3502. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ،، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ وَتَرَكْتَنَا، وَإِنَّمَا نَحْنُ وَهُمْ مِنْكَ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَىْءٌ وَاحِدٌ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3502. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி (ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டுவிட்டீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில்தானே இருக்கின்றோம்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனுல் முத்தலிபும்(முத்தலிப் கிளையாரும்) ஒருவர்தான் (வெவ்வேறானவர்கள் அல்லர்)” என்று பதிலளித்தார்கள்.15


அத்தியாயம் : 61
3503. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، مُحَمَّدٌ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ ذَهَبَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَعَ أُنَاسٍ مِنْ بَنِي زُهْرَةَ إِلَى عَائِشَةَ، وَكَانَتْ أَرَقَّ شَىْءٍ لِقَرَابَتِهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3503. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்வார்கள்.16


அத்தியாயம் : 61
3504. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدٍ، ح قَالَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قُرَيْشٌ وَالأَنْصَارُ وَجُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَأَشْجَعُ وَغِفَارُ مَوَالِيَّ لَيْسَ لَهُمْ مَوْلًى، دُونَ اللَّهِ وَرَسُولِهِ "".
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3504. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிகளும் அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை.17

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 61
3505. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ أَحَبَّ الْبَشَرِ إِلَى عَائِشَةَ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ، وَكَانَ أَبَرَّ النَّاسِ بِهَا، وَكَانَتْ لاَ تُمْسِكُ شَيْئًا مِمَّا جَاءَهَا مِنْ رِزْقِ اللَّهِ {إِلاَّ} تَصَدَّقَتْ. فَقَالَ ابْنُ الزُّبَيْرِ يَنْبَغِي أَنْ يُؤْخَذَ عَلَى يَدَيْهَا. فَقَالَتْ أَيُؤْخَذُ عَلَى يَدَىَّ عَلَىَّ نَذْرٌ إِنْ كَلَّمْتُهُ. فَاسْتَشْفَعَ إِلَيْهَا بِرِجَالٍ مِنْ قُرَيْشٍ، وَبِأَخْوَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاصَّةً فَامْتَنَعَتْ، فَقَالَ لَهُ الزُّهْرِيُّونَ أَخْوَالُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ وَالْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ إِذَا اسْتَأْذَنَّا فَاقْتَحِمِ الْحِجَابَ. فَفَعَلَ، فَأَرْسَلَ إِلَيْهَا بِعَشْرِ رِقَابٍ، فَأَعْتَقَتْهُمْ، ثُمَّ لَمْ تَزَلْ تُعْتِقُهُمْ حَتَّى بَلَغَتْ أَرْبَعِينَ. فَقَالَتْ وَدِدْتُ أَنِّي جَعَلْتُ حِينَ حَلَفْتُ عَمَلاً أَعْمَلُهُ فَأَفْرُغَ مِنْهُ.
பாடம் : 2 குறைஷியரின் மாண்புகள்12
3505. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்களைவிடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நன்மை புரியக்கூடியவராக அப்துல்லாஹ் (ரலி) இருந்தார். ஆயிஷா (ரலி) அவர்கள், தம்மிடம் வருகின்ற அல்லாஹ்வின் கொடை எதையும் தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்துவிடுவது வழக்கம். ஆகவே, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக்கொள்வது அவசியம்” என்று கூறினார்கள்.18

அதனால் அவர்கள் (கோபமுற்று), “(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக்கொள்வதா? (நான் இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், (ஆயிஷா (ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்காகப் பரிந்துரை செய்யும்படி குறைஷியர் சிலரையும் குறிப்பாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாய்மாமன்மார்களையும் கேட்டுக்கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா (ரலி) அவர்கள் பேச மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா உள்ளிட்ட நபி (ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், “நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக்கொண்டி ருக்கும்போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் செய்தார் கள். பிறகு (ஆயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக்கொண்டு பேசிவிட்டார்கள். அவர் களின் சத்தியம் முறிந்துபோனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களை ஆயிஷா (ரலி) அவர்கள் விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும்வரை அடிமைகளை விடுதலை செய்துகொண்டேயிருந்தார்கள்.

இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்தபோதே, “என் சத்தியம் முறிந்துபோனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்' என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிóருந்து விடுபட்டிருப்பேன். (“இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது”) என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 61
3506. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ عُثْمَانَ، دَعَا زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ، فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ. فَفَعَلُوا ذَلِكَ.
பாடம் : 3 குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படி அருளப்பட்டிருப்பது
3506. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத் தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரி யான ஸைத் பின் ஸாபித் (ரலி) தவிர உள்ள) குஹைஷியரின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், “நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் மொழி வழக்கி லேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில் தான் அருளப்பெற்றது” என்று சொன்னார் கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.

அத்தியாயம் : 61
3507. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، حَدَّثَنَا سَلَمَةُ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَوْمٍ مِنْ أَسْلَمَ، يَتَنَاضَلُونَ بِالسُّوقِ، فَقَالَ "" ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ "". لأَحَدِ الْفَرِيقَيْنِ، فَأَمْسَكُوا بِأَيْدِيهِمْ فَقَالَ "" مَا لَهُمْ "". قَالُوا وَكَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَ بَنِي فُلاَنٍ. قَالَ "" ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ "".
பாடம் : 4 யமன் நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து “குஸாஆ' குலத்தைச் சேர்ந்த அஸ்லம் பின் அஃப்ஸா பின் ஹாரிஸா பின் அம்ர் பின் ஆமிர் அவர்களும் யமன் நாட்டைச் சேர்ந்தவர்தான்.19
3507. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெய்து (விளையாடிக்)கொண்டிருக்கை யில் (அவ்வழியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங் கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்ப வராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள்.

“நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று இரு தரப்பாரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பார் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்க, அவர்கள், “நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(தொடர்ந்து) அம்பெய்யுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.20

அத்தியாயம் : 61
3508. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهْوَ يَعْلَمُهُ إِلاَّ كَفَرَ، وَمَنِ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 5
3508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தம் தந்தையல்ல என்று) விவரம் அறிந்துகொண்டே “அவர்தான் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதர் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவராகி விடுகிறார். தமக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தாம், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன்தான் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்பவர், தம் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3509. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا حَرِيزٌ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْوَاحِدِ بْنُ عَبْدِ اللَّهِ النَّصْرِيُّ، قَالَ سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الأَسْقَعِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَعْظَمِ الْفِرَى أَنْ يَدَّعِيَ الرَّجُلُ إِلَى غَيْرِ أَبِيهِ، أَوْ يُرِيَ عَيْنَهُ مَا لَمْ تَرَ، أَوْ يَقُولُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا لَمْ يَقُلْ "".
பாடம் : 5
3509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதர் தம்மைத் தம் தந்தையல்லாத வருடன் இணைத்து (நான் அவருடைய மகன் என்று) கூறுவதும், தம் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், அல்லாஹ்வின் தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்.21

இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3510. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا مِنْ هَذَا الْحَىِّ مِنْ رَبِيعَةَ قَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلاَّ فِي كُلِّ شَهْرٍ حَرَامٍ، فَلَوْ أَمَرْتَنَا بِأَمْرٍ، نَأْخُذُهُ عَنْكَ، وَنُبَلِّغُهُ مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَى اللَّهِ خُمْسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ "".
பாடம் : 5
3510. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தார் ஆவோம். உங்களைச் சந்திக்க விடாமல் “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் எங்களைத் தடை செய்கிறார்கள். ஆகவே, (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) ஒவ்வொரு புனித மாதத்திலும்தான் நாங்கள் உங்களிடம் வந்து சேர முடிகிறது. எனவே, (இப்போது) நீங்கள் எங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கு அப்பாóருப்ப வர்களிடம் அதை எடுத்துரைப்போம்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிட்டு, நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின்றேன். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை' என்று உறுதிகூறுவது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்குச் செலுத்திவிடுவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.

