4206. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ، فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ، مَا هَذِهِ الضَّرْبَةُ قَالَ هَذِهِ ضَرْبَةٌ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ، فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَنَفَثَ فِيهِ ثَلاَثَ نَفَثَاتٍ، فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4206. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சலமா (பின் அல்அக்வஉ - ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அவரிடம், “அபூமுஸ்லிமே! இது என்ன காயம்?” என்று கேட்டேன். “இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், “சலமா தாக்கப்பட்டு விட்டார்' என்று கூறினர்.

உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாக உமிழ்ந்தார்கள். (அதன்பின்) இந்த நேரம்வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை” என்று சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4207. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ الْتَقَى النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمُشْرِكُونَ فِي بَعْضِ مَغَازِيهِ فَاقْتَتَلُوا، فَمَالَ كُلُّ قَوْمٍ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي الْمُسْلِمِينَ رَجُلٌ لاَ يَدَعُ مِنَ الْمُشْرِكِينَ شَاذَّةً وَلاَ فَاذَّةً إِلاَّ اتَّبَعَهَا فَضَرَبَهَا بِسَيْفِهِ، فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا أَجْزَأَ أَحَدُهُمْ مَا أَجْزَأَ فُلاَنٌ. فَقَالَ "" إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ "". فَقَالُوا أَيُّنَا مِنْ أَهْلِ الْجَنَّةِ إِنْ كَانَ هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لأَتَّبِعَنَّهُ، فَإِذَا أَسْرَعَ وَأَبْطَأَ كُنْتُ مَعَهُ. حَتَّى جُرِحَ فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نِصَابَ سَيْفِهِ بِالأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ، فَقَتَلَ نَفْسَهُ، فَجَاءَ الرَّجُلُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ فَقَالَ "" وَمَا ذَاكَ "". فَأَخْبَرَهُ. فَقَالَ "" إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَإِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ "".
பாடம் : 39 கைபர் போர்258
4207. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு போரில் (கைபரில்) நபி (ஸல்) அவர்களும், யூத இணைவைப்பாளர்களும் சந்தித்துப் போரிட்டுக்கொண்டனர். (போர் நடைபெற்றபோது ஒருநாள் போரை நிறுத்திவிட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தாரும்தத்தம் படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர். முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின்போது யூதர்களான) இணைவைப்பாளர்களின் அணியிலிருந்து பிரிந்துசென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகித்) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் பின்தொடர்ந்து சென்று, தனது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! (இன்றைய தினம்) இன்ன மனிதர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்தது போல வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். “(வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரகவாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார்தான் சொர்க்கவாசி!” என்று மக்கள் கூறினர். அந்த மக்களில் ஒருவர், “நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப்போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும்அவருடன் இருப்பேன்” என்று கூறினார்.

(பிறகு அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீர தீரமாகப் போரிட்ட.) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வலி தாங்க முடியாமல்) அவசரமாக இறந்துபோக விரும்பி, தமது வாளின் (கீழ்) முனையைப் பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல்முனையைத் தம் மார்புகளுக்கிடையில் வைத்து, அதன் மீது தம்மை அழுத்தித் தற்கொலை செய்து கொண்டார்.

(அவரைப் பின்தொடர்ந்து சென்று இந்தக் காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் உறுதி கூறுகிறேன்” என்று கூறினார். “என்ன அது?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், உண்மையில் அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப் பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்கள்.266


அத்தியாயம் : 64
4208. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، عَنْ أَبِي عِمْرَانَ، قَالَ نَظَرَ أَنَسٌ إِلَى النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ، فَرَأَى طَيَالِسَةً فَقَالَ كَأَنَّهُمُ السَّاعَةَ يَهُودُ خَيْبَرَ.
பாடம் : 39 கைபர் போர்258
4208. அபூஇம்ரான் (அப்துல் மலிக் பின் ஹபீப் அல்ஜவ்னீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (ஒருமுறை) வெள்ளிக்கிழமை அன்று (பஸ்ராவில் இருந்த ஒரு பள்ளிவாசலில்) மக்களை நோட்டமிட்டார்கள். அப்போது (அவர்களின் தலையில்) “தைலசான்' எனும் ஒரு வகை சால்வையைக் கண்டார்கள்.267

