4006. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، سَمِعَ أَبَا مَسْعُودٍ الْبَدْرِيَّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ "".
பாடம் : 12
4006. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செய்யும் செலவும் தர்மமே ஆகும்.
இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48
அத்தியாயம் : 64

4007. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ أَخَّرَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ الْعَصْرَ وَهْوَ أَمِيرُ الْكُوفَةِ، فَدَخَلَ أَبُو مَسْعُودٍ عُقْبَةُ بْنُ عَمْرٍو الأَنْصَارِيُّ جَدُّ زَيْدِ بْنِ حَسَنٍ شَهِدَ بَدْرًا فَقَالَ لَقَدْ عَلِمْتَ نَزَلَ جِبْرِيلُ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَمْسَ صَلَوَاتٍ ثُمَّ قَالَ هَكَذَا أُمِرْتَ. كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ.
பாடம் : 12
4007. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கூஃபாவின் ஆளுநர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (ஒருநாள்) அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி விட்டார்கள். அப்போது ஸைத் பின் ஹசன் (ரஹ்) அவர்களின் பாட்டனாரும் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் வந்து, “(முஃகீரா அவர்களே!) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஐவேளை தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரங்களில்) தொழுதார் கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஐந்து (நேரத்) தொழு கைகளை (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “இவ்வா(று குறித்த நேரங்களில் தொழுதுகாட்டுமா)றே நான் பணிக்கப்பட்டுள்ளேன் என்று (கூறியதெல் லாம்) உங்களுக்குத் தெரியுமே!” என்று கேட்டார்கள்.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களது ஆட்சிக் காலத்தில் (ஒரு நாள், அன்னார் தொழுகையைத் தாமதப்படுத்தியபோது) அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தெரிவித்தார்கள்.49

4008. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ "". قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَلَقِيتُ أَبَا مَسْعُودٍ وَهْوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَسَأَلْتُهُ فَحَدَّثَنِيهِ.
பாடம் : 12
4008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகிறாரோ அந்த இரண்டும் அவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக ஆகிவிடும்.
இதை பத்ர் போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது (அல்கமா (ரஹ்) அவர்களிடம் கூறியதைப் போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள்.

4009. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 12
4009. “நபி (ஸல்) அவர்களின் தோழரும், அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்து கொண்டவருமான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள், “நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்...” (என்று கூறித் தொடங்கும்) இந்த ஹதீஸின் முழு வடிவத்தை மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.50

4010. حَدَّثَنَا أَحْمَدُ ـ هُوَ ابْنُ صَالِحٍ ـ حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ ـ وَهْوَ أَحَدُ بَنِي سَالِمٍ وَهْوَ مِنْ سَرَاتِهِمْ ـ عَنْ حَدِيثِ، مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ، فَصَدَّقَةُ.
பாடம் : 12
4010. இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ சாலிம் குலத்தில் ஒருவரும் அவர்களில் சிறப்புக்குரியவருமான ஹுஸைன் பின் முஹம்மத் (ரலி) அவர்களிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறித்து மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைப் பற்றி நான் கேட்டபோது, அதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.51

4011. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ رَبِيعَةَ، وَكَانَ، مِنْ أَكْبَرِ بَنِي عَدِيٍّ وَكَانَ أَبُوهُ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ عُمَرَ اسْتَعْمَلَ قُدَامَةَ بْنَ مَظْعُونٍ عَلَى الْبَحْرَيْنِ، وَكَانَ شَهِدَ بَدْرًا، وَهُوَ خَالُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَفْصَةَ رضى الله عنهم.
பாடம் : 12
4011. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ அதீ குலத்தில் பெரியவரும், நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்ட ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்களின் மகனுமான அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) அறிவித் தார்கள்:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களை பஹ்ரைன் (நாட்டின்) ஆளுநராக நியமித்தார்கள். அவர் பத்ர் போரில் கலந்துகொண்டவராவார். மேலும் அவர் (உமர் (ரலி) அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் உமருக்கும், (உமர் (ரலி) அவர்களின் மகள்) ஹஃப்ஸாவுக் கும் தாய்மாமன் ஆவார். அல்லாஹ் இவர்கள் அனைவரைக் குறித்தும் அன்பு கொள்வானாக!
4012, 4013 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான என் தந்தையின் இரு சகோதரர்கள் (ளுஹைர், முளஹ்ஹர்) கூறினர்.52
இதை சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் சாலிம் அவர்களிடம், “நீங்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்' என்று கூறிவிட்டு, “ராஃபிஉ தம்மீது சிரமத்தை ஏற்படுத்திக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

4014. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ شَدَّادِ بْنِ الْهَادِ اللَّيْثِيَّ، قَالَ رَأَيْتُ رِفَاعَةَ بْنَ رَافِعٍ الأَنْصَارِيَّ، وَكَانَ شَهِدَ بَدْرًا.
பாடம் : 12
4014. அப்துல்லாஹ் பின் ஷத்தாத் பின் அல்ஹாத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பத்ரில் கலந்துகொண்டவரான ரிஃபாஆ பின் ராஃபிஉ அல்அன்சாரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன்...53

