402. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ. فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ. فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ.
பாடம் : 32
‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள்.
பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
402. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்து கொண்டேன்:
1. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நாம் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். அப்போது, “இப்ராஹீம் நின்ற இடத்தைத் தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்” (2:125) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.29
2. பர்தா குறித்த இறைவசனமும் (என் கருத்துக்கு இசைவாகவே அருளப் பெற்றது.) :
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவி யரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே! ஏனெனில், அவர் களுடன் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) உரையாடலாம்” என்று சொன்னேன். அப்போது பர்தா குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.
3. (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் ஒன்று சேர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “இறைத் தூதர் உங்களை மணவிலக்குச் செய்து விட்டால், உங்களை விடச் சிறந்த துணைவியரை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கலாம்” என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறே) இந்த இறைவசனம் (66:5) அருளப்பெற்றது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8

403. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 32
‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள்.
பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
403. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (மஸ்ஜித்) குபாவில் சுப்ஹு தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடந்த இரவொன்றில், (தொழு கையின்போது) கஅபாவை முன்னோக்கும் படி ஆணையிட்டு அவர்களுக்குக் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்கித் தொழுங்கள்” என்று கூறினார்.
உடனே (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ‘ஷாம்’ நாட்டை நோக்கித் தொழுதுகொண்டிருந்த அவர்கள், கஅபாவை நோக்கி (அப்படியே தொழுகை யிலேயே) சுழன்று (திரும்பிக்) கொண்டனர்.

404. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا فَقَالُوا أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ "" وَمَا ذَاكَ "". قَالُوا صَلَّيْتَ خَمْسًا. فَثَنَى رِجْلَيْهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ.
பாடம் : 32
‘கிப்லா’ தொடர்பாக வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாக ‘கிப்லா’ அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும்போது) அந்தத் தொழுகையைத் திருப் பித் தொழ வேண்டியதில்லை என்ற கருத்தும்.27
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் சலாம் கொடுத்துவிட்டு மக்களை முன்னோக்கி அமர்ந்துவிட் டார்கள்.
பின்னர் (நபித்தோழர்கள் நினைவூட்டி யதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதார்கள்.28
404. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை ஐந்து ரக்அத்களா கத் தொழு(வித்)துவிட்டார்கள். (தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபியவர்களை நோக்கி) மக்கள், “தொழுகையில் (அதன் ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள்.
மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழு(வித்)தீர்கள் (அதனால்தான் வினவினோம்.)” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கித் திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

405. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ "". ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ "" أَوْ يَفْعَلْ هَكَذَا "".
பாடம் : 33
பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
405. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டி ருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்குச் சஞ் சலத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதி பலிப்பு அவர்களின் முகத்திலும் காணப் பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)னார்கள்.
பிறகு “உங்களில் ஒருவர் தொழுகை யில் நிற்கும்போது, ‘அவர் தம் இறைவனு டன் அந்தரங்கமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கிறான்’. ஆகவே, உங்களில் யாரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப் புறமோ அல்லது தம் பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறி விட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.30

406. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلاَ يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى "".
பாடம் : 33
பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
406. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள்.
உடனே அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)ய பின்னர் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அவரது முகத்திற்கெதிரே அல்லாஹ் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

407. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ.
பாடம் : 33
பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது
407. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையிலுள்ள சுவரில் ‘மூக்குச்சளியை’ அல்லது ‘எச் சிலை’ அல்லது ‘காறல் சளியை’க் கண்டார் கள். உடனே அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)விட்டார்கள்.

408. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا فَقَالَ " إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ".
பாடம் : 34
பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியைச் சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி)விடு தல்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ அசிங்கத்தை மிதித்துவிட்டால் அது ஈரமாக இருந்தால் உடனே அதைக் கழுவிக்கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லை” என்றார்கள்.
408. அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் சுவரில் (காறி உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய்மைப்படுத்தி)னார்கள்.
பிறகு, “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமது முகத்துக்கு எதிரே (கிப்லா திசையில்) உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; தமது இடப் புறமோ பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

410. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي حَائِطِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَاةً فَحَتَّهَا ثُمَّ قَالَ " إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ".
பாடம் : 35
தொழும்போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்ப லாகாது.
410. அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (தூய் மைப்படுத்தி)னார்கள்.
பின்னர், “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட் டால், தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழ வேண்டாம்; தமது வலப் புறத்திலும் உமிழ வேண்டாம்; இடப் புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும்” என்று சொன்னார்கள்.

412. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَتْفِلَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ رِجْلِهِ "".
பாடம் : 35
தொழும்போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்ப லாகாது.
412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு முன்புறமோ தமக்கு வலப் புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும், தமக்கு இடப் புறமோ காலுக் கடியிலோ (துப்பலாம்).
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு முன்புறமோ தமக்கு வலப் புறமோ உங்களில் எவரும் துப்பக் கூடாது. எனினும், தமக்கு இடப் புறமோ காலுக் கடியிலோ (துப்பலாம்).
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
413. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ "".
பாடம் : 36
இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.
413. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் தொழுதுகொண்டிருக்கும்போது தம் இறைவனுடன் தான் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்புறத்திலும் உமிழ வேண்டாம்; தமக்கு வலப் பக்கத்தி லும் உமிழ வேண்டாம்.. எனினும், இடப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழட்டும்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

414. حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ،. أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ، ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى. وَعَنِ الزُّهْرِيِّ سَمِعَ حُمَيْدًا عَنْ أَبِي سَعِيدٍ نَحْوَهُ.
பாடம் : 36
இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.
414. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ன் கிப்லா திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றால் அதைச் சுரண்டி (தூய்மைப் படுத்தி)னார்கள்.
பிறகு “(தொழுகையி-ருக்கும்) ஒருவர் தமக்கு முன்புறமோ அல்லது வலப் புறமோ துப்பக் கூடாது எனத் தடை விதித்துவிட்டு, “எனினும், அவர் தமது இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற் குக் கீழேயோ உமிழட்டும்” என்று சொன் னார்கள்.
(இதன் மூன்றாவது அறிவிப்பாளரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இரண்டாவது அறிவிப்பாளர்) ஹுமைத் (ரஹ்) அவர்களிடம் நேரடியாகவும் இந்த ஹதீஸ் போன்றதைக் கேட்டுள்ளார்கள்.

415. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا "".
பாடம் : 37
பள்ளிவாசலுக்குள் உமிழ்ந்த குற்றத்திற்கான பரிகாரம்
415. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்கான பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
415. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்கான பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
416. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ، فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ، وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ، فَيَدْفِنُهَا "".
பாடம் : 38
பள்ளிவாச-ல் (உமிழப்பட்ட) சளியை (மண்ணுக்குள்) புதைத்துவிடல்
416. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகை யில் இருக்கும்வரை அல்லாஹ்வுடன் தான் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டி ருக்கிறார். (அவ்வாறே) அவர் தமக்கு வலப் புறமாகவும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமக்கு இடப் புறமோ அல்லது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்துவிட்டு, அதை (மண்ணுக்குள்) புதைத்து விடட்டும்.31
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

417. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَحَكَّهَا بِيَدِهِ، وَرُئِيَ مِنْهُ كَرَاهِيَةٌ ـ أَوْ رُئِيَ كَرَاهِيَتُهُ لِذَلِكَ وَشِدَّتُهُ عَلَيْهِ ـ وَقَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ ـ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ ـ فَلاَ يَبْزُقَنَّ فِي قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ "". ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَزَقَ فِيهِ، وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، قَالَ "" أَوْ يَفْعَلُ هَكَذَا "".
பாடம் : 39
(ஒருவர் தொழுதுகொண்டிருக்கும்போது) அவரையும் மீறி எச்சில் வந்துவிட்டால், அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளட்டும்!
417. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ன்) கிப்லா திசையில் (உள்ள சுவரில்) சளியைக் கண்டார்கள். (இதைக் கண்ட) உடன் ‘நபி (ஸல்) அவர்களிடம் வெறுப்பு காணப்பட்டது’ அல்லது ‘இந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதும் அதன் மீது அவர்கள் காட்டிய கடுமையும் நேரடியாகத் தெரிந்தது.’ அப்போது அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது ‘தம் இறை வனுடனேயே உரையாடுகிறார்’. அல்லது ‘அவருக்கும் அவரது கிப்லாவுக்கும் இடையில் அவருடைய இறைவன் இருக்கிறான்’. எனவே, அவர் தமது கிப்லா திசையில் கட்டாயமாக உமிழ வேண்டாம்.. எனினும், அவர் தமக்கு இடப் புறமோ அல்லது வலப் புறமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
பிறகு, “தமது மேல்துண்டின் ஓர் ஓரத்தைப் பிடித்து அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் தேய்த்துக்காட்டி, “அல்லது அவர் இவ்வாறு செய்துகொள்ளலாம்” என்றார்கள்.

418. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ خُشُوعُكُمْ وَلاَ رُكُوعُكُمْ، إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي "".
பாடம் : 40
தொழுகையை முழுமையாக நிறைவேற்றுமாறு மக்களுக்கு இமாம் அறிவுரை கூறுவதும் கிப்லா பற்றிய குறிப்பும்
418. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதுதான் என் கிப்லா திசை (என்பதால் எனக்குப் பின்னால் நின்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டி ருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பணிதலும் (சஜ்தாவும்) உங்களது குனிதலும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
418. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதுதான் என் கிப்லா திசை (என்பதால் எனக்குப் பின்னால் நின்று நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக்கொண்டி ருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது பணிதலும் (சஜ்தாவும்) உங்களது குனிதலும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 8
419. حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةً ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ، فَقَالَ فِي الصَّلاَةِ وَفِي الرُّكُوعِ "" إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَائِي كَمَا أَرَاكُمْ "".
பாடம் : 40
தொழுகையை முழுமையாக நிறைவேற்றுமாறு மக்களுக்கு இமாம் அறிவுரை கூறுவதும் கிப்லா பற்றிய குறிப்பும்
419. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். பின்னர் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி தொழுகையைப் பற்றியும் (அதன் முக்கிய நிலைகளில் ஒன்றான) ருகூஉ (குனிதல்) பற்றியும் (அவற்றைக் குறைவின்றி நிறைவேற்றுமாறு) கூறினார்கள். அப்போது, “(உங்களை முன்புறமாக) நான் காண்பதைப் போன்றே, எனது முதுகுக்குப் பின்புற மாகவும் உங்களை நான் காண்கிறேன்” என்று கூறினார்கள்.32

420. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا.
பாடம் : 41
(ஒரு பள்ளிவாசல் குறித்து “இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல்” என்று கூற லாமா?33
420. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப் பட்ட) குதிரைகளுக்கிடையே ‘ஹஃப்யா’ எனும் இடத்தி-ருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘ஸனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்றாகும்.
மெ-யவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே அந்த ‘ஸனிய்யத்துல் வதா’வி-ருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இந்தப் பந்தயங்களில் கலந்துகொண்ட வர்களில் ஒருவராக இருந்தார்கள்.

421. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ "" انْثُرُوهُ فِي الْمَسْجِدِ "". وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ، وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلاَّ أَعْطَاهُ، إِذْ جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خُذْ "". فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعُهُ إِلَىَّ. قَالَ "" لاَ "". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ "" لاَ "". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ. قَالَ "" لاَ "". قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ. قَالَ "" لاَ "". فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ.
பாடம் : 42
பள்ளிவாசலில் (பணத்தைப்) பங்கீடு (தானம்) செய்வதும் பழக்குலைகளைப் தொங்க விடுவதும்
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(‘பழக்குலை’ என்பதைக் குறிக்க இங்கு மூலத்தில் ‘அல்கின்வு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘அல்கின்வு’ என்ப தற்கு ‘பழக்குலை’ என்பதே பொருளாகும். இதன் இருமை: கின்வானி. இதன் பன்மை ‘கின்வான்’ என்பதாகும். (வாய்பாட்டில்) ஸின்வ், ஸின்வானி (கிளை மரம்) எனும் சொற்களைப் போனறே (இதுவும் அமைந் துள்ளது).
421. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனி-ருந்து (கணிசமான) நிதி கொண்டுவரப் பட்டது. நபி (ஸல்) அவர்கள், “இதைப் பள்ளிவாச-ல் கொட்டிவையுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். -அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வங்களிலேயே அதிகமானதாக இருந்தது.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏறிட்டுப்பார்க்காமல் தொழுகைக் காகச் சென்றார்கள். தொழுகையை முடித்துவிட்டு அந்தச் செல்வம் நோக்கி வந்து (அதன் அருகில்) அமர்ந்துகொண்டு ஒருவர் விடாமல் தாம் காண்பவர்களுக்கெல்லாம் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் பெரிய தந்தை) அப்பாஸ்
(ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ர் போரில் தங்களால் கைது செய்யப்பட்டபின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்; (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத்தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது துணியில் அதை (அள்ளி) அள்ளிப்போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் செல்ல முனைந்தார்கள். அவர் களால் (அதைத் தூக்க) முடியவில்லை. ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவரை எனக்கு இதைத் தூக்கிவிடச் சொல்லுங் கள்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “இல்லை (நான் யாரிடமும் சொல்லமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களாவது என் (தோள்)மீது தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள். பிறகு அதி-ருந்து சிறிதளவைக் கொட்டிவிட்டு. பிறகு அதைத் தூக்கிச் செல்ல முயன்றார்கள். (அப்போதும் அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை.)
எனவே, (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தூக்கி விடுமாறு இவர்களில் ஒருவரிடம் கூறுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை (கூறமாட்டேன்)” என்று சொல்-விட்டார்கள். “நீங்களாவது என் (தோள்)மீது இதைத் தூக்கிவையுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இல்லை (முடியாது)” என்று சொல்-விட்டார்கள்.
பிறகு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதி-ருந்து இன்னும் சிறிதளவைக் கீழே கொட்டிவிட்டு, அதைத் தூக்கி தம் தோள்கள்மீது வைத்துக்கொண்டு நடக்கலானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் பேராசை யைக் கண்டு வியப்படைந்து அவர்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார்கள அங்கு அந்த நிதியி-ருந்து ஒரேயொரு திர்ஹம்கூட எஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தைவிட்டு எழுந்தார்கள்.