3526. وَقَالَ لَنَا قَبِيصَةُ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُوهُمْ قَبَائِلَ قَبَائِلَ.
பாடம் : 13 அறியாமைக் காலத்திலும் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தம் முன்னோர்களுடன் தம்மை இணைத்துப் பேசுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களே ஆவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.42 “நான் அப்துல் முத்தலிபின் மகனா வேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
3526. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) உங்கள் நெருங்கிய உற வினர்களை எச்சரிப்பீராக!” (26:214) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.


அத்தியாயம் : 61
3527. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَا بَنِي عَبْدِ مَنَافٍ، اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، يَا أُمَّ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ عَمَّةَ رَسُولِ اللَّهِ، يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ، اشْتَرِيَا أَنْفُسَكُمَا مِنَ اللَّهِ، لاَ أَمْلِكُ لَكُمَا مِنَ اللَّهِ شَيْئًا، سَلاَنِي مِنْ مَالِي مَا شِئْتُمَا "".
பாடம் : 13 அறியாமைக் காலத்திலும் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தம் முன்னோர்களுடன் தம்மை இணைத்துப் பேசுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களே ஆவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.42 “நான் அப்துல் முத்தலிபின் மகனா வேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
3527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.45 அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் பின் அல்அவ்வாமின் தாயாரே!46 முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ் விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங் கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.)47

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3528. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الأَنْصَارَ فَقَالَ "" هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ "". قَالُوا لاَ، إِلاَّ ابْنُ أُخْتٍ لَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ "".
பாடம் : 14 ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே. ஒரு சமுதாயத்தார் விடுதலை செய்த அடிமையும் அவர்களைச் சேர்ந்தவரே!
3528. அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்:

(ஏதோ பேசுவதற்காக ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை(த் தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், “உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், “எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஅமான் பின் முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று சொன் னார்கள்.

அத்தியாயம் : 61
3529. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ وَجْهِهِ، فَقَالَ " دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى ".
பாடம் : 15 அபிசீனியரின் நிகழ்ச்சியும் நபி (ஸல்) அவர்கள், யிஞீஅர்ஃபிதாவின் மக்களே!” என்று (அபிசீனியரை) அழைத்ததும்48
3529. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டிப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹிஜ்ஜா 10, 11, 12, 13 ஆகிய) நாட்களில் (ஒன்றாக) இருந்தது. நபி (ஸல்) அவர்கள் (படுக்கை யில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தமது துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு சிறுமிகளையும் அதட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்; அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினாவில் தங்கும் நாட்களா யிருந்தன.49


அத்தியாயம் : 61
3530. وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ، وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ فَزَجَرَهُمْ {عُمَرُ} فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفَدَةَ ". يَعْنِي مِنَ الأَمْنِ.
பாடம் : 15 அபிசீனியரின் நிகழ்ச்சியும் நபி (ஸல்) அவர்கள், யிஞீஅர்ஃபிதாவின் மக்களே!” என்று (அபிசீனியரை) அழைத்ததும்48
3530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அபிசீனியர், பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை நான் கண்டேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபிசீனியரைக் கண்டித்தார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “உமரே! அவர்களை விட்டுவிடுங்கள்; நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று சொன்னார்கள்.50

அத்தியாயம் : 61
3531. حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اسْتَأْذَنَ حَسَّانُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي هِجَاءِ الْمُشْرِكِينَ، قَالَ "" كَيْفَ بِنَسَبِي "". فَقَالَ حَسَّانُ لأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ الْعَجِينِ. وَعَنْ أَبِيهِ قَالَ ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ لاَ تَسُبُّهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 16 ஒருவர், தம்முடைய வமிசம் ஏசப்படக் கூடாது என்று விரும்புவது
3531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பாளர்கள் வசைக்கவி பாடியபோது) இணைவைப்பாளர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களு டன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது) எப்படி?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “குழைத்த மாவிலிருந்து முடியை உருவி யெடுப்பதுபோல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி)விடுவேன்” என்று சொன்னார்கள்.

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக்கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.51 அவர்கள், “அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 61
3532. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ "".
பாடம் : 17 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பாக வந்துள்ளவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் உள்ளோர் இறை மறுப்பாளர்களிடம் கடுமையானவர்களும் தமக்கிடையே கருணை மிக்கவர்களும் ஆவர். (48:29)52 எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயருடைய (இறைத்தூதர்) ஒருவர் வருவார் (என்று ஈசா கூறினார்). (61:6)53
3532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ' (அழிப்பவர்) ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்' (ஒன்று திரட்டுபவர்) ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்.54 நான் “ஆகிப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3533. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ يَشْتِمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ "".
பாடம் : 17 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பாக வந்துள்ளவை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் உள்ளோர் இறை மறுப்பாளர்களிடம் கடுமையானவர்களும் தமக்கிடையே கருணை மிக்கவர்களும் ஆவர். (48:29)52 எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயருடைய (இறைத்தூதர்) ஒருவர் வருவார் (என்று ஈசா கூறினார்). (61:6)53
3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷி (இறைமறுப்பாளர்)களின் ஏச்சையும், அவர்களின் சாபத்தையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படித் திருப்பிவிடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? (என்னை) “முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; “முதம்மம்' என்று (சொல்óயே) சபிக்கிறார்கள். ஆனால், நானோ “முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன்.55

