5138. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَىْ يَزِيدَ بْنِ جَارِيَةَ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا، زَوَّجَهَا وَهْىَ ثَيِّبٌ، فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَدَّ نِكَاحَهُ.
பாடம்: 43
ஒருவர் தம்முடைய மகளுக்கு அவளது விருப்பமின்றி மண முடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.
5138. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்ப மிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 67

5139. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا يَحْيَى، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ وَمُجَمِّعَ بْنَ يَزِيدَ حَدَّثَاهُ أَنَّ رَجُلاً يُدْعَى خِذَامًا أَنْكَحَ ابْنَةً لَهُ. نَحْوَهُ.
பாடம்: 43
ஒருவர் தம்முடைய மகளுக்கு அவளது விருப்பமின்றி மண முடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.
5139. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களும், முஜம்மிஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களும், ‘‘கிதாம் என்றழைக்கப்படும் ஒருவர் தம்முடைய புதல்வி ஒருவரை மணமுடித்து வைத்தார்” என்று ஆரம்பித்து மேற்கண்ட ஹதீஸைப் போலவே அறிவித்தனர்.

5140. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَ لَهَا يَا أُمَّتَاهْ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى} إِلَى {مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} قَالَتْ عَائِشَةُ يَا ابْنَ أُخْتِي هَذِهِ الْيَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي جَمَالِهَا وَمَالِهَا، وَيُرِيدُ أَنْ يَنْتَقِصَ مِنْ صَدَاقِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ. إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ وَأُمِرُوا بِنِكَاحِ مَنْ سِوَاهُنَّ مِنَ النِّسَاءِ، قَالَتْ عَائِشَةُ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} إِلَى {وَتَرْغَبُونَ} فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ فِي هَذِهِ الآيَةِ أَنَّ الْيَتِيمَةَ إِذَا كَانَتْ ذَاتَ مَالٍ وَجَمَالٍ، رَغِبُوا فِي نِكَاحِهَا وَنَسَبِهَا وَالصَّدَاقِ، وَإِذَا كَانَتْ مَرْغُوبًا عَنْهَا فِي قِلَّةِ الْمَالِ وَالْجَمَالِ، تَرَكُوهَا وَأَخَذُوا غَيْرَهَا مِنَ النِّسَاءِ ـ قَالَتْ ـ فَكَمَا يَتْرُكُونَهَا حِينَ يَرْغَبُونَ عَنْهَا، فَلَيْسَ لَهُمْ أَنْ يَنْكِحُوهَا إِذَا رَغِبُوا فِيهَا، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهَا وَيُعْطُوهَا حَقَّهَا الأَوْفَى مِنَ الصَّدَاقِ.
பாடம்: 44
அநாதைப் பெண்ணுக்கு மண முடித்து வைப்பது (செல்லும்).
ஏனெனில், அல்லாஹ், ‘‘நீங்கள் அநாதை(ப் பெண்களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மண முடித்துக்கொள்ளுங்கள்” (4:3) என்று கூறுகின்றான்.
மேலும், ஒருவர் காப்பாளரிடம், ‘‘(உமது பொறுப்பிலுள்ள) இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்துவை” என்று கூறினார். அப்போது காப்பாளர் சிறிது நேரம் பொறுத்திருந்தார். அல்லது ‘‘(மஹ்ர் செலுத்த) உன்னிடம் என்ன உள்ளது?” என்று கேட்டார்.
பெண் கேட்டவர் என்னிடம் இன்ன இன்னது உள்ளது என்று கூறினார். அல்லது அவர்கள் இருவருமே (சிறிது நேரம்) அமைதியாக இருந்தனர். பிறகு காப்பாளர், ‘‘அவளை உனக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினால், இத்திருமணம் செல்லும். இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களின் அறிவிப்பு வந்துள்ளது.80
5140. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘என் அருமைத் தாயார் அவர்களே! (என விளித்து,) ‘அநாதை(ப் பெண்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக்கொள் ளுங்கள்.’ என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனம் குறிப்பிடும்) அநாதைப் பெண் ஒரு காப்பாளரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவரோ, இவளது அழகிலும் செல்வத்திலும் ஆசை(ப்பட்டு இவளைத் திருமணம் செய்ய விருப்பம்)கொள்வார். ஆனால், அவளுக்குரிய மஹ்ரைக் குறைத்திட நினைப்பார். அப்போதுதான் ‘நிறைவான மஹ்ரைத் தந்து அவர்களுடன் நீதியாக நடந்துகொள்ளாமல், அவர்களை நீங்கள் மணக்கக் கூடாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. (அநாதையல்லாத) மற்றப் பெண்களை மணந்துகொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதற்குப் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்ப்புக் கேட்டனர். அப்போது அல்லாஹ் ‘‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உம்மிடம் அவர்கள் கோருகின்றனர்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.
இந்த வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்பதன் கருத்தாவது:
ஓர் அநாதைப் பெண்ணிடம் செல்வமும் அழகுமிருந்தால் அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக்கொள்ளவும் ‘மஹ்ர்’ (மணக்கொடை) கொடுக்கவும் மக்கள் முன்வந்தனர். அதே சமயம், அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாய் இருந்தால் அவளை விட்டுவிட்டு வேறு பெண்களை மணந்துகொண்டனர்.
அவளை விரும்பாதபோது (மணந்து கொள்ளாமல்) விட்டுவிடுவதைப் போன்று அவளை அவர்கள் விரும்பும்போது மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்துகொண்டால் ஒழிய அவளை மணந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை.81

