4102. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا حُفِرَ الْخَنْدَقُ رَأَيْتُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم خَمَصًا شَدِيدًا، فَانْكَفَأْتُ إِلَى امْرَأَتِي فَقُلْتُ هَلْ عِنْدَكِ شَىْءٌ فَإِنِّي رَأَيْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَمَصًا شَدِيدًا. فَأَخْرَجَتْ إِلَىَّ جِرَابًا فِيهِ صَاعٌ مِنْ شَعِيرٍ، وَلَنَا بُهَيْمَةٌ دَاجِنٌ فَذَبَحْتُهَا، وَطَحَنَتِ الشَّعِيرَ فَفَرَغَتْ إِلَى فَرَاغِي، وَقَطَّعْتُهَا فِي بُرْمَتِهَا، ثُمَّ وَلَّيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ لاَ تَفْضَحْنِي بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِمَنْ مَعَهُ. فَجِئْتُهُ فَسَارَرْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا وَطَحَنَّا صَاعًا مِنْ شَعِيرٍ كَانَ عِنْدَنَا، فَتَعَالَ أَنْتَ وَنَفَرٌ مَعَكَ. فَصَاحَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا أَهْلَ الْخَنْدَقِ، إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ سُورًا فَحَىَّ هَلاً بِكُمْ "". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُنْزِلُنَّ بُرْمَتَكُمْ، وَلاَ تَخْبِزُنَّ عَجِينَكُمْ حَتَّى أَجِيءَ "". فَجِئْتُ وَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْدُمُ النَّاسَ حَتَّى جِئْتُ امْرَأَتِي، فَقَالَتْ بِكَ وَبِكَ. فَقُلْتُ قَدْ فَعَلْتُ الَّذِي قُلْتِ. فَأَخْرَجَتْ لَهُ عَجِينًا، فَبَصَقَ فِيهِ وَبَارَكَ، ثُمَّ عَمَدَ إِلَى بُرْمَتِنَا فَبَصَقَ وَبَارَكَ ثُمَّ قَالَ "" ادْعُ خَابِزَةً فَلْتَخْبِزْ مَعِي وَاقْدَحِي مِنْ بُرْمَتِكُمْ وَلاَ تُنْزِلُوهَا""، وَهُمْ أَلْفٌ، فَأُقْسِمُ بِاللَّهِ لَقَدْ أَكَلُوا حَتَّى تَرَكُوهُ وَانْحَرَفُوا، وَإِنَّ بُرْمَتَنَا لَتَغِطُّ كَمَا هِيَ، وَإِنَّ عَجِينَنَا لَيُخْبَزُ كَمَا هُوَ.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4102. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர் களின் வயிறு (பசியால்) மிகவும் ஒட்டி யிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, “நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப்போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?” என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டுவந்தார்.

அதில் ஒரு “ஸாஉ' அளவு தொலிநீக்கப்படாத கோதுமை இருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தார். நான் (அறுத்து) முடிக்கும்போது அவரும் (அரைத்து) முடித்துவிட்டார். மேலும் அதைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். (“உணவு கொஞ்சம்தான் இருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)” என்று சொன்னார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு “ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்” என்று அழைத்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், “அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “நான் வரும்வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்துகொண்டிருந்தார்கள். நான் என் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி (ஸல்) அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்துகொண்டார்.

அப்போது நான், “நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திருவாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து வளம் கொழிக்கப் பிரார்த்தித்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), “ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழைப்பீராக. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பீராக. பாத்திரத்தை இறக்கி வைத்துவிடாதே” என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்துவிடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.176


அத்தியாயம் : 64
4103. حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها {إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الأَبْصَارُ} قَالَتْ كَانَ ذَاكَ يَوْمَ الْخَنْدَقِ.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4103. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்குக் கீழ்ப்புறமிருந்தும் உங்களிடம் (படையெடுத்து) வந்ததை நினைவுகூருங்கள். அப்போது (உங்கள்) கண்கள் நிலைகுத்தி நின்றன. இதயங்கள் தொண்டைகளை அடைத்துக்கொண்டன” எனும் (33:10ஆவது) இறைவசனம் குறிப்பிடும் சம்பவம் அகழ்ப் போர் தினத்தில் நடந்தது.


