3616. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ ـ يَعُودُهُ ـ قَالَ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ عَلَى مَرِيضٍ يَعُودُهُ قَالَ لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ. فَقَالَ لَهُ "" لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ "". قَالَ قُلْتَ طَهُورٌ كَلاَّ بَلْ هِيَ حُمَّى تَفُورُ ـ أَوْ تَثُورُ ـ عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ الْقُبُورَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَنَعَمْ إِذًا "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3616. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், “கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) நபி (ஸல்) அவர்கள் அக்கிராமவாசியிடம், “கவலை வேண்டாம். இறைவன் நாடினால் (இது) உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, “நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)” என்று கூறினார்கள்.138


அத்தியாயம் : 61
3617. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَجُلٌ نَصْرَانِيًّا فَأَسْلَمَ وَقَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ، فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ يَقُولُ مَا يَدْرِي مُحَمَّدٌ إِلاَّ مَا كَتَبْتُ لَهُ، فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ، لَمَّا هَرَبَ مِنْهُمْ نَبَشُوا عَنْ صَاحِبِنَا. فَأَلْقُوهُ فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا، فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَقَالُوا هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ. فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ، وَأَعْمَقُوا لَهُ فِي الأَرْضِ مَا اسْتَطَاعُوا، فَأَصْبَحَ قَدْ لَفَظَتْهُ الأَرْضُ، فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ فَأَلْقَوْهُ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3617. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஒரு மனிதர் கிறித்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா' மற்றும் “ஆலு இம்ரான்' ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார். அவர் (மீண்டும்) கிறித்தவ ராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) “முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர்.

ஆனால் (மறுநாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே (கிறித்தவர்கள்), “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடிவந்துவிட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்” என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பிவிட்டிருந்தது.

அப்போதும், “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவுக்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பிவிட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனைதான்) என்று புரிந்துகொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர்.


அத்தியாயம் : 61
3618. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتُنْفِقُنَّ كُنُوزَهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3618. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதுள்ள பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிட்டால் அவருக் குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். (தற்போதுள்ள கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அவருக்குப்பின் வேறொரு சீசர் வர மாட்டார். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (கிஸ்ரா, சீசர்) இருவருடைய கருவூலங்களையும் இறைவழியில் நீங்கள் செலவழிப்பீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.139


அத்தியாயம் : 61
3619. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، رَفَعَهُ قَالَ "" إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ ـ وَذَكَرَ وَقَالَ ـ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3619. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதுள்ள) கிஸ்ரா அழிந்துவிட்டால் அவருக்குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார் -அறிவிப்பாளர் (முந்தைய ஹதீஸைப் போலவே) கூறிவிட்டு(த் தொடர்ந்து) சொன்னார்- அவ்விருவரின் (கிஸ்ரா மற்றும் சீசரின்) கருவூலங்களையும் நீங்கள் இறைவழியில் செலவழிப்பீர்கள்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140


அத்தியாயம் : 61
3620. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَقُولُ إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ. وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِطْعَةُ جَرِيدٍ، حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ فَقَالَ " لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيكَ مَا رَأَيْتُ ".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3620. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெரும் பொய்யனான முசைலிமா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். “முஹம்மது தமக்குப்பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமை யின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)” என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான்.141

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது.

அவர்கள் முசைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்றுகொண்டு, “இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக்கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை) நீ மீறிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப்) புறங்காட்டிச்சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்.142 உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று நான் கருதுகின்றேன்” என்று சொன்னார் கள்.143


அத்தியாயம் : 61
3621. فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَىَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَىَّ فِي الْمَنَامِ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي ". فَكَانَ أَحَدُهُمَا الْعَنْسِيَّ وَالآخَرُ مُسَيْلِمَةَ الْكَذَّابَ صَاحِبَ الْيَمَامَةِ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3621. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, “அதை ஊதிவிடுவீராக!” என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதிவிட, அவையிரண்டும் பறந்து போய்விட்டன.

