3736. وَقَالَ نُعَيْمٌ عَنِ ابْنِ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي مَوْلًى، لأُسَامَةَ بْنِ زَيْدٍ. أَنَّ الْحَجَّاجَ بْنَ أَيْمَنَ ابْنِ أُمِّ أَيْمَنَ،، وَكَانَ، أَيْمَنُ ابْنُ أُمِّ أَيْمَنَ أَخَا أُسَامَةَ لأُمِّهِ، وَهْوَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَرَآهُ ابْنُ عُمَرَ لَمْ يُتِمَّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ فَقَالَ أَعِدْ.
பாடம் : 18 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு114
3736. உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தபோது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர் (ரலி) அவர்கள், “மீண்டும் தொழுங்கள்” என்று சொன்னார்கள்.

உம்மு அய்மனின் மகனான அய்மன், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார்.


அத்தியாயம் : 62
3737. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَحَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي حَرْمَلَةُ، مَوْلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ بَيْنَمَا هُوَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِذْ دَخَلَ الْحَجَّاجُ بْنُ أَيْمَنَ فَلَمْ يُتِمَّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَقَالَ أَعِدْ. فَلَمَّا وَلَّى قَالَ لِي ابْنُ عُمَرَ مَنْ هَذَا قُلْتُ الْحَجَّاجُ بْنُ أَيْمَنَ ابْنِ أُمِّ أَيْمَنَ. فَقَالَ ابْنُ عُمَرَ لَوْ رَأَى هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَحَبَّهُ، فَذَكَرَ حُبَّهُ وَمَا وَلَدَتْهُ أُمُّ أَيْمَنَ. قَالَ وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي عَنْ سُلَيْمَانَ وَكَانَتْ حَاضِنَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 18 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு114
3737. உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் பின் அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தமது ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜை நோக்கி), “திரும்பத் தொழுங்கள்” என்று சொன்னார்கள்.

அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான், “உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ்தான் இவர்” என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் நேசித்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், (உசாமா (ரலி) அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீது கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

அறிவிப்பாளர் சுலைமான் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.

அத்தியாயம் : 62
3738. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا رَأَى رُؤْيَا قَصَّهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، وَكُنْتُ غُلاَمًا أَعْزَبَ، وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ، فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ، فَإِذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَىِ الْبِئْرِ، وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُهُمْ، فَجَعَلْتُ أَقُولُ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ، أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ. فَلَقِيَهُمَا مَلَكٌ آخَرُ فَقَالَ لِي لَنْ تُرَاعَ. فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ.
பாடம் : 19 அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்118
3738. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு மனிதர் கனவொன்றைக் காண்பாராயின் நபி (ஸல்) அவர்களிடம் அதை விவரித்துச் சொல்வார். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாசலில் நான் உறங்குவது வழக்கம்.

(ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்: வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. கிணற்றின் இரு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர்.

உடனே நான், “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோரு கின்றேன். நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் நான் கோருகின்றேன்” என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், “இனி ஒருபோதும் நீங்கள் பீதியடைய மாட்டீர்கள்” என்று சொன்னார். நான் இதை (என் சகோதரியும் நபி (ஸல்) அவர் களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன் னேன்.


அத்தியாயம் : 62
3739. فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي بِاللَّيْلِ "". قَالَ سَالِمٌ فَكَانَ عَبْدُ اللَّهِ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ إِلاَّ قَلِيلاً.
பாடம் : 19 அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்118
3739. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று சொன்னார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் மகன்) சாலிம் (ரஹ்) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்” என்று கூறுகிறார்கள்.119


அத்தியாயம் : 62
3740. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أُخْتِهِ، حَفْصَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ "".
பாடம் : 19 அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்118
3740. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்” என்று சொன்னார்கள்.

இதைத் தம் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 62
3742. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ،، قَالَ قَدِمْتُ الشَّأْمَ فَصَلَّيْتُ رَكْعَتَيْنِ، ثُمَّ قُلْتُ اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، فَأَتَيْتُ قَوْمًا فَجَلَسْتُ إِلَيْهِمْ، فَإِذَا شَيْخٌ قَدْ جَاءَ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِي، قُلْتُ مَنْ هَذَا قَالُوا أَبُو الدَّرْدَاءِ. فَقُلْتُ إِنِّي دَعَوْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا فَيَسَّرَكَ لِي، قَالَ مِمَّنْ أَنْتَ قُلْتُ مِنْ أَهْلِ الْكُوفَةِ. قَالَ أَوَلَيْسَ عِنْدَكُمُ ابْنُ أُمِّ عَبْدٍ صَاحِبُ النَّعْلَيْنِ وَالْوِسَادِ وَالْمِطْهَرَةِ وَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم أَوَلَيْسَ فِيكُمْ صَاحِبُ سِرِّ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي لاَ يَعْلَمُ أَحَدٌ غَيْرُهُ ثُمَّ قَالَ كَيْفَ يَقْرَأُ عَبْدُ اللَّهِ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى}، فَقَرَأْتُ عَلَيْهِ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ وَاللَّهِ لَقَدْ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِيهِ إِلَى فِيَّ.
பாடம் : 20 அம்மார் பின் யாசிர் (ரலி), ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்120
3742. அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு, “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு” என்று பிரார்த் தித்தேன். பிறகு ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். மக்கள், “(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா” என்று பதிலளித்தார்கள்.