அத்தியாயம் : 61
3534. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلِي وَمَثَلُ الأَنْبِيَاءِ كَرَجُلٍ بَنَى دَارًا فَأَكْمَلَهَا وَأَحْسَنَهَا، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ، وَيَقُولُونَ لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ "".
பாடம் : 18 நபிமார்களில் இறுதியானவர்56
3534. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் (மற்ற) இறைத்தூதர் களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதை, ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமை யாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, “இந்தச் செங்கல் லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந் தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று கூறலானார்கள்.57

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3535. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ مَثَلِي وَمَثَلَ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ، إِلاَّ مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ، وَيَقُولُونَ هَلاَّ وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ، وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ "".
பாடம் : 18 நபிமார்களில் இறுதியானவர்56
3535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங் கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவுக்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான்தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதி யானவன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3536. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تُوُفِّيَ وَهْوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ. وَقَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ مِثْلَهُ.
பாடம் : 19 நபி (ஸல்) அவர்களின் இறப்பு
3536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.

“சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் இதே போன்ற ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்” என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 61
3537. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي السُّوقِ فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம் : 20 நபி (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயர்58
3537. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சந்தையில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர், “அபுல்காசிமே!” என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து, “என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.59


அத்தியாயம் : 61
3538. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تَسَمَّوْا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ""
பாடம் : 20 நபி (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயர்58
3538. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்.60

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.


அத்தியாயம் : 61
3539. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي ""
பாடம் : 20 நபி (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயர்58
3539. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபுல்காசிம் (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 61
3540. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، رَأَيْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ ابْنَ أَرْبَعٍ وَتِسْعِينَ جَلْدًا مُعْتَدِلاً فَقَالَ قَدْ عَلِمْتُ مَا مُتِّعْتُ بِهِ سَمْعِي وَبَصَرِي إِلاَّ بِدُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، إِنَّ خَالَتِي ذَهَبَتْ بِي إِلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي شَاكٍ فَادْعُ اللَّهَ. قَالَ فَدَعَا لِي.
பாடம் : 21
3540. ஜுஐத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சாயிப்  பின் யஸீத் (ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர் களாக, (அந்த வயதிலும்) திடகாத்திர மானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக நான் கண்டேன். அவர்கள், “எனக்குக் கேள்விப் புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யால்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச்சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று சொன்னார்கள்.61

அத்தியாயம் : 61
3541. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنِ الْجُعَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، قَالَ ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي. وَقَعَ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتَمٍ بَيْنَ كَتِفَيْهِ. قَالَ ابْنُ عُبَيْدِ اللَّهِ الْحُجْلَةُ مِنْ حُجَلِ الْفَرَسِ الَّذِي بَيْنَ عَيْنَيْهِ. قَالَ إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ مِثْلَ زِرِّ الْحَجَلَةِ
பாடம் : 22 நபித்துவ முத்திரை62
3541. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (இரக்கத் துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிராத்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார் கள். அவர்கள் உளூ செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களுடைய இரு தோள்களுக் கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.

(நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், “குதிரையின் இரு கண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்ராஹீம் பின் ஹம்ஸா (ரஹ்) அவர்கள், “மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது” என்று கூறியுள்ளார்கள்.63

அத்தியாயம் : 61
3542. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ صَلَّى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ الْعَصْرَ، ثُمَّ خَرَجَ يَمْشِي فَرَأَى الْحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ وَقَالَ بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ لاَ شَبِيهٌ بِعَلِيٍّ. وَعَلِيٌّ يَضْحَكُ.
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3542. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹசன் (ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளை யாடிக்கொண்டிருக்கக் கண்டார்கள்.

உடனே அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக்கொண்டு, “என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கின்றாய்; (உன் தந்தை) அலீ அவர்களைப் போன்று இல்லை” என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.64


அத்தியாயம் : 61
3543. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي جُحَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَكَانَ الْحَسَنُ يُشْبِهُهُ.
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3543. அபூஜுஹைஃபா (ரலி அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த் திருக்கிறேன். ஹசன் (ரலி) அவர்கள், (தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களை ஒத்திருக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3544. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَكَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ يُشْبِهُهُ قُلْتُ لأَبِي جُحَيْفَةَ صِفْهُ لِي. قَالَ كَانَ أَبْيَضَ قَدْ شَمِطَ. وَأَمَرَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِثَلاَثَ عَشْرَةَ قَلُوصًا قَالَ فَقُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ نَقْبِضَهَا.
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3544. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்” என்று அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

நான் அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பை எனக்குக் கூறுங்கள்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிறம் கொண்ட தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்குப் பதின்மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்தரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.” என்று கூறினார்கள்.65


அத்தியாயம் : 61
3545. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ وَهْبٍ أَبِي جُحَيْفَةَ السُّوَائِيِّ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى الْعَنْفَقَةَ.
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களின் (உருவ) அமைப்பு
3545. அபூஜுஹைஃபா அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக் கிறேன். அவர்களுடைய கீழுதட்டின் அடியிலுள்ள (தாடைக்கு மேலுள்ள) குறுந்தாடியில் நான் வெண்மையைக் கண்டேன்.


அத்தியாயம் : 61