4515. قَالَ فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ قَالَ أَمَّا عُثْمَانُ فَكَأَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا أَنْتُمْ فَكَرِهْتُمْ أَنْ تَعْفُوا عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَخَتَنُهُ. وَأَشَارَ بِيَدِهِ فَقَالَ هَذَا بَيْتُهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 30 கலகம் ஒழிந்து, அல்லாஹ்வின் மார்க்கம் மட்டுமே நிலைபெறும்வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக்கொண்டால் அநீதி யிழைப்போருடன் தவிர (மற்றவர்களுடன்) போர் புரிதல் கூடாது (எனும் 2:193ஆவது இறைவசனம்)
4515. அந்த மனிதர், “அலீ (ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான் (ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்களை (அன்னார் உஹுத் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அவரை அல்லாஹ் மன்னிப்பதை நீங்கள்தான் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி (ஸல்) அவர்களின் மருமகனுமாவார்” என்று கூறியவாறே, “(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கின்றீர்களே இதுதான் அலீ (ரலி) அவர்களின் வீடாகும்” என்று தமது கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4516. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، {وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ} قَالَ نَزَلَتْ فِي النَّفَقَةِ.
பாடம் : 31 “மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர்களை நேசிக்கின்றான்” எனும் (2:195ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தஹ்லுகா' (அழிவு) எனும் சொல்லும் “ஹலாக்' எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் “அழிவு' எனும் பொருள் கொண்ட வேர்ச்சொற்களேயாகும்.)
4516. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51

அத்தியாயம் : 65
4517. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ، قَالَ قَعَدْتُ إِلَى كَعْبِ بْنِ عُجْرَةَ فِي هَذَا الْمَسْجِدِ ـ يَعْنِي مَسْجِدَ الْكُوفَةِ ـ فَسَأَلْتُهُ عَنْ فِدْيَةٌ مِنْ صِيَامٍ فَقَالَ حُمِلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ " مَا كُنْتُ أُرَى أَنَّ الْجَهْدَ قَدْ بَلَغَ بِكَ هَذَا، أَمَا تَجِدُ شَاةً ". قُلْتُ لاَ. قَالَ " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ مِنْ طَعَامٍ، وَاحْلِقْ رَأْسَكَ ". فَنَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهْىَ لَكُمْ عَامَّةً.
பாடம் : 32 ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலைமுடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலி கொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத்தொடர்)
4517. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளிவாசலில் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், “உமக்கு இந்த அளவுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “உம்மிடம் ஆடு ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்கள்.

நான், “இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை “ஸாஉ' உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று சொன்னார்கள்.52

அத்தியாயம் : 65
4518. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُنْزِلَتْ آيَةُ الْمُتْعَةِ فِي كِتَابِ اللَّهِ فَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَمْ يُنْزَلْ قُرْآنٌ يُحَرِّمُهُ، وَلَمْ يَنْهَ عَنْهَا حَتَّى مَاتَ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ.
பாடம் : 33 எவரேனும் “உம்ரா'(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப் பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத்தொடர்)53
4518. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“தமத்துஉ' (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பெறவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை.

(ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மத் (பின் இஸ்மாயீல் அல்புகாரீ) கூறுகிறேன்: “அவர் உமர் (ரலி) அவர்கள்தான்” என்று சொல்லப்படு கின்றது.54

அத்தியாயம் : 65
4519. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ عُكَاظٌ وَمَجَنَّةُ وَذُو الْمَجَازِ أَسْوَاقًا فِي الْجَاهِلِيَّةِ فَتَأَثَّمُوا أَنْ يَتَّجِرُوا فِي الْمَوَاسِمِ فَنَزَلَتْ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ} فِي مَوَاسِمِ الْحَجِّ.
பாடம் : 34 (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறை வனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக்கொள்வது உங்கள்மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத்தொடர்)
4519. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல் மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச்செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், “உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமாகாது” எனும் (2:198 ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55

அத்தியாயம் : 65
4520. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ، وَكَانُوا يُسَمَّوْنَ الْحُمْسَ، وَكَانَ سَائِرُ الْعَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ، ثُمَّ يَقِفَ بِهَا ثُمَّ يُفِيضَ مِنْهَا، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ}
பாடம் : 35 பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (“அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத்தொடர்)
4520. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் “கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்' எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபியர் அனைவருமே அரஃபாத் தில் தங்கிவந்தார்கள்.

இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான், “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (2:199ஆவது) இறைவசனமாகும்.56


அத்தியாயம் : 65
4521. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ يَطَوَّفُ الرَّجُلُ بِالْبَيْتِ مَا كَانَ حَلاَلاً حَتَّى يُهِلَّ بِالْحَجِّ، فَإِذَا رَكِبَ إِلَى عَرَفَةَ فَمَنْ تَيَسَّرَ لَهُ هَدِيَّةٌ مِنَ الإِبِلِ أَوِ الْبَقَرِ أَوِ الْغَنَمِ، مَا تَيَسَّرَ لَهُ مِنْ ذَلِكَ أَىَّ ذَلِكَ شَاءَ، غَيْرَ إِنْ لَمْ يَتَيَسَّرْ لَهُ فَعَلَيْهِ ثَلاَثَةُ أَيَّامٍ فِي الْحَجِّ، وَذَلِكَ قَبْلَ يَوْمِ عَرَفَةَ، فَإِنْ كَانَ آخِرُ يَوْمٍ مِنَ الأَيَّامِ الثَّلاَثَةِ يَوْمَ عَرَفَةَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ، ثُمَّ لِيَنْطَلِقْ حَتَّى يَقِفَ بِعَرَفَاتٍ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى أَنْ يَكُونَ الظَّلاَمُ، ثُمَّ لِيَدْفَعُوا مِنْ عَرَفَاتٍ إِذَا أَفَاضُوا مِنْهَا حَتَّى يَبْلُغُوا جَمْعًا الَّذِي يُتَبَرَّرُ فِيهِ، ثُمَّ لِيَذْكُرُوا اللَّهَ كَثِيرًا، أَوْ أَكْثِرُوا التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ قَبْلَ أَنْ تُصْبِحُوا ثُمَّ أَفِيضُوا، فَإِنَّ النَّاسَ كَانُوا يُفِيضُونَ، وَقَالَ اللَّهُ تَعَالَى {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} حَتَّى تَرْمُوا الْجَمْرَةَ.
பாடம் : 35 பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (“அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத்தொடர்)
4521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது “தமத்துஉ' ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்க வேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானி பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை.

பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ர் தொழுகையிலிருந்து இரவின் இருள் படரும்வரை தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாரும் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தóஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும்வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லா இலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்.

பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்துதான் திரும்பிக்கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:199)

(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறிந்தபிறகு (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.)

அத்தியாயம் : 65
4522. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ".
பாடம் : 36 (அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவுகூரும் மக்கள் உள்ள னர்.) அவர்களில் சிலர், “எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள் வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்)
4522. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?” எனப் பிரார்த்தித்துவந்தார்கள்.

அத்தியாயம் : 65
4523. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، تَرْفَعُهُ قَالَ "" أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ "". وَقَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 37 அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத்தொடர்) “(2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஸ்ல்' எனும் சொல்லுக்கு “உயிரினம்' என்பது பொருள்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4523. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்ப வனேயாவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4524. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا} خَفِيفَةً، ذَهَبَ بِهَا هُنَاكَ، وَتَلاَ {حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ} فَلَقِيتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ
பாடம் : 38 உங்களுக்குமுன் சென்றுவிட்ட (இறைநம்பிக்கை கொண்ட)வர் களின் (சோதனையான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்துவிடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் இறைநம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?' என்று கேட்கின்ற அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது” (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது எனும் 2:214ஆவது இறைவசனம்)
4524. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(இறைமறுப்பாளர்கள் இனி இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும்கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது” எனும் (12:110ஆவது) வசனத்தில் (“குஃத்திபூ' -இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள்- என்று வாசிக்காமல்) “குஃதிபூ' (தங்களிடம் பொய்யுரைக் கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்”) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, “இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவுக்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது' (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது”) எனும் (2:214ஆவது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.58

பிறகு நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் (குஃதிபூ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்) அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.