4015. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَىٍّ، وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ إِلَى الْبَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ صَالَحَ أَهْلَ الْبَحْرَيْنِ، وَأَمَّرَ عَلَيْهِمِ الْعَلاَءَ بْنَ الْحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ، فَوَافَوْا صَلاَةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُمْ ثُمَّ قَالَ "" أَظُنُّكُمْ سَمِعْتُمْ أَنَّ أَبَا عُبَيْدَةَ قَدِمَ بِشَىْءٍ "". قَالُوا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنِّي أَخْشَى أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كَمَا بُسِطَتْ عَلَى مَنْ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا، وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ "".
பாடம் : 12
4015. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஆமிர் பின் லுஅய் குலத் தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து (ஜிஸ்யா) காப்புவரியை வசூலித்துக் கொண்டுவரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனை செய்யும்) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினர்.
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அபூஉபைதா ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கொரு நற்செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. மாறாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப்போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அது அவர்களை அழித்துவிட்டதைப்போல் உங்களையும் அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.54

4016. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ كُلَّهَا.
பாடம் : 12
4016. இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்பு (வகை)களையும் கொல்பவர் களாக இருந்தார்கள்;-
அத்தியாயம் : 64
4016. இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்பு (வகை)களையும் கொல்பவர் களாக இருந்தார்கள்;-
அத்தியாயம் : 64
4017. حَتَّى حَدَّثَهُ أَبُو لُبَابَةَ الْبَدْرِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
பாடம் : 12
4017. “வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என்று பத்ர் போரில் கலந்து கொண்டவரான அபூலுபாபா (என்ற ரிஃபாஆ பின் அப்தில் முன்திர்-ரலி) அவர்கள் கூறியபோது, அதைக் கொல்வதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.55
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4018. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ائْذَنْ لَنَا فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. قَالَ "" وَاللَّهِ لاَ تَذَرُونَ مِنْهُ دِرْهَمًا "".
பாடம் : 12
4018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பத்ர் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் விடுதலை தொடர்பாக), “எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத்தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினர்.
நபி (ஸல்) அவர்கள், “அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக்கூட (வாங்காமல்) ஒருபோதும் விட்டுவிடாதீர் கள்” என்று கூறினார்கள்.56

4019. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيٍّ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، ثُمَّ الْجُنْدَعِيُّ أَنَّ عُبَيْدَ، اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِقْدَادَ بْنَ عَمْرٍو الْكِنْدِيَّ، وَكَانَ حَلِيفًا لِبَنِي زُهْرَةَ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلاً مِنَ الْكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَىَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ. آأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقْتُلْهُ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَىَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ "".
பாடம் : 12
4019. உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளர் ஒருவரை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவர் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டார். பிறகு, அவர் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக்கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னார். இதை அவர் சொன்னதற்குப் பிறகு நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்.) அவரைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டார். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னார்!” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவரைக் கொன்றுவிட்டால்அவரைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவர் வந்துவிடுவார். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவரிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4020. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ "". فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَقَالَ آنْتَ أَبَا جَهْلٍ قَالَ ابْنُ عُلَيَّةَ قَالَ سُلَيْمَانُ هَكَذَا قَالَهَا أَنَسٌ. قَالَ أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ قَالَ سُلَيْمَانُ أَوْ قَالَ قَتَلَهُ قَوْمُهُ. قَالَ وَقَالَ أَبُو مِجْلَزٍ قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي.
பாடம் : 12
4020. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைத் தேடிச்) சென்றார்கள்.
அப்போது அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), “அபூஜஹ்லே! நீயா?” என்றும் கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“இப்படித்தான் இந்த நிகழ்ச்சியை (எனக்கு) அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும், “இப்னு மஸ்ஊத் அவர்கள் (அபூஜஹ்லை நோக்கி), “அபூஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... யாரும் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தவனாக) அபூஜஹ்ல் சொன்னான்” என சுலைமான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.57
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந் திருக்குமே!)” என்று அபூஜஹ்ல் கூறியதாக இடம்பெற்றுள்ளது.58

4021. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْتُ لأَبِي بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا مِنَ الأَنْصَارِ. فَلَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ شَهِدَا بَدْرًا. فَحَدَّثْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ هُمَا عُوَيْمُ بْنُ سَاعِدَةَ، وَمَعْنُ بْنُ عَدِيٍّ.
பாடம் : 12
4021. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60

4022. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، كَانَ عَطَاءُ الْبَدْرِيِّينَ خَمْسَةَ آلاَفٍ خَمْسَةَ آلاَفٍ. وَقَالَ عُمَرُ لأُفَضِّلَنَّهُمْ عَلَى مَنْ بَعْدَهُمْ.
பாடம் : 12
4022. கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் கலந்துகொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.

4023. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ، وَذَلِكَ أَوَّلَ مَا وَقَرَ الإِيمَانُ فِي قَلْبِي.
பாடம் : 12
4023. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்' (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.61

4024. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي أُسَارَى بَدْرٍ "" لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ "". وَقَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَقَعَتِ الْفِتْنَةُ الأُولَى ـ يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ بَدْرٍ أَحَدًا، ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّانِيَةُ ـ يَعْنِي الْحَرَّةَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدًا ثُمَّ وَقَعَتِ الثَّالِثَةُ فَلَمْ تَرْتَفِعْ وَلِلنَّاسِ طَبَاخٌ.
பாடம் : 12
4024. நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்:
முத்இம் பின் அதீ உயிரோடிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.62
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65

4025. حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم كُلٌّ ـ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ قَالَتْ فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ بِئْسَ مَا قُلْتِ، تَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا فَذَكَرَ حَدِيثَ الإِفْكِ.
பாடம் : 12
4025. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்...
பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66