உடனே, “இப்போது இவர்கள் கைபர் யூதர்களைப் போல உள்ளனர்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4209. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، رضى الله عنه قَالَ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خَيْبَرَ، وَكَانَ رَمِدًا فَقَالَ أَنَا أَتَخَلَّفُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَحِقَ، فَلَمَّا بِتْنَا اللَّيْلَةَ الَّتِي فُتِحَتْ قَالَ "" لأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا ـ أَوْ لَيَأْخُذَنَّ الرَّايَةَ غَدًا ـ رَجُلٌ يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ، يُفْتَحُ عَلَيْهِ "". فَنَحْنُ نَرْجُوهَا فَقِيلَ هَذَا عَلِيٌّ، فَأَعْطَاهُ فَفُتِحَ عَلَيْهِ.
பாடம் : 39 கைபர் போர்258
4209. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல், பின்தங்கிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டார்கள். (கைபர்) வெற்றி கொள்ளப்பட்ட நாளின் (முந்தைய) இரவில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன்”; அல்லது, “(அத்தகைய) ஒரு மனிதர் நாளை இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” (என்று சொல்லிவிட்டு,) “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

அதை (யாரிடம் கொடுக்கப்போகிறார்கள் என்று) நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, “இதோ, அலீ!” என்று கூறப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (அலீ-ரலி) அவர்களிடம் (அக்கொடியைக்) கொடுக்க, (நபியவர்கள் சொன்னவாறே) அவர்களுக்கு வெற்றியளிக்கப்பட்டது.268


அத்தியாயம் : 64
4210. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ خَيْبَرَ "" لأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا رَجُلاً، يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ، يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ "". قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا فَقَالَ "" أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ "". فَقِيلَ هُوَ يَا رَسُولَ اللَّهِ يَشْتَكِي عَيْنَيْهِ. قَالَ "" فَأَرْسِلُوا إِلَيْهِ "". فَأُتِيَ بِهِ فَبَصَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي عَيْنَيْهِ، وَدَعَا لَهُ، فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ، فَأَعْطَاهُ الرَّايَةَ، فَقَالَ عَلِيٌّ يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا، فَقَالَ "" انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللَّهِ فِيهِ، فَوَاللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ "".
பாடம் : 39 கைபர் போர்258
4210. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில், “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வுடையவும் அவனு டைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.

அந்தக் கொடி தம்மில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் ஆழ்ந்திருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள், “நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது (அரபியரின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக்கொள்வதைவிட, அல்லது அவற்றைத் தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன் னார்கள்.269


அத்தியாயம் : 64
4211. حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، ح وَحَدَّثَنِي أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْنَا خَيْبَرَ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِ الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىِّ بْنِ أَخْطَبَ، وَقَدْ قُتِلَ زَوْجُهَا وَكَانَتْ عَرُوسًا، فَاصْطَفَاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم لِنَفْسِهِ، فَخَرَجَ بِهَا، حَتَّى بَلَغْنَا سَدَّ الصَّهْبَاءِ حَلَّتْ، فَبَنَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ صَغِيرٍ، ثُمَّ قَالَ لِي "" آذِنْ مَنْ حَوْلَكَ "". فَكَانَتْ تِلْكَ وَلِيمَتَهُ عَلَى صَفِيَّةَ، ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَدِينَةِ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ، ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ، فَيَضَعُ رُكْبَتَهُ، وَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ حَتَّى تَرْكَبَ.
பாடம் : 39 கைபர் போர்258
4211. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். நபி (ஸல்) அவர்களுக்கு (“கமூஸ்' என்னும்) கோட்டையின் வெற்றியை அல்லாஹ் அளித்தபோது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புதுமணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் “குமுஸ்' பங்கிலிருந்து) பெற்று (மணந்து)கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

(கைபருக்கு அருகிலுள்ள) “சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தை நாங்கள் அடைந்தபோது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அதன் பிறகு (பேரீச்சம்பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) “ஹைஸ்' எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக (வலீமா) அது அமைந்தது.

பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின்மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள். பிறகு தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, தமது முழங்காலை வைக்க, அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.270

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4212. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ يَحْيَى، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَقَامَ عَلَى صَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ، بِطَرِيقِ خَيْبَرَ ثَلاَثَةَ أَيَّامٍ، حَتَّى أَعْرَسَ بِهَا، وَكَانَتْ فِيمَنْ ضُرِبَ عَلَيْهَا الْحِجَابُ.
பாடம் : 39 கைபர் போர்258
4212. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுடன் கைபர் வழியில் (“சத்துஸ் ஸஹ்பா' எனும் இடத்தில்) மூன்று நாட்கள் தங்கி தாம்பத்திய உறவை ஆரம்பித்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் “பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவராக இருந்தார்கள்.271


அத்தியாயம் : 64
4213. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ خَيْبَرَ وَالْمَدِينَةِ ثَلاَثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ، فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلاَّ أَنْ أَمَرَ بِلاَلاً بِالأَنْطَاعِ فَبُسِطَتْ، فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالأَقِطَ وَالسَّمْنَ، فَقَالَ الْمُسْلِمُونَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ قَالُوا إِنْ حَجَبَهَا فَهْىَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهْىَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ. فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ، وَمَدَّ الْحِجَابَ.
பாடம் : 39 கைபர் போர்258
4213. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள “சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு (வலீமா) முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (“ஹைஸ்' எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்óம்கள் உண்டனர்.)

