6070. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ ابْنَ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي النَّجْوَى قَالَ "" يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيْهِ فَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا. فَيَقُولُ نَعَمْ. وَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا. فَيَقُولُ نَعَمْ. فَيُقَرِّرُهُ ثُمَّ يَقُولُ إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا، فَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ "".
பாடம்: 60 இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங் கப்படுத்தாமல்) மறைப்பது84
6070. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ் வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

“உங்களில் ஒருவர் தம்முடைய இறைவனை நெருங்குவார். எந்த அளவுக் கென்றால் இறைவன் தன் திரையை அவர்மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன், ‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்பார். இறைவன் (மீண்டும்) ‘இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அப்போதும் அவர், ‘ஆம்’ என்று கூறி (தமது பாவச்)செயல்களை ஒப்புக்கொள்வார்.

பிறகு அவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்(திருந்)தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.85

அத்தியாயம் : 78
6071. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ، كُلُّ ضَعِيفٍ مُتَضَاعِفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ "".
பாடம்: 61 அகங்காரம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (22:9ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஸானிய இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அகங்காரம் கொண்ட வனாக’ என்பது பொருள். ‘இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அவனுடைய பிடரியில்’ என்பது சொற்பொருள்.
6071. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்க ளுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்” என்று கூறினார்கள்.86


அத்தியாயம் : 78
6072. وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَتِ الأَمَةُ مِنْ إِمَاءِ أَهْلِ الْمَدِينَةِ لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ.
பாடம்: 61 அகங்காரம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (22:9ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஸானிய இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அகங்காரம் கொண்ட வனாக’ என்பது பொருள். ‘இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அவனுடைய பிடரியில்’ என்பது சொற்பொருள்.
6072. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்திகூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றியவண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவுக்கு மிக எளிமையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)

அத்தியாயம் : 78
6073. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَوْفُ بْنُ مَالِكِ بْنِ الطُّفَيْلِ ـ هُوَ ابْنُ الْحَارِثِ وَهْوَ ابْنُ أَخِي عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم لأُمِّهَا ـ أَنَّ عَائِشَةَ حُدِّثَتْ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَ فِي بَيْعٍ أَوْ عَطَاءٍ أَعْطَتْهُ عَائِشَةُ وَاللَّهِ لَتَنْتَهِيَنَّ عَائِشَةُ، أَوْ لأَحْجُرَنَّ عَلَيْهَا. فَقَالَتْ أَهُوَ قَالَ هَذَا قَالُوا نَعَمْ. قَالَتْ هُوَ لِلَّهِ عَلَىَّ نَذْرٌ، أَنْ لاَ أُكَلِّمَ ابْنَ الزُّبَيْرِ أَبَدًا. فَاسْتَشْفَعَ ابْنُ الزُّبَيْرِ إِلَيْهَا، حِينَ طَالَتِ الْهِجْرَةُ فَقَالَتْ لاَ وَاللَّهِ لاَ أُشَفِّعُ فِيهِ أَبَدًا، وَلاَ أَتَحَنَّثُ إِلَى نَذْرِي. فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَى ابْنِ الزُّبَيْرِ كَلَّمَ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، وَهُمَا مِنْ بَنِي زُهْرَةَ، وَقَالَ لَهُمَا أَنْشُدُكُمَا بِاللَّهِ لَمَّا أَدْخَلْتُمَانِي عَلَى عَائِشَةَ، فَإِنَّهَا لاَ يَحِلُّ لَهَا أَنْ تَنْذُرَ قَطِيعَتِي. فَأَقْبَلَ بِهِ الْمِسْوَرُ وَعَبْدُ الرَّحْمَنِ مُشْتَمِلَيْنِ بِأَرْدِيَتِهِمَا حَتَّى اسْتَأْذَنَا عَلَى عَائِشَةَ فَقَالاَ السَّلاَمُ عَلَيْكِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، أَنَدْخُلُ قَالَتْ عَائِشَةُ ادْخُلُوا. قَالُوا كُلُّنَا قَالَتْ نَعَمِ ادْخُلُوا كُلُّكُمْ. وَلاَ تَعْلَمُ أَنَّ مَعَهُمَا ابْنَ الزُّبَيْرِ، فَلَمَّا دَخَلُوا دَخَلَ ابْنُ الزُّبَيْرِ الْحِجَابَ، فَاعْتَنَقَ عَائِشَةَ وَطَفِقَ يُنَاشِدُهَا وَيَبْكِي، وَطَفِقَ الْمِسْوَرُ وَعَبْدُ الرَّحْمَنِ يُنَاشِدَانِهَا إِلاَّ مَا كَلَّمَتْهُ وَقَبِلَتْ مِنْهُ، وَيَقُولاَنِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَمَّا قَدْ عَلِمْتِ مِنَ الْهِجْرَةِ، فَإِنَّهُ لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ. فَلَمَّا أَكْثَرُوا عَلَى عَائِشَةَ مِنَ التَّذْكِرَةِ وَالتَّحْرِيجِ طَفِقَتْ تُذَكِّرُهُمَا نَذْرَهَا وَتَبْكِي وَتَقُولُ إِنِّي نَذَرْتُ، وَالنَّذْرُ شَدِيدٌ. فَلَمْ يَزَالاَ بِهَا حَتَّى كَلَّمَتِ ابْنَ الزُّبَيْرِ، وَأَعْتَقَتْ فِي نَذْرِهَا ذَلِكَ أَرْبَعِينَ رَقَبَةً. وَكَانَتْ تَذْكُرُ نَذْرَهَا بَعْدَ ذَلِكَ فَتَبْكِي، حَتَّى تَبُلَّ دُمُوعُهَا خِمَارَهَا.
பாடம்: 62 (மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், “தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக் கப்பட்டதன்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்
6073. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் பின் மாலிக் பின் துஃபைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர் பாக’ (அவர்களுடைய சகோதரி அஸ்மா வின் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (அதிருப்தி யடைந்து) “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தமது முடிவைக்) கைவிட வேண்டும்; அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவரா இப்படிச் சொன்னார்?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

(அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன்; என் சத்தியத்தை நான் முறித்துக்கொள்ளவுமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அழைத்துச்செல்லக் கூடாதா? என் உறவை முறித்துக்கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!” என்று கூறினார்கள். ஆகவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு, இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.

(அங்கு சென்ற) உடனே ‘அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு’ என்று சலாம் சொல்லிவிட்டு, “நாங்கள் உள்ளே வரலாமா?” என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “உள்ளே வாருங்கள்” என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) “நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?” என்று கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்” என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இருப்பதை அறிந்துகொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பேசியே தீர வேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் இருவரும், “ ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று’ என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும், (உறவை முறிப்பதன் பாவம் குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் அழலானார்கள்.

மேலும், “(நான் அவரிடம் பேச மாட்டேன் எனச்) சத்தியம் செய்துவிட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்” என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பத் திரும்பக்) கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷாவிடம் அவர்கள் இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தமது சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும்கூடத் தமது சத்தியத்தை நினைவுகூர்ந்து தமது முகத்திரை நனையுமளவுக்கு அவர்கள் அழுவார்கள்.87


அத்தியாயம் : 78
6076. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ "".
பாடம்: 62 (மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், “தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக் கப்பட்டதன்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்
6076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6077. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ "".
பாடம்: 62 (மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், “தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுமதிக் கப்பட்டதன்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும்
6077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சிறந்தவர், யார் சலாமை (முகமனை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தான்.

இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6078. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْرِفُ غَضَبَكِ وَرِضَاكِ "". قَالَتْ قُلْتُ وَكَيْفَ تَعْرِفُ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" إِنَّكِ إِذَا كُنْتِ رَاضِيَةً قُلْتِ بَلَى وَرَبِّ مُحَمَّدٍ. وَإِذَا كُنْتِ سَاخِطَةً قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ "". قَالَتْ قُلْتُ أَجَلْ لَسْتُ أُهَاجِرُ إِلاَّ اسْمَكَ.
பாடம்: 63 (இறைநெறிக்கு) மாறு செய்பவருடன் பேசாமல் இருக்கலாம்.88 நான் (மற்றும் இரு நண்பர்கள் தக்க காரணமின்றி தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியபோது, “எங்களுடன் பேச வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள்” என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு) ஐம்பது நாட்கள் (பேசாமலிருந்தார்கள்) என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.89
6078. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய கோபத்தையும் உன்னுடைய பிரியத்தையும் நான் நன்றாக அறிவேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அதை எவ்வாறு தாங்கள் அறிந்து கொள்வீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீ பிரியத்துடன் இருக்கும்போது (பேசினால்), ‘ஆம்; முஹம்மதுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள்.

