4838. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ أَنَّ هَذِهِ، الآيَةَ الَّتِي فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا} قَالَ فِي التَّوْرَاةِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَحِرْزًا لِلأُمِّيِّينَ، أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلاَ غَلِيظٍ وَلاَ سَخَّابٍ بِالأَسْوَاقِ وَلاَ يَدْفَعُ السَّيِّئَةَ بِالسَّيِّئَةِ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَيَفْتَحَ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا.
பாடம்: 3 (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்)
4838. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

‘‘நபியே! நிச்சயமாக நாம் உம்மை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீர் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ் வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்றமாட்டான்.

மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7

அத்தியாயம் : 65
4839. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْرَأُ، وَفَرَسٌ لَهُ مَرْبُوطٌ فِي الدَّارِ، فَجَعَلَ يَنْفِرُ، فَخَرَجَ الرَّجُلُ فَنَظَرَ فَلَمْ يَرَ شَيْئًا، وَجَعَلَ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالْقُرْآنِ ".
பாடம்: 4 அவன்தான் இறைநம்பிக்கை யாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத்தொடர்)
4839. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டுகொண்டி ருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினர்கள்.8

அத்தியாயம் : 65
4840. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا يَوْمَ الْحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَمِائَةٍ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4840. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9

அத்தியாயம் : 65
4841. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، إِنِّي مِمَّنْ شَهِدَ الشَّجَرَةَ، نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4841. அந்த மரத்தின்கீழ் நடைபெற்ற (‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) ‘கத்ஃப்’ எனும் கல் சுண்டு விளையாட்டிற்குத் தடை விதித்தார்கள்.10

அத்தியாயம் : 65
4842. وَعَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ الْمُزَنِيِّ، فِي الْبَوْلِ فِي الْمُغْتَسَلِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4842. உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11

அத்தியாயம் : 65
4843. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ـ رضى الله عنه ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4843. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்(தின்கீழ் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12

அத்தியாயம் : 65
4844. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ السُّلَمِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سِيَاهٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ أَتَيْتُ أَبَا وَائِلٍ أَسْأَلُهُ فَقَالَ كُنَّا بِصِفِّينَ فَقَالَ رَجُلٌ أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُدْعَوْنَ إِلَى كِتَابِ اللَّهِ. فَقَالَ عَلِيٌّ نَعَمْ. فَقَالَ سَهْلُ بْنُ حُنَيْفٍ اتَّهِمُوا أَنْفُسَكُمْ فَلَقَدْ رَأَيْتُنَا يَوْمَ الْحُدَيْبِيَةِ ـ يَعْنِي الصُّلْحَ الَّذِي كَانَ بَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْمُشْرِكِينَ ـ وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا، فَجَاءَ عُمَرُ فَقَالَ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ " بَلَى ". قَالَ فَفِيمَ أُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا، وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا. فَقَالَ " يَا ابْنَ الْخَطَّابِ إِنِّي رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا ". فَرَجَعَ مُتَغَيِّظًا، فَلَمْ يَصْبِرْ حَتَّى جَاءَ أَبَا بَكْرٍ فَقَالَ يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَهُمْ عَلَى الْبَاطِلِ قَالَ يَا ابْنَ الْخَطَّابِ إِنَّهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا. فَنَزَلَتْ سُورَةُ الْفَتْحِ.
பாடம்: 5 ‘‘(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி அடைந்துகொண்டான்” எனும் (48:18ஆவது) வசனத்தொடர்
4844. ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (‘காரிஜிய்யா’ எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

நாங்கள் ‘ஸிஃப்பீன்’ எனுமிடத்தில் இருந்தோம். அப்போது (‘அப்துல்லாஹ் பின் அல்கவ்வா’ என்றழைக்கப்படும்) ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகின்றவர்களை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘‘ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்பு விடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்”) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இப்போரில் கலந்துகொள்ளாததற்காக யார்மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பாளர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொண்டோம்).

அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்கள்மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து ‘‘அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதைப் போன்றே) கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘‘கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13

அத்தியாயம் : 65
4845. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ بْنِ جَمِيلٍ اللَّخْمِيُّ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ كَادَ الْخَيِّرَانِ أَنْ يَهْلِكَا ـ أَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ رَفَعَا أَصْوَاتَهُمَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَدِمَ عَلَيْهِ رَكْبُ بَنِي تَمِيمٍ، فَأَشَارَ أَحَدُهُمَا بِالأَقْرَعِ بْنِ حَابِسٍ أَخِي بَنِي مُجَاشِعٍ، وَأَشَارَ الآخَرُ بِرَجُلٍ آخَرَ ـ قَالَ نَافِعٌ لاَ أَحْفَظُ اسْمَهُ ـ فَقَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي. قَالَ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فِي ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَرْفَعُوا أَصْوَاتَكُمْ} الآيَةَ. قَالَ ابْنُ الزُّبَيْرِ فَمَا كَانَ عُمَرُ يُسْمِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ هَذِهِ الآيَةِ حَتَّى يَسْتَفْهِمَهُ. وَلَمْ يَذْكُرْ ذَلِكَ عَنْ أَبِيهِ، يَعْنِي أَبَا بَكْرٍ.
பாடம்: 49. ‘அல்ஹுஜுராத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (49:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா துக்கத்திமூ’ (முந்தாதீர்கள்) எனும் சொல்லுக்கு ‘தன்னுடைய தூதரின் நாவால் அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, முந்திக்கொண்டு நீங்களாகத் தீர்ப்பு வழங்க முற்படாதீர்கள்’ என்று பொருள். (49:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இம்தஹன’ (பரிசோதித்தான்) எனும் சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்தினான்’ என்று பொருள். (49:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தனாபஸூ’ (புனைபெயர் சூட்டாதீர்கள்) என்பது இஸ்லாத்தை எற்றுக்கொண்ட பின்னர், ஒருவரை (அவரது பழைய) இறைமறுப்பு (மதத்து)டன் இணைத்து அழைப்பதைக் குறிக்கும். (49:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யலித்கும்’ எனும் சொல்லுக்கு ‘குறைக்கமாட்டான்’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல்லும், 52:21ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘வ மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘‘அவர்களுக்கு நாம் குறைத்துவிடமாட்டோம்” என்று பொருள். பாடம்: 1 ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும்” எனும் (49:2ஆவது) இறை வசனம் (இந்த வசனத்திலுள்ள) ‘நீங்கள் அறியாத நிலையில்’ என்பது (மூலத்திலுள்ள) ‘லா தஷ்உரூன்’ எனும் சொல்லின் பொருளாகும். இதன் அடிப்படையில்தான் ‘அஷ்ஷாஇர்’ (கவிஞர்) எனும் சொல்லுக்கு ‘அறிஞர்’ என்றும் பொருள் சொல்லப் படுகிறது.
4845. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.

அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்.

மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -”அந்த இன்னொரு வருடைய பெயர் எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.-

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று” என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

அத்தியாயம் : 65
4846. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَنْبَأَنِي مُوسَى بْنُ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ. فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ مُنَكِّسًا رَأْسَهُ فَقَالَ لَهُ مَا شَأْنُكَ. فَقَالَ شَرٌّ. كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَدْ حَبِطَ عَمَلُهُ، وَهْوَ مِنْ أَهْلِ النَّارِ. فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا ـ فَقَالَ مُوسَى ـ فَرَجَعَ إِلَيْهِ الْمَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ فَقَالَ " اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ".
பாடம்: 49. ‘அல்ஹுஜுராத்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (49:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா துக்கத்திமூ’ (முந்தாதீர்கள்) எனும் சொல்லுக்கு ‘தன்னுடைய தூதரின் நாவால் அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, முந்திக்கொண்டு நீங்களாகத் தீர்ப்பு வழங்க முற்படாதீர்கள்’ என்று பொருள். (49:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இம்தஹன’ (பரிசோதித்தான்) எனும் சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்தினான்’ என்று பொருள். (49:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தனாபஸூ’ (புனைபெயர் சூட்டாதீர்கள்) என்பது இஸ்லாத்தை எற்றுக்கொண்ட பின்னர், ஒருவரை (அவரது பழைய) இறைமறுப்பு (மதத்து)டன் இணைத்து அழைப்பதைக் குறிக்கும். (49:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யலித்கும்’ எனும் சொல்லுக்கு ‘குறைக்கமாட்டான்’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல்லும், 52:21ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘வ மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘‘அவர்களுக்கு நாம் குறைத்துவிடமாட்டோம்” என்று பொருள். பாடம்: 1 ‘‘இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்குமேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும்” எனும் (49:2ஆவது) இறை வசனம் (இந்த வசனத்திலுள்ள) ‘நீங்கள் அறியாத நிலையில்’ என்பது (மூலத்திலுள்ள) ‘லா தஷ்உரூன்’ எனும் சொல்லின் பொருளாகும். இதன் அடிப்படையில்தான் ‘அஷ்ஷாஇர்’ (கவிஞர்) எனும் சொல்லுக்கு ‘அறிஞர்’ என்றும் பொருள் சொல்லப் படுகிறது.
4846. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார்.

அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4847. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُمْ أَنَّهُ، قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدٍ. وَقَالَ عُمَرُ بَلْ أَمِّرِ الأَقْرَعَ بْنَ حَابِسٍ. فَقَالَ أَبُو بَكْرٍ مَا أَرَدْتَ إِلَى ـ أَوْ إِلاَّ ـ خِلاَفِي. فَقَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَنَزَلَ فِي ذَلِكَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُقَدِّمُوا بَيْنَ يَدَىِ اللَّهِ وَرَسُولِهِ} حَتَّى انْقَضَتِ الآيَةُ.
பாடம்: 2 (நபியே! உம்முடைய) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4ஆவது இறைவசனம்)
4847. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) ‘கஅகாஉ பின் மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்” என்று (யோசனை) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!” என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதை’ அல்லது ‘எனக்கு எதிராக மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று” என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக்கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன. இது தொடர்பாகவே, ‘‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” எனும் (49:1ஆவது) இறைவசனம் முழுவதும் அருளப்பெற்றது.4