5141. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ "" مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا. قَالَ "" مَا عِنْدَكَ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. قَالَ "" أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". قَالَ مَا عِنْدِي شَىْءٌ. قَالَ "" فَمَا عِنْدَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ عِنْدِي كَذَا وَكَذَا. قَالَ "" فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 45
பெண்கேட்பவர் காப்பாளரிடம், ‘‘இன்ன பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று கேட்க, அதற்கு அவர், ‘இன்னின்னவற்றுக்குப் பகரமாக உனக்கு அவளை நான் மணமுடித்து வைத்தேன்’ என்று கூறினால் திருமணம் செல்லும். மணமகனிடம் காப்பாளர் ‘இதில் உமக்கு விருப்பமுண்டா’ என்றோ, அல்லது ‘சம்மதமா’ என்றோ கேட்காவிட்டாலும் சரியே!
5141. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?” என்று கேட்டார்கள்.
அவர், ‘‘என்னிடம் எதுவுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று சொன்னார்கள். அவர், ‘‘என்னிடம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங் களுக்காக இவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன்” என்று சொன் னார்கள்.82

5142. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ.
பாடம்: 46
தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண்கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்).
5142. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்குமுன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும்வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் சொன்னார்கள்.

5143. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَبَاغَضُوا، وَكُونُوا إِخْوَانًا ".
பாடம்: 46
தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண்கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்).
5143. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பிறர்மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங்குறைகளை) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

5144. وَلَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَنْكِحَ أَوْ يَتْرُكَ
பாடம்: 46
தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண்கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்).
5144. (ஒரு பெண்ணை) தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிக்கொண்டிருக் கும்போது மற்றவர் (அவளை) பெண்பேச லாகாது. ஒன்று, அவர் (அவளை) மணந்துகொள்வார்; அல்லது அவர் கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்க வேண்டும்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5145. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ قَالَ عُمَرُ لَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ. فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ إِلاَّ أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ ذَكَرَهَا فَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا. تَابَعَهُ يُونُسُ وَمُوسَى بْنُ عُقْبَةَ وَابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ.
பாடம்: 47
பெண்கேட்பதைக் கைவிடுவதன் விளக்க(மாய் அமைந்த சம்பவ)ம்
5145. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தம் மருமகன் குனைஸ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்துவிட்டதால் மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்துவைக்க எண்ணினார்கள்.)
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்கு திருமணம் முடித்துவைக்கிறேன்” என்று கூறினேன். (அவர்கள் பதிலேதும் கூறவில்லை.) எனவே, சில நாட்கள் காத்திருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண்கேட்டார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்துவைத்தேன்.)
பிறகு (ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘‘நீங்கள் (என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச்) சொன்னபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்துகொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை (எனவே தான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவரை நான் (மனைவியாக) ஏற்றுக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.83
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

5146. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ جَاءَ رَجُلاَنِ مِنَ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرً"".
பாடம்: 48
(திருமண) உரை (குத்பா)
5146. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொலிவும் கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது” என்று சொன்னார்கள்.84

5147. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، قَالَ قَالَتِ الرُّبَيِّعُ بِنْتُ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ. جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَىَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ، إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ "" دَعِي هَذِهِ، وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ "".
பாடம்: 49
திருமணத்திலும் ‘வலீமா’ (எனும் மண) விருந்திலும் (சலங்கையில்லா) கஞ்சிரா (தஃப்) அடிப்பது
5147. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் (காலித் பின் ஃதக்வான் (ரஹ்) அவர்களிடம்) கூறியதாவது:
எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு பத்ர் போரில் கொல்லப் பட்ட எம்முன்னோரைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களில் ஒருசிறுமி, ‘‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்ப தையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டு மானால்) சொல்!” என்று கூறினார்கள்.85