நான், “ஆம் (உண்மைதான்). நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் (தங்கள்மீதன்று)” என்று கூறினேன்.90

அத்தியாயம் : 78
6079. حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْهِمَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، فَبَيْنَمَا نَحْنُ جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا. قَالَ أَبُو بَكْرٍ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ أَمْرٌ. قَالَ "" إِنِّي قَدْ أُذِنَ لِي بِالْخُرُوجِ "".
பாடம்: 64 ஒருவர் தம் தோழரை ஒவ்வொரு நாளும் (ஒரு தடவை) சந்திப்பாரா? அல்லது காலை, மாலை (இருமுறை) சந்திப்பாரா?
6079. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் பெற்றோர் (அபூபக்ர்-உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தார்கள். பகலின் இரண்டு ஓரங்களான காலை யிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகைதராமல் (மக்காவில்) எந்த நாளும் எங்களுக்குக் கழிந்ததில்லை. நாங்கள் ஒருநாள் உச்சிப் பொழுதின்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்மிடம் வருகைதராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாறாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

(அதற்கு) அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஏதோ (முக்கிய) விவகாரம்தான் நபியவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “(ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு (இறைவனிட மிருந்து) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.91

அத்தியாயம் : 78
6080. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ فِي الأَنْصَارِ فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ، فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ، فَصَلَّى عَلَيْهِ، وَدَعَا لَهُمْ.
பாடம்: 65 சந்திப்பு92 ஒருவர் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்து அவர்களிடம் (சிறிதேனும்) உணவு உண்பது; நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்து அவரிடம் உணவருந்தினார்கள்.93
6080. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாரைச் சந்தித்துவிட்டு அவர்களிடம் உணவருந்தினார்கள். பிறகு அவர்கள் புறப்பட விரும்பியபோது வீட்டில் உள்ள ஓர் இடத்தை ஒதுக்கித் தரும்படி பணித்தார்கள். ஆகவே, நபியவர்களுக்காகப் பாய் விரிக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன் மீது நபியவர்கள் தொழுதார்கள். அக்குடும்பத்தினருக்காகப் பிரார்த்தனை யும் புரிந்தார்கள்.94

அத்தியாயம் : 78
6081. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ لِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ مَا الإِسْتَبْرَقُ قُلْتُ مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ وَخَشُنَ مِنْهُ. قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقُولُ رَأَى عُمَرُ عَلَى رَجُلٍ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ فَأَتَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اشْتَرِ هَذِهِ فَالْبَسْهَا لِوَفْدِ النَّاسِ إِذَا قَدِمُوا عَلَيْكَ. فَقَالَ "" إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". فَمَضَى فِي ذَلِكَ مَا مَضَى، ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ إِلَيْهِ بِحُلَّةٍ فَأَتَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ بَعَثْتَ إِلَىَّ بِهَذِهِ، وَقَدْ قُلْتَ فِي مِثْلِهَا مَا قُلْتَ قَالَ "" إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتُصِيبَ بِهَا مَالاً "". فَكَانَ ابْنُ عُمَرَ يَكْرَهُ الْعَلَمَ فِي الثَّوْبِ لِهَذَا الْحَدِيثِ.
பாடம்: 66 (தம்மைச் சந்திக்க வரும்) தூதுக் குழுவினர்களுக்காக ஒருவர் தம்மை (ஆடையணிகலன்களால்) அலங்கரித்துக்கொள்வது
6081. யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் அல்ஹள்ரமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம், “ ‘அல்இஸ்தப்ரக்’ என்றால் என்ன?” என்று கேட்டார்கள். நான், “கெட்டியான முரட்டுப் பட்டு” என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள், (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள்: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதர்மீது கெட்டியான பட்டு அங்கி ஒன்றைக் கண்டார்கள்.