அத்தியாயம் : 65
4848. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَرَمِيٌّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُلْقَى فِي النَّارِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ. حَتَّى يَضَعَ قَدَمَهُ فَتَقُولُ قَطِ قَطِ ".
பாடம்: 3 ‘‘(நபியே!) நீர் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும்” எனும் (49:5ஆவது) வசனத்தொடர்5 பாடம்: 50. ‘காஃப்’ அத்தியாயம்1 (50:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரஜ்உம் பஈத்’ எனும் சொல்லுக்கு ‘மீண்டும் எழுப்பப்படுவது என்பது (பார)தூரமானது’ என்று பொருள். (50:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுரூஜ்’ எனும் சொல்லுக்கு ‘பிளவுகள்’ என்று பொருள். இதன் ஒருமை ‘ஃபர்ஜ்’ என்பதாகும். (50:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் ஹப்லில் வரீத்’ எனும் சொற்றொடருக்கு ‘கழுத்து நரம்பைவிட’ என்று பொருள்; இவ்வாறு இரு கழுத்து நரம்புகள் உண்டு. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (50:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தன்குஸுல் அர்ளு மின்ஹும்’ எனும் சொற்றொடருக்கு, ‘‘அவர்களின் உடலிலுள்ள எலும்புகளை பூமி எந்த அளவு சாப்பிடுகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்று கருத்து. (50:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தப்ஸிரா’ எனும் சொல்லுக்கு ‘அகப் பார்வை’ என்பது பொருள். (50:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹப்பல் ஹஸீத்’ (அறுவடைத் தானியம்) என்பது, மணிக்கோதுமையைக் குறிக்கும். (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பாஸிகாத்’ எனும் சொல்லுக்கு, ‘நீண்ட’ என்பது பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபஅயீனா’ எனும் சொல்லுக்கு ‘‘அது நமக்கு இயலாத காரியமாகிவிட்டதா?” என்று பொருள். (50:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கால கரீனுஹு’ (அவனுடைய கூட்டாளி கூறுவான்) என்பது, ஒவ்வொரு மனிதனுடனும் சாட்டப்பட்டுள்ள ஷைத்தானைக் குறிக்கிறது. (50:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப நக்கபூ’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் சுற்றித்திரிந்தார்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ் அல்கஸ் ஸம்அ’ (செவிதாழ்த்திக் கேட்பவன்) என்பதற்கு ‘வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மன ஓர்மையுடன் இருப்பவன்’ என்று பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப அயீனா’ (நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன’) என்பதற்கு, ‘உங்களை முதன்முதலாய் படைத்தபோது, அதாவது உங்களது மூலத்தை படைத்தபோது, நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன?’ என்று பொருள். (50:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரகீபுன் அத்தீத்’ எனும் சொல்லுக்கு ‘எழுதிப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர்’ என்று பொருள். (50:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாயிக்குன் வ ஷஹீத்’ எனும் சொற்றொடருக்கு, ‘விரட்டிக்கொண்டு வருபவரும் சாட்சி அளிப்பவருமான இரு வானவர்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷஹீத்’ எனும் சொல்லுக்கு ‘மன ஓர்மையுடன் கவனிப்பவர்’ என்று பொருள். (50:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுஃகூப்’ எனும் சொல்லுக்கு ‘களைப்பு’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்உன் நளீத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற’ என்று பொருள். கனிகள் பாளைகளில் இருக்கும் வரைதான் அவற்றுக்கு ‘நளீத்’ என்று கூறப்படும். பாளைகளைவிட்டுக் கனிகள் வெளியேறிவிட்டால் அது ‘நளீத்’ எனும் பெயரைப் பெறாது. (50:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்பாரஸ் ஸுஜூத்’ எனும் வார்த்தையில் ‘அத்பார்’ என அகரத்திலும், (52:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்பாரந் நுஜூம்’ என்பதில் ‘இத்பார்’ என இகரத்திலும்தான் ஆஸிம் (ரஹ்) அவர்கள் ஓதுவார்கள். சிலர் இரண்டையும் இகரத்திலும் (இத்பார்), இன்னும் சிலர் இரண்டையும் அகரத்திலும் (அத்பார்) ஓதியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (50:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முல் குரூஜ்’ (வெளிப்படும் நாள்) என்பது, மண்ணறைகளிலிருந்து மக்கள் வெளியேறும் நாளைக் குறிக்கும். பாடம்: 1 ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும்” எனும் (50:30ஆவது) வசனத்தொடர்
4848. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார் கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘‘போதும்! போதும்!” என்று கூறும்.2

