5585. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِتْعِ فَقَالَ "" كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهْوَ حَرَامٌ "".
பாடம்: 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே ‘பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
5585. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ (தேனிலிருந்து தயாரிக் கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.11


அத்தியாயம் : 74
5586. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِتْعِ وَهْوَ نَبِيذُ الْعَسَلِ، وَكَانَ أَهْلُ الْيَمَنِ يَشْرَبُونَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهْوَ حَرَامٌ "".
பாடம்: 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே ‘பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
5586. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. -அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும்.- யமன்வாசிகள் அதை அருந்திவந்தார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘போதை தரும் (மது) பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்ட தேயாகும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 74
5587. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ، وَلاَ فِي الْمُزَفَّتِ "". وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُلْحِقُ مَعَهَا الْحَنْتَمَ وَالنَّقِيرَ.
பாடம்: 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே ‘பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.
5587. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித் தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்விரண்டுடன் மண் சாடியையும் பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப் பானையையும் சேர்த்து அறிவித்துவந்தார்கள்.

அத்தியாயம் : 74
5588. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ قَدْ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، وَهْىَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْعَسَلِ، وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ، وَثَلاَثٌ وَدِدْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يُفَارِقْنَا حَتَّى يَعْهَدَ إِلَيْنَا عَهْدًا الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا. قَالَ قُلْتُ يَا أَبَا عَمْرٍو فَشَىْءٌ يُصْنَعُ بِالسِّنْدِ مِنَ الرُّزِّ. قَالَ ذَاكَ لَمْ يَكُنْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ قَالَ عَلَى عَهْدِ عُمَرَ. وَقَالَ حَجَّاجُ عَنْ حَمَّادٍ عَنْ أَبِي حَيَّانَ مَكَانَ الْعِنَبِ الزَّبِيبَ.
பாடம்: 5 ‘மது என்பது அறிவுக்குத் திரையிடும் பானம்’ என்பது பற்றி வந்துள்ளவை
5588. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்:

மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம்பழம், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, தேன் ஆகியவையே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக்கூடியதாகும்.12

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவான தொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:

1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?13

2. ‘கலாலா’ என்றால் என்ன?14

3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.15

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹய்யான் அத்-தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஆமிர் பின் ‘அபீ (ரஹ்) அவர்களிடம், ‘‘அபூஅம்ரே! சிந்து சமவெளியில் அரிசியால் தயாரிக்கப்படும் ஒரு வகை (மது)பானம் உள்ளதே? (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அது ‘நபி (ஸல்) அவர்களது காலத்தில்’ அல்லது உமர் (ரலி) அவர்களது காலத்தில்’ இருந்ததில்லை” என்று பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) ‘திராட்சை’ என்பதற்குப் பதிலாக ‘உலர்ந்த திராட்சை’ என்று வந்துள்ளது.


அத்தியாயம் : 74
5589. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ الْخَمْرُ يُصْنَعُ مِنْ خَمْسَةٍ مِنَ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْعَسَلِ.
பாடம்: 5 ‘மது என்பது அறிவுக்குத் திரையிடும் பானம்’ என்பது பற்றி வந்துள்ளவை
5589. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது ஐந்து பொருட்களிருந்து தயாரிக்கப்படுகிறது.

அவை: 1. உலர்ந்த திராட்சை2. பேரீச்சம்பழம் 3. கோதுமை 4. தொலி நீக்கப்படாத கோதுமை 5. தேன்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16

அத்தியாயம் : 74
5590. وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ ـ أَوْ أَبُو مَالِكٍ ـ الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ ـ يَعْنِي الْفَقِيرَ ـ لِحَاجَةٍ فَيَقُولُوا ارْجِعْ إِلَيْنَا غَدًا. فَيُبَيِّتُهُمُ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ "".
பாடம்: 6 மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருதுகின்றவன் குறித்தும், அதற்கு மாற்றுப் பெயர் சூட்டுகின்றவன் குறித்தும் வந்துள்ளவை
5590. அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் -அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.- (அவர்கள் கூறியதாவது:)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘‘நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள்.

(ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள்மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள்வரை உருமாற்றிவிடுவான்.17

அத்தியாயம் : 74
5591. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلاً، يَقُولُ أَتَى أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ فَدَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ، فَكَانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ وَهْىَ الْعَرُوسُ. قَالَتْ أَتَدْرُونَ مَا سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ.
பாடம்: 7 கல், செம்பு, மரம் முதலான பாத்திரங்களில் பழச்சாறுகளை ஊறவைப்பது
5591. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போது மணப் பெண்ணாயிருந்த அவர்களின் துணைவியாரே நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் தெரியுமா?

அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத் திருந்தார். (மணவிருந்து உண்டபின் நபியவர்களுக்கு அந்தப் பழச்சாற்றை அவர் புகட்டினார்.)18

அத்தியாயம் : 74
5592. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الظُّرُوفِ فَقَالَتِ الأَنْصَارُ إِنَّهُ لاَ بُدَّ لَنَا مِنْهَا. قَالَ "" فَلاَ إِذًا "". وَقَالَ خَلِيفَةُ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَابِرٍ بِهَذَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا وَقَالَ فِيهِ لَمَّا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْأَوْعِيَةِ
பாடம்: 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றி வைக்கத்) தடை விதித்தபின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி யளித்தது19
5592. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் ‘‘அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்)” என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்கள் (சிலவகைப்) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று தடை விதித்தபோது...” என்று வந்துள்ளது.


அத்தியாயம் : 74
5593. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي مُسْلِمٍ الأَحْوَلِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الأَسْقِيَةِ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ سِقَاءً فَرَخَّصَ لَهُمْ فِي الْجَرِّ غَيْرِ الْمُزَفَّتِ.
பாடம்: 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றி வைக்கத்) தடை விதித்தபின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி யளித்தது19
5593. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப் பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, ‘‘மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே” என்று சொல்லப் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித் தார்கள்.


அத்தியாயம் : 74
5594. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ. حَدَّثَنَا عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الأَعْمَشِ بِهَذَا.
பாடம்: 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றி வைக்கத்) தடை விதித்தபின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி யளித்தது19
5594. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும் தார் பூசப்பட்ட பாத்திரத் தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.


அத்தியாயம் : 74
5595. حَدَّثَنِي عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، قُلْتُ لِلأَسْوَدِ هَلْ سَأَلْتَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا يُكْرَهُ أَنْ يُنْتَبَذَ فِيهِ فَقَالَ نَعَمْ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ عَمَّا نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُنْتَبَذَ فِيهِ قَالَتْ نَهَانَا فِي ذَلِكَ أَهْلَ الْبَيْتِ أَنْ نَنْتَبِذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ. قُلْتُ أَمَا ذَكَرْتِ الْجَرَّ وَالْحَنْتَمَ قَالَ إِنَّمَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ، أَفَأُحَدِّثُ مَا لَمْ أَسْمَعْ
பாடம்: 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றி வைக்கத்) தடை விதித்தபின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி யளித்தது19
5595. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், ‘‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத் தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (வினவினேன்). இறைநம்பிக்கையாளர் களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?” என நான் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், ‘‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 74
5596. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْجَرِّ الأَخْضَرِ. قُلْتُ أَنَشْرَبُ فِي الأَبْيَضِ قَالَ لاَ.
பாடம்: 8 பாத்திரங்கள் மற்றும் தோல் பைகளில் (பானங்களை ஊற்றி வைக்கத்) தடை விதித்தபின் நபி (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி யளித்தது19
5596. சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்கள் பச்சைநிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அப்போது ‘‘வெண்ணிற களிமண் பாத்தி ரத்தில் நாங்கள் அருந்தலாமா?” என்று வினவினேன். அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் ‘‘இல்லை. (அதுவும் கூடாது)” என்று சொன்னார்கள்.20

அத்தியாயம் : 74
5597. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ، دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم لِعُرْسِهِ، فَكَانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ يَوْمَئِذٍ وَهْىَ الْعَرُوسُ. فَقَالَتْ مَا تَدْرُونَ مَا أَنْقَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ.
பாடம்: 9 போதையூட்டக்கூடியதாக மாறாத வரை பேரீச்சம்பழ ஊறலை அருந்தலாம்.
5597. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூஉசைதின் துணைவியாரே அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந் தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம்பழங்களை கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் இரவிலேயே ஊறவைத்தேன். (நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்)” என்று சொன்னார்.21

