6147. حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلُ "". وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ.
பாடம்: 90 கவிதை, ஈரசைச்சீர் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்162 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்” என்பதற்கு “எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163
6147. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் பின் ரபீஆ சொன்ன

“அறிக!அல்லாஹ்வைத் தவிரஅனைத்துப் பொருட்களும்அழியக் கூடியவையே!”

எனும் சொல்தான்.

(கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த் (தமது கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு வந்து விட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.166


அத்தியாயம் : 78
6148. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ فَسِرْنَا لَيْلاً، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لِعَامِرِ بْنِ الأَكْوَعِ أَلاَ تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ، قَالَ وَكَانَ عَامِرٌ رَجُلاً شَاعِرًا، فَنَزَلَ يَحْدُو بِالْقَوْمِ يَقُولُ اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَاغْفِرْ فِدَاءٌ لَكَ مَا اقْتَفَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا إِنَّا إِذَا صِيحَ بِنَا أَتَيْنَا وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ هَذَا السَّائِقُ "". قَالُوا عَامِرُ بْنُ الأَكْوَعِ. فَقَالَ "" يَرْحَمُهُ اللَّهُ "". فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ وَجَبَتْ يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَمْتَعْتَنَا بِهِ. قَالَ فَأَتَيْنَا خَيْبَرَ فَحَاصَرْنَاهُمْ حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ، ثُمَّ إِنَّ اللَّهَ فَتَحَهَا عَلَيْهِمْ، فَلَمَّا أَمْسَى النَّاسُ الْيَوْمَ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا هَذِهِ النِّيرَانُ، عَلَى أَىِّ شَىْءٍ تُوقِدُونَ "". قَالُوا عَلَى لَحْمٍ. قَالَ "" عَلَى أَىِّ لَحْمٍ "". قَالُوا عَلَى لَحْمِ حُمُرٍ إِنْسِيَّةٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَهْرِقُوهَا وَاكْسِرُوهَا "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَوْ نُهَرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ "" أَوْ ذَاكَ "". فَلَمَّا تَصَافَّ الْقَوْمُ كَانَ سَيْفُ عَامِرٍ فِيهِ قِصَرٌ، فَتَنَاوَلَ بِهِ يَهُودِيًّا لِيَضْرِبَهُ، وَيَرْجِعُ ذُبَابُ سَيْفِهِ فَأَصَابَ رُكْبَةَ عَامِرٍ فَمَاتَ مِنْهُ، فَلَمَّا قَفَلُوا قَالَ سَلَمَةُ رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَاحِبًا. فَقَالَ لِي "" مَا لَكَ "". فَقُلْتُ فِدًى لَكَ أَبِي وَأُمِّي زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ. قَالَ "" مَنْ قَالَهُ "". قُلْتُ قَالَهُ فُلاَنٌ وَفُلاَنٌ وَفُلاَنٌ وَأُسَيْدُ بْنُ الْحُضَيْرِ الأَنْصَارِيُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَذَبَ مَنْ قَالَهُ، إِنَّ لَهُ لأَجْرَيْنِ ـ وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ ـ إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، قَلَّ عَرَبِيٌّ نَشَأَ بِهَا مِثْلَهُ "".
பாடம்: 90 கவிதை, ஈரசைச்சீர் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்162 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்” என்பதற்கு “எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163
6148. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்த போது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடிக்காட்டக் கூடாதா?” என்று கேட்டடார்.

ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தமது வாகனத் திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் ஈரசைச்சீர் கவிதையைப்) பாடி அவர்களுடைய ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

இறைவா!நீ இல்லையென்றால்

நாங்கள்நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.தர்மமும் செய்திருக்கமாட்டோம்.தொழுதிருக்கவுமாட்டோம்.

நாங்கள் புரிந்துவிட்டபாவங்களுக்காகஎங்களை மன்னிப்பாயாக.உனக்கே நாங்கள் அர்ப்பணம்.

(போர்முனையில் எதிரியை)நாங்கள் சந்திக்கும்போதுஎங்கள் பாதங்களைஉறுதிப்படுத்துவாயாக.

எங்கள்மீது அமைதியைப்பொழிவாயாக. (அறவழியில் செல்ல)நாங்கள் அழைக்கப்பட்டால்நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம்மக்கள் (அபயக்) குரல்எழுப்பினால்(உதவிக்கு வருவோம்).