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 65
4849. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْقَطَّانُ، حَدَّثَنَا أَبُو سُفْيَانَ الْحِمْيَرِيُّ، سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ مَهْدِيٍّ حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ وَأَكْثَرُ مَا كَانَ يُوقِفُهُ أَبُو سُفْيَانَ " يُقَالُ لِجَهَنَّمَ هَلِ امْتَلأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ فَيَضَعُ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى قَدَمَهُ عَلَيْهَا فَتَقُولُ قَطِ قَطِ ".
பாடம்: 3 ‘‘(நபியே!) நீர் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும்” எனும் (49:5ஆவது) வசனத்தொடர்5 பாடம்: 50. ‘காஃப்’ அத்தியாயம்1 (50:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரஜ்உம் பஈத்’ எனும் சொல்லுக்கு ‘மீண்டும் எழுப்பப்படுவது என்பது (பார)தூரமானது’ என்று பொருள். (50:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுரூஜ்’ எனும் சொல்லுக்கு ‘பிளவுகள்’ என்று பொருள். இதன் ஒருமை ‘ஃபர்ஜ்’ என்பதாகும். (50:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் ஹப்லில் வரீத்’ எனும் சொற்றொடருக்கு ‘கழுத்து நரம்பைவிட’ என்று பொருள்; இவ்வாறு இரு கழுத்து நரம்புகள் உண்டு. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (50:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தன்குஸுல் அர்ளு மின்ஹும்’ எனும் சொற்றொடருக்கு, ‘‘அவர்களின் உடலிலுள்ள எலும்புகளை பூமி எந்த அளவு சாப்பிடுகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்று கருத்து. (50:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தப்ஸிரா’ எனும் சொல்லுக்கு ‘அகப் பார்வை’ என்பது பொருள். (50:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹப்பல் ஹஸீத்’ (அறுவடைத் தானியம்) என்பது, மணிக்கோதுமையைக் குறிக்கும். (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பாஸிகாத்’ எனும் சொல்லுக்கு, ‘நீண்ட’ என்பது பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபஅயீனா’ எனும் சொல்லுக்கு ‘‘அது நமக்கு இயலாத காரியமாகிவிட்டதா?” என்று பொருள். (50:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கால கரீனுஹு’ (அவனுடைய கூட்டாளி கூறுவான்) என்பது, ஒவ்வொரு மனிதனுடனும் சாட்டப்பட்டுள்ள ஷைத்தானைக் குறிக்கிறது. (50:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப நக்கபூ’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் சுற்றித்திரிந்தார்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ் அல்கஸ் ஸம்அ’ (செவிதாழ்த்திக் கேட்பவன்) என்பதற்கு ‘வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மன ஓர்மையுடன் இருப்பவன்’ என்று பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப அயீனா’ (நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன’) என்பதற்கு, ‘உங்களை முதன்முதலாய் படைத்தபோது, அதாவது உங்களது மூலத்தை படைத்தபோது, நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன?’ என்று பொருள். (50:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரகீபுன் அத்தீத்’ எனும் சொல்லுக்கு ‘எழுதிப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர்’ என்று பொருள். (50:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாயிக்குன் வ ஷஹீத்’ எனும் சொற்றொடருக்கு, ‘விரட்டிக்கொண்டு வருபவரும் சாட்சி அளிப்பவருமான இரு வானவர்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷஹீத்’ எனும் சொல்லுக்கு ‘மன ஓர்மையுடன் கவனிப்பவர்’ என்று பொருள். (50:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுஃகூப்’ எனும் சொல்லுக்கு ‘களைப்பு’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்உன் நளீத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற’ என்று பொருள். கனிகள் பாளைகளில் இருக்கும் வரைதான் அவற்றுக்கு ‘நளீத்’ என்று கூறப்படும். பாளைகளைவிட்டுக் கனிகள் வெளியேறிவிட்டால் அது ‘நளீத்’ எனும் பெயரைப் பெறாது. (50:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்பாரஸ் ஸுஜூத்’ எனும் வார்த்தையில் ‘அத்பார்’ என அகரத்திலும், (52:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்பாரந் நுஜூம்’ என்பதில் ‘இத்பார்’ என இகரத்திலும்தான் ஆஸிம் (ரஹ்) அவர்கள் ஓதுவார்கள். சிலர் இரண்டையும் இகரத்திலும் (இத்பார்), இன்னும் சிலர் இரண்டையும் அகரத்திலும் (அத்பார்) ஓதியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (50:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முல் குரூஜ்’ (வெளிப்படும் நாள்) என்பது, மண்ணறைகளிலிருந்து மக்கள் வெளியேறும் நாளைக் குறிக்கும். பாடம்: 1 ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும்” எனும் (50:30ஆவது) வசனத்தொடர்
4849. முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நரகத்திடம் ‘‘உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?” என்று கேட்கப்படும். அது, ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்க வனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது ‘‘போதும்! போதும்!” என்று கூறும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.

