3711. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3711. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த “ஃபய்உ' செல்வத்திலிருந்து தமக்கு நபி (ஸல்) அவர்களிடமிருந்து வர வேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆளனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற நிலத்தையும் “ஃபதக்' பிரதேசத்திலிருந்த நிலத்தையும் கைபரில் கிடைத்த “குமுஸ்' நிதியில் மீதியையும் அவர் கேட்டார்.86


அத்தியாயம் : 62
3712. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ. فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا فَهْوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا الْمَالِ ـ يَعْنِي مَالَ اللَّهِ ـ لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى الْمَأْكَلِ ". وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَلأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَتَشَهَّدَ عَلِيٌّ، ثُمَّ قَالَ إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ. وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَقَّهُمْ. فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3712. அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மம்தான்' என்று சொன்னார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இந்தச் செல்வத்திலிருந்துதான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்துதான். அதில் தங்கள் உணவுச் செலவைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் தர்மப் பொருட்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழிமுறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அவ்வாறே நான் நடந்துகொள்வேன்” என்று சொன்னார்கள்.

உடனே, அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, “அபூபக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். -மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களுடைய உரிமையையும் எடுத்துரைத்தார்கள்- உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள்.

“என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! என் உறவினர் களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்துகொள்வதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.87


அத்தியாயம் : 62
3713. أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهم ـ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3713. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3714. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي "".
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3714. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88


அத்தியாயம் : 62
3715. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاطِمَةَ ابْنَتَهُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهَا، فَسَارَّهَا بِشَىْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا فَضَحِكَتْ، قَالَتْ فَسَأَلْتُهَا عَنْ ذَلِكَ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3715. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.

நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89


அத்தியாயம் : 62
3716. فَقَالَتْ سَارَّنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَنِي أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ أَهْلِ بَيْتِهِ أَتْبَعُهُ فَضَحِكْتُ.
பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பும்84 நபி (ஸல்) அவர்கள், “ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார்” என்று சொன்னார்கள்.85
3716. அதற்கு ஃபாத்திமா, “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியி லேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களுடைய குடும்பத்தாரில் நான்தான் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப்போகும் முதல் ஆள் என்று சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.90

அத்தியாயம் : 62
3717. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَخْبَرَنِي مَرْوَانُ بْنُ الْحَكَمِ، قَالَ أَصَابَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رُعَافٌ شَدِيدٌ سَنَةَ الرُّعَافِ، حَتَّى حَبَسَهُ عَنِ الْحَجِّ وَأَوْصَى، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ قَالَ اسْتَخْلِفْ. قَالَ وَقَالُوهُ قَالَ نَعَمْ. قَالَ وَمَنْ فَسَكَتَ، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ ـ أَحْسِبُهُ الْحَارِثَ ـ فَقَالَ اسْتَخْلِفْ. فَقَالَ عُثْمَانُ وَقَالُوا فَقَالَ نَعَمْ. قَالَ وَمَنْ هُوَ فَسَكَتَ قَالَ فَلَعَلَّهُمْ قَالُوا الزُّبَيْرَ قَالَ نَعَمْ. قَالَ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَخَيْرُهُمْ مَا عَلِمْتُ، وَإِنْ كَانَ لأَحَبَّهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3717. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

“சில்லு மூக்கு' நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில்93 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுக்கும் மூக்கில் கடுமையாகக் குருதி கொட்டும் நோய் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷியரில் ஒரு மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படி நியமிக்கச்) சொன்னார்களா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்” என்றார். “யாரை நியமிப்பது?” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்தார்.

அப்போது இன்னொரு மனிதர் வந்தார். -அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் (பின் ஹகம்) என்று நான் நினைக்கிறேன் -அவரும், “(உஸ்மான் (ரலி) அவர்களே! உங்களுக்குப்பின்) ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “மக்கள் (இப்படிச்) சொன்னார்களா?” என்று கேட்க அவர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “யாரை நியமிப்பது?” என்று கேட்க. அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மௌனமாயிருந்துவிட்டார்.

பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள், “அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்” என்று சொல்ல, அந்த மனிதர், “ஆம்” என்று பதிலளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் (ரலி) அவர்களே மக்களில் சிறந்தவர். (யாரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை சொன்னார்களோ) அவர்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான வராக அவர் இருந்தார்” என்று சொன் னார்கள்.