என்று பாடிக்கொண்டிருந்தார்கள். (வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக வோட்டி?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று பதிலளித்தனர். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) ஒருவர், “இறைத்தூதரே! (ஆமிருக்கு வீரமரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

பிறகு நாங்கள் கைபருக்கு வந்து கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கெதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றியளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் மக்கள் (ஆங்காங்கே) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக (இதை) மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “இறைச்சி சமைப்பதற்காக” என்று மக்கள் பதிலளித்தனர்.

“என்ன இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க்கொள்ளலாமா?” என்று கேட்டார். “அப்படியே ஆகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையானதாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனை வெட்டப்போனபோது அன்னாரது வாளின் மேற்பகுதி அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபரை வென்று, மதீனா நோக்கி) மக்கள் திரும்பியபோது (நிகழ்ந்தவற்றை) சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(கவலையால்) நிறம் மாறிப்போயிருந்த என்னைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என மக்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “யார் இதைச் சொன்னவர்?” என்று கேட்டார்கள். “இதை இன்னாரும் இன்னாரும் இன்னாரும் உசைத் பின் ஹுளைர் அல்அன்சாரி அவர்களும் கூறினர்” என்றேன்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போரில் பங்குகொண்ட நன்மையென) இரண்டு நன்மைகள் உண்டு” என்று கூறியவாறு தம்மிரு விரல்களையும் அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) “அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்த) இவரைப் போன்ற அரபியர் பூமியில் பிறப்பது அரிது” என்று சொன்னார்கள்.167


அத்தியாயம் : 78
6149. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَعْضِ نِسَائِهِ وَمَعَهُنَّ أُمُّ سُلَيْمٍ فَقَالَ "" وَيْحَكَ يَا أَنْجَشَةُ، رُوَيْدَكَ سَوْقًا بِالْقَوَارِيرِ "". قَالَ أَبُو قِلاَبَةَ فَتَكَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَلِمَةٍ، لَوْ تَكَلَّمَ بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ قَوْلُهُ "" سَوْقَكَ بِالْقَوَارِيرِ "".
பாடம்: 90 கவிதை, ஈரசைச்சீர் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்162 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்” என்பதற்கு “எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163
6149. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தம் துணைவியர் சிலரிடம் சென்றார்கள். (அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் அத்துணைவியருடன் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஒட்டகவோட்டியிடம்) “உமக்கு நாசம்தான். அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச்செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூகிலாபா (ரஹ்) அவர்கள் (தம்முடன் இருந்த இராக்கியரிடம்) கூறினார்கள்:

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை கூறினார்கள். உங்களில் ஒருவர் அதைச் சொல்லியிருந்தால் (இங்கிதம் தெரியாத நீங்கள்) அதற்காக அவரை(க் கேலிசெய்து) விளையாடியிருப்பீர்கள். “நிதானமாக ஓட்டிச்செல். கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே” (என்பதுதான் அந்த வார்த்தை).168

அத்தியாயம் : 78
6150. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ بْنُ ثَابِتٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَكَيْفَ بِنَسَبِي "". فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ. وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ لاَ تَسُبُّهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 91 இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல்
6150. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக்கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(குறைஷியரான அவர்களுடன் பின்னிப்பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பதைப் போன்று தங்களை(யும் தங்கள் வமிசப் பரம்பரையையும் வசையிóருந்து) உருவியெடுத்து விடுவேன்” என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை (அவதூறு பரப்புவதில் சம்பந்தப்பட்டதால்) ஏசிக் கொண்டே போனேன். அப்போது அவர்கள், “அவரை ஏசாதே! ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (இணைவைப்பாளர்களைத் தாக்கி) பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்” என்றார்கள்.169


அத்தியாயம் : 78
6151. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ الْهَيْثَمَ بْنَ أَبِي سِنَانٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، فِي قَصَصِهِ يَذْكُرُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ أَخًا لَكُمْ لاَ يَقُولُ الرَّفَثَ "". يَعْنِي بِذَاكَ ابْنَ رَوَاحَةَ قَالَ فِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ إِذَا اسْتَثْقَلَتْ بِالْكَافِرِينَ الْمَضَاجِعُ تَابَعَهُ عُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ وَالأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ.
பாடம்: 91 இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல்
6151. ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது பேச்சுக்கிடையே நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபி (ஸல்) அவர்களைப் பாராட்டி பின்வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்:

