469. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ.
பாடம் : 82 பள்ளிவாச-ல் இணைவைப் பாளர் நுழைவது
469. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படை ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூ ஹனீஃபா குலத்தை சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டுவந்தனர். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் தூண்களில் ஒன்றில் கட்டிவைத்தனர்.

அத்தியாயம் : 8
470. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ. فَجِئْتُهُ بِهِمَا. قَالَ مَنْ أَنْتُمَا ـ أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ. قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
470. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் நின்றுகொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என்மீது சிறு கல்லை வீசினார். நான் (திரும்பிப்) பார்த்தபோது அங்கே (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். “நீர் சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வருவீராக” என்றார்கள். அவ்வாறே நான் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் (அவ்விருவரிடமும்), ‘நீங்கள் யார்?’ அல்லது ‘நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், ‘நாங்கள் தாயிஃப்வாசிகள்’ என்று பதிலளித்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “(நல்ல வேளை! நீங்கள் வெளியூர்க்காரர் களாய்ப் போய்விட்டீர்கள்) நீங்கள் இந்த (மதீனா) நகரைச் சேர்ந்தவர்களாயிருந் திருந்தால், நிச்சயமாக நான் உங்கள் இருவரையும் (சாட்டையால்) அடித்திருப் பேன்; (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாச-ல் நீங்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 8
471. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى "" يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ "". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُمْ فَاقْضِهِ "".
பாடம் : 83 பள்ளிவாச-ல் உரத்த குர-ல் பேசுவது
471. கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டி யிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்.

(இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் குரலைக் கேட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக) தமது அறையின் திரையை விலக்கி, “கஅப் பின் மா-க்! கஅப்!” என்று அழைத்தார்கள். உடனே நான், “இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

அப்போது அவர்கள் “உமது கடனி-ருந்து பாதியைத் தள்ளுபடி செய்க” என்று சைகை செய்தார்கள். “அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத் ரத்தை நோக்கி), “எழுந்து சென்று பாதிக் கடனைச் செலுத்துவீராக” என்றார்கள்.53

அத்தியாயம் : 8
472. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ قَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى "". وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِهِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
472. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபோது ஒரு மனிதர், “இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். சுப்ஹு (நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (இறுதியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “உங்களின் இறுதித் தொழுகையாக ‘வித்ரை’ ஆக்கிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 8
473. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ "". قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ.
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
473. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) உரையாற்றிக்கொண்டி ருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, “இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டி ரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்; சுப்ஹு தொழுகை(யின் நேரம் நுழைந்து விட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் (இறுதி யில்) வித்ருக்காக ஒரு ரக்அத் தொழுது கொள்ளுங்கள்! நீங்கள் தொழுது முடித்த வற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்” என்றார்கள்.54

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களைச் சப்தமிட்டு அழைத்து’ என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 8
474. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فَجَلَسَ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ أُخْبِرُكُمْ عَنِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ "".
பாடம் : 84 பள்ளிவாச-ல் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்
474. அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் (மக்களுடன் வட்டமாக அமர்ந்து) இருந்தபோது, மூன்று பேர் (அவர்களை நோக்கி) வந்தனர். (அவர்களில்) இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். பிறகு அவ்விருவரில் ஒருவரோ வட்டமாக அமர்ந்திருந்த அந்த அவையில் ஓர் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ (வெட்கப் பட்டுக்கொண்டு) பின்னால் போய்விட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

(சற்று முன்னர் வந்த) அந்த மூன்று பேரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட் டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ் வின் பக்கம் ஒதுங்கினார்; அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றொருவரோ வெட்கப்பட்டு (பின்னால் போய் உட்கார்ந்து)கொண்டார். எனவே, அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (கருணைகாட்ட) வெட்கப்பட்டான்.

மூன்றாமவரோô (காரணமின்றி இந்த அவையை) அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சி யம் செய்துவிட்டான்.