நான் அவ்விரண்டும் எனக்கு (நபித்துவம் அளிக்கப்பட்ட)பின் தோன்ற விருக்கின்ற (தம்மை இறைத்தூதர்கள் என்று வாதிக்கும்) இரு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்சீயாகவும் மற்றொரு வன் யமாமாவாசியான பெரும் பொய்யன் முசைலிமாவாகவும் அமைந்தார்கள்.144

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3622. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ أُرَاهُ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ، فَذَهَبَ وَهَلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ، فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ، وَرَأَيْتُ فِي رُؤْيَاىَ هَذِهِ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ هَزَزْتُهُ بِأُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ، وَرَأَيْتُ فِيهَا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ، وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ مِنَ الْخَيْرِ، وَثَوَابِ الصِّدْقِ الَّذِي آتَانَا اللَّهُ بَعْدَ يَوْمِ بَدْرٍ "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3622. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவிóருந்து புலம் பெயர்ந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி “யமாமா' அல்லது “ஹஜர்' ஆகத்தான் இருக்கும் என்று நான் எண்ணினேன்.145

ஆனால், அது யஸ்ரிப்-மதீனாவாகி விட்டது. மேலும், இந்த எனது கனவில் நான் (எனது) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்துவிடுவதாகக் கண்டேன். அது உஹுத் போரின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டிக் கொண்டு) அழகாகிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுத் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது.

அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளைப் பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த தகுதி (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும்.

நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ர் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3623. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي، كَأَنَّ مِشْيَتَهَا مَشْىُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَرْحَبًا بِابْنَتِي ". ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ، ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا، فَبَكَتْ فَقُلْتُ لَهَا لِمَ تَبْكِينَ ثُمَّ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَضَحِكَتْ فَقُلْتُ مَا رَأَيْتُ كَالْيَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ، فَسَأَلْتُهَا عَمَّا قَالَ. فَقَالَتْ مَا كُنْتُ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَأَلْتُهَا ف
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3623. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர் களது நடை, நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “வருக! என் மகளே!” என்று அழைத்து தமக்கு வலப் பக்கம்- அல்லது இடப் பக்கம்- அமர்த்திக் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் இரகசியமாக எதையோ சொல்ல, அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

நான், “இன்றைக்குப் போல் துக்கம் அண்டிய ஒரு மகிழ்ச்சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை” என்று சொல்லிவிட்டு “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசி யத்தை நான் வெளியிடப்போவதில்லை” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை (ஃபாத்திமா ஒன்றும் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக்) கேட்டேன்.


அத்தியாயம் : 61
3624. َقَالَتْ أَسَرَّ إِلَىَّ " إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِي الْقُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ عَارَضَنِي الْعَامَ مَرَّتَيْنِ، وَلاَ أُرَاهُ إِلاَّ حَضَرَ أَجَلِي، وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِي لَحَاقًا بِي ". فَبَكَيْتُ فَقَالَ " أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ ـ أَوْ نِسَاءِ الْمُؤْمِنِينَ ". فَضَحِكْتُ لِذَلِكَ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3624. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “(வானவர்) ஜிப்ரீல் என்னிடம் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். இந்த ஆண்டு மட்டும் அவர் என்னிடம் அதை இருமுறை ஓதிக்காட்டினார். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப்போவது நீதான்” என்று சொன்னார்கள்.

ஆகவே, நான் அழுதேன். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் பெண்களின்- அல்லது இறைநம்பிக்கையாளர்களில்- பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு (மகிழ்ச்சியால்) நான் சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 61
3625. حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاطِمَةَ ابْنَتَهُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، فَسَارَّهَا بِشَىْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا، فَسَارَّهَا فَضَحِكَتْ، قَالَتْ فَسَأَلْتُهَا عَنْ ذَلِكَ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3625. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன்.


அத்தியாயம் : 61
3626. فَقَالَتْ سَارَّنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَنِي أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي أَنِّي أَوَّلُ أَهْلِ بَيْتِهِ أَتْبَعُهُ فَضَحِكْتُ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3626. அதற்கு அவர்கள், “என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு “அவர்களின் வீட்டாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான்தான்' என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.146


அத்தியாயம் : 61
3627. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يُدْنِي ابْنَ عَبَّاسٍ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ إِنَّ لَنَا أَبْنَاءً مِثْلَهُ. فَقَالَ إِنَّهُ مِنْ حَيْثُ تَعْلَمُ. فَسَأَلَ عُمَرُ ابْنَ عَبَّاسٍ عَنْ هَذِهِ الآيَةِ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ}. فَقَالَ أَجَلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ إِيَّاهُ. قَالَ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3627. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எப்போதும் என்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)” என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது உங்களுக்குத் தெரிகின்ற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால்தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்னிடம், “அல்லாஹ்வின் உதவியும் (அவன் தரும்) வெற்றியும் வந்துவிடும்போது' என்று தொடங்கும் (110:1-வது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், “அது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாள் முடியப்போகிறது' என்று அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த வசனமாகும்” என்று பதிலளித்தேன்.