அத்தியாயம் : 65
4850. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَحَاجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتِ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ. وَقَالَتِ الْجَنَّةُ مَا لِي لاَ يَدْخُلُنِي إِلاَّ ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ. قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي. وَقَالَ لِلنَّارِ إِنَّمَا أَنْتِ عَذَابٌ أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي. وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا مِلْؤُهَا، فَأَمَّا النَّارُ فَلاَ تَمْتَلِئُ حَتَّى يَضَعَ رِجْلَهُ فَتَقُولُ قَطٍ قَطٍ قَطٍ. فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ، وَلاَ يَظْلِمُ اللَّهُ ـ عَزَّ وَجَلَّ ـ مِنْ خَلْقِهِ أَحَدًا، وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنْشِئُ لَهَا خَلْقًا ".
பாடம்: 3 ‘‘(நபியே!) நீர் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும்” எனும் (49:5ஆவது) வசனத்தொடர்5 பாடம்: 50. ‘காஃப்’ அத்தியாயம்1 (50:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரஜ்உம் பஈத்’ எனும் சொல்லுக்கு ‘மீண்டும் எழுப்பப்படுவது என்பது (பார)தூரமானது’ என்று பொருள். (50:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுரூஜ்’ எனும் சொல்லுக்கு ‘பிளவுகள்’ என்று பொருள். இதன் ஒருமை ‘ஃபர்ஜ்’ என்பதாகும். (50:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் ஹப்லில் வரீத்’ எனும் சொற்றொடருக்கு ‘கழுத்து நரம்பைவிட’ என்று பொருள்; இவ்வாறு இரு கழுத்து நரம்புகள் உண்டு. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (50:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தன்குஸுல் அர்ளு மின்ஹும்’ எனும் சொற்றொடருக்கு, ‘‘அவர்களின் உடலிலுள்ள எலும்புகளை பூமி எந்த அளவு சாப்பிடுகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்று கருத்து. (50:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தப்ஸிரா’ எனும் சொல்லுக்கு ‘அகப் பார்வை’ என்பது பொருள். (50:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹப்பல் ஹஸீத்’ (அறுவடைத் தானியம்) என்பது, மணிக்கோதுமையைக் குறிக்கும். (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பாஸிகாத்’ எனும் சொல்லுக்கு, ‘நீண்ட’ என்பது பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபஅயீனா’ எனும் சொல்லுக்கு ‘‘அது நமக்கு இயலாத காரியமாகிவிட்டதா?” என்று பொருள். (50:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கால கரீனுஹு’ (அவனுடைய கூட்டாளி கூறுவான்) என்பது, ஒவ்வொரு மனிதனுடனும் சாட்டப்பட்டுள்ள ஷைத்தானைக் குறிக்கிறது. (50:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப நக்கபூ’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் சுற்றித்திரிந்தார்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ் அல்கஸ் ஸம்அ’ (செவிதாழ்த்திக் கேட்பவன்) என்பதற்கு ‘வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மன ஓர்மையுடன் இருப்பவன்’ என்று பொருள். (50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப அயீனா’ (நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன’) என்பதற்கு, ‘உங்களை முதன்முதலாய் படைத்தபோது, அதாவது உங்களது மூலத்தை படைத்தபோது, நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன?’ என்று பொருள். (50:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரகீபுன் அத்தீத்’ எனும் சொல்லுக்கு ‘எழுதிப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர்’ என்று பொருள். (50:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாயிக்குன் வ ஷஹீத்’ எனும் சொற்றொடருக்கு, ‘விரட்டிக்கொண்டு வருபவரும் சாட்சி அளிப்பவருமான இரு வானவர்கள்’ என்று பொருள். (50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷஹீத்’ எனும் சொல்லுக்கு ‘மன ஓர்மையுடன் கவனிப்பவர்’ என்று பொருள். (50:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுஃகூப்’ எனும் சொல்லுக்கு ‘களைப்பு’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்உன் நளீத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற’ என்று பொருள். கனிகள் பாளைகளில் இருக்கும் வரைதான் அவற்றுக்கு ‘நளீத்’ என்று கூறப்படும். பாளைகளைவிட்டுக் கனிகள் வெளியேறிவிட்டால் அது ‘நளீத்’ எனும் பெயரைப் பெறாது. (50:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்பாரஸ் ஸுஜூத்’ எனும் வார்த்தையில் ‘அத்பார்’ என அகரத்திலும், (52:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்பாரந் நுஜூம்’ என்பதில் ‘இத்பார்’ என இகரத்திலும்தான் ஆஸிம் (ரஹ்) அவர்கள் ஓதுவார்கள். சிலர் இரண்டையும் இகரத்திலும் (இத்பார்), இன்னும் சிலர் இரண்டையும் அகரத்திலும் (அத்பார்) ஓதியுள்ளனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (50:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முல் குரூஜ்’ (வெளிப்படும் நாள்) என்பது, மண்ணறைகளிலிருந்து மக்கள் வெளியேறும் நாளைக் குறிக்கும். பாடம்: 1 ‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும்” எனும் (50:30ஆவது) வசனத்தொடர்
4850. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘‘பெருமையடிப்பவர்களுக்காகவும்அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்த மாக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், ‘‘எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘‘நீ எனது அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன்” என்று கூறினான். நரகத்திடம் ‘‘நீ வேதனை(க்காகத்)தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘‘போதும்! போதும்!” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும்.

மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4851. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ جَرِيرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا جُلُوسًا لَيْلَةً مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ أَرْبَعَ عَشْرَةَ فَقَالَ " إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ". ثُمَّ قَرَأَ {وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ}
பாடம்: 2 (நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! (எனும் 50:39ஆவது வசனத்தொடர்)
4851. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, ‘‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலு மானால் அதைச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!” எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3

அத்தியாயம் : 65
4852. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ أَمَرَهُ أَنْ يُسَبِّحَ، فِي أَدْبَارِ الصَّلَوَاتِ كُلِّهَا. يَعْنِي قَوْلَهُ {وَأَدْبَارَ السُّجُودِ}
பாடம்: 2 (நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! (எனும் 50:39ஆவது வசனத்தொடர்)
4852. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே, ‘‘சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்...” எனும் (50:40ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.