அத்தியாயம் : 74
5598. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ الْبَاذَقِ،. فَقَالَ سَبَقَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم الْبَاذَقَ، فَمَا أَسْكَرَ فَهْوَ حَرَامٌ. قَالَ الشَّرَابُ الْحَلاَلُ الطَّيِّبُ. قَالَ لَيْسَ بَعْدَ الْحَلاَلِ الطَّيِّبِ إِلاَّ الْحَرَامُ الْخَبِيثُ.
பாடம்: 10 ‘பாதக்’ எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை (‘திலா’) அருந்தலாம் என உமர் பின் அல்கத்தாப், அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ், முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கருதினர். பராஉ பின் ஆஸிப், அபூஜுஹைஃபா (ரலி) ஆகியோர் சரிபாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை அருந்தியுள்ளனர். காய்ச்சப் படாத (பச்சைப்) பழச்சாற்றை (மட்டும்) அருந்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.23 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் மகன்) உபைதுல்லாஹ்விட மிருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்குச் சாட்டையடி கொடுப்பேன்.24
5598. அபுல் ஜுவைரியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘(‘பாதக்’ எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 74
5599. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ.
பாடம்: 10 ‘பாதக்’ எனும் பானமும், போதை தரும் அனைத்துப் பானங்களுக்கும் தடை விதிப்போரின் கூற்றும்22 மூன்றில் (இரு பங்கு குறைந்து) ஒரு பங்கு இருக்கும் அளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை (‘திலா’) அருந்தலாம் என உமர் பின் அல்கத்தாப், அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ், முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கருதினர். பராஉ பின் ஆஸிப், அபூஜுஹைஃபா (ரலி) ஆகியோர் சரிபாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாற்றை அருந்தியுள்ளனர். காய்ச்சப் படாத (பச்சைப்) பழச்சாற்றை (மட்டும்) அருந்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.23 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (என் மகன்) உபைதுல்லாஹ்விட மிருந்து ஒரு பானத்தின் நெடி வரக் கண்டேன். அது குறித்து விசாரிப்பேன். அது போதை தருவதாக இருந்தால் அவருக்குச் சாட்டையடி கொடுப்பேன்.24
5599. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.25

அத்தியாயம் : 74
5600. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ إِنِّي لأَسْقِي أَبَا طَلْحَةَ وَأَبَا دُجَانَةَ وَسُهَيْلَ ابْنَ الْبَيْضَاءِ خَلِيطَ بُسْرٍ وَتَمْرٍ إِذْ حُرِّمَتِ الْخَمْرُ، فَقَذَفْتُهَا وَأَنَا سَاقِيهِمْ وَأَصْغَرُهُمْ، وَإِنَّا نَعُدُّهَا يَوْمَئِذٍ الْخَمْرَ. وَقَالَ عَمْرُو بْنُ الْحَارِثِ حَدَّثَنَا قَتَادَةُ سَمِعَ أَنَسًا.
பாடம்: 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று26
5600. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதல்ஹா, அபூதுஜானா, சுஹைல் பின் பய்ளா (ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 74
5601. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَالْبُسْرِ وَالرُّطَبِ.
பாடம்: 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று26
5601. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம்பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.


அத்தியாயம் : 74
5602. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُجْمَعَ بَيْنَ التَّمْرِ وَالزَّهْوِ، وَالتَّمْرِ وَالزَّبِيبِ، وَلْيُنْبَذْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ.
பாடம்: 11 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் (கனிந்த) பேரீச்சம் பழங்களையும் கலந்(து ஊற வைத்)தால் போதை தரும் என்றிருப்பின் அவ்வாறு கலக்கலாகாது என்றும், இரண்டு குழம்புகளை ஒரே குழம்பாகக் கலக்கலாகாது என்றும் கருதுவோரின் கூற்று26
5602. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை யும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்றுசேர்(த்து ஊறவை)ப்பதை யும், பேரீச்சம்பழத்தையும் உலர்ந்த திராட்சையையும் ஒன்றுசேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றை யும் தனித்தனியாக ஊறவைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

அத்தியாயம் : 74
5603. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِقَدَحِ لَبَنٍ وَقَدَحِ خَمْرٍ.
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5603. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் பால்கிண்ணமும் மதுக்கிண்ணமும் கொண்டுவரப்பட்டன.27


அத்தியாயம் : 74
5604. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، أَخْبَرَنَا سَالِمٌ أَبُو النَّضْرِ، أَنَّهُ سَمِعَ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الْفَضْلِ يُحَدِّثُ عَنْ أُمِّ الْفَضْلِ، قَالَتْ شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلْتُ إِلَيْهِ بِإِنَاءٍ فِيهِ لَبَنٌ فَشَرِبَ. فَكَانَ سُفْيَانُ رُبَّمَا قَالَ شَكَّ النَّاسُ فِي صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ. فَإِذَا وُقِفَ عَلَيْهِ قَالَ هُوَ عَنْ أُمِّ الْفَضْلِ.
பாடம்: 12 பால் அருந்துவது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: கால்நடைகளில் நிச்சயமாக உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளில் உணவுக் கூழுக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான, அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். (16:66)
5604. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளன்று நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.28

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே, உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பி வைத்தார்கள்” என்று (‘‘உம்முல் பள்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு.

அவர்களிடம், ‘‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்சலா(ன ஹதீஸா)?” என்று கேட்கப்பட்டால், ‘‘இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன் (ஆகவே, இது ‘மவ்ஸூல்’தான்)” என்று பதிலளிப்பார்கள்.


அத்தியாயம் : 74