرِئُ، حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ الْخِرِّيتِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدِّثِ النَّاسَ، كُلَّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ، فَإِنَّ أَكْثَرْتَ فَثَلاَثَ مِرَارٍ وَلاَ تُمِلَّ النَّاسَ هَذَا الْقُرْآنَ، وَلاَ أُلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ فَتَقُصُّ عَلَيْهِمْ، فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ، وَلَكِنْ أَنْصِتْ، فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ، فَانْظُرِ السَّجْعَ مِنَ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ، فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ لاَ يَفْعَلُونَ إِلاَّ ذَلِكَ. يَعْنِي لاَ يَفْعَلُونَ إِلاَّ ذَلِكَ الاِجْتِنَابَ.
பாடம்: 20 எதுகைமோனையுடன் (அலங்கார ஒலி நயத்துடன்) பிரார்த்திப்பது வெறுக்கப்பட்டதாகும்.29
6337. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வாரத்தில் ஒருமுறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள். (அது போதாது எனக் கருதி) அதற்கு நீங்கள் மறுத்தால் (வாரத்தில்) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள். அதைவிட அதிகமாகப்போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள். (அதைவிட அதிகமாகப்போய்) இந்த குர்ஆன்மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்தி விடாதீர்கள்.

மக்கள் எதையோ பேசிக்கொண்டிருக் கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற, அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட, அதனால், அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கின்ற நிலையில் உங்களை நான் காணக் கூடாது. மாறாக, நீங்கள் (அப்போது) மௌனமாக இருங்கள். அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக்கொண்டால் அவர்களிடையே உரையாற்றுங்கள்.

எதுகைமோனையுடன் பிரார்த்திப் பதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக் கவே நான் கண்டுள்ளேன்.

அத்தியாயம் : 80
6338. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمِ الْمَسْأَلَةَ، وَلاَ يَقُولَنَّ اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي. فَإِنَّهُ لاَ مُسْتَكْرِهَ لَهُ "".
பாடம் : 21 கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.
6338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். “அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்குவாயாக!” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 80
6339. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي، اللَّهُمَّ ارْحَمْنِي، إِنْ شِئْتَ. لِيَعْزِمِ الْمَسْأَلَةَ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ "".
பாடம் : 21 கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.
6339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் “இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என்மீது அருள்புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவ தாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப் படுத்துபவர் யாருமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 80
6340. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي "".
பாடம்: 22 அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப் படும்.
6340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 80
6341. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَشَرِيكٍ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ.
பாடம்: 23 பிரார்த்திக்கும்போது கைகளை உயர்த்துவது அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தையின் சகோதரர் அபூஆமிர் கொல்லப்பட்ட சமயம்) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.30 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தியவாறு, “இறைவா!காலித் செய்த தவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என உன்னிடம் நான் அறிவிக்கிறேன்” என்று கூறினார்கள்.31
6341. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது), அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.32

அத்தியாயம் : 80
6342. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا. فَتَغَيَّمَتِ السَّمَاءُ وَمُطِرْنَا، حَتَّى مَا كَادَ الرَّجُلُ يَصِلُ إِلَى مَنْزِلِهِ، فَلَمْ تَزَلْ تُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا، فَقَدْ غَرِقْنَا. فَقَالَ "" اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا "". فَجَعَلَ السَّحَابُ يَتَقَطَّعُ حَوْلَ الْمَدِينَةِ، وَلاَ يُمْطِرُ أَهْلَ الْمَدِينَةِ.
பாடம்: 24 கிப்லாவை முன்னோக்காமல் பிரார்த்திப்பது
6342. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு) வெள்ளிக் கிழமையன்று உரை நிகழ்த்திக்கொண்டி ருந்தபோது ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். (நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப்பின்) மேகமூட்டம் உண்டாகி மழை பொழிந்தது. எந்த அளவுக்கென்றால், அந்த மனிதரால் தமது வீட்டுக்குப் போய்ச் சேர முடியவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமைவரை மழை நீடித்தது.