உடனே உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் அறிவதையே அதிலிருந்து நானும் அறிகிறேன்” என்று சொன்னார்கள்.147


அத்தியாயம் : 61
3628. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سُلَيْمَانَ بْنِ حَنْظَلَةَ بْنِ الْغَسِيلِ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِمِلْحَفَةٍ قَدْ عَصَّبَ بِعِصَابَةٍ دَسْمَاءَ، حَتَّى جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ فَإِنَّ النَّاسَ يَكْثُرُونَ وَيَقِلُّ الأَنْصَارُ، حَتَّى يَكُونُوا فِي النَّاسِ بِمَنْزِلَةِ الْمِلْحِ فِي الطَّعَامِ، فَمَنْ وَلِيَ مِنْكُمْ شَيْئًا يَضُرُّ فِيهِ قَوْمًا، وَيَنْفَعُ فِيهِ آخَرِينَ، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيئِهِمْ "". فَكَانَ آخِرَ مَجْلِسٍ جَلَسَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3628. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்கள் ஒரு போர்வை யுடன் வெளியே வந்தார்கள். அப்போது தமது தலையில் கறுப்புக் கட்டு ஒன்றைப் போட்டிருந்தார்கள். சொற்பொழிவு மேடை மீதமர்ந்து அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து பிறகு, “இறை வாழ்த்துக்குப்பின் கூறுகிறேன்: (இஸ்லாத்தில் இணையும்) மக்கள், (எண்ணிக்கையில்) அதிக மாவார்கள். (ஆனால், இறைமார்க்கத்திற்கு) உதவி புரிபவர்கள் (அன்சார்) குறைந்து போய்விடுவார்கள். எந்த அளவுக்கென்றால் உணவில் உப்பிருக்கும் அளவில்தான் (உதவி செய்பவர்கள்) மக்களிடையே இருப்பார்கள். உங்களில் ஒருவர் சிலருக்குத் தீங்கையும் மற்றவர்களுக்கு நன்மையும் விளைவிக்கக்கூடிய ஓர் அதிகாரம் எதையும் பெற்றால் நன்மை செய்பவரிடமிருந்து அதை ஏற்றுக் கொண்டு தீமை செய்பவரை மன்னித்து விடட்டும்” என்று சொன்னார்கள்.

அது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்த கடைசி அவையாக இருந்தது.148


அத்தியாயம் : 61
3629. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ أَبِي مُوسَى، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ ـ رضى الله عنه ـ أَخْرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ الْحَسَنَ فَصَعِدَ بِهِ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ "" ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3629. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (தம் பேரப்பிள்ளை) ஹசன் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே சொற்பொழிவு மேடையில் ஏறினார்கள். பிறகு, “இந்த என் மகன், தலைவர் ஆவார். அல்லாஹ் இவர் வாயிலாக முஸ்óம் களின் இரு குழுவினரிடையே சமாதானம் செய்துவைக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.149


அத்தியாயம் : 61
3630. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَعَى جَعْفَرًا وَزَيْدًا قَبْلَ أَنْ يَجِيءَ خَبَرُهُمْ، وَعَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3630. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜஅஃபர் (ரலி) அவர்களும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி (ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து மக்க ளுக்கு) அறிவித்தார்கள். அப்போது அவர் களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.150


அத்தியாயம் : 61
3631. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هَلْ لَكُمْ مِنْ أَنْمَاطٍ "". قُلْتُ وَأَنَّى يَكُونُ لَنَا الأَنْمَاطُ قَالَ "" أَمَا إِنَّهُ سَيَكُونُ لَكُمُ الأَنْمَاطُ "". فَأَنَا أَقُولُ لَهَا ـ يَعْنِي امْرَأَتَهُ ـ أَخِّرِي عَنِّي أَنْمَاطَكِ. فَتَقُولُ أَلَمْ يَقُلِ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّهَا سَتَكُونُ لَكُمُ الأَنْمَاطُ "". فَأَدَعُهَا.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3631. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“(எனக்குத் திருமணமானபோது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், “எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

(பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம், “எங்களை விட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து” என்று கூறுவேன். அவள், “நபி (ஸல்) அவர்கள், “விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்' என்று கூறவில்லையா?” என்று கேட்பாள். “அப்படியானால் அவற்றை (அவ்வாறே) விட்டுவிடுகிறேன்” (என்று நான் கூறுவேன்.