அத்தியாயம் : 62
3718. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي، سَمِعْتُ مَرْوَانَ، كُنْتُ عِنْدَ عُثْمَانَ، أَتَاهُ رَجُلٌ فَقَالَ اسْتَخْلِفْ. قَالَ وَقِيلَ ذَاكَ قَالَ نَعَمْ، الزُّبَيْرُ. قَالَ أَمَا وَاللَّهِ إِنَّكُمْ لَتَعْلَمُونَ أَنَّهُ خَيْرُكُمْ. ثَلاَثًا.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3718. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, “(உங்களுக்குப்பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்” என்று சொன்னார். உஸ்மான் (ரலி) அவர்கள், “அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?” என்று கேட்க அம்மனிதர், “ஆம்; ஸுபைர் (ரலி) அவர்களைத்தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)” என்று பதில் சொன்னார். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.94


அத்தியாயம் : 62
3719. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ ـ هُوَ ابْنُ أَبِي سَلَمَةَ ـ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ "".
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் பின் அல்அவ்வாம் ஆவார்.95

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96


அத்தியாயம் : 62
3720. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا {عَبْدُ اللَّهِ} أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ كُنْتُ يَوْمَ الأَحْزَابِ جُعِلْتُ أَنَا وَعُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فِي النِّسَاءِ، فَنَظَرْتُ فَإِذَا أَنَا بِالزُّبَيْرِ، عَلَى فَرَسِهِ، يَخْتَلِفُ إِلَى بَنِي قُرَيْظَةَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، فَلَمَّا رَجَعْتُ قُلْتُ يَا أَبَتِ، رَأَيْتُكَ تَخْتَلِفُ. قَالَ أَوَهَلْ رَأَيْتَنِي يَا بُنَىَّ قُلْتُ نَعَمْ. قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ يَأْتِ بَنِي قُرَيْظَةَ فَيَأْتِينِي بِخَبَرِهِمْ "". فَانْطَلَقْتُ، فَلَمَّا رَجَعْتُ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ فَقَالَ "" فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3720. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களின் வீட்டுப்) பெண்களி டையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்கள் தமது குதிரையில் ஏறி (யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு- அல்லது மூன்று- முறை போய் வந்துகொண்டி ருப்பதைப் பார்த்தேன்.

நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, “என் தந்தையே! தாங்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந் ததை நான் பார்த்தேன்” என்று சொன்னேன். அவர்கள், “என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், “ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்துகொண்டு) திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரை யும் சேர்த்து, “என் தந்தையும் என் தாயும் உமக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 62
3721. حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالُوا لِلزُّبَيْرِ يَوْمَ الْيَرْمُوكِ أَلاَ تَشُدُّ فَنَشُدَّ مَعَكَ فَحَمَلَ عَلَيْهِمْ، فَضَرَبُوهُ ضَرْبَتَيْنِ عَلَى عَاتِقِهِ، بَيْنَهُمَا ضَرْبَةٌ ضُرِبَهَا يَوْمَ بَدْرٍ. قَالَ عُرْوَةُ فَكُنْتُ أُدْخِلُ أَصَابِعِي فِي تِلْكَ الضَّرَبَاتِ أَلْعَبُ وَأَنَا صَغِيرٌ.
பாடம் : 13 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் சிறப்புகள்91 “(ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவி யாளர் (ஹவாரீ) ஆவார்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார் கள்.92 (ஈசா (அலை) அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு, அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3721. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது,97 “நீங்கள் (கிழக்கு ரோமானிய இணைவைப்போர்மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர்மீது தாக்குதல் தொடுத்தார்கள்.

இணைவைப்பாளர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ர் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடிவந்தேன்.

அத்தியாயம் : 62
3722. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي قَاتَلَ فِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ. عَنْ حَدِيثِهِمَا.
பாடம் : 14 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு98 “நபி (ஸல்) அவர்கள் “தல்ஹா' அவர்களைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.99
3722. தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் (இணைவைப் பாளர்களுடன்) போரிட்ட அந்த (உஹுத் போரின்) நாட்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.100

இதை, அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி) மற்றும் சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 62
3724. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ،، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ الَّتِي وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ شَلَّتْ.
பாடம் : 14 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு98 “நபி (ஸல்) அவர்கள் “தல்ஹா' அவர்களைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.99
3724. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(உஹுத் போரின்போது) நபி (ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா (ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 62
3725. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 15 சஅத் பின் அபீவக்காஸ் அஸ் ஸுஹ்ரீ (ரலி) அவர்களின் சிறப்புகள் (அவர்களின் குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின் மாலிக் (ரலி) ஆவார்கள்.101
3725. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(எனது வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (“என் தந்தையும் என் தாயும் உமக்கு அர்ப்பணமாகட்டும்'என)ச் சொன்னார்கள்” என்று சஅத் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.


அத்தியாயம் : 62
3726. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَقَدْ رَأَيْتُنِي وَأَنَا ثُلُثُ الإِسْلاَمِ،.
பாடம் : 15 சஅத் பின் அபீவக்காஸ் அஸ் ஸுஹ்ரீ (ரலி) அவர்களின் சிறப்புகள் (அவர்களின் குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின் மாலிக் (ரலி) ஆவார்கள்.101
3726. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை நான் கண்டேன்.102