மேலும், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்கள் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை (உபயோகிக்க வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்” என்று சொன்னார்கள்.22


அத்தியாயம் : 61
3511. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهْوَ عَلَى الْمِنْبَرِ "" أَلاَ إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا ـ يُشِيرُ إِلَى الْمَشْرِقِ ـ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம் : 5
3511. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி, “தெரிந்துகொள்ளுங்கள்: குழப்பம், இங்கே ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்துதான் தோன்றும்” என்று கிழக்குத் திசையை நோக்கிச் சைகை செய்தபடி கூறினார்.23

அத்தியாயம் : 61
3512. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قُرَيْشٌ وَالأَنْصَارُ وَجُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَغِفَارُ وَأَشْجَعُ مَوَالِيَّ، لَيْسَ لَهُمْ مَوْلًى دُونَ اللَّهِ وَرَسُولِهِ "".
பாடம் : 6 அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிகளும், அன்சாரிகளும், ஜுஹைனா குலத்தாரும், முஸைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் (இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத்தால்) என் பிரத்யேகமான உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.25

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3513. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عَلَى الْمِنْبَرِ "" غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ "".
பாடம் : 6 அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3513. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி,” “ஃகிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப் பானாக! “அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! “உஸய்யா' குலம் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது” என்று சொன்னார்கள்.26


அத்தியாயம் : 61
3514. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَغِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا "".
பாடம் : 6 அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3514. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ஃகிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3515. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ،. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَأَيْتُمْ إِنْ كَانَ جُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَغِفَارُ خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ وَبَنِي أَسَدٍ، وَمِنْ بَنِي عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ وَمِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ "". فَقَالَ رَجُلٌ خَابُوا وَخَسِرُوا. فَقَالَ "" هُمْ خَيْرٌ مِنْ بَنِي تَمِيمٍ وَمِنْ بَنِي أَسَدٍ، وَمِنْ بَنِي عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ، وَمِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ "".
பாடம் : 6 அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3515. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக உள்ளனவா என்று எனக் குத் தெரிவியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள்), “அவர்கள் நஷ்டமடைந்தார்கள்; இழப்புக்குள்ளானார்கள்” என்று சொன் னார்.

நபி (ஸல்) அவர்கள், “(இல்லை;) அவர்கள் (ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள் இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத் தால்), பனூ தமீம், பனூ அசத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகியவர் களைவிடச் சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 61
3516. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّمَا بَايَعَكَ سُرَّاقُ الْحَجِيجِ مِنْ أَسْلَمَ وَغِفَارَ وَمُزَيْنَةَ ـ وَأَحْسِبُهُ وَجُهَيْنَةَ ابْنُ أَبِي يَعْقُوبَ شَكَّ ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَأَيْتَ إِنْ كَانَ أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ ـ وَأَحْسِبُهُ ـ وَجُهَيْنَةُ خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ وَبَنِي عَامِرٍ وَأَسَدٍ وَغَطَفَانَ، خَابُوا وَخَسِرُوا "". قَالَ نَعَمْ. قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهُمْ لَخَيْرٌ مِنْهُمْ "".
பாடம் : 6 அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா, அஷ்ஜஉ ஆகிய குலத் தார்24
3516. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர் களான அஸ்லம், ஃகிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தான்” என்று கூறினார்கள்.

-றமற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்' என்றும் (நபியவர்கள் கூறியதாக) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் பின் அபீயஅகூப் சந்தேகத் துடன் கூறுகிறார்-

நபி (ஸல்) அவர்கள், “பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத், மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய குலங்களைவிட அஸ்லம், ஃகிஃபார், மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தாரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத் மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய) அவர்களைவிடச் சிறந்தவர்களே” என்று சொன்னார்கள்.