அப்போது முஸ்லிம்கள், “ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கை யாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?” என்று பேசிக்கொண்டனர். “ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக்கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்தபிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.272


அத்தியாயம் : 64
4214. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِي خَيْبَرَ فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم، فَاسْتَحْيَيْتُ.
பாடம் : 39 கைபர் போர்258
4214. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபரை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல்பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (என் ஆசையை நபியவர்கள் தெரிந்துவிட்டதால்) நான் வெட்கமடைந்தேன்.273

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4215. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَسَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ أَكْلِ الثَّوْمِ، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ. نَهَى عَنْ أَكْلِ الثَّوْمِ هُوَ عَنْ نَافِعٍ وَحْدَهُ. وَلُحُومُ الْحُمُرِ الأَهْلِيَّةِ عَنْ سَالِمٍ.
பாடம் : 39 கைபர் போர்258
4215. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளையும் உண்ண வேண்டா மெனத் தடை விதித்தார்கள்.274

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே, “வெள்ளைப் பூண்டு உண்ண வேண்டாம்” என்பது இடம்பெற்றுள்ளது.

நாட்டுக் கழுதைகளின் இறைச்சி (தொடர்பாக) சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே காணப்படுகிறது.


அத்தியாயம் : 64
4216. حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ، وَعَنْ أَكْلِ الْحُمُرِ الإِنْسِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4216. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முத்ஆ' (தவணை முறை) திருமணம் செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள்.275

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4217. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4217. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை (உண்ண வேண்டாமென)த் தடை செய்தார்கள்.


அத்தியாயம் : 64
4218. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، وَسَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
பாடம் : 39 கைபர் போர்258
4218. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4219. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ، وَرَخَّصَ فِي الْخَيْلِ.
பாடம் : 39 கைபர் போர்258
4219. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.


அத்தியாயம் : 64
4220. حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ أَصَابَتْنَا مَجَاعَةٌ يَوْمَ خَيْبَرَ، فَإِنَّ الْقُدُورَ لَتَغْلِي ـ قَالَ وَبَعْضُهَا نَضِجَتْ ـ فَجَاءَ مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ تَأْكُلُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا وَأَهْرِيقُوهَا. قَالَ ابْنُ أَبِي أَوْفَى فَتَحَدَّثْنَا أَنَّهُ إِنَّمَا نَهَى عَنْهَا لأَنَّهَا لَمْ تُخَمَّسْ. وَقَالَ بَعْضُهُمْ نَهَى عَنْهَا الْبَتَّةَ، لأَنَّهَا كَانَتْ تَأْكُلُ الْعَذِرَةَ.
பாடம் : 39 கைபர் போர்258
4220. இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக்கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக்கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில் (இருந்த இறைச்சி) வெந்தும்விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் வந்து, “கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள். அதைக் கொட்டிவிடுங்கள்” என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர் கூறுகிறார்:

அப்போது நாங்கள், “அதை (உண்ண வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அதில் (நபி (ஸல்) அவர்களுக்குச் சேர வேண்டிய) “குமுஸ்' நிதி எடுக்கப்பட்டிருக்கவில்லை; (அதனால், தாற்காலிகமாகத் தடை விதித்துள்ளார்கள்)” என்று பேசிக்கொண்டோம். எங்களில் சிலர், “அறவே (நிரந்தரமாக உண்ண வேண்டாமென்றே) தடை விதித்தார்கள். ஏனெனில், அவை மலத்தைத் தின்கின்றன” என்று கூறினர்.276


அத்தியாயம் : 64
4221. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، رضى الله عنهم أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَصَابُوا حُمُرًا فَطَبَخُوهَا، فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم أَكْفِئُوا الْقُدُورَ.
பாடம் : 39 கைபர் போர்258
4221. (கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு(நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்.

இதை பராஉ (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4223. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ الْبَرَاءَ، وَابْنَ أَبِي أَوْفَى، يُحَدِّثَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يَوْمَ خَيْبَرَ وَقَدْ نَصَبُوا الْقُدُورَ أَكْفِئُوا الْقُدُورَ.
பாடம் : 39 கைபர் போர்258
4223. கைபர் போரின்போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக் கழுதை இறைச்சியை சமைத்து)விட்டிருக்க நபி (ஸல்) அவர்கள், “பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

இதை பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4225. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 39 கைபர் போர்258
4225. “நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்...” (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 64