அத்தியாயம் : 62
3727. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمِ بْنِ عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ مَا أَسْلَمَ أَحَدٌ إِلاَّ فِي الْيَوْمِ الَّذِي أَسْلَمْتُ فِيهِ، وَلَقَدْ مَكَثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لَثُلُثُ الإِسْلاَمِ. تَابَعَهُ أَبُو أُسَامَةَ حَدَّثَنَا هَاشِمٌ.
பாடம் : 15 சஅத் பின் அபீவக்காஸ் அஸ் ஸுஹ்ரீ (ரலி) அவர்களின் சிறப்புகள் (அவர்களின் குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின் மாலிக் (ரலி) ஆவார்கள்.101
3727. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை.103 நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாட்கள் (வரை) இருந்தேன்”104 என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 62
3728. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ سَعْدًا ـ رضى الله عنه ـ يَقُولُ إِنِّي لأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ، وَكُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الشَّجَرِ، حَتَّى إِنَّ أَحَدَنَا لَيَضَعُ كَمَا يَضَعُ الْبَعِيرُ أَوِ الشَّاةُ، مَا لَهُ خِلْطٌ، ثُمَّ أَصْبَحَتْ بَنُو أَسَدٍ تُعَزِّرُنِي عَلَى الإِسْلاَمِ، لَقَدْ خِبْتُ إِذًا وَضَلَّ عَمَلِي. وَكَانُوا وَشَوْا بِهِ إِلَى عُمَرَ، قَالُوا لاَ يُحْسِنُ يُصَلِّي.
பாடம் : 15 சஅத் பின் அபீவக்காஸ் அஸ் ஸுஹ்ரீ (ரலி) அவர்களின் சிறப்புகள் (அவர்களின் குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின் மாலிக் (ரலி) ஆவார்கள்.101
3728. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் அம் பெய்த அரபியரில் நானே முதலாமவன் ஆவேன்.105 எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து அறப்போர் புரிந்துவந்தோம். எனவே, நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோ டொன்று ஒட்டாமல் மலம் கழித்துவந்தோம்.

பிறகு (கூஃபாவாசிகளான) “பனூ அசத்' குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படியானால், இது வரை) நான் செய்துவந்த வழிபாடு வீணாகி, நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என்று வருந்தினேன்). அதைக் குறித்து அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள், “இவர் முறையாகத் தொழுவிப்பதில்லை” என்று (உமர் (ரலி) அவர்களிடம்) அவர்கள் சொன்னார்கள்.106

அத்தியாயம் : 62
3729. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، قَالَ إِنَّ عَلِيًّا خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ، فَسَمِعَتْ بِذَلِكَ، فَاطِمَةُ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَزْعُمُ قَوْمُكَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ، هَذَا عَلِيٌّ نَاكِحٌ بِنْتَ أَبِي جَهْلٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ "" أَمَّا بَعْدُ أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ، فَحَدَّثَنِي وَصَدَقَنِي، وَإِنَّ فَاطِمَةَ بَضْعَةٌ مِنِّي، وَإِنِّي أَكْرَهُ أَنْ يَسُوءَهَا، وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ وَاحِدٍ "". فَتَرَكَ عَلِيٌّ الْخِطْبَةَ. وَزَادَ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيٍّ عَنْ مِسْوَرٍ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ فَأَحْسَنَ قَالَ "" حَدَّثَنِي فَصَدَقَنِي، وَوَعَدَنِي فَوَفَى لِي "".
பாடம் : 16 நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் பற்றிய குறிப்பு107 அவர்களில் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களும் ஒருவராவார்.108
3729. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள், (ஃபாத்திமா இருக்கவே,) அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண்பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள் களுக்காக (அவர்கள் மனத் துன்பத்திற்கு ஆளாக்கப்படும்போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று சொன் னார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்ற) எழுந்தார் கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “இறைவாழ்த்துக்குப்பின்! அபுல்ஆஸ் பின் அர்ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியைத் திருப்பி அனுப்பிவிடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்றுசேர முடியாது” என்று சொன்னார்கள்.109

எனவே, அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டுவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர் (ரலி) அவர்கள் கூடுதலாகக் கூறியிருப்பதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவுகூர்ந்து அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், “அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்” என்று சொன் னார்கள்.

அத்தியாயம் : 62
3730. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْثًا، وَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَطَعَنَ بَعْضُ النَّاسِ فِي إِمَارَتِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنْ تَطْعُنُوا فِي إِمَارَتِهِ فَقَدْ كُنْتُمْ تَطْعُنُونَ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ، إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمَارَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ، وَإِنَّ هَذَا لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ بَعْدَهُ "".
பாடம் : 17 நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் சிறப்புகள்110 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் எம் சகோதரரும் எம்(மால் விடுதலை செய்யப்பட்ட) அடிமையுமாவீர்” என்று நபி (ஸல்) அவர்கள் (ஸைத் (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள்.111
3730. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறைகூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறைகூறுகிறீர்கள் என்றால்- (இது ஒன்றும் புதிதல்ல). இதற்குமுன் (மூத்தா போரின்போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறைகூறிக் கொண்டிருந்தீர்கள்.112

அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவருடைய மகனான) இவர் (உசாமா)தான் அவருக்குப்பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 62