அத்தியாயம் : 8
475. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى. وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كَانَ عُمَرُ وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ.
பாடம் : 85 பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்
475. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ஒரு

கா-ன்மேல் இன்னொரு காலைப் போட்டுக்கொண்டு (கீழாடை விலகாதவாறு) மல்லாந்து படுத்து (ஓய்வெடுத்துக்)கொண்டிருந்ததை நான் கண்டேன்.

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 8
476. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ، وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ.
பாடம் : 86 மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையில் பள்ளிவாசல் அமையலாம். இதுவே ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.55
476. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் பெற்றோர் (அபூபக்ர்-உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்ப வர்களாகவே இருந்தனர். பக-ன் இரு பக்கங்களான காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வராமல் (மக்காவில்) எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏதோ (யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக்கொண்டும்வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவர்களைச் சூழ்ந்து (வேடிக்கை பார்த்துக்கொண்டு) நிற்பர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தம் மனைவி, மக்களை மதம் மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம்) இணைவைப்பாளர்களான குறைஷித் தலைவர் களை பீதிக்குள்ளாக்கியது.

அத்தியாயம் : 8
477. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ "".
பாடம் : 87 கடைத்தெருவிலுள்ள பள்ளி வாச-ல் தொழுவது56 கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாச-ல் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் தொழுதார்கள்.57
477. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத்தெருவில் தொழு வதைவிடவும் ‘ஜமாஅத்துடன்’ (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்து ஐந்து (மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மை யாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத் துடன் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்து கிறான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகிறான்.

அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால், அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.

மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும்வரை, அவருக் காக வானவர்கள் பிரார்த்தனை செய்கி றார்கள். ஆனால், (அங்கத் தூய்மையை அகற்றிவிடக்கூடிய) சிறுதுடக்கு அவருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், “இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.

அத்தியாயம் : 8
478. حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، حَدَّثَنَا وَاقِدٌ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَوِ ابْنِ عَمْرٍو شَبَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَابِعَهُ.
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
478. இப்னு உமர், அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல் களைக் கோத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 8
480. وَقَالَ عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، سَمِعْتُ هَذَا الْحَدِيثَ، مِنْ أَبِي فَلَمْ أَحْفَظْهُ، فَقَوَّمَهُ لِي وَاقِدٌ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي وَهُوَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا "".
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
480. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களைக் கோத்துக்காட்டி) “அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மிகவும் மட்டமானவர்களுடன் இப்படி நீர் (சேர்ந்து) வாழ நேர்ந்தால், உமது நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 8
481. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا "". وَشَبَّكَ أَصَابِعَهُ.
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் தம் (இரு) கைவிரல்களை, ஒன்றுடன் ஒன்றைக் கோத்துக்காட்டி னார்கள்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
482. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ ـ قَالَ ابْنُ سِيرِينَ سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا ـ قَالَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا، كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ فَقَالُوا قَصُرَتِ الصَّلاَةُ. وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ "" لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرْ "". فَقَالَ "" أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ "". فَقَالُوا نَعَمْ. فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ. فَرُبَّمَا سَأَلُوهُ ثُمَّ سَلَّمَ فَيَقُولُ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ.
பாடம் : 88 பள்ளிவாசலிலும் மற்ற இடங் களிலும் கைவிரல்களை (ஒன் றோடு ஒன்று) கோத்துக்கொள் வது
482. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகைகளில் ஒன்றை (லுஹ்ர் அல்லது அஸ்ர்) தொழுவித்தார்கள். - (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், நான்தான் அதை மறந்துவிட்டேன்- (நான்கு ரக்அத்களுடைய அத்தொழு கையை) எங்களுக்கு இரண்டு ரக்அத் களாகத் தொழுவித்துவிட்டு ‘சலாம்’ கொடுத்துவிட்டார்கள்.