(அந்த வெள்ளிக்கிழமை) ‘அதே மனிதர்’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, “மழையை வேறு பக்கம் திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (கன மழையால்) நாங்கள் நீரில் மூழ்கி விட்டோம்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தித்தார்கள். அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப்புறங்களுக்குச் சென்றது. மதீனாவாசிகளுக்கு மழை பொழியவில்லை.33

அத்தியாயம் : 80
6343. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى هَذَا الْمُصَلَّى يَسْتَسْقِي، فَدَعَا وَاسْتَسْقَى ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ.
பாடம்: 25 கிப்லாவை முன்னோக்கியவாறு பிரார்த்திப்பது
6343. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க இந்தத் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தமது மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.34

அத்தியாயம் : 80
6344. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَرَمِيٌّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ. قَالَ "" اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ "".
பாடம்: 26 நபி (ஸல்) அவர்கள் தம் சேவ கரின் நீண்ட ஆயுளுக்காகவும் நிறைந்த செல்வத்திற்காகவும் பிரார்த்தித்தது
6344. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான)வற்றில் வளம் சேர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.35

அத்தியாயம் : 80
6345. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو عِنْدَ الْكَرْبِ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ "".
பாடம்: 27 துன்பம் நேரும்போது பிரார்த் திப்பது
6345. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது “லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமைமிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)


அத்தியாயம் : 80
6346. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ "". وَقَالَ وَهْبٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ مِثْلَهُ.
பாடம்: 27 துன்பம் நேரும்போது பிரார்த் திப்பது
6346. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, “லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வ ரப்புல் அர்ஷில் கரீம்” என்று ஓதுவார்கள்.

(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமைமிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 80
6347. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي سُمَىٌّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ. قَالَ سُفْيَانُ الْحَدِيثُ ثَلاَثٌ زِدْتُ أَنَا وَاحِدَةً، لاَ أَدْرِي أَيَّتُهُنَّ هِيَ.
பாடம்: 28 தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது
6347. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாங்க முடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளன. நான்தான் ஒன்றைக் கூடுதலாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை (மறந்துவிட்டேன்).

அத்தியாயம் : 80
6348. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فِي رِجَالٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهْوَ صَحِيحٌ "" لَنْ يُقْبَضَ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ "". فَلَمَّا نَزَلَ بِهِ وَرَأْسُهُ عَلَى فَخِذِي، غُشِيَ عَلَيْهِ سَاعَةً، ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى السَّقْفِ ثُمَّ قَالَ "" اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى "". قُلْتُ إِذًا لاَ يَخْتَارُنَا، وَعَلِمْتُ أَنَّهُ الْحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا، وَهْوَ صَحِيحٌ. قَالَتْ فَكَانَتْ تِلْكَ آخِرَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا "" اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى "".
பாடம்: 29 “இறைவா! உயர்ந்த தோழர்களு டன் (என்னைச் சேர்த்திடுவாயாக)” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
6348. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்துவிட்டுப் பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பு வழங்கப்படாத வரையில் எந்த இறைத்தூத (ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுபவர்களாயிருந்தார்கள்.

பின்னர் அவர்களது தலை எனது மடிமீதிருக்க அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களது பார்வை நிலைகுத்தி நின்றது. பின்னர் “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது நான், “அப்படியானால், நம்முடன் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. (மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டார்கள்)” என்று (மனத்திற்குள்) சொல்óக்கொண்டேன்.

மேலும், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது (இறைத்தூதர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று) அவர்கள் நமக்கு அறிவித்த செய்தி இதுதான் என நான் புரிந்துகொண்டேன். “இறைவா! உயர்ந்த நண்பர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்பதே நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தையாக இருந்தது.

இதை அறிஞர்கள் பலருக்கு முன்னால் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.36

அத்தியாயம் : 80
6349. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ أَتَيْتُ خَبَّابًا وَقَدِ اكْتَوَى سَبْعًا قَالَ لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
பாடம்: 30 வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது
6349. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல்நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை செய்திருப்பேன்” என்று கூறினார்கள்.37


அத்தியாயம் : 80
6350. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، قَالَ أَتَيْتُ خَبَّابًا وَقَدِ اكْتَوَى سَبْعًا فِي بَطْنِهِ فَسَمِعْتُهُ يَقُولُ لَوْلاَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
பாடம்: 30 வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது
6350. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தமது வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது, “மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்” என்று அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்.


அத்தியாயம் : 80
6351. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَتَمَنَّيَنَّ أَحَدٌ مِنْكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لاَ بُدَّ مُتَمَنِّيًا لِلْمَوْتِ فَلْيَقُلِ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي "".
பாடம்: 30 வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது
6351. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ் வாறு மரணத்தை விரும்பித்தான் ஆக வேண்டும் என்றிருந்தால், “இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மை யாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.38

அத்தியாயம் : 80