எங்களிடையேஇறைத்தூதர்ஓதுகிறார் இறைவேதம்வைகறைப்பொழுது புலரும் நேரத்தில்

கருத்துக் குருடர்களானஎங்களுக்குகாட்டினார் நல்வழிஅவர் சொன்னதுநடக்கும் நிச்சயம்!இதுஎங்கள் இதய நம்பிக்கை

இரவில்அன்னாரது விலாதொட்டதில்லை படுக்கையைஅப்போது இணைவைப்பாளர்அழுந்திக் கிடப்பர் படுக்கையில்!170

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 78
6152. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ فَيَقُولُ يَا أَبَا هُرَيْرَةَ نَشَدْتُكَ بِاللَّهِ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ.
பாடம்: 91 இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல்
6152. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அபூஹுரைரா! அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகள் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா (ஜிப்ரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?” என்று விவரம் கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.171

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 78
6153. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِحَسَّانَ "" اهْجُهُمْ ـ أَوْ قَالَ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ "".
பாடம்: 91 இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல்
6153. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பனூ குறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், “எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.172

அத்தியாயம் : 78
6154. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا "".
பாடம்: 92 இறைநினைவு, கல்வி, இறை வேதம் குர்ஆன் ஆகியவற்றி óருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அளவுக்கு மனிதன்மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.
6154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6155. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا "".
பாடம்: 92 இறைநினைவு, கல்வி, இறை வேதம் குர்ஆன் ஆகியவற்றி óருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அளவுக்கு மனிதன்மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.
6155. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதைவிட மேலானதாகும்.173

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6156. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ اسْتَأْذَنَ عَلَىَّ بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ فَقُلْتُ وَاللَّهِ لاَ آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّ أَخَا أَبِي الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ. فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ. قَالَ "" ائْذَنِي لَهُ، فَإِنَّهُ عَمُّكِ، تَرِبَتْ يَمِينُكِ "". قَالَ عُرْوَةُ فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.
பாடம்: 93 ‘உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்’, ‘அல்லாஹ் (அவளது கழுத்தை) அறுக்கட்டும்’, ‘அவளுக் குத் தொண்டை வலி வரட்டும்’ ஆகிய வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் (செல்லமாகப்) பயன்படுத்தியது174
6156. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்றபிறகு, என் வீட்டினுள் வர அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காத வரை (உள்ளே வர) அவரை நான் அனுமதிக்கமாட்டேன். ஏனெனில், அபுல் குஐஸின் சகோதரர் (அஃப்லஹ்) எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, அபுல்குஐஸ் அவர்களின் மனைவியே எனக்குப் பாலூட்டினார்” என்றேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, இவருடைய (சகோதரரின்) மனைவியே எனக்குப் பாலூட்டினார்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடு! ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர்தான். உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்” என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:

இதனால்தான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், “இரத்த உறவால் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவர்களைப் பால்குடி உறவாலும் மணமுடிக்கத் தடை செய்யுங்கள்” என்று கூறுவார்கள்.175


அத்தியாயம் : 78
6157. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْفِرَ فَرَأَى صَفِيَّةَ عَلَى باب خِبَائِهَا كَئِيبَةً حَزِينَةً لأَنَّهَا حَاضَتْ فَقَالَ "" عَقْرَى حَلْقَى ـ لُغَةُ قُرَيْشٍ ـ إِنَّكِ لَحَابِسَتُنَا "" ثُمَّ قَالَ "" أَكُنْتِ أَفَضْتِ يَوْمَ النَّحْرِ "". يَعْنِي الطَّوَافَ قَالَتْ نَعَمْ. قَالَ "" فَانْفِرِي إِذًا "".
பாடம்: 93 ‘உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்’, ‘அல்லாஹ் (அவளது கழுத்தை) அறுக்கட்டும்’, ‘அவளுக் குத் தொண்டை வலி வரட்டும்’ ஆகிய வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் (செல்லமாகப்) பயன்படுத்தியது174
6157. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் தமது கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாய்” என்று கூறினார்கள். பிறகு, “நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா?” என்று கேட்டார்கள்.