அத்தியாயம் : 65
4853. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي فَقَالَ " طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ، وَأَنْتِ رَاكِبَةٌ ". فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ.
பாடம்: 51. ‘அத்தாரியாத்’ அத்தியாயம்1 அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (51:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாரியாத்’ (புழுதியைக் கிளப்பக்கூடியவை) என்பது, காற்றுகளைக் குறிக்கும். அலீ (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (இதன் வினைச்சொல்லும் 18:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘தத்ரூஹுர் ரியாஹ்’ என்பதற்கு ‘காற்றுகள் சிதறடிக்கும்’ என்று பொருள். (51:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஃபீ அன்ஃபுஸிக்கும் அஃபலா துப்ஸிரூன்’ (உங்களுக்குள்ளேயும் (பல) சான்றுகள் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டாமா?) என்பதற்கு, ‘ஒரேயொரு துவாரத்தின் (வாயின்) வழியாகச் சாப்பிடுகிறாய்; குடிக்கிறாய்; ஆனால், அது இரு துவாரங்கள் வழியாக (கழிவாகி) வெளியேறிச் செல்கின்றன (இதை நீ ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா?)’ என்பது கருத்தாகும். (51:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபராஃக’ எனும் சொல்லுக்கு ‘பிறகு அவர் திரும்பிச் சென்றார்’ என்று பொருள். (51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸக்கத்’ (அவள் தன் முகத்தில் அடித்துக்கொண்டாள்) என்பதற்கு ‘தன் கை விரல்களை நெருக்கமாகச் சேர்த்துக்கொண்டு அதனால் தன் நெற்றியில் அவள் அறைந்துகொண்டாள்’ என்று பொருள். (51:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரமீம்’ எனும் சொல், காய்ந்து மிதிபட்டு சிதைந்துபோன சருகைக் குறிக்கும். (51:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல மூசிஊன்’ எனும் சொல்லுக்கு, ‘நாம் அதற்கான சக்தி உடையவராக இருக்கின்றோம்’ என்பது பொருள். இதைப் போன்று (2:236ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அலல் மூசிஇ கதருஹு’ (செல்வந்தன் அவனுக்குத் தக்க அளவும்) என்பதற்கு ‘வசதியுள்ளவன் தன் சக்திக்கேற்பவும்’ என்று பொருள். (51:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவ்ஜைனி’ (இணைஇணையாய்) என்பதன் பொருளாவது: ‘நாம் எல்லாவற்றையும் ஆண், பெண் இணைகளாய்ப் படைத்துள்ளோம். இதைப் போன்றே நிறங்கள் மாறுபட்டிருப்பது, இனிப்பு, புளிப்பு (என சுவைகள் மாறுபட்டிருப்பது) ஆகியனவும் இணைகளே ஆகும். (51:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஃபிர்ரூ இலல்லாஹ்’ (எனவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்துசெல்லுங்கள்) என்பதற்கு, ‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து (விலகி) அவனுக்குக் கீழ்ப்படிவதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்’ என்று பொருள். (51:56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா லி யஅபுதூன்’ (என்னை அவர்கள் வழிபட வேண்டும் என்பதற்காகவே) என்பதன் கருத்தாவது: ஜின், மனிதன் ஆகிய இரு பிரிவினர்களில் நற்பேறுடையவர்களை நான் படைத்தது, அவர்கள் என் ஏகத்துவத்தை ஏற்று நடப்பதற்காகவே! (அறிஞர்களில்) சிலர் கூறுகிறார்கள்: (தன்னுடைய ஏகத்துவத்தை ஏற்று) செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் இறைவன் படைத்தான். ஆனால், சிலர் ஏற்றனர். இன்னும் சிலர் ஏற்கவில்லை. இந்த வசனத்தில், ‘கதரிய்யா’ எனும் பிரிவினருக்குச் சாதகமான எந்த ஆதாரமும் இல்லை.2 (51:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு, (அகராதியில்) ‘மிகப்பெரிய வாளி’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு ‘பாதை’ என்று பொருள். (51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸர்ரத்’ எனும் சொல்லுக்கு ‘சப்தம்’ என்று பொருள். ‘அகீம்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தைப் பேறற்றவள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (51:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுபுக்’ என்பது, வானத்தின் சமன்பாட்டையும் அதன் ரம்மியமான தோற்றத்தையும் குறிக்கும். (51:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகம்ரா’ (அறியாமை) எனும் சொல், அவர்கள் வழிகேட்டில் நீடிப்பதைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (51:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ தவாஸவ்’ எனும் சொல்லுக்கு ‘இவர்கள் அனைவரும் தமக்குள் ஒருமித்த கருத்துக்கொண்டார்களா?’ என்பது பொருள். (51:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முசவ்வமா’ எனும் சொல்லுக்கு, ‘அடையாளமிடப்பட்ட’ என்பது பொருள். (51:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கு(த்)தில’ எனும் சொல்லுக்கு ‘சாபத்திற்குள்ளாகிவிட்டார்கள்’ என்பது பொருள். பாடம்: 52. ‘அத்தூர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்த்தூர்’ எனும் சொல்லுக்கு ‘எழுதப்பட்ட’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தூர்’ எனும் சொல்லுக்கு ‘சிரியாக்’ மொழியில் ‘மலை’ என்று பொருள். (52:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரக்கிம் மன்ஷூர்’ எனும் சொல்லுக்கு ‘திறந்த புத்தகம்’ என்பது பொருள். (52:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸக்ஃபில் மர்ஃபூஉ’ (உயர்த்தப்பட்ட முகடு) என்பது, வானத்தைக் குறிக்கிறது. (52:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஸ்ஜூர்’ எனும் சொல்லுக்கு ‘பற்றி எரியும்’ என்பது பொருள். ‘‘கடலின் தண்ணீர் முழுவதும் வற்றிப்போய், ஒரு துளிகூட எஞ்சாதபோது அதனை எரியவிடப்படும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘நாம் அவர்களுக்குக் குறைத்துவிடமாட்டோம்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: (52:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமூரு’ என்னும் சொல்லுக்கு ‘அது துடிதுடித்து நடுங்கியவாறு சுழலும்’ என்று பொருள். (52:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்லாமுஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் புத்திகள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (52:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்பர்ரு’ எனும் சொல்லுக்கு ‘அன்பு மிக்கவன்’ என்பது பொருள். (52:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு’ என்பது பொருள். (52:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மனூன்’ (காலத்தின் சுழற்சி) எனும் சொல், மரணத்தைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (52:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தனாஸஊன’ எனும் சொல்லுக்கு ‘ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிக்கொள்வார்கள்’ என்று பொருள். பாடம்: 1
4853. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நான் நோயுற்றுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீ மக்களுக்கு அப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.2