அத்தியாயம் : 65
4525. قَالَتْ عَائِشَةُ مَعَاذَ اللَّهِ، وَاللَّهِ مَا وَعَدَ اللَّهُ رَسُولَهُ مِنْ شَىْءٍ قَطُّ إِلاَّ عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوتَ، وَلَكِنْ لَمْ يَزَلِ الْبَلاَءُ بِالرُّسُلِ حَتَّى خَافُوا أَنْ يَكُونَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُونَهُمْ، فَكَانَتْ تَقْرَؤُهَا {وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا} مُثَقَّلَةً.
பாடம் : 38 உங்களுக்குமுன் சென்றுவிட்ட (இறைநம்பிக்கை கொண்ட)வர் களின் (சோதனையான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்துவிடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் இறைநம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?' என்று கேட்கின்ற அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது” (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது எனும் 2:214ஆவது இறைவசனம்)
4525. அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்குமுன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை.

ஆனால், இறைத்தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டே யிருந்தன. எந்த அளவுக்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்யாக்க முற்படுவார்களோ என அந்த இறைத்தூதர்கள் அஞ்சும் அளவுக்கு அவை தொடர்ந்துவந்தன” என்று சொன் னார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “வ ழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ' என்று (குஃதிபூ என்று அழுத்தக் குறியின்றி சொல்லாமல் “குஃத்திபூ' என்று) அழுத்தக் குறியோடுதான் ஓதிவந்தார்கள்.59

அத்தியாயம் : 65
4526. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا قَرَأَ الْقُرْآنَ لَمْ يَتَكَلَّمْ حَتَّى يَفْرُغَ مِنْهُ، فَأَخَذْتُ عَلَيْهِ يَوْمًا، فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ حَتَّى انْتَهَى إِلَى مَكَانٍ قَالَ تَدْرِي فِيمَا أُنْزِلَتْ. قُلْتُ لاَ. قَالَ أُنْزِلَتْ فِي كَذَا وَكَذَا. ثُمَّ مَضَى.
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4526. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும்வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒருநாள் (அவர்கள் மனப்பாடமாக குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தபோது) அவர் களுக்காக நான் (குர்ஆன் பிரதியை)ப்பிடித்துக்கொண்டேன். அவர்கள் “அல்பகரா' அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி, “இந்த வசனம் எது தொடர்பாக அருளப்பட்டது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

நான், “தெரியாது' என்றேன். அதற்கு அவர்கள், “இன்ன இன்ன விஷயம் தொடர்பாக அருளப்பட்டது” என்று கூறி விட்டுப் பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.60


அத்தியாயம் : 65
4527. وَعَنْ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، {فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ} قَالَ يَأْتِيهَا فِي. رَوَاهُ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4527. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

“ஆகவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள்” எனும் (2:223 ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “மனைவியிடம் அவளது...கணவன் புணரலாம்” என்று குறிப்பிட்டார்கள்.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4528. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ كَانَتِ الْيَهُودُ تَقُولُ إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ. فَنَزَلَتْ {نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ}
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4528. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, “உங்கள் பெண்கள் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.62

அத்தியாயம் : 65
4529. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ، قَالَ كَانَتْ لِي أُخْتٌ تُخْطَبُ إِلَىَّ. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ،. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، أَنَّ أُخْتَ، مَعْقِلِ بْنِ يَسَارٍ طَلَّقَهَا زَوْجُهَا، فَتَرَكَهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، فَخَطَبَهَا فَأَبَى مَعْقِلٌ، فَنَزَلَتْ {فَلاَ تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ}.
பாடம் 40 நீங்கள் (உங்களுடைய) மனைவி யரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் (“இத்தா') தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம் (எனும் 2:232ஆவது வசனத்தொடர்)
4529. மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குச் சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண்கேட்டு வந்தனர்.

ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் மணவிலக்குச் செய்து “இத்தா' காலம் கழியும்வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார்.

பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் (அவருடைய கணவருக்கே) மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.

அப்போதுதான், “அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232ஆவது) வசனம் அருளப்பெற்றது.63

அத்தியாயம் : 65
4530. حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ ابْنُ الزُّبَيْرِ قُلْتُ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} قَالَ قَدْ نَسَخَتْهَا الآيَةُ الأُخْرَى فَلِمَ تَكْتُبُهَا أَوْ تَدَعُهَا قَالَ يَا ابْنَ أَخِي، لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4530. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் வல்லமை மிக்கவனும் விவேகமிக்கவனும் ஆவான்” எனும் (2:240ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறைவசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை “ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது “இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.64