அத்தியாயம் : 61
3632. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ انْطَلَقَ سَعْدُ بْنُ مُعَاذٍ مُعْتَمِرًا ـ قَالَ ـ فَنَزَلَ عَلَى أُمَيَّةَ بْنِ خَلَفٍ أَبِي صَفْوَانَ، وَكَانَ أُمَيَّةُ إِذَا انْطَلَقَ إِلَى الشَّأْمِ فَمَرَّ بِالْمَدِينَةِ نَزَلَ عَلَى سَعْدٍ، فَقَالَ أُمَيَّةُ لِسَعْدٍ انْتَظِرْ حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ، وَغَفَلَ النَّاسُ انْطَلَقْتُ فَطُفْتُ، فَبَيْنَا سَعْدٌ يَطُوفُ إِذَا أَبُو جَهْلٍ فَقَالَ مَنْ هَذَا الَّذِي يَطُوفُ بِالْكَعْبَةِ فَقَالَ سَعْدٌ أَنَا سَعْدٌ. فَقَالَ أَبُو جَهْلٍ تَطُوفُ بِالْكَعْبَةِ آمِنًا، وَقَدْ آوَيْتُمْ مُحَمَّدًا وَأَصْحَابَهُ فَقَالَ نَعَمْ. فَتَلاَحَيَا بَيْنَهُمَا. فَقَالَ أُمَيَّةُ لِسَعْدٍ لاَ تَرْفَعْ صَوْتَكَ عَلَى أَبِي الْحَكَمِ، فَإِنَّهُ سَيِّدُ أَهْلِ الْوَادِي. ثُمَّ قَالَ سَعْدٌ وَاللَّهِ لَئِنْ مَنَعْتَنِي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ لأَقْطَعَنَّ مَتْجَرَكَ بِالشَّأْمِ. قَالَ فَجَعَلَ أُمَيَّةُ يَقُولُ لِسَعْدٍ لاَ تَرْفَعْ صَوْتَكَ. وَجَعَلَ يُمْسِكُهُ، فَغَضِبَ سَعْدٌ فَقَالَ دَعْنَا عَنْكَ، فَإِنِّي سَمِعْتُ مُحَمَّدًا صلى الله عليه وسلم يَزْعُمُ أَنَّهُ قَاتِلُكَ. قَالَ إِيَّاىَ قَالَ نَعَمْ. قَالَ وَاللَّهِ مَا يَكْذِبُ مُحَمَّدٌ إِذَا حَدَّثَ. فَرَجَعَ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ أَمَا تَعْلَمِينَ مَا قَالَ لِي أَخِي الْيَثْرِبِيُّ قَالَتْ وَمَا قَالَ قَالَ زَعَمَ أَنَّهُ سَمِعَ مُحَمَّدًا يَزْعُمُ أَنَّهُ قَاتِلِي. قَالَتْ فَوَاللَّهِ مَا يَكْذِبُ مُحَمَّدٌ. قَالَ فَلَمَّا خَرَجُوا إِلَى بَدْرٍ، وَجَاءَ الصَّرِيخُ قَالَتْ لَهُ امْرَأَتُهُ أَمَا ذَكَرْتَ مَا قَالَ لَكَ أَخُوكَ الْيَثْرِبِيُّ قَالَ فَأَرَادَ أَنْ لاَ يَخْرُجَ، فَقَالَ لَهُ أَبُو جَهْلٍ إِنَّكَ مِنْ أَشْرَافِ الْوَادِي، فَسِرْ يَوْمًا أَوْ يَوْمَيْنِ، فَسَارَ مَعَهُمْ فَقَتَلَهُ اللَّهُ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3632. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணைவைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் (சிரியா) நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும்போது சஅத் (ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, “நண்பகல் நேரம் வரும்வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) சுற்றலாமே” என்று கேட்டான். அவ்வாறே, சஅத் (ரலி) அவர்கள் சுற்றிக்கொண்டிருந்தபோது அபூஜஹ்ல் வந்து, “கஅபாவைச் சுற்றுவது யார்?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “நான்தான் சஅத்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூஜஹ்ல், “(மதீனாவாசி களான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி சுற்றிக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (அதற்கென்ன?)” என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “அபுல்ஹகமைவிடக் குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்” என்று சொன்னான்.151

பிறகு சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தைச் சுற்ற விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் (சிரியா) நாட்டிற்குச் செல்லும் வணிக வழியை நான் துண்டித்துவிடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்” என்று சொல்லத் தொடங்கினான்- அவர்களைப் பேச விடாமல் தடுக்கலானான்.

ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் கோபமுற்று, “உமது வேலையைப் பாரும். (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்” என்று உமய்யாவிடம் சொன்னார்கள். அதற்கு அவன், “என்னையா (கொல்ல விருப்பதாகச் சொன்னார்)?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (உன்னைத்தான்)” என்று பதிலளித்தார்கள்.

அவன், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் பேசினால் பொய் பேசுவ தில்லை” என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, “என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள், “என்ன சொன்னார்?” என்று வினவினாள். “முஹம்மத் என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதாக அவர் கூறினார்” என்று அவன் பதிலளித்தான். அவள், “அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள்.

மக்காவாசிகள் பத்ர் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, “உம்முடைய யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?” என்று கேட்டாள். ஆகவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை.

அபூஜஹ்ல் அவனிடம், “நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். ஆகவே (நீயே போரில் கலந்துகொள்ளாமல் போய்விட்டால் நன்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்துகொள்)” என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாட்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம்வரை சென்றுவிட, அங்கே) அவனை அல்லாஹ் கொன்றுவிட்டான்.


அத்தியாயம் : 61
3633. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ النَّاسَ مُجْتَمِعِينَ فِي صَعِيدٍ، فَقَامَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ، وَفِي بَعْضِ نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ أَخَذَهَا عُمَرُ، فَاسْتَحَالَتْ بِيَدِهِ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا فِي النَّاسِ يَفْرِي فَرِيَّهُ، حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ "". وَقَالَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" فَنَزَعَ أَبُو بَكْرٍ ذَنُوبَيْنِ "".
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3633. அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு எழுந்து (போய்)விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களி டம், “இவர் யார்?” என்று கேட்க, அவர்கள், “இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான்” என்பது உம்மு சலமா (ரலி) அவர்களுக்குத் தெரியாது.)

(பின்னர்) உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தமது உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும்வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ அவர்கள்தான் என்றே நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்பது எனக்குத் தெரியவந்தது)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், “யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 61
3634. حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، قَالَ أُنْبِئْتُ أَنَّ جِبْرِيلَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ، فَجَعَلَ يُحَدِّثُ ثُمَّ قَامَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُمِّ سَلَمَةَ "" مَنْ هَذَا "". أَوْ كَمَا قَالَ. قَالَ قَالَتْ هَذَا دِحْيَةُ. قَالَتْ أُمُّ سَلَمَةَ ايْمُ اللَّهِ مَا حَسِبْتُهُ إِلاَّ إِيَّاهُ حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم يُخْبِرُ جِبْرِيلَ أَوْ كَمَا قَالَ. قَالَ فَقُلْتُ لأَبِي عُثْمَانَ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ.
பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்84
3634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு திடóல் ஒன்றுதிரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி- அல்லது இரண்டு வாளிகள்- இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது.152 அவரை அல்லாஹ் மன்னிப் பானாக!

பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.)153 அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம்தீரத் தாங்களும் அருந்தி, தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலைய ருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைத்தனர்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அபூபக்ர், இரு வாளிகளை இறைத்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக (ஒன்றா, இரண்டா என்ற சந்தேகமின்றி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அத்தியாயம் : 61
3635. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ "". فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ، إِنَّ فِيهَا الرَّجْمَ. فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا. فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ. فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ. فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ. فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا. قَالَ عَبْدُ اللَّهِ فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ.
பாடம் : 26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நாம் யாருக்கு வேதம் வழங்கினோமோ அவர்கள் தம் பிள்ளைகளை அறிவதைப் போன்று இவரை அறிவார்கள். ஆயினும், அவர்களில் ஒரு பிரிவினர் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள். (2:146)
3635. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து (உங்கள் வேதமான) “தவ்ராத்'தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

உடனே (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களைச் சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபசாரிகளுக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தமது கையை வைத்து மறைத்துக்கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தமது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது” என்று சொன்னார்கள். உடனே, அவ்விருவரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காகத் தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள்மீது கவிழ்ந்து (மறைத்துக்)கொள்வதை நான் பார்த்தேன்.

அத்தியாயம் : 61