அத்தியாயம் : 64
4104. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ التُّرَابَ يَوْمَ الْخَنْدَقِ حَتَّى أَغْمَرَ بَطْنَهُ أَوِ اغْبَرَّ بَطْنُهُ يَقُولُ وَاللَّهِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا وَرَفَعَ بِهَا صَوْتَهُ أَبَيْنَا أَبَيْنَا.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4104. பராஉ (பின் ஆஸிப்-ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டிக்கொண்டிருந்த சமயத்தில்) நபி (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்துகொண்டிருந்தார்கள். மண் “அவர்களுடைய வயிற்றி(ன் முடியி)னை மறைத்(துப் படிந்)திருந்தது' அல்லது “அவர்களின் வயிற்றில் புழுதி படிந்திருந்தது'. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடியவண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக!அல்லாஹ் (மட்டும்)இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்!

(இறைவா!)எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!

இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்.எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!

“நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம்” என்பதை உரத்த குரலில் கூறினார்கள்.177


அத்தியாயம் : 64
4105. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رَضِيَ الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4105. நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்:

நான் (“ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; “ஆத்' சமுகத்தார் (“தபூர்' எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.178


அத்தியாயம் : 64
4106. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يُحَدِّثُ قَالَ لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ، وَخَنْدَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَأَيْتُهُ يَنْقُلُ مِنْ تُرَابِ الْخَنْدَقِ حَتَّى وَارَى عَنِّي الْغُبَارُ جِلْدَةَ بَطْنِهِ، وَكَانَ كَثِيرَ الشَّعَرِ، فَسَمِعْتُهُ يَرْتَجِزُ بِكَلِمَاتِ ابْنِ رَوَاحَةَ، وَهْوَ يَنْقُلُ مِنَ التُّرَابِ يَقُولُ اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا إِنَّ الأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا وَإِنْ أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا قَالَ ثُمَّ يَمُدُّ صَوْتَهُ بِآخِرِهَا.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4106. பராஉ (பின் ஆஸிப் -ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டி ருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் சருமத்தை என்னைவிட்டு மண் மறைத்துவிட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்துகொண்டே இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் (ஈரசைச் சீர்) பாடல் வரிகளைப் பாடிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:)

இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்!தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்!

(இறைவா!)எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!

இவர்கள் (எதிரிகள்)எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!179

“நபி (ஸல்) அவர்கள், (“நாங்கள் இடம் தரமாட்டோம்' என்ற) கடைசி வார்த்தையை நீட்டியபடி முழக்கமிட்டார்கள்” என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.


அத்தியாயம் : 64
4107. حَدَّثَنِي عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَوَّلُ يَوْمٍ شَهِدْتُهُ يَوْمُ الْخَنْدَقِ.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4107. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (போரில்) கலந்துகொண்ட முதல்நாள் அகழ்ப் போர் தினமாகும்.180


அத்தியாயம் : 64
4108. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلْتُ عَلَى حَفْصَةَ وَنَسْوَاتُهَا تَنْطُفُ، قُلْتُ قَدْ كَانَ مِنْ أَمْرِ النَّاسِ مَا تَرَيْنَ، فَلَمْ يُجْعَلْ لِي مِنَ الأَمْرِ شَىْءٌ. فَقَالَتِ الْحَقْ فَإِنَّهُمْ يَنْتَظِرُونَكَ، وَأَخْشَى أَنْ يَكُونَ فِي احْتِبَاسِكَ عَنْهُمْ فُرْقَةٌ. فَلَمْ تَدَعْهُ حَتَّى ذَهَبَ، فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ خَطَبَ مُعَاوِيَةُ قَالَ مَنْ كَانَ يُرِيدُ أَنْ يَتَكَلَّمَ فِي هَذَا الأَمْرِ فَلْيُطْلِعْ لَنَا قَرْنَهُ، فَلَنَحْنُ أَحَقُّ بِهِ مِنْهُ وَمِنْ أَبِيهِ. قَالَ حَبِيبُ بْنُ مَسْلَمَةَ فَهَلاَّ أَجَبْتَهُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَلَلْتُ حُبْوَتِي وَهَمَمْتُ أَنْ أَقُولَ أَحَقُّ بِهَذَا الأَمْرِ مِنْكَ مَنْ قَاتَلَكَ وَأَبَاكَ عَلَى الإِسْلاَمِ. فَخَشِيتُ أَنْ أَقُولَ كَلِمَةً تُفَرِّقُ بَيْنَ الْجَمْعِ، وَتَسْفِكُ الدَّمَ، وَيُحْمَلُ عَنِّي غَيْرُ ذَلِكَ، فَذَكَرْتُ مَا أَعَدَّ اللَّهُ فِي الْجِنَانِ. قَالَ حَبِيبٌ حُفِظْتَ وَعُصِمْتَ. قَالَ مَحْمُودٌ عَنْ عَبْدِ الرَّزَّاقِ وَنَوْسَاتُهَا.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4108. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், “மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லத்தான் வேண்டுமா?”) என்று கேட்டேன்.181

அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், “(நடந்துகொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர்வீராக. ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீர் செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள். நான் செல்லும்வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன். அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்தபோது முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.182

அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் (ரலி) அவர்களையும் அன்னாருடைய தந்தை உமர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டு), “எவர் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகிறாரோ அவர் தம் தலையைக் காட்டட்டும். ஏனெனில், அவரைவிடவும் அவருடைய தந்தையைவிடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர்” என்று கூறினார்கள்.

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இப்னு உமர் -ரலி) அவர்களிடம், “நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு)க்கொண்டு “(உஹுத் மற்றும் “கன்தக்' போர்களில் முஆவியாவே,) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூசுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட (அலீ (ரலி) போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்கு உங்களைவிடத் தகுதி வாய்ந்தவர்' என்று சொல்ல நினைத்தேன்.

ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்துவிடும் ஒரு வார்த்தையை நான் கூறிவிடுவேனோ; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டுவிடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க்கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்துவைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்குப் பதில் கூறவில்லை)” என்று கூறினார்கள்.

அப்போது நான், “(நல்ல வேளை, நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப்பட்டீர்கள்” என்று கூறினேன்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஹ்மூத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (“கூந்தல்' என்பதைக் குறிக்க “நஸ்வாத்' எனும் சொல்லுக்குப் பதிலாக) “நவ்சாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 64
4109. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" نَغْزُوهُمْ وَلاَ يَغْزُونَنَا "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4109. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போர் (முடிந்து குறைஷியர் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள், “(இனி போர் தொடுப்பதானால்,) நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்; அவர்கள் நம்மீது (இனி) போர் தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4110. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ حِينَ أَجْلَى الأَحْزَابُ عَنْهُ "" الآنَ نَغْزُوهُمْ وَلاَ يَغْزُونَنَا، نَحْنُ نَسِيرُ إِلَيْهِمْ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4110. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பியபோது, “இப்போது (போர் புரிவ தானால்) நாம்தான் அவர்களுடன் போர் புரிய வேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரிய முடியாது; நாம்தான் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.183


அத்தியாயம் : 64
4111. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ يَوْمَ الْخَنْدَقِ "" مَلأَ اللَّهُ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4111. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “எதிரிகளுடைய வீடுகளையும், அடக்கத் தலங்களையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பி விட்டார்கள்” என்று கூறினார்கள்.184


அத்தியாயம் : 64
4112. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغْرُبَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا "" فَنَزَلْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4112. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை நான் அஸ்ர் தொழ இயலவில்லை” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸ்ர் தொழவில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் “புத்ஹான்' எனும் பள்ளத் தாக்கிற்கு நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்தோம். சூரியன் மறைந்தபிறகு அஸ்ரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள்.185


அத்தியாயம் : 64
4113. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ "". فَقَالَ الزُّبَيْرُ أَنَا. ثُمَّ قَالَ "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4113. ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்து)க் கொண்டு வருபவர் யார்?” என்று கேட்டார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள், “நான்' என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும், “எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள். பிறகு, “எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டுவருபவர் யார்?” என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், “நான்' என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்யேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று கூறினார்கள்.186


அத்தியாயம் : 64
4114. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ، أَعَزَّ جُنْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَغَلَبَ الأَحْزَابَ وَحْدَهُ، فَلاَ شَىْءَ بَعْدَهُ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4114. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரில் எதிரிகள் தோல்வி யுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும்போது), “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். கூட்டுப் படையினரை அவனே தன்னந்தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப்போவது) இல்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4115. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، وَعَبْدَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الأَحْزَابِ فَقَالَ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4115. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின்போது ஒன்றுதிரண்டு தாக்கவந்த எதிர்)கூட்டுப் படையினருக்குக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, “இறைவா! குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்குத் தீர்ப்பவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்றுதிரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.187

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4116. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، وَنَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ مِنَ الْغَزْوِ، أَوِ الْحَجِّ، أَوِ الْعُمْرَةِ، يَبْدَأُ فَيُكَبِّرُ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونُ سَاجِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "".
பாடம் : 30 அகழ்ப் போர்; இதுவே “அஹ்ஸாப்' போராகும்.171 இது (ஹிஜ்ரீ) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
4116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜி லிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, “அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியன. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன்.

நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டுப் படையினரை தோற்கடித்துவிட்டான்.188

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 64
4117. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، أَتَاهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَالَ قَدْ وَضَعْتَ السِّلاَحَ وَاللَّهِ مَا وَضَعْنَاهُ، فَاخْرُجْ إِلَيْهِمْ. قَالَ "" فَإِلَى أَيْنَ "". قَالَ هَا هُنَا، وَأَشَارَ إِلَى بَنِي قُرَيْظَةَ، فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ.
பாடம் : 31 நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4117. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், அகழ்ப் போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்கே (போவது)?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, இங்கே!” என்று “பனூ குறைழா' (என்னும் யூதக்) குலத்தாரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கிச் சைகை காட்டினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.190


அத்தியாயம் : 64
4118. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَى الْغُبَارِ سَاطِعًا فِي زُقَاقِ بَنِي غَنْمٍ مَوْكِبِ جِبْرِيلَ حِينَ سَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بَنِي قُرَيْظَةَ.
பாடம் : 31 நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4118. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் “பனூ குறைழா' குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனிவந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போதுகூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.191


அத்தியாயம் : 64
4119. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ "". فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا. وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي، لَمْ يُرِدْ مِنَّا ذَلِكَ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ.
பாடம் : 31 நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4119. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று கூறினார்கள்.192 வழியிலேயே அஸ்ர் (தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறுசிலர், “(தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; (“வேகமாக அங்கு போய்ச்சேருங்கள்' என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.193


அத்தியாயம் : 64
4120. حَدَّثَنَا ابْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، وَحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، وَإِنَّ أَهْلِي أَمَرُونِي أَنْ آتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَسْأَلَهُ الَّذِينَ كَانُوا أَعْطَوْهُ أَوْ بَعْضَهُ. وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ أَعْطَاهُ أُمَّ أَيْمَنَ، فَجَاءَتْ أُمُّ أَيْمَنَ فَجَعَلَتِ الثَّوْبَ فِي عُنُقِي تَقُولُ كَلاَّ وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ لاَ يُعْطِيكَهُمْ وَقَدْ أَعْطَانِيهَا، أَوْ كَمَا قَالَتْ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَكِ كَذَا "". وَتَقُولُ كَلاَّ وَاللَّهِ. حَتَّى أَعْطَاهَا، حَسِبْتُ أَنَّهُ قَالَ "" عَشَرَةَ أَمْثَالِهِ "". أَوْ كَمَا قَالَ.
பாடம் : 31 நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4120. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனுந் நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக்கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.194

(அந்தச் சமயத்தில்) என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும், அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பைத் தம் வளர்ப்புத் தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்தார்கள். எனது கழுத்தின் மீது துணியைப் போட்டு, “முடியாது! யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார் கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்” என்றோ அல்லது இது போல வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (உம்மு அய்மன் (ரலி) அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்” என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும்வரை (அவற்றை உங்க ளிடம் திருப்பித் தர) முடியாது” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

அனஸ் (ரலி) அவர்கள், “அது போன்று பத்து மடங்கு (தருவதாக' நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ) அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையைக் கூறியதாகவோ நான் எண்ணுகிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4121. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَ أَهْلُ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى سَعْدٍ، فَأَتَى عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا مِنَ الْمَسْجِدِ قَالَ لِلأَنْصَارِ "" قُومُوا إِلَى سَيِّدِكُمْ ـ أَوْ ـ خَيْرِكُمْ "". فَقَالَ "" هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ "". فَقَالَ تَقْتُلُ مُقَاتِلَتَهُمْ وَتَسْبِي ذَرَارِيَّهُمْ. قَالَ "" قَضَيْتَ بِحُكْمِ اللَّهِ "". وَرُبَّمَا قَالَ "" بِحُكْمِ الْمَلِكِ "".
பாடம் : 31 நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழாகுலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகை யிட்டதும்189
4121. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) “பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தம் கோட்டையிலிருந்து)இறங்கிவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரó) அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவரை' அல்லது “உங்களில் சிறந்தவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள்.

பிறகு, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பிற்கு (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்ய வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” அல்லது “அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.195


அத்தியாயம் : 64