5148. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، تَزَوَّجَ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ، فَرَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَشَاشَةَ الْعُرْسِ فَسَأَلَهُ فَقَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ. وَعَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ تَزَوَّجَ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ.
பாடம்: 50
‘‘மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மணக்கொடையை மனமுவந்து அளித்துவிடுங்கள்” எனும் (4:4ஆவது) இறைவசனம்
அதிகபட்ச மணக்கொடை மற்றும் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச மணக்கொடை
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும்கூட, அதிலிருந்து எதையும் நீங்கள் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (4:20)
மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் உங்கள் மனைவியரைத் தீண்டாமலேயே, அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமலேயே அவர்களை மணவிலக்குச் செய்துவிடுவீர்களாயின் உங்கள்மீது குற்றமேதுமில்லை. (2:236)
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பாலான மோதிரத்தையேனும் (மஹ்ராகக் கொடுக்கத்) தேடுக!” என்று கூறினார்கள்.86
5148. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு (அன்சாரிப்) பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள். (அவரது முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில், ‘‘அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டார்கள்” என்று காணப்படுகிறது.

5149. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، سَمِعْتُ أَبَا حَازِمٍ، يَقُولُ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، يَقُولُ إِنِّي لَفِي الْقَوْمِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَامَتِ امْرَأَةٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لَكَ فَرَ فِيهَا رَأْيَكَ فَلَمْ يُجِبْهَا شَيْئًا ثُمَّ قَامَتْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لَكَ فَرَ فِيهَا رَأْيَكَ فَلَمْ يُجِبْهَا شَيْئًا ثُمَّ قَامَتِ الثَّالِثَةَ فَقَالَتْ إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لَكَ فَرَ فِيهَا رَأْيَكَ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحْنِيهَا. قَالَ "" هَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ "". قَالَ لاَ. قَالَ "" اذْهَبْ فَاطْلُبْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ فَطَلَبَ ثُمَّ جَاءَ فَقَالَ مَا وَجَدْتُ شَيْئًا وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ. فَقَالَ "" هَلْ مَعَكَ مِنَ الْقُرْآنِ شَىْءٌ "". قَالَ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا. قَالَ "" اذْهَبْ فَقَدْ أَنْكَحْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 51
குர்ஆனை கற்றுத்தருவதற்குப் பதிலாகவோ மணக்கொடை ஏதும் குறிப்பிடாமலோ மணமுடித்து வைப்பது
5149. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த மக்களிடையே இருந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி (வந்து) நின்று, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக (மஹ்ரின்றி மணமுடித்துக்கொள்வதற்காக) வழங்கி விட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு மீண்டும் எழுந்து நின்று, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்!” என்று சொன்னார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மூன்றாவது முறையாக அப்பெண்மணி எழுந்து ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்; தங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்” என்றார்.
அப்போது ஒரு மனிதர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இவருக்கு மஹ்ராகக் கொடுக்க) உம்மிடம் ஏதேனும் பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘இல்லை” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சென்று, (இவருக்கு மஹ்ராகச் செலுத்த) இரும்பாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சொன்னார்கள். அவர் போய்த் தேடிவிட்டு பிறகு (திரும்பி) வந்து, ‘‘ஏதும் கிடைக்க வில்லை. இரும்பாலான மோதிரம்கூட கிடைக்கவில்லை” என்று சொன்னார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் (மனப் பாடமாக) உள்ளது” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங் களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன், நீர் செல்லலாம்!” என்று கூறினார்கள்.87

5150. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ "" تَزَوَّجْ وَلَوْ بِخَاتَمٍ مِنْ حَدِيدٍ "".
பாடம்: 52
இரும்பு மோதிரம் உள்ளிட்ட பொருட்களை மணக்கொடையாக வழங்குதல்
5150. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘‘இரும்பாலான மோதிரத்தையாவது கொடுத்து மணமுடித்துக்கொள்வீராக!” என்று சொன்னார்கள்.88

5151. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَحَقُّ مَا أَوْفَيْتُمْ مِنَ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ "".
பாடம்: 53
திருமணத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) முன்நிபந்தனைகள்
‘‘முன்நிபந்தனைகள் விதிக்கப்படும்போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.89
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸ் (ரலி) அவர்களை) நினைவுகூர்ந்து, (அவருடைய மாமனா ரான) தம்(முடன் அவர் வைத்திருந்த) உறவுமுறையில் நல்ல விதமாக நடந்து கொண்டதாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். ‘‘அவர் பேசியபோது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்தபோது, அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்று கூறினார்கள்.90
5151. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர் (மணக்கொடை)தான்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91