அதை (அவரிடமிருந்து வாங்கி) நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் விலைக்கு வாங்கி மக்களின் தூதுக் குழு தங்களிடம் வரும்பொழுது இதைத் தாங்கள் அணிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(மறுமைப்) பேறற்ற (ஆட)வர்களே (இது போன்ற) பட்டை (இம்மையில்) அணிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்கள்.

இது நடந்து சில நாட்கள் கழிந்தபிறகு (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு பட்டு அங்கியை கொடுத்தனுப்பினார்கள். உடனே அதை எடுத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “இதை எனக்குத் தாங்கள் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். (ஆனால்) இது போன்ற (பட்டு அங்கி) விஷயத்தில் தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “(இதை விற்று) இதன் மூலம் (வருவாயாகக் கிடைக்கும்) செல்வத்தை நீங்கள் அடைந்துகொள்ளும் பொருட்டே இதை உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.95

இந்த நபிமொழியின் காரணமாகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 78
6082. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம்: 67 (ஒப்பந்த அடிப்படையில் இரு வருக்கிடையே) சகோதரத்துவத் தையும் (குலங்களுக்கிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.96 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.97
6082. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (மதீனாவாசிகளான) எங்களிடம் (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது அவர்களுக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். பிறகு (அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் மணமுடித்துக்கொண்டபோது அவரிடம்) “ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.98


அத்தியாயம் : 78
6083. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَبَلَغَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ "". فَقَالَ قَدْ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي.
பாடம்: 67 (ஒப்பந்த அடிப்படையில் இரு வருக்கிடையே) சகோதரத்துவத் தையும் (குலங்களுக்கிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.96 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.97
6083. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “இஸ்லாத்தில் (மனிதர்களாக எற்படுத்திக்கொள்கிற ஒப்பந்த) நட்புறவுமுறை இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தங்களுக்குச் செய்தி கிடைத்ததா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!” என்றார்கள்.99

அத்தியாயம் : 78
6084. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رِفَاعَةَ، الْقُرَظِيَّ طَلَّقَ امْرَأَتَهُ فَبَتَّ طَلاَقَهَا، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، فَجَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَهَا آخِرَ ثَلاَثِ تَطْلِيقَاتٍ، فَتَزَوَّجَهَا بَعْدَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الزَّبِيرِ، وَإِنَّهُ وَاللَّهِ مَا مَعَهُ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ مِثْلُ هَذِهِ الْهُدْبَةِ، لِهُدْبَةٍ أَخَذَتْهَا مِنْ جِلْبَابِهَا. قَالَ وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَابْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ جَالِسٌ بِبَابِ الْحُجْرَةِ لِيُؤْذَنَ لَهُ، فَطَفِقَ خَالِدٌ يُنَادِي أَبَا بَكْرٍ، يَا أَبَا بَكْرٍ أَلاَ تَزْجُرُ هَذِهِ عَمَّا تَجْهَرُ بِهِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يَزِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى التَّبَسُّمِ ثُمَّ قَالَ "" لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6084. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் அவரை மணமுடித்துக்கொண்டார்கள்.

அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதி தலாக் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் மணந்துகொண்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாம் கணவரான) இவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான்” என்று கூறி தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார்.

(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அந்த அறையின் வாசலில் அனுமதிக்காக (காத்துக்கொண்டு) அமர்ந்திருந்தார்கள். காலித் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்து, “அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக் கூடாதென இவரை நீங்கள் கண்டிக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ புன்னகை செய்ததைவிடக் கூடுதலாக (வேறேதும்) செய்யவில்லை.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப் பெண்ணிடம்), “நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பிச் செல்ல விரும்புகிறாய் போலும். நீ (உன் இரண் டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன் பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது” என்று சொன்னார்கள்.102