உடனே எழுந்து பள்ளிவாசலில் அகலவாக்கில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று, ஏதோ கோபத்தி-ருப்பவரைப் போன்று அதில் சாய்ந்துகொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கை விரல்களைப் பின்னிக் கோத்துக்கொண்டார்கள். மேலும், தமது வலக் கன்னத்தை இடப் புறங்கையின் மீது வைத்துக்கொண்டார்கள்.

அவசரமாகச் செல்பவர்கள் பள்ளிவாசலின் தலைவாயில்கள் வழியாக வெளியேறியபோது, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்)” என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர்.

ஆனால், (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவரும் (மரியாதைக்காக) அஞ்சினர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இரு கைகளை உடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் ‘துல்யதைன்’ (இரு கையாளர்) என்று அழைக்கப்படுவார். அவர், “நீங்கள் மறந்துவிட்டீர்களா, அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவு மில்லை” என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), “துல்யதைன் சொல்வதைப் போன்றுதான் நடந்ததா?” என்று கேட்க, மக்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர்.

உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று, விடுபட்டதைத் தொழுதுவிட்டு, ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர்’ என்று) சொல்- ‘(வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வதைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீண்ட (நேரம்)’ சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தமது தலையை உயர்த்தி ‘தக்பீர்’ சொன்னார்கள். பின்னர் ‘தக்பீர்’ சொல்- ‘(வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீண்ட (நேரம்)’ (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள்.

மக்கள் சில சந்தர்ப்பங்களில் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், “(இறுதியாக நபி -ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுத்தார்களா?” என்று கேட்பார்கள்.

அதற்கு முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்த ஹதீஸில்தான், (மறதிக்குரிய சஜ்தா செய்த) பின்னர் நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. (அபூஹுரைராவின் அறிவிப்பில் அவ்வாறு இல்லை)” என்று பதிலளிப்பார்கள்.

அத்தியாயம் : 8
483. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا، وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ. وَحَدَّثَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ. وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلاَّ وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلاَّ أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
483. மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சா-ம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் சாலையோர இடங்கள் சிலவற்றைத் தேடிப்பிடித்து அங்கே தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர் -ர-) அவர்கள் அந்த இடங்களில் தொழுதுவந்ததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) அவர்கள் தொழுததைத் தம் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடு வார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்விடங்களில் தொழுது வந்ததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் அறிவித்துள்ளார்கள். சா-ம் (ரஹ்) அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்டபோது, (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுத) அனைத்து இடங்களைப் பற்றியும் நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே கூறி னார்கள்.

என்றாலும், (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ஷரஃபுர் ரவ்ஹா’ எனும் சிற்றூரில் அமைந்த பள்ளிவாசல் விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர்.


அத்தியாயம் : 8
484. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي الْحُلَيْفَةِ حِينَ يَعْتَمِرُ، وَفِي حَجَّتِهِ حِينَ حَجَّ، تَحْتَ سَمُرَةٍ فِي مَوْضِعِ الْمَسْجِدِ الَّذِي بِذِي الْحُلَيْفَةِ، وَكَانَ إِذَا رَجَعَ مِنْ غَزْوٍ كَانَ فِي تِلْكَ الطَّرِيقِ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ هَبَطَ مِنْ بَطْنِ وَادٍ، فَإِذَا ظَهَرَ مِنْ بَطْنِ وَادٍ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي عَلَى شَفِيرِ الْوَادِي الشَّرْقِيَّةِ، فَعَرَّسَ ثَمَّ حَتَّى يُصْبِحَ، لَيْسَ عِنْدَ الْمَسْجِدِ الَّذِي بِحِجَارَةٍ، وَلاَ عَلَى الأَكَمَةِ الَّتِي عَلَيْهَا الْمَسْجِدُ، كَانَ ثَمَّ خَلِيجٌ يُصَلِّي عَبْدُ اللَّهِ عِنْدَهُ، فِي بَطْنِهِ كُثُبٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَّ يُصَلِّي، فَدَحَا السَّيْلُ فِيهِ بِالْبَطْحَاءِ حَتَّى دَفَنَ ذَلِكَ الْمَكَانَ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِيهِ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
484. (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக (மக்கா செல்லும்போது) ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தில் உள்ள கருவேல மரமொன்றுக்குக் கீழே ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (‘விடைபெறும்’) ஹஜ்ஜுக்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள்.

அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்துவிட்டு அந்தப் பாதையில் திரும்பிவ(ர நேர்)ந்தால் ‘பத்னுல் வாதீ’ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். ‘பத்னுல் வாதீ’ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கிழக்குக் கரையிலுள்ள விசாலமான ஓடையில் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்து அதிகாலை யாகும்வரை ஓய்வெடுப்பார்கள்.

அந்த இடம், கற்களாலான இந்தப் பள்ளிவாச-ன் அருகிலுமில்லை; பள்ளி வாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை.

அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) விசாலமான அந்த ஓடையில் இருந்த அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தைப் புதையுறச் செய்துவிட்டது.


அத்தியாயம் : 8
485. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى حَيْثُ الْمَسْجِدُ الصَّغِيرُ الَّذِي دُونَ الْمَسْجِدِ الَّذِي بِشَرَفِ الرَّوْحَاءِ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ يَعْلَمُ الْمَكَانَ الَّذِي كَانَ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ثَمَّ عَنْ يَمِينِكَ حِينَ تَقُومُ فِي الْمَسْجِدِ تُصَلِّي، وَذَلِكَ الْمَسْجِدُ عَلَى حَافَةِ الطَّرِيقِ الْيُمْنَى، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، بَيْنَهُ وَبَيْنَ الْمَسْجِدِ الأَكْبَرِ رَمْيَةٌ بِحَجَرٍ أَوْ نَحْوُ ذَلِكَ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
485. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் ‘ஷரஃபுர் ரவ்ஹா’ எனும் சிற்றூரில் உள்ள (பெரிய) பள்ளி வாசலுக்கு அருகில் இருக்கும் சிறிய பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் தொழுதிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுத அந்த இடத்தின் அடையாளத்தைப் பற்றிக் கூறுகையில், “(நீ மதினாவி-ருந்து) மக்கா செல்லும் வழியில் பாதையின் வலப் பக்கம் அமைந்த பள்ளிவாசலில் (கிப்லா நோக்கி) நீ தொழுதுகொண்டிருக்கும்போது அந்த இடம் உனது வலப் பக்கத்தில் இருக்கும். (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் அந்தப் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே கல்லெறியும் தூரம்தான் உள்ளது” என்றோ, அல்லது அதைப் போன்ற வேறொரு வார்த்தையோ குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 8
486. وَأَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي إِلَى الْعِرْقِ الَّذِي عِنْدَ مُنْصَرَفِ الرَّوْحَاءِ، وَذَلِكَ الْعِرْقُ انْتِهَاءُ طَرَفِهِ عَلَى حَافَةِ الطَّرِيقِ، دُونَ الْمَسْجِدِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْمُنْصَرَفِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ. وَقَدِ ابْتُنِيَ ثَمَّ مَسْجِدٌ، فَلَمْ يَكُنْ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِي ذَلِكَ الْمَسْجِدِ، كَانَ يَتْرُكُهُ عَنْ يَسَارِهِ وَوَرَاءَهُ، وَيُصَلِّي أَمَامَهُ إِلَى الْعِرْقِ نَفْسِهِ، وَكَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الرَّوْحَاءِ، فَلاَ يُصَلِّي الظُّهْرَ حَتَّى يَأْتِيَ ذَلِكَ الْمَكَانَ فَيُصَلِّي فِيهِ الظُّهْرَ، وَإِذَا أَقْبَلَ مِنْ مَكَّةَ فَإِنْ مَرَّ بِهِ قَبْلَ الصُّبْحِ بِسَاعَةٍ أَوْ مِنْ آخِرِ السَّحَرِ عَرَّسَ حَتَّى يُصَلِّيَ بِهَا الصُّبْحَ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
486. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘இர்க்’ (‘இர்க்குல் ழப்யா’ எனும் பள்ளத்தாக்கு அமைந்துள்ள) பகுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அந்த ‘இர்க்’ பள்ளத் தாக்கின் எல்லை நீ (மதீனாவி-ருந்து) மக்கா செல்லும் வழியில், ‘அர்ரவ்ஹா’ கிராமத்தின் எல்லைக்கும் அங்குள்ள பள்ளிவாசலுக்கும் மத்தியில் அமைந் துள்ள சாலையில் முடிவடைகிறது. (அந்த ‘இர்க்’ பள்ளத்தாக்கில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.)

அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பள்ளிவாச-ல் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவதில்லை. தமது இடப் புறத்தில் தமக்குப் பின்னால் அந்தப் பள்ளிவாசல் இருக்கும் விதத்தில் அந்தப் பள்ளிவாசலைவிட (சற்று) முன்னால் நின்றுகொண்டு அந்த ‘இர்க்’ பள்ளத்தாக்கை நோக்கியவாறு அவர்கள் தொழுவார்கள்.

‘அர்ரவ்ஹா’ கிராமத்தி-ருந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்குப்) புறப்பட்டுச் செல்லும்போது (‘இர்க்’ எனும்) அந்த இடத்தைச் சென்றடையும்முன் அவர்கள் ‘லுஹ்ர்’ தொழுகையைத் தொழமாட்டார்கள்.

(‘இர்க்’ வந்ததும்) அங்குதான் லுஹ்ர் தொழுவார்கள். மக்காவி-ருந்து (மதீனாவுக்குத்) திரும்பி வரும்போது சுப்ஹு நேரத்திற்கு சற்று முன்னர் அல்லது சஹர் நேரத்தின் இறுதிப் பகுதியில் அந்த (‘இர்க்’ எனும்) இடத்தைக் கடக்க நேரிட்டால், அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள். (நேரம் வந்ததும்) அந்த இடத்தில் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றுவார்கள்.


அத்தியாயம் : 8
487. وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا، وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
487. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவி-ருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ‘ருவைஸா’ எனும் சிற்றூருக்குச் சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தின்கீழ் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமானதாகவும் இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரி-ருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அங்கிருந்த மேட்டுப் பகுதியிலிருந்தே நபியவர்கள் புறப்படுவார்கள். அந்த மரத்தின் மேற் கிளைகள் முறிந்து அதன் மையப் பகுதிக்குள் கவிழ்ந்து கிடந்தன. அதன் அடிமரம் நின்றுகொண்டிருந்தது, அந்த அடி மரத்தில் அதிகமான மணல் குவிந்திருந்தது.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 8
488. وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ الْعَرْجِ وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ الْمَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى الْقُبُورِ رَضْمٌ مِنْ حِجَارَةٍ عَنْ يَمِينِ الطَّرِيقِ، عِنْدَ سَلِمَاتِ الطَّرِيقِ، بَيْنَ أُولَئِكَ السَّلِمَاتِ كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الْعَرْجِ بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالْهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ الْمَسْجِدِ.
பாடம் : 89 (மக்காவி-ருந்து செல்லும்) மதீனாவின் சாலைகளில் உள்ள பள்ளிவாசல்களும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடங்களும்
488. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நீ (மதீனாவி-ருந்து) ‘ஹள்பா’ எனும் மலைக்குச் செல்லும் வழியில் ‘அர்ஜ்’ எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள (மேலிருந்து பாயும்) நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ மண்ணறைகள் (கப்று) இருந்தன. அவற்றின்மேல் கற்பாறைகள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்திருந்தது. அந்தச் சாலையின் ஓரங்களில் மரங்கள் இருந்தன” என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அந்த மரங்களுக்கு நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நண்பகலில் சூரியன் உச்சி சாய்ந்ததும் ‘அர்ஜ்’ எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டு அந்தப் பள்ளிவாசலில் லுஹ்ர் தொழுவார்கள்.


அத்தியாயம் : 8