அத்தியாயம் : 65
4854. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثُونِي عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ فَلَمَّا بَلَغَ هَذِهِ الآيَةَ {أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ * أَمْ خَلَقُوا السَّمَوَاتِ وَالأَرْضَ بَلْ لاَ يُوقِنُونَ * أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُسَيْطِرُونَ} كَادَ قَلْبِي أَنْ يَطِيرَ. قَالَ سُفْيَانُ فَأَمَّا أَنَا فَإِنَّمَا سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ. لَمْ أَسْمَعْهُ زَادَ الَّذِي قَالُوا لِي.
பாடம்: 51. ‘அத்தாரியாத்’ அத்தியாயம்1 அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (51:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாரியாத்’ (புழுதியைக் கிளப்பக்கூடியவை) என்பது, காற்றுகளைக் குறிக்கும். அலீ (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (இதன் வினைச்சொல்லும் 18:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘தத்ரூஹுர் ரியாஹ்’ என்பதற்கு ‘காற்றுகள் சிதறடிக்கும்’ என்று பொருள். (51:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஃபீ அன்ஃபுஸிக்கும் அஃபலா துப்ஸிரூன்’ (உங்களுக்குள்ளேயும் (பல) சான்றுகள் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டாமா?) என்பதற்கு, ‘ஒரேயொரு துவாரத்தின் (வாயின்) வழியாகச் சாப்பிடுகிறாய்; குடிக்கிறாய்; ஆனால், அது இரு துவாரங்கள் வழியாக (கழிவாகி) வெளியேறிச் செல்கின்றன (இதை நீ ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா?)’ என்பது கருத்தாகும். (51:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபராஃக’ எனும் சொல்லுக்கு ‘பிறகு அவர் திரும்பிச் சென்றார்’ என்று பொருள். (51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸக்கத்’ (அவள் தன் முகத்தில் அடித்துக்கொண்டாள்) என்பதற்கு ‘தன் கை விரல்களை நெருக்கமாகச் சேர்த்துக்கொண்டு அதனால் தன் நெற்றியில் அவள் அறைந்துகொண்டாள்’ என்று பொருள். (51:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரமீம்’ எனும் சொல், காய்ந்து மிதிபட்டு சிதைந்துபோன சருகைக் குறிக்கும். (51:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல மூசிஊன்’ எனும் சொல்லுக்கு, ‘நாம் அதற்கான சக்தி உடையவராக இருக்கின்றோம்’ என்பது பொருள். இதைப் போன்று (2:236ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அலல் மூசிஇ கதருஹு’ (செல்வந்தன் அவனுக்குத் தக்க அளவும்) என்பதற்கு ‘வசதியுள்ளவன் தன் சக்திக்கேற்பவும்’ என்று பொருள். (51:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவ்ஜைனி’ (இணைஇணையாய்) என்பதன் பொருளாவது: ‘நாம் எல்லாவற்றையும் ஆண், பெண் இணைகளாய்ப் படைத்துள்ளோம். இதைப் போன்றே நிறங்கள் மாறுபட்டிருப்பது, இனிப்பு, புளிப்பு (என சுவைகள் மாறுபட்டிருப்பது) ஆகியனவும் இணைகளே ஆகும். (51:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஃபிர்ரூ இலல்லாஹ்’ (எனவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்துசெல்லுங்கள்) என்பதற்கு, ‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து (விலகி) அவனுக்குக் கீழ்ப்படிவதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்’ என்று பொருள். (51:56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா லி யஅபுதூன்’ (என்னை அவர்கள் வழிபட வேண்டும் என்பதற்காகவே) என்பதன் கருத்தாவது: ஜின், மனிதன் ஆகிய இரு பிரிவினர்களில் நற்பேறுடையவர்களை நான் படைத்தது, அவர்கள் என் ஏகத்துவத்தை ஏற்று நடப்பதற்காகவே! (அறிஞர்களில்) சிலர் கூறுகிறார்கள்: (தன்னுடைய ஏகத்துவத்தை ஏற்று) செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் இறைவன் படைத்தான். ஆனால், சிலர் ஏற்றனர். இன்னும் சிலர் ஏற்கவில்லை. இந்த வசனத்தில், ‘கதரிய்யா’ எனும் பிரிவினருக்குச் சாதகமான எந்த ஆதாரமும் இல்லை.2 (51:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு, (அகராதியில்) ‘மிகப்பெரிய வாளி’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு ‘பாதை’ என்று பொருள். (51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸர்ரத்’ எனும் சொல்லுக்கு ‘சப்தம்’ என்று பொருள். ‘அகீம்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தைப் பேறற்றவள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (51:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுபுக்’ என்பது, வானத்தின் சமன்பாட்டையும் அதன் ரம்மியமான தோற்றத்தையும் குறிக்கும். (51:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகம்ரா’ (அறியாமை) எனும் சொல், அவர்கள் வழிகேட்டில் நீடிப்பதைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (51:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ தவாஸவ்’ எனும் சொல்லுக்கு ‘இவர்கள் அனைவரும் தமக்குள் ஒருமித்த கருத்துக்கொண்டார்களா?’ என்பது பொருள். (51:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முசவ்வமா’ எனும் சொல்லுக்கு, ‘அடையாளமிடப்பட்ட’ என்பது பொருள். (51:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கு(த்)தில’ எனும் சொல்லுக்கு ‘சாபத்திற்குள்ளாகிவிட்டார்கள்’ என்பது பொருள். பாடம்: 52. ‘அத்தூர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்த்தூர்’ எனும் சொல்லுக்கு ‘எழுதப்பட்ட’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தூர்’ எனும் சொல்லுக்கு ‘சிரியாக்’ மொழியில் ‘மலை’ என்று பொருள். (52:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரக்கிம் மன்ஷூர்’ எனும் சொல்லுக்கு ‘திறந்த புத்தகம்’ என்பது பொருள். (52:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸக்ஃபில் மர்ஃபூஉ’ (உயர்த்தப்பட்ட முகடு) என்பது, வானத்தைக் குறிக்கிறது. (52:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஸ்ஜூர்’ எனும் சொல்லுக்கு ‘பற்றி எரியும்’ என்பது பொருள். ‘‘கடலின் தண்ணீர் முழுவதும் வற்றிப்போய், ஒரு துளிகூட எஞ்சாதபோது அதனை எரியவிடப்படும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘நாம் அவர்களுக்குக் குறைத்துவிடமாட்டோம்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: (52:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமூரு’ என்னும் சொல்லுக்கு ‘அது துடிதுடித்து நடுங்கியவாறு சுழலும்’ என்று பொருள். (52:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்லாமுஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் புத்திகள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (52:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்பர்ரு’ எனும் சொல்லுக்கு ‘அன்பு மிக்கவன்’ என்பது பொருள். (52:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு’ என்பது பொருள். (52:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மனூன்’ (காலத்தின் சுழற்சி) எனும் சொல், மரணத்தைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (52:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தனாஸஊன’ எனும் சொல்லுக்கு ‘ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிக்கொள்வார்கள்’ என்று பொருள். பாடம்: 1
4854. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். ‘‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துபவர்களா?” எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ அத்தியாயத்தை ஓதி னார்கள்” என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத்இம்) இடமிருந்து அறிவித்தார்கள்” என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுறவில்லை.