5152. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ زَكَرِيَّاءَ ـ هُوَ ابْنُ أَبِي زَائِدَةَ ـ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تَسْأَلُ طَلاَقَ أُخْتِهَا لِتَسْتَفْرِغَ صَحْفَتَهَا، فَإِنَّمَا لَهَا مَا قُدِّرَ لَهَا "".
பாடம்: 54
திருமணத்தில் அனுமதிக்கப்படா நிபந்தனைகள்
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தன்னை மணக்க விரும்புகின்றவரிடம் அவருடைய முதல் மனைவியான) மற்றொரு பெண்ணை மணவிலக்குச் செய்துவிட வேண்டும் என நிபந்தனை விதிக்கக் கூடாது.
5152. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலிசெய்(துவிட்டு அதைத் தனதாக்கிக்கொள்) வதற்காக அவளை மணவிலக்குச் செய்துவிடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில், அவளுக் கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 67
5152. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலிசெய்(துவிட்டு அதைத் தனதாக்கிக்கொள்) வதற்காக அவளை மணவிலக்குச் செய்துவிடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில், அவளுக் கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 67
5153. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ عَبْدَ، الرَّحْمَنِ بْنَ عَوْفٍ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِهِ أَثَرُ صُفْرَةٍ فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الأَنْصَارِ قَالَ "" كَمْ سُقْتَ إِلَيْهَا "". قَالَ زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம்: 55
மணமுடித்தவர் மஞ்சள் நிற வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொள்வது
இது குறித்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களிடமிருந்து அறிவிப்புச் செய்துள் ளார்கள்.92
5153. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம்மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவியபோது, தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித் தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்று கூறினார்கள்.

5154. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَوْلَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِزَيْنَبَ فَأَوْسَعَ الْمُسْلِمِينَ خَيْرًا فَخَرَجَ ـ كَمَا يَصْنَعُ إِذَا تَزَوَّجَ ـ فَأَتَى حُجَرَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ يَدْعُو وَيَدْعُونَ {لَهُ} ثُمَّ انْصَرَفَ فَرَأَى رَجُلَيْنِ فَرَجَعَ لاَ أَدْرِي آخْبَرْتُهُ أَوْ أُخْبِرَ بِخُرُوجِهِمَا.
பாடம்: 56
5154. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டபோது முஸ்லிம்களுக்கு நல்ல விசாலமான மணவிருந்து கொடுத்தார்கள். வழக்கம்போல் மணமுடித்த கையோடு (தம் துணைவியரான) இறைநம்பிக்கை யாளர்களுடைய அன்னையரின் இல்லங் களுக்குச் சென்று அவர்களுக்கு (சலாம் கூறி) பிரார்த்தித்தார்கள். அன்னையரும் நபியவர்களுக்காகப் பிரார்த்தித்தனர்.
பிறகு (புது மணப்பெண் ஸைனப் இருந்த இல்லத்திற்கு) திரும்பி வந்தார்கள். அப்போது இருவர் (எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, (இல்லத்தினுள் நுழையாமல்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டது குறித்து நபியவர்களுக்கு நான் தெரிவித்தேனா, அல்லது (பிறர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.93

5155. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ قَالَ "" مَا هَذَا "". قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. قَالَ "" بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "".
பாடம்: 57
மணமகனுக்காக எவ்வாறு பிரார்த்திப்பது?
5155. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத் தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களுக்கு வளம் வழங்குவானாக!” (பாரக்கல்லாஹ’ ல(க்)க) என்று பிரார்த்தித்து விட்டு, ‘‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்!” என்று சொன்னார்கள்.94

5156. حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَتَتْنِي أُمِّي فَأَدْخَلَتْنِي الدَّارَ، فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ.
பாடம்: 58
மணமகளை மணமகனிடம் அனுப்பிவைக்கும் பெண்கள் மணமகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை
5156. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது) என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து, என்னை வீட்டினுள் அனுப்பிவைத்தார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் ‘‘நன்மையுடனும் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!” என்று (வாழ்த்துக்) கூறினர்.95

5157. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" غَزَا نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لاَ يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهْوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمْ يَبْنِ بِهَا "".
பாடம்: 59
அறப்போருக்குச் செல்வதற்குமுன் (மணமகன்) தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்புவது
5157. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் (‘யூஷஉ பின் நூன்’ எனும்) ஒருவர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி (இதுவரை) தாம்பத்திய உறவு கொள்ளாதிருப்பின் அவர் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்” என்று கூறினார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96