-(அஸ்லம், ஃகிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக நினைக்கிறேன் என அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீயஅகூப் (ரஹ்) கூறுகிறார்-27

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா, ஜுஹைனா ஆகிய குலங் களில் சிலரும்- அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும்28 அல்லாஹ்விடத்தில்- அல்லது மறுமை நாளில்-29 அசத், தமீம், ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள்.30

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3517. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "".
பாடம் : 7 யிகஹ்த்தான்' குலத்தார்31
3517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஹ்த்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழிநடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.32

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 61
3518. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ غَزَوْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ ثَابَ مَعَهُ نَاسٌ مِنَ الْمُهَاجِرِينَ حَتَّى كَثُرُوا، وَكَانَ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلٌ لَعَّابٌ فَكَسَعَ أَنْصَارِيًّا، فَغَضِبَ الأَنْصَارِيُّ غَضَبًا شَدِيدًا، حَتَّى تَدَاعَوْا، وَقَالَ الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ. وَقَالَ الْمُهَاجِرِيُّ يَا لَلْمُهَاجِرِينَ. فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ دَعْوَى أَهْلِ الْجَاهِلِيَّةِ "". ثُمَّ قَالَ "" مَا شَأْنُهُمْ "". فَأُخْبِرَ بِكَسْعَةِ الْمُهَاجِرِيِّ الأَنْصَارِيَّ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" دَعُوهَا فَإِنَّهَا خَبِيثَةٌ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ أَقَدْ تَدَاعَوْا عَلَيْنَا، لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ. فَقَالَ عُمَرُ أَلاَ نَقْتُلُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْخَبِيثَ لِعَبْدِ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّهُ كَانَ يَقْتُلُ أَصْحَابَهُ "".
பாடம் : 8 அறியாமைக் கால (மாச்சரியங் களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.33
3518. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனுல் முஸ்த்தலிக்) அறப்போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்கள் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார்.34

ஆகவே, அந்த அன்சாரி கடுங்கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, “அன்சாரிகளே!” என்றழைத்தார். முஹாஜிர், “முஹாஜிர் களே!” என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?” என்று கேட்டு விட்டு, “அவ்விருவரின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அறியாமைக் கால அழைப்பைக் கை விடுங்கள். இது அருவருப்பானது” என்று சொன்னார்கள். (நயவஞ்சகர்களின் தலைவரான) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “நமக்கெதிராக (இந்த அகதி களான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா? நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றிவிடுவார் கள்” என்று (விஷமமாகச்) சொன்னார்.

உடனே உமர் (ரலி) அவர்கள், “இந்தத் தீயவரை நாம் கொன்றுவிட வேண்டாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று அப்துல்லாஹ் பின் உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவரைக்) கொல்ல வேண்டாம். மக்கள், “முஹம்மத் தம் தோழர்களைக்கூட கொல் கிறார்' என்று பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 61
3519. حَدَّثَنِي ثَابِتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ "".
பாடம் : 8 அறியாமைக் கால (மாச்சரியங் களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.33
3519. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 61
3520. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" عَمْرُو بْنُ لُحَىِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبُو خُزَاعَةَ "".
பாடம் : 9 யிகுஸாஆ' குலத்தின் சரிதை
3520. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கின்திஃப் என்பார்தான் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார்.36

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 61
3521. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ الْبَحِيرَةُ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ وَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ، وَالسَّائِبَةُ الَّتِي كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ فَلاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ. قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرِ بْنِ لُحَىٍّ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ "".
பாடம் : 9 யிகுஸாஆ' குலத்தின் சரிதை
3521. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். “சாயிபா' என்பது அரபியர் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். ஆகவே, அதன்மீது சுமை எதுவும் ஏற்றப்படாது.

மேலும், நபி (ஸல்) அவர்கள், “குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர், நரகத்தில் தமது குடலை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் முதன்முதலில் “சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்துகொண்டிருக்கும்படி) விட்டவர்” என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 61