அத்தியாயம் : 65
4855. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ يَا أُمَّتَاهْ هَلْ رَأَى مُحَمَّدٌ صلى الله عليه وسلم رَبَّهُ فَقَالَتْ لَقَدْ قَفَّ شَعَرِي مِمَّا قُلْتَ، أَيْنَ أَنْتَ مِنْ ثَلاَثٍ مَنْ حَدَّثَكَهُنَّ فَقَدْ كَذَبَ، مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ. ثُمَّ قَرَأَتْ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ} {وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلاَّ وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ} وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَدْ كَذَبَ ثُمَّ قَرَأَتْ {وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا} وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَتَمَ فَقَدْ كَذَبَ ثُمَّ قَرَأَتْ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ} الآيَةَ، وَلَكِنَّهُ رَأَى جِبْرِيلَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فِي صُورَتِهِ مَرَّتَيْنِ.
பாடம்: 53. ‘அந்நஜ்ம்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (53:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’ எனும் சொல்லுக்கு ‘வலிமை வாய்ந்தவர்’ என்பது பொருள். (53:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காப கவ்சைன்’ (வில்லின் இரு முனைகளுக்குச் சமமான அளவு) என்பது, வில்லில் நாண் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. (53:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளீஸா’ எனும் சொல்லுக்கு ‘வளைந்தது’ என்பது பொருள். (53:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்தா’ எனும் சொல்லுக்கு ‘மேலும் தான் கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்’ என்று பொருள். (53:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புஷ் ஷிஅரா’ என்பதிலுள்ள ‘ஷிஅரா’ எனும் சொல், ‘மிர்ஸமுல் ஜவ்ஸாஉ’ எனும் நட்சத்திரத்தைக் குறிக்கும்.2 (53:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்லஃதீ வஃப்பா’ (நிறைவேற்றிய அவர்) என்பது, ‘தம்மீது விதியாக்கப்பட்டிருந்த இறையாணைகளை நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும். (53:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (வரவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது) எனும் வாக்கியத்திற்கு ‘மறுமை நெருங்கிவிட்டது’ என்று பொருள். (53:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிதூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்’ என்று பொருள். ‘‘யமன் நாட்டுப் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:3 (53:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபதுமாரூனஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?’ என்று பொருள். (இதை) ‘அஃபதம்ரூனஹு’ என்று ஓதியவர்கள் ‘அவரை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்களா?’ என்று பொருள் கொள்கின்றனர். (53:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா ஸாஃகல் பஸர்’ (பார்வை விலகிவிடவுமில்லை) என்பதிலுள்ள பார்வை என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் பார்வையைக் குறிக்கும். ‘மா தஃகா’ எனும் சொல்லுக்கு ‘‘அவரது பார்வை, தான் கண்டதைக் கடந்துவிடவுமில்லை” என்று பொருள். (அடுத்த அத்தியாயத்தில் 54:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதமாரவ்’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் (எல்லா எச்சரிக்கைகளையும்) பொய்யனவை எனக் கருதினர்’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (53:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா ஹவா’ எனும் சொல்லுக்கு ‘அது மறையும்போது’ என்று பொருள். (53:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃக்னா வ அக்னா’ எனும் வாக்கியத்திற்கு, ‘அவனே செல்வத்தை வழங்கித் தன்னிறைவு அடையச்செய்தான்’ என்று பொருள். பாடம்: 1
4855. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அன்னையே! முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கிறாரோ அவர் பொய்யுரைத்துவிட்டார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (6:103ஆவது) வசனத்தையும், ‘‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹீயின் (வேதஅறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!...” எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

‘‘மாறாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று சொன்னார்கள்.4

அத்தியாயம் : 65
4856. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ زِرًّا، عَنْ عَبْدِ اللَّهِ، {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى * فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} قَالَ حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ أَنَّهُ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ.
பாடம்: 2 (வளைந்த) வில்லின் இருமுனை களுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9ஆவது இறைவசனம்) வில்லில் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.
4856. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(வளைந்த) வில்லின் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5

அத்தியாயம் : 65
4857.
பாடம்: 3 ‘‘பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:10ஆவது) இறைவசனம்
4857. அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத் தைப்போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்” எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மத் (ஸல்) அவர்கள் கண்டார்கள்” என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் :