ஸஃபிய்யா (ரலி) அவர்கள், “ஆம்” என்று சொன்னார்கள். “அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகிவிட்டது). நீ புறப்படு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.176

அத்தியாயம் : 78
6158. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ "" مَنْ هَذِهِ "". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ. فَقَالَ "" مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ "". فَلَمَّا فَرَغَ مِنْ غَسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنُ بْنُ هُبَيْرَةَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ "". قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى.
பாடம்: 94 ‘அவ்வாறு கருதப்படுகிறது’ (ஸஅமூ) என்பது (போன்ற வார்த்தைகள்) தொடர்பாக வந்துள்ளவை177
6158. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘மக்கா வெற்றி’ ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருக்க, அவர்களை அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் “யார் அது?” என்று கேட்டார்கள். “நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (வந்திருக்கிறேன்)” என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்மு ஹானீயே வருக!” எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தவுடன் ஒரே ஆடையை (தமது உடலில்) சுற்றிக்கொண்டவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (அலீ பின் அபீதாலிப்) நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் இன்ன மகனைக் கொலை செய்யப்போவதாகக் கருதுகிறார்” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஹானீயே! நீ அடைக்கலம் அளித்தவருக்கு நாமும் அடைக்கலம் அளித்துவிட்டோம்” என்று கூறினார்கள்.

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

(நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) ஆகும்.178

அத்தியாயம் : 78
6159. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا "". قَالَ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا وَيْلَكَ "".
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6159. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிச் செல்லுங்கள்!” என்றார்கள். அதற்கு அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “(பரவாயில்லை) அதில் ஏறிச்செல்லும்!” என்றார்கள்.

(மீண்டும்) அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றதும் “அதில் ஏறிச் செல்க. உமக்குக் கேடுதான் (‘வைலக்க’)” என்றார்கள்.180


அத்தியாயம் : 78
6160. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً فَقَالَ لَهُ "" ارْكَبْهَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ "" ارْكَبْهَا وَيْلَكَ "". فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ.
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6160. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “அதில் ஏறிச் செல்லுங்கள்!” என்றார்கள். அவர், “இது குர்பானி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டாவது தடவையில்’ அல்லது ‘மூன்றாவது தடவையில்’ “இதில் ஏறிச்செல்லும்! உமக்குக் கேடுதான்” என்றார்கள்.181


அத்தியாயம் : 78
6161. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،. وَأَيُّوبَ عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، وَكَانَ مَعَهُ غُلاَمٌ لَهُ أَسْوَدُ، يُقَالُ لَهُ أَنْجَشَةُ، يَحْدُو، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَيْحَكَ يَا أَنْجَشَةُ رُوَيْدَكَ بِالْقَوَارِيرِ "".
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6161. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்று கூறினார்கள்.182


அத்தியாயம் : 78
6162. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ أَخِيكَ ـ ثَلاَثًا ـ مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا ـ وَاللَّهُ حَسِيبُهُ ـ وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا. إِنْ كَانَ يَعْلَمُ "".
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6162. அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்குக் கேடுதான் (வைலக்க!). உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே!” என மூன்று முறை கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவரைப் பற்றி) நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் (அவ்வாறு இருக்கிறார் என) அறிந்தால் மட்டுமே அவர் இவ்வாறு கூறட்டும்.

அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்” என்று கூறினார்கள்.183


அத்தியாயம் : 78
6163. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَالضَّحَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْسِمُ ذَاتَ يَوْمٍ قِسْمًا فَقَالَ ذُو الْخُوَيْصِرَةِ ـ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ ـ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ. قَالَ "" وَيْلَكَ مَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ "". فَقَالَ عُمَرُ ائْذَنْ لِي فَلأَضْرِبْ عُنُقَهُ. قَالَ "" لاَ، إِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِمْ، وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمُرُوقِ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يُنْظَرُ إِلَى نَصْلِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى رِصَافِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى نَضِيِّهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، ثُمَّ يُنْظَرُ إِلَى قُذَذِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَىْءٌ، سَبَقَ الْفَرْثَ وَالدَّمَ، يَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ، آيَتُهُمْ رَجُلٌ إِحْدَى يَدَيْهِ مِثْلُ ثَدْىِ الْمَرْأَةِ، أَوْ مِثْلُ الْبَضْعَةِ تَدَرْدَرُ "". قَالَ أَبُو سَعِيدٍ أَشْهَدُ لَسَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَشْهَدُ أَنِّي كُنْتُ مَعَ عَلِيٍّ حِينَ قَاتَلَهُمْ، فَالْتُمِسَ فِي الْقَتْلَى، فَأُتِيَ بِهِ عَلَى النَّعْتِ الَّذِي نَعَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6163. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ எனும் மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தான் நீதியுடன் நடந்துகெள்வார்கள்?” என்று கூறினார்கள்.