நான், அபுத்தர்தா (ரலி) அவர்களை நோக்கி, “எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆகவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்” என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், “கூஃபாவாசி” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “நபியவர்களின் காலணிகளையும் தலையணையையும் தண்ணீர்க் குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்) உங்க ளிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிட மிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார்-ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் (ஹுதைஃபா-ரலி) உங்களிடையே இல்லையா?” என்று கேட்டுவிட்டு, பிறகு, “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், “வல்லய்லி இதா யஃக்ஷா' என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92ஆம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகின்றார்” என்று கேட்டார்கள்.

நான், “அவர்களுக்கு, “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா வத்தகரி வல்உன்ஸா' (இப்படித்தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி (ஸல்) அவர்கள் தமது வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்” என்றார்கள்.121


அத்தியாயம் : 62
3743. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ ذَهَبَ عَلْقَمَةُ إِلَى الشَّأْمِ، فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ قَالَ اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا. فَجَلَسَ إِلَى أَبِي الدَّرْدَاءِ فَقَالَ أَبُو الدَّرْدَاءِ مِمَّنْ أَنْتَ قَالَ مِنْ أَهْلِ الْكُوفَةِ. قَالَ أَلَيْسَ فِيكُمْ ـ أَوْ مِنْكُمْ ـ صَاحِبُ السِّرِّ الَّذِي لاَ يَعْلَمُهُ غَيْرُهُ يَعْنِي حُذَيْفَةَ. قَالَ قُلْتُ بَلَى. قَالَ أَلَيْسَ فِيكُمُ ـ أَوْ مِنْكُمُ ـ الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم يَعْنِي مِنَ الشَّيْطَانِ، يَعْنِي عَمَّارًا. قُلْتُ بَلَى. قَالَ أَلَيْسَ فِيكُمْ ـ أَوْ مِنْكُمْ ـ صَاحِبُ السِّوَاكِ أَوِ السِّرَارِ قَالَ بَلَى. قَالَ كَيْفَ كَانَ عَبْدُ اللَّهِ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى} قُلْتُ {وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ مَا زَالَ بِي هَؤُلاَءِ حَتَّى كَادُوا يَسْتَنْزِلُونِي عَنْ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 20 அம்மார் பின் யாசிர் (ரலி), ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்120
3743. அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரு ரக்அத்கள் தொழு)ததும் “இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித் தேன். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “கூஃபாவாசி' என்றேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங் களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன்.

அவர்கள், “தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று கேட்டார். - அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்- நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் (பல் துலக்கும்) “மிஸ்வாக்' குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்- அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்- (இப்னு மஸ்ஊத் -ரலி) அவர்கள் உங்களிடம் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்கள் “வல்லய்லி இதா யஃக்ஷா வந்நஹாரி இதா தஜல்லா' என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?” என்று கேட்க, “வத்தகரி வல்உன்ஸா” என்று (“வமா கலக்க' என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை) விட்டுக்கொடுத்துவிடும்படி என்னை எச்சரிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.122

இதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 62
3744. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا، وَإِنَّ أَمِينَنَا أَيَّتُهَا الأُمَّةُ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ "".
பாடம் : 21 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்123
3744. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக் குரியவர் அபூஉபைதா பின் அல்—ர்ராஹ் அவர்கள்தான்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3745. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَهْلِ نَجْرَانَ "" لأَبْعَثَنَّ ـ يَعْنِي عَلَيْكُمْ ـ يَعْنِي أَمِينًا ـ حَقَّ أَمِينٍ "". فَأَشْرَفَ أَصْحَابُهُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ رضى الله عنه.
பாடம் : 21 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்123
3745. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளிடம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்” என்று சொன் னார்கள்.

அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த “அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.124

அத்தியாயம் : 62
3746. حَدَّثَنَا صَدَقَةُ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبُو مُوسَى، عَنِ الْحَسَنِ، سَمِعَ أَبَا بَكْرَةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ إِلَى جَنْبِهِ، يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً، وَيَقُولُ "" ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ "".
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3746. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது (உரையாற்றியபடி) இருக்க ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்)அவர்களின் பக்கவாட்டில் அமர்ந்திருந் தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களையும் மறுமுறை ஹசன் (ரலி) அவர்களையும் நோக்கியபடி, “இந்த என் (மகளின்) மகன் மக்களின் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்த விருக்கிறான்” என்று சொல்ல நான் கேட்டேன்.128


அத்தியாயம் : 62
3747. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ وَيَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا "". أَوْ كَمَا قَالَ.
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3747. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சிறுவர்களாயிருந்த) என்னையும் ஹசன் (ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, “இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.129


அத்தியாயம் : 62
3748. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أُتِيَ عُبَيْدُ اللَّهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الْحُسَيْنِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَجُعِلَ فِي طَسْتٍ، فَجَعَلَ يَنْكُتُ، وَقَالَ فِي حُسْنِهِ شَيْئًا. فَقَالَ أَنَسٌ كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ مَخْضُوبًا بِالْوَسْمَةِ.
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3748. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களுடைய மகன் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டபின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் கொண்டுவரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் பின் ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுசைன் (ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.130

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிலேயே ஹுசைன் (ரலி) அவர்கள்தான் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். “வஸ்மா' என்னும் ஒரு வகை மூலிகையால் தமது (தாடிக்கும் முடிக்கும்) சாயமிட்டிருந்தார்கள்.


அத்தியாயம் : 62
3749. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيٌّ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَسَنُ عَلَى عَاتِقِهِ يَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ "".
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3749. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று பிரார்த்திக்கக் கண்டேன்.


அத்தியாயம் : 62
3750. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ وَحَمَلَ الْحَسَنَ وَهْوَ يَقُولُ بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ، لَيْسَ شَبِيهٌ بِعَلِيٍّ. وَعَلِيٌّ يَضْحَكُ.
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3750. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைச் சுமந்தபடி, “என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களைத்தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை” என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அதைக் கேட்டு) சிரித்துக்கொண்டிருந்தார்கள்.131


அத்தியாயம் : 62
3751. حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، وَصَدَقَةُ، قَالاَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو بَكْرٍ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3751. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.132

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3752. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ،. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسٌ، قَالَ لَمْ يَكُنْ أَحَدٌ أَشْبَهَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ.
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3752. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் பின் அலீ (ரலி) அவர்களை விட நபி (ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.133

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3753. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، سَمِعْتُ ابْنَ أَبِي نُعْمٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، وَسَأَلَهُ، عَنِ الْمُحْرِمِ،، قَالَ شُعْبَةُ أَحْسِبُهُ يَقْتُلُ الذُّبَابَ فَقَالَ أَهْلُ الْعِرَاقِ يَسْأَلُونَ عَنِ الذُّبَابِ وَقَدْ قَتَلُوا ابْنَ ابْنَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُمَا رَيْحَانَتَاىَ مِنَ الدُّنْيَا "".
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு125 பாடம் : 22 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்126 “நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக்கொண் டார்கள்” என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் கள்.127
3753. அப்துர் ரஹ்மான் பின் அபீ நுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் கட்டியவரைக் குறித்து வினவினார்.

-அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்துக் கேட்டார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்-

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்துக் கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கெனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் மகனை (ஹுசைனை)க் கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் இருவரும் (ஹசன் (ரலி) அவர்களும் ஹுசைன் (ரலி) அவர்களும்) உலகின் இரு துளசி மலர்கள் ஆவர்” என்று (அவர்களைக் குறித்து) சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.134

அத்தியாயம் : 62
3754. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ عُمَرُ يَقُولُ أَبُو بَكْرٍ سَيِّدُنَا، وَأَعْتَقَ سَيِّدَنَا. يَعْنِي بِلاَلاً.
பாடம் : 23 அபூபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்135 “(பிலாலே!) சொர்க்கத்தில் உம்முடைய காலணிகளின் ஓசையை எனக்கு முன்பாக நான் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.136
3754. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்” என்று சொல்வார்கள்.


அத்தியாயம் : 62
3755. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، أَنَّ بِلاَلاً، قَالَ لأَبِي بَكْرٍ إِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِنَفْسِكَ فَأَمْسِكْنِي، وَإِنْ كُنْتَ إِنَّمَا اشْتَرَيْتَنِي لِلَّهِ فَدَعْنِي وَعَمَلَ اللَّهِ.
பாடம் : 23 அபூபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்135 “(பிலாலே!) சொர்க்கத்தில் உம்முடைய காலணிகளின் ஓசையை எனக்கு முன்பாக நான் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.136
3755. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்களுக் காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனா விலேயே) வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ் வுக்காக செயலாற்ற விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.137

அத்தியாயம் : 62