அத்தியாயம் : 65
4531. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شِبْلٌ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} قَالَ كَانَتْ هَذِهِ الْعِدَّةُ تَعْتَدُّ عِنْدَ أَهْلِ زَوْجِهَا وَاجِبٌ، فَأَنْزَلَ اللَّهُ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ} قَالَ جَعَلَ اللَّهُ لَهَا تَمَامَ السَّنَةِ سَبْعَةَ أَشْهُرٍ وَعِشْرِينَ لَيْلَةً وَصِيَّةً، إِنْ شَاءَتْ سَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ} فَالْعِدَّةُ كَمَا هِيَ وَاجِبٌ عَلَيْهَا. زَعَمَ ذَلِكَ عَنْ مُجَاهِدٍ. وَقَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ}. قَالَ عَطَاءٌ إِنْ شَاءَتِ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهِ وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ}. قَالَ عَطَاءٌ ثُمَّ جَاءَ الْمِيرَاثُ فَنَسَخَ السُّكْنَى فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَلاَ سُكْنَى لَهَا. وَعَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ حَدَّثَنَا وَرْقَاءُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ بِهَذَا. وَعَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا فِي أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ لِقَوْلِ اللَّهِ {غَيْرَ إِخْرَاجٍ} نَحْوَهُ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4531. அப்துல்லாஹ் பின் அபீநஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(கணவன் இறந்துபோன) அந்தப்பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த “இத்தா'வைத் தம் கணவனு டைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில்இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது.” எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) இறுதி விருப்ப(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம்.

இதைத்தான், “வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது.

ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) “இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் “இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருப்பாள். இதையே, “(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக” எனும் இந்த இறை வசனத்தொடர் குறிக்கின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் “இத்தா' இருப்பாள். தனக்காகத் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்தில் கண்டுள்ளபடி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66

இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போலவே அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4532. حَدَّثَنَا حِبَّانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيهِ عُظْمٌ مِنَ الأَنْصَارِ وَفِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرْتُ حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فِي شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ وَلَكِنَّ عَمَّهُ كَانَ لاَ يَقُولُ ذَلِكَ. فَقُلْتُ إِنِّي لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِي جَانِبِ الْكُوفَةِ. وَرَفَعَ صَوْتَهُ، قَالَ ثُمَّ خَرَجْتُ فَلَقِيتُ مَالِكَ بْنَ عَامِرٍ أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُودٍ فِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْىَ حَامِلٌ فَقَالَ قَالَ ابْنُ مَسْعُودٍ أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ، وَلاَ تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى. وَقَالَ أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ لَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4532. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக்கொண்டதில்லையே” என்று சொன்னார்.

உடனே நான் உரத்த குரலில், “கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன்தான்” என்று சொன்னேன்.68

பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) “மாலிக் பின் ஆமிர்' அல்லது “மாóக் பின் அவ்ஃப்' (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், “தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள “அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (“அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், “(வழியில்) நான் அபூஅதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்” என்று (சந்தேக மின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4533. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ هِشَامٌ حَدَّثَنَا قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْخَنْدَقِ " حَبَسُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ أَوْ أَجْوَافَهُمْ ـ شَكَّ يَحْيَى ـ نَارًا ".
பாடம் : 42 (இறைநம்பிக்கை கொண்டவர் களே!) அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்)
4533. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “நம்மை நடுத்தொழுகையைத் தொழ விடாமல் சூரியன் மறையும்வரை எதிரிகள் தடுத்துவிட்டார்கள். அவர்களின் புதைகுழிகளையும் “வீடுகளையும்' அல்லது அவர்களின் “வயிறுகளையும்' அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று சொன்னார்கள்.70

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத் துடன் “அல்லது அவர்களுடைய வயிறு களையும்” என்று சொன்னார்கள்.71

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களின் வழியாக வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4534. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلاَةِ يُكَلِّمُ أَحَدُنَا أَخَاهُ فِي حَاجَتِهِ حَتَّى نَزَلَتْ هَذِهِ الآيَةُ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} فَأُمِرْنَا بِالسُّكُوتِ.
பாடம் : 43 மேலும், நீங்கள் உள்ளச்சம் உடைய வர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்) (இதில், “உள்ளச்சம் உடையவர்களாக” எனும் பொருளைச் சுட்டும் “கானித்தீன்' எனும் சொல்லுக்கு “கீழ்படிந்தவர்களாக' என்பது பொருள்.
4534. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” எனும் (2:238ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

அத்தியாயம் : 65