உடனே (அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், “இவரது கழுத்தைக் கொய்ய என்னை அனுமதியுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (இவரை விட்டுவிடுங்கள்). நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றனர். அவர் களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப்பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமாகக் கருதுவீர்கள்.

(அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளியேறிச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று அறிய) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது.

பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. அ(ம்பான)து, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டுவிட்டிருக்கும்.

அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் கிளம்புவார்கள். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரது இரு (புஜக்) கைகளில் ஒன்று  ’பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்’ என்று சொன்னார்கள்.

நான் நிச்சயமாக இந்த நபிமொழியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற் றேன் என்று சாட்சியம் அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போரிட்டபோது அலீ (ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். (அந்தப் போரில்) கொல்லப்பட்டவர்களிடையே (நபி (ஸல்) அவர்கள் இனங்காட்டிய) அந்த மனிதர் தேடிக் (கண்டுபிடித்துக்) கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருந்தார் என்றும் நான் சாட்சியம் அளிக்கின்றேன்.184

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 78
6164. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ "" وَيْحَكَ "". قَالَ وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" أَعْتِقْ رَقَبَةً "". قَالَ مَا أَجِدُهَا. قَالَ "" فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ أَسْتَطِيعُ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ مَا أَجِدُ. فَأُتِيَ بِعَرَقٍ فَقَالَ "" خُذْهُ فَتَصَدَّقْ بِهِ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعَلَى غَيْرِ أَهْلِي فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا بَيْنَ طُنُبَىِ الْمَدِينَةِ أَحْوَجُ مِنِّي. فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ قَالَ "" خُذْهُ "". تَابَعَهُ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ الزُّهْرِيِّ وَيْلَكَ.
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6164. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு நாசம்தான் (வைஹக்க- என்ன நடந்தது?)” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக!” என்றார்கள். அவர், “(அதற்கான வசதி) என்னிடம் இல்லையே!” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பீராக!” என்றார்கள். அவர், “என்னால் இயலாது” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், (அறுபது) ஏழைகளுக்கு உணவளிப்பீராக!” என்றார்கள். அவர் “(அதற்கான வசதி) என்னிடம் இல்லை” என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (பதினைந்து ‘ஸாஉ’ கொள்ளளவு கொண்ட அளவையான) ‘அரக்’ ஒன்று கொண்டுவரப்பட்டது. (அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன.) உடனே நபி (ஸல்) அவர்கள், “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்றார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என் குடும்பத்தார் அல்லாதோருக்கா (இதை நான் தர்மம் செய்ய)? என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! மதீனா எனும் கூடாரத்தின் இருமருங்கிலும் என்னைவிடத் தேவையானோர் யாருமில்லை” என்றார்.

(இதைக் கேட்ட) உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு “(இதோ) இதைப் பெற்றுக்கொள்வீராக!” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் “(‘வைஹக்க’ என்பதற்குப் பதிலாக) ‘வைலக்க’ (உனக்குக் கேடுதான்) என்று காணப்படுகிறது.185


அத்தியாயம் : 78
6165. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْهِجْرَةِ. فَقَالَ "" وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَهَلْ تُؤَدِّي صَدَقَتَهَا "". قَالَ نَعَمْ. قَالَ "" فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا "".
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6165. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்வது பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனக்கு நாசம்தான் (வைஹக்க!) ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் இருக்கின் றதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கின்றது)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஒட்டகத்துக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீ ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட நன்மை செய்யலாம். அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.186


அத்தியாயம் : 78
6166. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، سَمِعْتُ أَبِي، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" وَيْلَكُمْ ـ أَوْ وَيْحَكُمْ قَالَ شُعْبَةُ شَكَّ هُوَ ـ لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "". وَقَالَ النَّضْرُ عَنْ شُعْبَةَ وَيْحَكُمْ. وَقَالَ عُمَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ.
பாடம்: 95 ‘உனக்குக் கேடுதான்’ (‘வைலக்க’) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை179
6166. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தமது ‘விடை பெறும்’ ஹஜ் உரையில்) “உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)’ அல்லது ‘உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)’. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘வைஹக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘வைலக்கும்’ அல்லது ‘வைஹக்கும்’ என்று இடம் பெற்றுள்ளது.187


அத்தியாயம் : 78