அத்தியாயம் : 78
6085. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ اسْتَأْذَنَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ نِسْوَةٌ مِنْ قُرَيْشٍ يَسْأَلْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ عَلَى صَوْتِهِ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ تَبَادَرْنَ الْحِجَابَ، فَأَذِنَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَضْحَكُ فَقَالَ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي فَقَالَ "" عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي، لَمَّا سَمِعْنَ صَوْتَكَ تَبَادَرْنَ الْحِجَابَ "". فَقَالَ أَنْتَ أَحَقُّ أَنْ يَهَبْنَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ أَقْبَلَ عَلَيْهِنَّ فَقَالَ يَا عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ أَتَهَبْنَنِي وَلَمْ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ إِنَّكَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِيهٍ يَا ابْنَ الْخَطَّابِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ سَالِكًا فَجًّا إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6085. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்களின் வீட்டுக்குள் வர) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர் களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)துகொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்களே!” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சத் தாங்கள்தான் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, “தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், “அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடினசித்தம் உடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கி றீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது இருக்கட்டும் கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.103


அத்தியாயம் : 78
6086. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالطَّائِفِ قَالَ "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "". فَقَالَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَبْرَحُ أَوْ نَفْتَحَهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَاغْدُوا عَلَى الْقِتَالِ "". قَالَ فَغَدَوْا فَقَاتَلُوهُمْ قِتَالاً شَدِيدًا وَكَثُرَ فِيهِمُ الْجِرَاحَاتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ فَسَكَتُوا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بِالْخَبَرِ كُلَّهُ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6086. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபில் (அதை முற்றுகையிட்டபடி) இருந்துகொண்டிருந்தபோது, “இறைவன் நாடினால், நாம் நாளை (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “தாயிஃபை வெற்றிகொள்ளும் வரை நாங்கள் (திரும்பிச்செல்லமாட்டோம்) இங்கேயே இருப்போம்” என்று கூறினார்கள். (அவர்களின் தயக்கத்தைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “முற்பகóலேயே போர் புரியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே எதிரிகளுடன் அவர்கள் கடுமையாகப் போர் புரிந்ததில் அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டன.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவன் நாடினால், நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் இப்போது (ஏதும் பதிலளிக்காமல் அதை ஆதரிக்கும் வகையில்) அமைதியாக இருந்தார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.104

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் முழுத்தகவல் இடம்பெறுகிறது.


அத்தியாயம் : 78
6087. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ. قَالَ "" أَعْتِقْ رَقَبَةً "". قَالَ لَيْسَ لِي. قَالَ "" فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ "". قَالَ لاَ أَسْتَطِيعُ. قَالَ "" فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا "". قَالَ لاَ أَجِدُ. فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ ـ قَالَ إِبْرَاهِيمُ الْعَرَقُ الْمِكْتَلُ فَقَالَ "" أَيْنَ السَّائِلُ تَصَدَّقْ بِهَا "". قَالَ عَلَى أَفْقَرَ مِنِّي وَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا. فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ. قَالَ "" فَأَنْتُمْ إِذًا "".
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6087. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் அடிமை இல்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பீராக” என்று சொன்னார்கள். அவர், “எனக்குச் சக்தியில்லை” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக” என்று கூறினார்கள். அவர், “என்னிடம் ஏதுமில்லை” என்று சொன்னார். அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அரக்’ கொண்டுவரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அரக்’ என்பது (பதினைந்து ‘ஸாஉ’ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்-

அப்போது நபி (ஸல்) அவர்கள், “கேள்வி கேட்டவர் எங்கே?” (என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று சொன் னார்கள். அந்த மனிதர் “என்னைவிட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்வது? கருங்கற்கள் நிறைந்த (மதீனாவின்) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழையான குடும்பத்தார் யாருமில்லை” என்று சொன்னார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். (பிறகு) “அவ்வாறாயின் நீங்களே (அதற்கு உரியவர்கள்)” என்று சொன்னார்கள்.105


அத்தியாயம் : 78
6088. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الْحَاشِيَةِ، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً ـ قَالَ أَنَسٌ فَنَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ الرِّدَاءِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ ـ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ. فَالْتَفَتَ إِلَيْهِ فَضَحِكَ، ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6088. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார்.

அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், “முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.106


அத்தியாயம் : 78
6089. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي.
பாடம்: 68 புன்னகையும் சிரிப்பும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்கவைக்கின்றான்; அழவைக்கின் றான்.101
6089. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.107


அத்தியாயம் : 78